ஜப்பான் நாட்டிலுள்ள ‘ஹிரோஷிமா’ நகரத்தின் மீது 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 ஆம் தேதி அமெரிக்கா அணுகுண்டு போட்டது. அந்த அணுகுண்டிற்கு அமெரிக்கா விளையாட்டாக வைத்த பெயர் ‘சின்னப் பையன்’ (LITTLE BOY) என்பதாகும் மூன்று நாட்கள் கழித்து ‘நாகசாகி’ நகரத்தின் மீது அணுகுண்டைப் போட்டனர். அதற்கு ‘குண்டு மனிதன்’ (FAT MAN) என்று பெயர் சூட்டினர். இந்த அகோரக் குண்டு வீச்சினால் ஏற்பட்ட சாவும் சேதமும் இன்றுவரை துல்லியமாக மதிப்பிட முயன்றும் முடியவில்லை. வரலாறு காணாத சேதாரம் என்று மட்டுமே சொல்ல முடியும்.
சுமாராகக் கணக்கிட்டதில் ஹிரோஷிமாவில் மட்டும் குறைந்தபட்சம் 1,40,000 பேர் இக்குண்டு வீச்சினால் இறந்திருக்கிறார்கள் என்றும் 74,000 பேர் நாகசாகியில் மரணமடைந்தனர் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. குண்டு விழுந்த பிறகு மாதக் கணக்காக, வருடக்கணக்காக சிலர் குற்றுயிரும் குலையுயிருமாக உயிருடன் இருந்து துன்பப்பட்டு, கதிர்வீச்சின் தாக்கத்தால் மடிந்தனர். ‘இறந்தவர்களில் மிகப் பெரும்பான்மையினர் ஏதுமறியாத அப்பாவிப் பொதுமக்கள்’ என்று ஆய்வறிக்கை கூறியது.
அமெரிக்க அரசின் அறிக்கையில், இந்த அணுகுண்டு வீச்சினால்தான் இரண்டாம் உலகயுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. அணுகுண்டை ஜப்பான் மீது போட்டு பேரழிவை உண்டக்காமலிருந்திருந்தால் இரண்டாம் உலகயுத்தம் இன்னும் பல மாதங்கள் நீடித்திருக்கும் அதன்மூலம் இதனை விட அதிகமான மக்கள் செத்திருப்பர். பரவலாக மக்கள் சாகாமல் பார்த்துக் கொண்டது அமெரிக்கா என்று குறிப்பிட்டது. நெஞ்சுபதறும் இப்படுபாதகப் படுகொலையை நியாயப்படுத்தும் அமெரிக்க அரசின் நிலை குறித்துப் பெரும் சர்ச்சை உலகெங்கும் இன்றும் தொடர்கிறது.
“அணுகுண்டு வீச்சினால் ஏற்படும் விளைவுகளை நன்கு அறிந்து கொண்டுதான் அமெரிக்கா இச்செயலைச் செய்தது. அமெரிக்காவுக்கு அணுகுண்டைப் போட எந்தத் தேவையும் அப்போது இருக்கவில்லை” என்று ஜப்பான் தன் நிலையை முன்வத்தது. 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஜப்பான் சரணடைவதாக அறிவித்து செப்டம்பர் 2 ஆம் தேதி சரணடைவுப் பத்திரத்தில் கையெழுத்திட்ட பின்னர் இரண்டாம் உலகயுத்தம் முடிவுக்கு வந்தது.
‘எனோலாகே’ என்ற விமானம் ‘லிட்டில் பாய்’ என்ற அணுகுண்டை காலை 8.15 மணீக்கு ஹிரோஷிமா நகரத்தின் நட்ட நடுப்பகுதியில் போட்டது .அணுகுண்டைத் தாங்கி வந்த விமாமனத்தை ஓட்டிய விமானியும் படைத் தளபதியுமான ‘பால்டிப்பெட்ஸ்’ என்பவரின் தாயார் பெயர்தான் ‘எனோலாகே’ என்பதாகும். அணுகுண்டு விழுந்தவுடன் பயங்கரச் சத்தத்துடன் வெடித்து நகரத்திற்கு 2000 அடிகளுக்கும் மேல் தீப்பிழம்புகள் தெரிந்தன. 90,000 மக்கள் செத்து மடிந்தனர். மொத்தத்தில் சுமார் 16 கிலோ மீட்டர் நிலப்பரப்பில் இருந்த அனைத்தும் முழுமையாக அழிந்தது. கட்டங்கள் தரைமட்டமாயின. தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டதால் ஜப்பானில் வேறு பகுதிகளில் வசித்தவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் கூட அழிவின் வீச்சு என்ன என்பதை தொடக்கத்தில் தெரிந்து கொள்ள இயலவில்லை.
ஜப்பான் இராணுவத்தின் தலைமையகம் ஹிரோஷிமா நகரத்திலுள்ள இராணுவப் பிரிவை திரும்பத் திரும்ப அழைக்க முயன்றது. மறுபக்கத்தில் எந்தப் பதிலும் கிடைக்காமல் முழு அமைதி நிலவியதால் ஜப்பான் நாட்டின் இராணுவத் தலைமையகம் குழப்பம் மேலிட்டு பதற்றமடைந்தது. ஏற்பட்ட பயங்கர பாதிப்பை ஜப்பான் தலைமை முழுமையாக உணர முடியாத காரணத்தினால் தலைமையிலிருந்து ஓர் இளம் அதிகாரி விமானத்தில் ஹிரோஷிமா சென்று அங்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை அறிந்துவரப் பணிக்கப்பட்டார். அதிகாரி விமானத்தில் ஹிரோஷிமா விரைந்தார். மூன்று மணி நேரம் பறந்ததற்குப் பிறகு இன்னும் ஹிரோஷிமா சென்றடைய நூறு கிலோ மீட்டர் தூரமே இருந்த போது அவரும் அந்த விமானத்தின் பைலட்டும் வானமண்டலமே புகை கக்கும் மேக மண்டலங்களாக உருவெடுத்திருப்பதைப் பார்த்தனர். மிகுந்த சிரமப்பட்டு உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு விமானத்தை வேறு ஒரு பகுதிக்குச் செலுத்தி பத்திரமாக இறக்கினர். அந்த இளம் அதிகாரி, ஏற்பட்ட பேரழிவைப் பற்றித் திரும்பி வந்து சொன்ன பிறகுதான் உலகமே இக்கொடுமை குறித்துத் தெரிந்தது.
ஹிரோஷிமா மீது குண்டு போடப்பட்டு பதினாறு மணிநேரம் கழித்து அமெரிக்க வெள்ளை மாளிகையிலிருந்து வெளியிடப்பட்ட அறிவிப்பின் மூலம்தான் ஜப்பானின் தலைமையகத்திற்கு குண்டு வெடிப்பின் விபரீதம் விளங்கியது. 1950 முதல் 1990 வரை நடைபெற்ற ஆய்வில் அணுகுண்டுக் கதிர்வீச்சின் நச்சுத்தன்மை காரணமாக பல்லாயிரம் பேர் இறந்தனர் என்பது வெளீப்பட்டது. பல்லாயிரம் பேருக்கு இச்சம்பவம் நிகழ்ந்து பல்லாண்டுகளான பின்பும் சதைப் பிண்டங்களாக குழந்தைகள் பிறக்கின்றன. கை,கால், கண்,மூக்கு போன்ற உடல் பாகங்களின்றி ஊனமாகக் குழந்தைகள் பிறக்கின்றன.
நாகசாகி மீது போடப்பட்ட ‘ஃபேட்மேன்’ அணுகுண்டு வெடித்தவுடன் பதினெட்டு கிலோமீட்டார் உயரத்திற்கு எகிறி தீப்பிழம்பாய்த் தேரிந்தது. தீ ஜூவாலை அணைந்தவுடன் அடர்த்தியான நச்சுக் கரும்புகை மேகங்களாக உயரத்தில் உருவெடுத்து உலவின. இந்தக் குண்டு வெடிப்புகள் குறித்த ஜப்பான் நாட்டின் அறிக்கை “சாமதிகள் எழுப்பப்படாத சுடுகாடாக ஹிரோஷிமா நாகசாகி நகரங்கள் காணப்பட்டன” என்று குறிப்பிடுகிறது. ஆகஸ்ட் மாதம் மூன்றாம் வாரத்தில் அமெரிக்கா இன்னோர் அணுகுண்டைப் போடத் தயார் நிலையில் இருந்தது.
மூன்று குண்டுகள் செப்டம்பரிலும், முன்று குண்டுகளை அக்டோபரிலும் போட அமெரிக்கா திட்டமிட்டது. இந்தக் குண்டுகள் அனைத்தையும் அன்றைய குடியரசுத் தலைவரின் எழுத்துப்பூர்வமான உத்தரவில்லாமல் போட இயலாது என உயர்மட்ட இராணுவ அதிகாரிகளே தங்களது அறிக்கையில் குறிப்பிட்டிருந்ததால் படிப்படியாக சூழல் மாற்றம் ஏற்பட்டு இத்திட்டங்களைக் கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
http://www.keetru.com/history/world/japan.php
ஹிரோஷிமா - நாகசாகி
தலைப்பு : அன்றும் இன்றும், வரலாறு, வீடியோ
சுனாமி என்பது ஜப்பானிய மொழியில் உள்ள வார்த்தை. சு+னாமி தான் சுனாமி. சு என்றால் துறைமுகம், னாமி என்றால் பேரலை என்று பெயர். சுனாமி என்பது துறைமுகபேரலை.
சில நிமிடங்கள் முதல் சில நாட்கள் வரை கூட, அதுவும் பல்லாயிரக்கணக்கான ராட்சத அலைகளை உருவாக்கக்கூடியது தான் சுனாமி.
சுனாமி எப்படி உருவாகிறது?
பூகம்பத்தால் ஏற்படுகிறது. அதாவது, பூகம்பம் என் பது நிலப்பகுதியில், கடல் பகுதியில், மலைப்பகுதியில் ஏற்படும். நிலைப்பகுதியில் வந்தால் நிலத்தில் உள்ளவை அதிர்ந்து சேதமாகிறது. கடலில் வந்தால் கடலின் ஆழ்பகுதி பாதிக்கப்படுகிறது. மலையில் வந்தால் மலையில் எரிமலையாக உருவெடுகிறது.
பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரே பிளேட் தான் இருந்தது. அதன் மீது தான் பூமி இருந்தது. ஆனால் கண்டங்களாக பிரிய, பிரிய, அதன் தட்ப, வெப்ப, இயற்கை சூழ்நிலைகளுக்கு ஏற்ப, பல்வேறு பிளேட்கள் உருவாயின. இந்த பிளேட்கள் மீது தான் ஒவ்வொர கண்டமும் இருக்கின்றன. நிலம், கடல் எல்லாவற்றையும் தாங்கி நிற்பது இந்த பிளேட்கள் தான். இதைத் தான் 'டெக்டானிக் பிளேட்கள்' என்று புவியியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
யுரேஷியன் பிளேட், ஆஸ்திரேலியன் பிளேட் இரண்டும், இந்தோனேசியாவின் வடக்கே சுமத்ரா தீவில் மோதியது. அதனால் பூகம்பம் ஏற்பட்டது. அதன் அலைகள் தான் இந்துமாக்கடலில் சுனாமியை ஏற்படுத்தியது.
எப்படியெல்லாம் வரும் சுனாமி?
1. கடலாழத்தில் ஏற்படும் எந்த பாதிப்பின் போதும் வரும்.
2. கடலாழ பூகம்பத்தினால் வரும்
3. கடலை ஒட்டிய நிலப்பகுதியில் ஏற்படும் பூகம்பத்தால் வரும்.
4. மலையில் எரிமலை உண்டாகி, அதனால் வரும்.
5. வானில் கிரகங்களின் செயல்பாடுகள் மாறும் போதும் ஏற்பட வாய்ப்புண்டு (இது இன்னும் உறுதிப்படுத்தப் படவில்லை)
6. கடலில் பவுதிக மாற்றங்கள் ஏற்பட்டாலும் வரும்.
சுனாமி முதன் முதலில் ஏற்பட்டது எப்போது?
ஆராய்ச்சியாளர்கள் கூற்றுப்படி, கி.மு., 365ம் ஆண்டு ஜூலை 21ம் தேதி கிழக்கு மத்திய தரைக்கடலில் தோன்றி, எகிப்தில் அலெக்சாண்டிரியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
1. சமீப நூற்றாண்டுகளை கணக்கில் கொண்டால், முதன்முதலில் கடந்த 1755ம் ஆண்டு, நவம்பர் 1ம் தேதி போர்ச்சுக்கல் நகரான லிஸ்பனில் ஏற்பட்ட பயங்கர பூகம்பம், போர்ச்சுக்கல், ஸ்பெயின், மொராக்கோ நாடுகளில் சுனாமி பேரழிவை ஏற்படுத்தியது.
2. 1883ம் ஆண்டு வாக்கில் ஜாவா சுமத்ரா இடையே கிரகோடா என்ற பகுதி எரிமலைப் பகுதியாக திகழ்ந்தது. அங்கு ஏற்பட்ட பூகம்பத்தில் அணுகுண்டை விட 10 ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்த வெடிசம்பவம் நடந்தது. பல்லாயிரம் கிலோமீட்டர் தூரத் துக்கு அப்போது சத்தம் கேட்டதாக தகவல் கூறுகிறது. 35 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்.
3. அதன் பின்னர் தொடர்ந்து 1999ம் ஆண்டு வரை கூட சுனாமி தாக்குதல் நடந்துள்ளது. ஆனால், கடந்த 1964ம் ஆண்டு தான் கடைசியாக அலாஸ்கா வளைகுடாவில் மிகப் பயங்கர சுனாமி ஏற்பட்டது. அதன் விளைவாக, அலாஸ்கா, வான்கூவர் தீவு (பிரிட்டீஷ் கொலம்பியா), அமெரிக்காவில் கலிபோர்னியா, ஹவாய் பகுதிகளை தாக்கியது. ஆனால், உயிர்சேதம் 120 பேர்தான். காரணம், பாதுகாப்பு ஏற்பாடுகள் தான்.
சுனாமி எச்சரிக்கை அமைப்பு:
அமெரிக்காவில் உள்ள ஹவாய் தீவில்தான் முதன் முதலாக பசிபிக் பெருங்கடல் பிராந்திய சுனாமி எச்சரிக்கை அமைப்பு நிறுவப்பட்டது. அதற்கு காரணம் கடந்த நூற்றாண்டில் சுனாமியால் தாக்கப்பட்ட முதல் இடம் ஹவாய். 1946 ஏப்ரல் 1ல் ஹவாய் தீவை தாக்கிய ராட்சத சுனாமி அலை 159 பேரின் உயிரை விழுங்கி விட்டது. கோடிக்கணக்கான சொத்துகளும் நாசமாயின.
அமெரிக்கா 1949ல் அங்கு பசிபிக் கடல் சுனாமி எச்சரிக்கை அமைப்பை நிறுவியது. அப்போது விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளில் 75 சதவீதம் தவறாக அமைந்தது. இதனால் பொது மக்கள் மூட்டை முடிச்சுகளை எடுத்துக் கொண்டு இடம் பெயர்வதும் மீண்டும் பழைய இடத்துக்கே திரும்புவதும் சலிப்பை ஏற்படுத்தின. செலவும் ஆனது. அதனால் சுனாமி அலை உருவானால் மட்டும் கடலில் இருந்து தகவல் கொடுக்க கருவி வேண்டும் என்பதை உணர்ந்து கண்டுபிடிக்கப்பட்டதுதான் 'சுனாமி மிதவை கருவி'.
1960ல் சிலியில் ஏற்பட்ட பூகம்பத்தால் ராட்சத அலைகள் ஹவாயை தாக்கின. இதனால் 12 ஆண்டுக்குப்பின் அங்கு மீண்டும் சுனாமி ஏற்பட்டது. முன்னரே உஷார் தகவல்கள் அனுப்பப் பட்டதால் அங்கு 61 பேர் மட்டுமே பலியானார்கள். அப்போது ஜப்பான், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பசுபிக் கடல் நாடுகளுக்கும் எச்சரிக்கை அமைப்பு வேண்டும் என்று உணரப்பட்டது. 1963ல் சர்வதேச சுனாமி எச்சரிக்கை மையம் அமைக்கப்பட்டது. இதில் உறுப்பினராக 26 நாடுகள் உள்ளன. உறுப்பினராக சேர்ந்துள்ள நாடுகளுக்கு மட்டுமே எச்சரிக்கைத் தகவல்களை அனுப்ப வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
ஆஸ்திரேலியா, கனடா, சிலி, கொலம்பியா, குக் ஐலண்ட்ஸ், கோஸ்டரிகா, தென் கொரியா, வடகொரியா, ஈக்வேடார், எல்சல்வடார், பிஜி, பிரான்ஸ், குவாதமாலா, இந்தோனேஷியா, ஜப்பான், மெக்சிகோ, நியூசிலாந்து, நிகரகுவா, பெரு, பிலிப்பைன்ஸ், ரஷ்யா, சமோவா, சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு மட்டுமே சுனாமி பேரலைகள் பற்றிய தகவல் வழங்கப்பட்டு வருகிறது.
சுனாமி மிதவை கருவி செயல்படும் விதம்:
கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டவுடன், சுனாமி அலைகள் கடலில் ஏற்படுகின்றனவா என்பதை அறிய சுனாமி எச்சரிக்கைக் கருவிகளால் மட்டுமே முடியும். அவற்றில் உள்ள பிரத்யேக கருவிகள், கடலில் நீர் இயக்கத்தில் ஏதாவது மாற்றம் இருக்கிறதா என்பதை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருக்கும். நிலநடுக்கம் ஏற்பட்ட உடன் கடல் அலைகள் தோன்றினால், அந்த அலைகள் உருவாக்கும் அழுத்த மாறுபாட்டை ஒலி அலைகளாக மாற்றி, அவற்றை சிக்னல்களாக வானில் உள்ள செயற்கைக் கோள்களுக்கு அனுப்பிவைக்கும். அங்கிருந்து தரையில் உள்ள மையங்கள் சிக்னலைப் பெற்றுக் கொள்ளும். அலையின் தன்மையை விஞ்ஞானிகள் அறிந்து அது பாதிப்பை ஏற்படுத்துமானால் எச்சரிக்கைத் தகவல்களை அனுப்புவார்கள்.
இத்தகவலை சுனாமி உருவான 3 நிமிடத்தில் வெவ்வேறு நாடுகளில் உள்ள அலுவலகங்களுக்கு சென்றுவிடும். ஆனால், சுனாமி அலைகள் உருவான இடத்துக்கும் கரைப் பகுதிக்கும் உள்ள தூரத்தைப் பொறுத்துத்தான் அலைகளின் தாக்குதல் வேகம் மற்றும் நேரம் அமையும்.
நிலநடுக்கம் ஏற்படும் போதெல்லாம், சுனாமி குறித்த பயம் இனி ஆசிய நாடுகளின் கடலோர பகுதி மக்களுக்கு ஏற்படும். இதைத் தடுக்க தெற்காசியாவுக்கான சார்க், தென்கிழக்கு ஆசிய நாடுகளான பிம்ஸ்டெக், ஆப்ரிக்க-ஆசிய கூட்டமைப்புகள் இந்தியாவுடன் இணைந்து கடலில் சுனாமி எச்சரிக்கை அமைப்புகளை நிறுவ வேண்டும். அதை சர்வதேச சுனாமி எச்சரிக்கை அமைப்புக்கு கீழ் கொண்டு வரவேண்டும். எதிர்காலத்தில் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய நாடுகளை பட்டியலிட்டு அந்நாடுகள் அனைத்தையும் இந்த பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரவேண்டும்.
http://www.kalanjiam.com /
தலைப்பு : அறிவியல், அன்றும் இன்றும், உங்களுக்கு தெரியுமா?, கேள்வி-பதில்
உலகம் முழுக்க உள்ள பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் இன்று அதிக பட்ச பயத்துடன் உச்சரிக்கப்படும் வார்த்தைகள் இவைதான். 'தீவிரவாதம்' 'வன்முறை' என்று தான் நான் கேள்விபட்டிருக்கிறேன். 'இஸ்லாமிய தீவிரவாதம்' என்று சொல்லுகிறார்களே அது என்ன?
இஸ்லாமியர் செய்கிற தீவிரவாதம் என்று பொருள் சொல்லலாமா? பழிக்குப்பழி; ரத்தத்துக்கு ரத்தம்' என்று எந்த மதமும் வன்முறையை போதிப்பது இல்லை என்னும் போது, தீவிரவாதத்திற்கு முன்னால் 'இஸ்லாமிய' என்கிற அடைமொழி ஒட்டிக்கொள்வதன் பின்னணி என்ன?
ஒரு இந்துவோ, கிறிஸ்தவரோ தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டால் அவரை 'இந்து தீவிரவாதி' என்றோ, 'கிறிஸ்தவ தீவிரவாதி' என்றோ ஏன் அழைப்பதில்லை? தீவிரவாதம் என்ற விஷயம் நாடு, இனம், மதம், மொழி என எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டது' என மனித உரிமை ஆர்வலர்கள் பலமுறை சொன்னாலும் அது ஏன் பெரும்பாலானவர்கள் காதுகளில் விழுவதில்லை? இப்போது உலகம் முழுக்க திரும்ப திரும்பக் கட்டவிழ்க்கப்படும் முஸ்லிம்களுக்கு எதிரான பொய்களுக்கு என்ன காரணம்?
சுமார் அறுநூறு வருடங்களுக்கு முன்பு இந்தியா முழுவதையும் முகலாயர்கள் ஆண்டதாக வரலாறு இருக்கிறது. அதிகாரமும் ஆட்சியும் இருந்தபோதே அவர்கள் நினைத்திருந்தால் மக்களை மிரட்டிப் பணிய வைத்து, இஸ்லாமிய மதத்தைப் பரப்பியிருக்கலாம். ஆனால் இன்றைய நடைமுறை உண்மை, முஸ்லிம்கள் இந்தியநாட்டில் வாழும் சிறுபான்மை மதத்தினர் என்பதுதான்! அதேபோல் ஸ்பெயினிலும் சில நூறு வருடங்களுக்கு முன்பு ஆண்டிருக்கிறார்கள். இன்று ஸ்பெயினில் வாழக்கூடிய முஸ்லிம்களை விரல்விட்டு எண்ணி விடலாம்.
எந்த முகலாய மன்னரும் இஸ்லாமியர்களின் புனிதக் கடமைகளில் ஒன்றாகச் சொல்லப்படும் ஹஜ்ஜுக்கு புனிதப் பயணம் போனதாக ஒரு சிறிய தகவல் குறிப்பு கூட கிடையாது. வெள்ளையர்கள் போல நாடு பிடிக்க வந்தவர்கள்தான் முகலாயர்கள். தாஜ்மஹாலையும் கோட்டைகளையும் கட்டினார்களே தவிர, இஸ்லாமிய மதத்தைப் பரப்ப வந்தவர்கள் என்பதில் வரலாற்று ரீதியான சான்றுகள் எதுவும் இல்லை. அந்த வரலாற்றிலும் கூட, அவுரங்கசீப் ஒரு மோசமான முகலாய மன்னன்.
அவன் இந்துக்களை ஒடுக்கினான்' என்பது போன்ற முகலாய மன்னர்களுக்கு எதிர்மறையான சாயத்தை பூசும் வரலாற்றுத் உண்மையில் அவுரங்கசீப்பீன் அரசவையில் பல முக்கியமான பதவிகளை இந்துக்கள் வகுத்திருக்கிறார்கள்.
எத்தனையோ இந்துக் கோயில்களுக்கு அவர் நன்கொடை கொடுத்திருக்கிறார். இதை வின்சென்ட் ஸ்மித் என்பவர், 'இந்தியன் ஹிஸ்டரி' என்கிற புத்தகத்தில் குறிப்பிட்டு எழுதியிருக்கிறார். மாமன்னர் அசோகரின் ஆட்சிக்கு பிறகு இந்தியா முழுவதையும் தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தவர்கள் முகலாய மன்னர்கள்தான். 'ஒருங்கிணைந்த இந்தியா' என்ற கருத்தாக்கத்தை அறிமுகப்படுத்தியவர்களும் முகலாயர்கள்தான்!
'ஆரியர்கள் வருகை' என்று பாடப்புத்தகங்களில் சொல்லப்படும் வரலாற்றில் தான் 'முகலாயர்களின் படையெடுப்பு' என்று சொல்லிக் கொடுத்து பள்ளிப் பருவத்திலேயே மதத் துவேஷத்தைத் தூவி வளர்க்கிறார்கள். இவர்கள் குறிப்பிடும் பெருமைக்குரிய ஆரியர்கள் வருகைதான், இங்கிருந்த பூர்வகுடிகளை சாதி ரீதியாக பிரித்து,அந்த பிரிவினையில் தன்னை கொழுத்து வளர்த்துக் கொண்டு நிற்கிறது.
இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தைப் பற்றியும் பேசவேண்டிய கட்டாயம் இருக்கிறது. முஸ்லிம்களுக்கு தேசப்பற்று இல்லை என்கிற விஷமமும் இங்கே திரும்பத் திரும்ப சொல்லப்படுகிறது. இந்தியாவின் சுதந்திரத்திற்காக எத்தனை தூரம் மற்றவர்கள் பாடுபட்டிருக்கிறார்களோ, அதற்குக் கொஞ்சமும் குறையாமல் முஸ்லிம்களும் பாடுபட்டிருக்கிறார்கள். 'முஸ்லிம்கள் மதவெறி பிடித்தவர்கள், மதத்திற்காக எதையும் செய்வார்கள்' என்று சொல்லுபவர்கள், உண்மையான வரலாற்றை தயவு செய்து படித்து விட்டு பேச வேண்டும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்.
'இஸ்லாம்' என்ற சொல்லின் அர்த்தமே, ஆண்டவனுக்கு அர்ப்பணித்துக் கொண்டு அமைதியை நிலை நாட்டுவது' என்பதுதான். 'ஜிகாத்' என்று குறிப்பிடுவது நல்லதுக்கும் கெட்டதுக்குமான மனப்போராட்டத்தை. அமைப்பு ரீதியிலான வன்முறையை இஸ்லாம் ஒரு போதும் ஆதரிக்கவிலை. ஆனாலும் வரலாற்று நெடுகிலும் முஸ்லிம்களை வன்முறையாளர்களாக்க் காட்டுவதன் அரசியல் என்ன?
இந்தியாவில் தலித்துகளை விட மோசமான நிலைமையில் முஸ்லிம்கள் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது "சச்சார் கமிட்டி" அறிக்கை. அதிக அளவில் வசிக்கிறார்கள் என்று சொல்லப்படும் பீகார், உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் சோற்றுக்கே வழியில்லாத பரம ஏழைகளாகவே முஸ்லிம்கள் வாழ்ந்து வருகிறார்கள், ஆம்பூர் பகுதியில் வாழும் முஸ்லிம்கள் தோல் பதனிடும் தொழிற்சாலைகளில், காலை ஆறு மணியிலிருந்து இரவு ஏழு, எட்டு மணிவரை உழைத்தாலும் அவர்களுடைய ஒருநாள் கூலி பதினைந்து ரூபாய்க்கு மேல் இன்னமும் உயர்ந்து விடவில்லை. எவ்வளவு கடுமையான உடல் உழைப்புக்கும் இங்கே கிடைக்கக்கூடிய கூலி எந்த வகையிலும் தங்கள் வாழ்க்கை முறையை மாற்றிவிடப் போவதில்லை என்பதை அறிந்துதான், இதே உடல் உழைப்பை வெளிநாடுகளில் கொட்டினால் நிறைய சம்பாதிக்கலாமே என்று வெளிநாடுகளுக்கு போவதை பலர் விரும்புகிறார்கள்.
காலம்காலமாகப் பதவிகளில் இருந்து சுகம் கண்டவர்கள்தான் அந்தப் பதவியை தக்க வைத்துக் கொள்ள படாதபாடு படுகிறார்கள். ஐஐடி ஒதுக்கீடு விஷயத்தில் அதைப் பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் ஷூ பாலீஷ் போட்டு போராட்டம் நடத்தியதை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்திருக்க முடியாது. 'அவனவன் அவனவன் வேலை செய்தால் போதும்; பட்டத்தையும் பதவியையும் நாங்கள் மட்டுமே அனுபவிப்போம்' என்பதே அந்தப் போராட்டத்தின் நோக்கம். எங்கே இவர்களும் மேலே வந்து விட்டால் நம் நிலைமை என்னவாகுமோ என்ற பயம் பீடிக்கத் தொடங்கியதன் விளைவே இந்த போராட்டங்கள் அனைத்தும்! ஒடுக்கப்பட்ட தலித்துகளும் சிறுபான்மையினரும் நிர்வாகத்துக்கு வந்தால்தான், அவர்கள் சார்ந்த சமுதாயத்துக்கு விடிவுகாலம் பிறக்கும். ஆனால் இன்றைய சூழ்நிலையில் ஒரு தலித்தோ, முஸ்லிமோ பிரதமராக முடியுமா? எந்த காலத்திலும் முடியாது என்பது தான் உண்மை. இப்படியொரு காலகட்டத்தில் தமிழக முதல்வர் கொண்டு வந்திருக்கும் 3.5 சத இடஒதுக்கீடு முக்கியமான முன்முயற்சியாக இருக்கிறது. அவசரச் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட இந்த ஒதுக்கீட்டையும் கிடைக்காமல் செய்ய சில சக்திகள் முனைப்பாக இருக்கின்றன.
ஒதுக்கீடுகள் கிடைத்தாலும் அதை பயன்படுத்தும் மனநிலையை முஸ்லிம்கள் வளர்த்துக் கொள்வதும் இங்கே செய்யவேண்டிய ஒன்று, நன்றாகப் படித்தால் இங்கேயே நல்ல சம்பளத்தில் வேலை பார்க்கலாம் என்ற எண்ணம் முதலில் அவர்களுக்கு வர வேண்டும். ஒரு குடும்பத்தில் நாலு பேர் இருந்தால், அதில் ஒருவன் உழைத்தால் போதும்... மற்றவர்கள் அவனுடைய உழைப்பில் வாழலாம் என்கிற மனப்போக்கு இருக்கிறது. மற்ற சமூகங்களில் உள்ளவர்களைப் போல நாமும் படிக்க வேண்டும், நிர்வாகத் துறைகளுக்கு வரவேண்டும் என்ற விருப்பமே பலருக்கு வரவில்லை.
தங்களுக்கு அடிப்படையான தகுதிகளை வளர்த்துக் கொண்ட பிறகு கிடைக்க வேண்டிய உரிமைகளைப் பற்றிப் பேசுவது தானே சரியாக இருக்கும்? எதற்காகப் போராடுகிறோம் என்று தெரியாமல் போராடுவதில் என்ன நடந்துவிடப்போகிறது? குர்ஆனில் வாசகம் ஒன்று உண்டு.
'உங்கள் மனதில் மாற்றத்தை கொண்டுவராத வரையில் நாங்கள் கொடுக்கின்ற அருட்கொடைகளை மாற்றித்தரப் போவதில்லை'
இப்போதைய சூழ்நிலைக்கு மிகவும் பொருந்தக்கூடிய வாசகம்!
-நாகூர் ரூமி
(குங்குமம் 04-10-2007)
மதமறுத்த, மதம் பிடித்தத் தீவிரவாதிகள்!
ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்கு முன்னர் புதிதாக வார்க்கப் பட்டு, ஊடக அகராதிகளில் புகுத்தப் பட்டதும் இன்றைய காலகட்டத்தில் பரவலாகப் பேசப்பட்டு, வலிந்துத் திணிக்கப்பட்ட சொல்லாடல், "இஸ்லாமியத் தீவிரவாதம்" என்பதாகும்.
கடந்த செப்டம்பர் 11இல் அமெரிக்காவின் வாஷிங்டனின் பெண்டகன் மற்றும் நியூயார்க்கின் இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு இது, முதன்மைத் தலைப்பு வகிக்கும் சர்வதேச அளவிலான விவாதப் பொருளாகவே மாறிவிட்டது.
இந்தியாவின் அரசியலை உலகம் மறுவாசிப்புச் செய்யத் தொடங்கக் காரணமாய் அமைந்த அண்மைத் தலைப்புச் செய்தியான "ஹிந்துத்துவத் தீவிரவாதம்" என்ற விஷயம் பற்றியெரியத் துவங்கிய வேளையில் ஒரே இரவில் மும்பை பயங்கரவாத்தினால் இந்தியாவில் ஹிந்துத்துத் தீவிரவாதம் மறக்கடிக்கப்பட்டு மீண்டும் இஸ்லாமியத் தீவிரவாதம் புதிப்பிக்கப் பட்டது.
இஸ்லாத்தினை தமது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ள ஒவ்வொரு முஸ்லிமும் தீவிரவாதத்தைக் கடுமையாக எதிர்க்கின்றனர். மும்பையில் சமீபத்தில் நடந்த மிருக வெறியாட்டத்தில் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு, வருத்தத்தையும் பகிர்ந்து கொள்கின்றனர். இதில் இறந்துபோனவர்களில் ஒரு பெரும் பங்கினர் முஸ்லிம்கள் என்கிறது புள்ளிவிபரம் ஒன்று.
வன்முறை, பயங்கரவாதம் என்பதற்கு இஸ்லாத்தில் துளியும் இடமில்லை என்பதையும் வன்முறைக்கு வித்திடும் காரணிகள் எள்ளளவும் இஸ்லாத்தில் இல்லை என்பதையும் இந்த ஆக்கத்தில் பார்ப்போம்.
அமெரிக்காவின் 9/11 உட்பட ஆங்காங்கே பொதுமக்களைக் குறிவைத்து நடக்கும் இத்தகைய பயங்கரவாதத்தினை மேற்கொள்ளும் குற்றவாளிகளின் பின்னணியோ, அவர்கள் செய்த பாதகச் செயலுக்கான ஆதாரங்களோ முழுமையாக நிறுவப்படவில்லை என்ற வருத்தத்திற்குரிய யதார்த்தத்தை முதலிலேயே சொல்லியாக வேண்டும். குற்றமிழைத்ததாக ஐயுறப் படுவோர் (Prime suspect) மீது குற்றம் நிரூபணமாவதற்கு முன்னரே அரசும் ஊடகங்களும் கைகோர்க்கும் கோயபல்ஸ் தனத்தினால் குற்றவாளிகளாக்கப்படும் கொடுமையும் நமக்குப் பழகிவிட்ட ஒன்றாகும்.
இத்தகைய பயங்கரவாதிகளுக்குப் பல அமைப்புகளுடனான தொடர்பு இருப்பதாகச் சொல்லப் படுகிறது. முதலாளித்துவத்தை எதிர்க்கும் கம்யூனிஸவாதிகளோ, குடியரசின் மீது கோபமுள்ள சர்வாதிகாரக் கூட்டமோ அரசியல் இலாபங்களுக்காக உள்நாட்டுக் கலவரத்தைத் தூண்டும் மட்ட ரக அரசியல்வாதிகளோகூட தீவிரவாதிகளின் நிழல் முதலாளிகளாக இருக்கலாம்.
ஆனால் துரதிருஷ்டவசமாக, தீவிரவாதச் செயல்களைச் செய்பவர்கள் முஸ்லிம் பெயரில் உலாவருகின்றனர். இதில் மும்பைத் தீவிரவாதச் செயல்களைச் செய்தவர்கள் யார் என்பதோ ஏவி விட்டவர்களின் பின்னணி என்ன என்பதோ, இக்கொடிய செயல்களைச் செய்ய நேர்ந்த கட்டாயம் என்ன என்பதோ இன்னும் புரியாத புதிராகத்தான் உள்ளது.
எது எப்படி என்றாலும், இதுபோன்ற கொடிய காரியத்தைச் செய்பவர்கள் முஸ்லிம்கள் சூடிக் கொள்ளும் பெயரில் இருந்தாலும், இவர்கள் செய்த இப்பயங்கரவாதத்திற்கு "இஸ்லாமியத் தீவிரவாதம்" என்று பெயர் சூட்ட இயலாது. தர்க்க ரீதியில் இதை அணுகலாம்.
ஒரு யூதன் எப்படி இத்தகைய பயங்கரவாதச் செயலைச் செய்யும்போது, "யூதப் பயங்கரவாதம்" என்று அழைக்க இயலாதோ, கிறித்துவன் செய்கையில் "கிறித்துவப் பயங்கரவாதம்" என்று அழைக்க இயலாதோ அவ்வாறே முஸ்லிம் பெயரில் உள்ள ஒருவன் செய்யும் பயங்கரவாதத்தை "இஸ்லாமிய பயங்கரவாதம்" என அழைக்க இயலாது. இது அனைவரும் ஒருமனதாக ஒப்புக் கொள்ளும் கூற்றே!
காரணம், மதத்தின் பெயரால் அப்பாவி மக்கள் கொல்லப் படுவதை எந்த மதமும் அனுமதிப்பதில்லை. கொல்லப்படுவது முஸ்லிம்களோ, கிறித்துவர்களோ, இந்துக்களோ - மண்ணில் விழும் இரத்தம் ஒரே நிறம்தான்; பறிபோகும் உயிர் எவருடையதாக இருப்பினும் விலை மதிப்பற்றதுதான்.
"தனி மனிதன் ஒருவனைக் கொலை செய்வது நரக நெருப்பிற்கு இட்டுச் செல்லும் பெரும் பாவங்களில் ஒன்றாகும்!" என்பது இஸ்லாத்தின் அடிப்படையாகும். இந்த ஒரு கூற்றிலேயே அநியாயக் கொலையை இஸ்லாம் வன்மையாக எதிர்ப்பதை எவரும் உணர இயலும். தமது மதத்தின் மீது பற்றுள்ள எவனும் இத்தகைய மாபாதக செயலைச் செய்யத் துணிய மாட்டான்.
இதை இன்னொரு விதத்தில் சொல்ல வேண்டுமெனில், அமைதியைப் போதிக்கும் ஒரு சமயத்தைப் பற்றி நேர்மாறான அல்லது தவறான எண்ணத்தினைத் தோற்றுவிக்க வேண்டும் என்று எண்ணுபவர்களே தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுவதோடு அவர்கள் தாங்கி இருக்கும் பெயர்களால் இஸ்லாத்துக்குத் தீராக் களங்கத்தை ஏற்படுத்துகின்றனர்.
இறைவன் உண்டு என்ற ஆத்திக நம்பிக்கையினைப் பின்பற்றும் அத்தனை மதங்களும் மனித குலத்தைத் தழைக்கச் செய்யும் அன்பு, கருணை மற்றும் அமைதியைப் போதிக்கின்றன. ஆனால் பயங்கரவாதிகளோ இதற்கு நேர்மாறாக வன்முறை, கொடூரம், மூர்க்கம் ஆகிய மனித குலம் வெறுத்து ஒதுக்கத் தக்க செயல்களை மதத்தின் பெயரால் செய்யும்போது இவையிரண்டும் எப்படி ஒட்டும்?
ஆக, இத்தகைய வன்முறையில் ஈடுபவர்களுக்கு மதங்களின் மீது முறையான நம்பிக்கை இல்லை, அல்லது ஏற்றுக்கொண்ட மதத்தின் கொள்கைகளை மிகச் சரியாக விளங்கிக்கொள்ளாமல் தாம் செய்யும் பயங்கரவாததிற்கு மதத்தின் பெயரைப் பயன் படுத்திக் கொள்கின்றனர் என்பதும் புலனாகிறது.
தீவிரவாதச் செயல்களைச் செய்பவர்களின் பின்னணியில் யார்? என்பது முக்கியமான கேள்வியாகும்.
மேற்காணும் கேள்விக்கு, ஃபாஸிஸக் கொள்கையை உடையோர், இன வேறுபாடுகளைத் தூண்டுபவர்கள், அரசியல் ஆதாயம் பெறுவோர் யாவர்? தீவிரவாதச் செயல்களால் மதரீதியான குழப்பங்கள் உருவானால் அதிலிருந்து பயனடைந்து கொள்பவர்கள் யாவர்? என்று சிந்தித்துப் பார்த்தால் எளிதாக விடை கிடைக்கும்.
இங்கே பயங்கரவாதத்தினைச் செய்பவர்களின் பெயர்களோ மத அடையாளங்களோ முக்கியமில்லை என்பதை நாம் உணர வேண்டும். தனது கண்ணுக்கு முன் நிற்கும் அப்பாவிகளைக் கண்மூடித்தனமாகச் சுட்டுத் தள்ளுபவன், வெடிகுண்டுகளை வைப்பவன், மனித வெடிகுண்டாக இருப்பவன், மனிதத்தன்மையற்ற ஒரு வெறி பிடித்த மிருகம் என்பதை மட்டும் நாம் நினைவில் நிறுத்த வேண்டும்.
இஸ்லாமியத் தீவிரவாதம், ஹிந்துத் தீவிரவாதம் போன்ற பதங்களெல்லாம் பிழையானவை என்பது ஓரளவிற்குப் பிடிபடும் இவ்வேளையில்,
பயங்கரவாதச் செயல்களைத் தடுத்து நிறுத்தி, இஸ்லாம் போதிக்கும் அமைதியையும் நீதியையும் இவ்வுலகிற்கு புத்துணர்ச்சியுடன் மீண்டும் தழைக்கச் செய்யும் பாரிய பொறுப்பு உலக முஸ்லிம்களின் எதிரில் இப்போது உள்ளது.
http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=1133&Itemid=53
தலைப்பு : Who is Wrong? Who is Right?, அன்றும் இன்றும், கட்டுரைகள், வரலாறு
64 கலைகளைப் பொறுத்தவரையில் பாலியல் உணர்ச்சிகளை, உறங்கிக் கிடக்கும் செக்ஸ் உணர்வை தூண்டுவதற்கு கோவில் சிலைகளில் பாலியல் உறவு சிலைகள் வடிக்கப்பட்டுள்ளன. ஆனால், அதில் கற்பனைக்கும் மீறிய ஒரு ஆபாசம் இருக்கும். இப்படியெல்லாம் பண்பாட்டில் மீறிய உறவு உண்டா என்று கூட நமக்கு தோன்றும்.
ஒரு புதுமண தம்பதிகள் காமசூத்ரா சிலைகளை பார்க்கும்போது அவர்களையும் மீறி அவர்களது உடலில் மின்சாரம் போன்ற ஷாக் அல்லது அதிர்வு. அதுதான் பாலியல் உறவில் தயக்கம் என்ற திரை விலகி படுக்கை அறை உறவுக்கு கைட். ஐ திங்க்.... பிராக்டிகல் லைப்புல செக்ஸ் போட்டோலேஷன்ஷிப் வெச்சுக்கிறதில் எத்தனையோ டென்ஷன்ஸ். அதையும் அவாய்ட் பண்ணிட்டு உறவில் ஈடுபடும்போது இருவரது மனதும் ஹேப்பியாக இருக்கும் தம்பதிகள் மிகக் குறைவு. 64 கலைகள் பிராக்டிகளைப் பற்றி பின்னால் விரிவாக சொல்கிறேன்.
பொதுவாக ஆண்வர்க்கம் பெண்ணின் உணர்ச்சிகளை-மனநிலையை மதிக்காமல், போட்டோந்துக் கொள்ளாமல் ஒரு செல்ஃபிஷ் செக்ஸ் உறவில் ஈடுபடுவதுதான் பெண் இனத்தின் குமுறல்கள். அதற்காக எல்லா ஆண்களையும் குற்றம் சாட்டவில்லை. அது அவர்களது குற்றமா? இயற்கையின் படைப்பில் நிகழந்ததாக இருந்தாலும், ஆண்களுக்கு போட்டோய வைப்பது காலத்தின் கட்டாயம் என்றே சொல்லலாம். பெரும்பாலும் முதலிரவில் தான் ஃபோர்ஸ் செக்ஸில் பெண்கள் வாழ்க்கையே வெறுத்து விடுகிறார்கள். மண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்த இளம்பெண்கள் அன்றைய தின முதலிரவில் இதயம் படபடக்க.... பயம் கலந்த வெட்கம், கூச்சம் இத்தனையும் சுமந்து கொண்டு எக்ஸாமினேஷனுக்கு போகும் ஸ்டூடண்ட் போல் நுழைவார்கள். அங்கே மணமகனோ பாய்ந்து கடித்து ஒருவழி பண்ணியாக வேண்டுமென்ற துடிப்போடு காத்திருப்பான். மண வாழ்க்கையின் முதல் தாம்பத்ய உறவு என்பது பலருக்கு வேதனை, சிலருக்கு இன்பம். ஒரு பழமொழியை ஆண்கள் சொல்வார்கள். பர்ஸ்ட் கிஸ் ஆஃப் தி லேடி. லாஸ்ட் சிப் ஆஃப் தி சீக்ரெட் என்று ஒரு குஷியோடு சொல்வாங்க. அதே மாதிரி முதல் முத்தத்தையும், முதல் காதலையும் மறக்க முடியாது மகளே என்று ஒரு சினி சாங் கூட உண்டு. ஸோ ஒரு பெண்-ஆண் வாழ்க்கையில் முதல் இரவு வாழ்க்கையில் ஏற்படும் உறவு தான் மணவாழ்க்கையின் முதல் முடிச்சு.
நமக்கு பசி எடுத்துவிட்டால், டைனிங் டேபிளில் வைக்கப்பட்ட சூடான உணவை மெதுவாக, கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடுவது போல தான் செக்ஸ் அப்ரோச்சும். பெண் என்பவள் மலருக்கு சமம். தேனை குடிக்க வரும் வண்டு மலரை காயப்படுத்தாமல் அமர்ந்து தான் தேனை உறிஞ்சிவிட்டு பறக்கும். முன்பின் தெரியாத ஆணும், பெண்ணும் தனித்துவிடப்பட்ட அறையில் சூடேறிய உணர்ச்சிகளுடன் விடப்படும் போது இறுக்கம் அதாவது பெண்ணின் டென்ஷனை போக்க மனம்விட்டு பேச வேண்டும். அதற்காக மூட் அவுட் ஆகக்கூடிய பிளாஷ் பேக் லவ் அல்லது பேமிலி பிராப்ளத்தை பற்றி பேசிவிட்டு ஒரு பக்கம் மணப்பெண் கண்ணை கசக்க மறுபக்கம் அவர் தம் அடிக்கும் நிலையை அவாய்ட் பண்ணனும். மென்மையான பேச்சு, டச்சிங் மூலம் உணர்ச்சிகளை தூண்டி அன்பு, பாசத்துக்கு பேசிக் டச் கொடுத்துவிட்டு பின்பு அப்ரோச் பண்ணினால் அந்த பெண்மையானது ஆணின் தாகத்தையும் தீர்த்துவிட்டு, தனக்குள் ஒரு சந்தோஷத்தை ஈர்த்துக் கொள்ளும். இந்த பேசிக் பிரின்சிப்பிளில் இருந்து ரூட் மாறினால்.... அதுதான் இதைப்படிக்கும் பலபேருக்கு அவர்களது எக்ஸ்பீரியன்ஸ் ஒரு லெசன் கொடுத்திருக்குமே!ஃபோர்ஸ் செக்ஸ் சம்பவத்தை சொல்கிறேன். ஃபோர்ஸ் SEXல காயப்பட்ட 23 வயது கோகிலாவுக்கு ஏற்பட்ட எக்ஸ்பீரியன்ஸ் கொஞ்சம் வித்தியாசம். பி.எஸ்.சி. முடிச்சவுடனே அவருக்கு மேரேஜ் ஃபிக்ஸ் பண்ணினாங்க. பேங்க்ல வொர்க் பண்ணும் மனோகர் நல்ல ஸ்மார்ட். மனோகரின் பர்சனாலிட்டி கோகிலாவுக்கு பிடித்தது. அப்புறம் மேரேஜ் ஆனது.
அன்றைக்கு FIRST NIGHT முடிந்தது. மறுநாள் கோகிலா முகத்தல ஒரே நகம்பட்ட கீறல், உதட்டில் ரத்தம். ஓவென்று அழ ஆரம்பிச்சிட்டா..... எனக்கு இந்த மாப்பிள்ளை வேண்டாம். என்னை விட்டுடுங்க.... அவர் இம்பொடன்ட். என் உடம்பு முழுவதும் கடிச்சு குதறிட்டார்ன்னு கத்திக் கொண்டே அழுதாள். உடனே கோகிலாவின் அப்பா மாப்பிள்ளை மனோகரை அடிக்கவே போயிட்டார். உன்னை டாக்டர் கிட்ட செக்கப் பண்ணனும், வாடா.... என்று ரொம்பவே பேசிட்டார். புதுமாப்பிள்ளை மனோகரனுக்கு ரொம்ப அவமானமா போச்சு. அவர் கோபித்துக் கொண்டு போய் விட்டார்.
கோகிலாவிடம் நடந்த உண்மையை கேட்ட பின்புதான் மனோகரனின் வீக்னெஸ் போட்டோஞ்சுது. ஒவ்வொரு ஆண் மனதில் கற்பனை கலந்த செக்ஸ் இருக்கும். அதுமாதிரி, கோகிலா அறைக்குள் நுழைந்ததுமே, அவளை பேச விடவில்லை. உதட்டை கடித்து காயப்படுத்தி, கோகிலாவை துடிதுடிக்க வைத்து உடம்பு முழுவதும் அல்சேஷன் டாக் போல ஏகப்பட்ட கடிகள். ஆனால், செக்ஸ் உறவுக்கு மனோகர் அப்ரோச் பண்ணவில்லை. அதுதான் கோகிலாவுக்கு சந்தேகத்தை எற்படுத்தியது.
கோகிலாவுக்கு மூன்று மாதங்கள் டிரீட்மென்ட் கொடுத்து மனோகரின் கடி காயங்ளை ஆற வைத்தனர். அப்புறம் மனோகரனை அழைத்து கவுன்சிலிங்குல ஒரு பெரிய லெசன் கொடுத்தோம். அவருடைய சிறு வயதில் ஏற்பட்ட ஒரு பாதிப்பு. அதாவது அவங்க பேரண்ட்ஸ் சண்டை போடுவதை பார்த்து பார்த்து ஒரு டேஞ்ஜரான இன்ஸ்பிரேஷன் அவர் மனசுல பதிந்திருந்தது. அது செக்ஸ் ACTION-ல போட்டோஃப்லெக்ட் ஆகிவிட்டது. உங்க வொய்ஃப்பை சாப்டாக அப்ரோச் பண்ணனும். செக்ஸ் ACTION-ல உங்க லைப் பார்ட்னரோட உணர்ச்சியை போட்டோந்து கொள்ளனும்னு அட்வைஸ் சொன்ன பின்பு மனோகர் போட்டோலாக்ஸ் ஆனார். இப்போ அவங்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கு.
செக்ஸ் எஜுகேஷன் பெண்களை விட ஆண்களுக்கே அதிகம் தேவை என்பது பலரது அனுபவத்தில் கண்ட போட்டோசல்ட். தலைமுறை இடைவெளியில் செக்ஸ் போட்டோலேஷன்ஷிப்புல இன்றைய தலைமுறை பெண்களுக்கு ஒரு அவெயர்நெஸ் ஏற்பட்டிருக்கிறது. தங்களது உணர்ச்சிகளையும், உணர்வுகளையும் மதிக்க வேண்டுமென்ற ACTION-ல இறங்கியிருப்பது வெல்கம். முந்தைய தலைமுறையில் ஆணும் பெண்ணும் தனி அறையில் விடப்பட்டதும், அந்த ஆண்மகன் பேசக்கூட தைரியமில்லாத பெண்ணிடம் தன் முழு பலத்தையும் காட்டிவிட்ட பின்பே வெளியே வருவான். அதுவும் ஒரு இயந்திரத்தனமான செக்ஸ் போட்டோலேஷன்தான். குழந்தைகள் பிறப்பதற்கு மட்டும் உறவு என்கிற எண்ணத்தில்தான் கணவன்-மனைவி உறவு இருந்தது.
எனக்கு தெரிந்த ஒரு வயதான அம்மாவுக்கு எண்பது வயசு இருக்கும். அவங்களோட முந்தைய தலைமுறை உறவுகளை பற்றி கேட்டவுடன், அவங்களுக்கு கோபம் வந்திடுச்சு. என்னாடீ..... இதையெல்லாம் வெளியே பேசுவதே அபத்தம்டி. தெய்வ குத்தம்னு சொன்னங்க. அந்தளவுக்கு செக்ஸ் போட்டோலேஷன்ஷிப்பை கலாச்சார பண்பாட்டு கட்டடுப்பாட்டுக்குள் வெச்சிருக்காங்க.
அப்புறம், ஒரு ஆராய்ச்சிக்காக கேட்கிறேன் என்று சொன்னதும் தான் ஒப்பனா சொன்னாங்க. முந்தைய தலைமுறையில் பகலில் செக்ஸ் உறவுக்கு தடை. இரவில் விளக்கு வெளிச்சம் துளி கூட இல்லாமல் செக்ஸ் அப்ரோச். அதில்!
பெண்ணின் உணர்ச்சிகளை ஓப்பனாக காட்டினால் குற்றம்.
எங்க சுகத்தை வெளிப்படையாக சொல்ல முடியாது. அவங்க ஆசைய மட்டும் தீர்த்துட்டு போயிடுவாங்க. இப்போ, டி.வி. சினிமாவுல இப்படி காட்டுறாளே அந்த மாதிரி தடவல், தழுவல்களை பண்ணமாட்டாங்க. எப்படியோ ஆறு குழந்தைகளையும் படிக்க வெச்சு இப்போ பேரன் பேத்தி எடுத்தாச்சுன்னு சொன்னாங்க. முந்தைய தலைமுறையில பரஸ்பர செக்ஸ். அதாவது செக்ஸ் ACTION அப்ரோச்சுல சம போட்டோமை என்பது கிடையாது. இன்றைய ஜெனரேஷனில் சம போட்டோமை இருந்தாலும் ராங் அப்ரோச் ரொம்பவே அதிகமாகிவிட்டது.
ராங் அப்ரோச்சுல ஆண்களை மட்டும் ஓரேயடியாக குறை சொல்ல முடியாது. ஃபர்ஸ்ட் நைட்டை குட் நைட்டாக மாற்றுவதும், பேட் நைட்டாக மாற்றுவதும் பெண்கள் கையில் இருக்க. ஒரு ஆணுக்கு தேவையான வசந்தங்களை சுமந்து கொண்டு வரும் பெண்களே அந்த ஆணிண் ஆசையை தீர்த்து வைக்கலாம் அல்லவா?
ச்சீ..... வெட்கமாக இருக்குப்பா....... என்று சொல்வது நாணம். என்ன.... விளையாடுறீங்களா? நீங்க சொல்றபடி என்னால ஒத்துப் போக முடியாது என்று ஆண்களை விரட்டினால் என்ன ஆகும்?
பாலியல் சுகம் தரும் விலை மாதரை தேடி போவான். அப்புறம்..... எய்ட்ஸ்.....எய்ட்ஸ்...
- டாக்டர். ஷர்மிளா
பாலஸ்தீன் என்றால், இஸ்ரேலுக்குப் பக்கத்தில் இருக்கிற ஒரு சுதந்திரதேசம் என்று இன்றுவரை தவறாகவே நினைத்துக் கொண்டிருப்போருக்கும், இஸ்ரேல் பாலஸ்தீன் விவகாரங்கள் எது ஒன்றுமே தெரியாமல், தினசரி அங்கிருந்து வரும் குண்டுவெடிப்புச் செய்திகளை மட்டும் வாசித்துக் கொண்டிருப்போருக்கும், பிரிட்டனின் காலனிகளாக இருந்து, இரண்டாம் உலகப்போருக்குப்பின் வரிசையாக ஒவ்வொரு நாடாகச் சுதந்திரமடைந்துவிட்ட நிலையில், இருபத்தொன்றாம் நூற்றாண்டு பிறந்தபிறகும் அடிமை வாழ்வைத்தொடரும் பாலஸ்தீனில் அப்படி என்னதான் பிரச்னை என்று அறிய விரும்புவோருக்கும் இது ஒரு சந்தர்ப்பம்.
காலம் இரக்கமற்றது. ஒரு சரியான தலைவன் இல்லாத காரணத்தினாலேயே சொந்தநாட்டில் அகதிகளாக லட்சக்கணக்கான பாலஸ்தீனியர்களை அது ஐம்பதாண்டுகளுக்கு மேலாக வறுத்தெடுத்துவிட்டது. பிறகு, அராஃபத் என்றொரு தலைவனைக் கொடுத்தது. இன்னொரு ஐம்பதாண்டு காலத்துக்கு, அவர் இடைவிடாத போராட்டங்களை நடத்திவந்தார். முதலில் ஆயுதப்போராட்டம். பிறகு, அமைதிப் போராட்டம். சுதந்திர சூரிய வெளிச்சம் அம்மக்களின்மீது இன்னும் விழவில்லை. அராஃபத்தால் சிறு மெழுகுவர்த்திகளை மட்டுமே ஏற்றிவைக்க முடிந்தது. இப்போது அவரது அத்தியாயமும் முடிந்துவிட்டது. மீண்டும் பாலஸ்தீனின் கழுத்துக்கு மேலே கேள்விக்குறியாக அந்தப் பழைய கத்தி தொங்கத் தொடங்கிவிட்டது. நூற்றாண்டுகாலக் கத்தி, இன்னும் கூர்மழுங்காத கத்தி.
அதன் கூர்மை மழுங்கிவிடக் கூடாது என்பதில் இஸ்ரேலுக்கு கவனம் அதிகம். இஸ்ரேல் அந்த விஷயத்தில் கவனமாக இருப்பதைக் கண்காணிப்பதில் அமெரிக்காவுக்கு ஆர்வம் அதிகம். அமெரிக்காவின் அந்த ஆர்வத்துக்கு உடன்படுவதில் பிரிட்டனுக்கு விருப்பம் அதிகம். இஸ்ரேலும் அமெரிக்காவும் பிரிட்டனும் எடுக்கும் நிலைப்பாட்டை, இந்த ஒரு விஷயத்தில் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பதில் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் ஈடுபாடு அதிகம்.
எண்ணெய் வளம் கொழிக்கும் அரபு மண்ணில், எண்ணெயே இல்லாத ஒருபகுதி உண்டென்றால் அது பாலஸ்தீன்தான். அங்கே எண்ணெய் இல்லாதது இன்று ஒரு பொருட்டே இல்லை. முதலில், பாலஸ்தீனே இப்போது இல்லை என்பதுதான் விஷயம்.
பாலஸ்தீன் என்றொரு பிரதேசத்தை இந்தியா போன்ற சில நாடுகள் இன்று அங்கீகரித்து, தூதரக உறவுகள் வைத்துக்கொண்டிருந்தாலும் பெரும்பாலான மேற்கத்திய நாடுகள் பாலஸ்தீனை இன்னும் அங்கீகரிக்கவில்லை. புரியும்படி சொல்லுவதென்றால், உலக வரைபடத்தில் இன்று பாலஸ்தீன் என்றொரு சுதந்திர தேசத்தைப் பார்க்க முடியாது. லெபனான், சிரியா, ஜோர்டன், சவுதி அரேபியா, எகிப்து ஆகிய தேசங்கள் சுற்றி நின்று கும்மியடிக்க, நடுவே ஒரு சிறு எலும்புத்துண்டு மாதிரி இருக்கும் பிரதேசத்தில் புள்ளிவைத்து, எழுதக்கூட இடமில்லாமல் சற்றுத்தள்ளி இஸ்ரேல் என்று குறித்திருப்பார்கள். அந்தச் சிறிய புள்ளியை உற்றுப்பார்த்தால் அதற்குள் இன்னும் இரண்டு சிறிய புள்ளிகள் தெரியும். ஒன்றில் ஜெருசலேம் (Jerusalem) என்றும் இன்னொன்றில் காஸா (Gaza) என்றும் எறும்பு எழுத்தில் எழுதியிருக்கும்.
எங்கே பாலஸ்தீன்?
அதுதான் கேள்வி. அதுதான் பிரச்னை. உண்மையில் "பாலஸ்தீன்" என்பது இன்று வரையிலும் ஒரு கோரிக்கை மட்டுமே. ஒரு தனிநாட்டுக்கான கோரிக்கை. என்னதான் 1988-லேயே அராஃபத், சுதந்திர பாலஸ்தீன் பிரகடனத்தை அறிவித்துவிட்டாலும், 1993-ல் இஸ்ரேலுடனான அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகியிருந்தாலும், அமைதிக்கான நோபல் பரிசை இஸ்ரேலியப் பிரதமர் யிட்ஸாக் ராபினுடன் (Yitzhak Rabin) அவர் பகிர்ந்துகொண்டிருந்தாலும், 1996-ல் அங்கே ஒரு பொதுத்தேர்தலே நடந்து, அராஃபத் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பாலஸ்தீனிய அதிபராகப் பொறுப்பேற்றுக்கொண்டாலும், ஒரு குட்டி நாடாளுமன்றம் அங்கே செயல்பட்டாலும் பாலஸ்தீன் ஒரு சுதந்திர தேசம் இல்லை. இன்றுவரையிலும் இல்லை. இல்லாவிட்டால் எப்படி அவரை இஸ்ரேல் அரசு வீட்டுச் சிறையில் மாதக்கணக்கில் வைத்திருக்க முடியும்? ஒரு சுதந்திர தேசத்தின் அதிபரை, அவரது சொந்த மண்ணில், சொந்த வீட்டில் இன்னொரு தேசம் சிறைவைப்பது என்பதைக் கதைகளில் கூடப் படிக்க முடியாதல்லவா? திரைப்படங்களில் கூடப் பார்க்க முடியாதல்லவா?
இருபதாம் நூற்றாண்டின் மிகப்பெரிய சரித்திர மோசடி என்றால் அது இஸ்ரேல், பாலஸ்தீனுக்கு இழைத்ததுதான். இதில் சந்தேகமே இல்லை. கற்பனைக்கு அப்பாற்பட்ட தீவிரவாதச் செயல்கள் அங்கே நடந்தன. கொத்துக்கொத்தாகக் கொன்று குவித்தார்கள். இடித்த கட்டடங்கள், உடைத்த சாலைகள், அடைத்த கதவுகளுக்கு அளவே இல்லை. குழந்தைகள், ஆண்கள், பெண்கள் பாகுபாடே கிடையாது. "கொல், கொல், கொல்" என்னும் சொல் மட்டுமே தாரக மந்திரமாக இருந்தது.
அங்கே பொருளாதாரம் உயரவில்லை. போராட்டங்கள் மிகுந்தன. கல்வி வளரவில்லை. கலவரங்கள் மிகுந்தன. அடியில் குண்டு வைத்துவிட்டே அமைதி குறித்துப் பேசினார்கள். அரபு மண்ணின் சவலைக் குழந்தையான பாலஸ்தீன் என்பது இறுதிவரை ஒரு கனவுக்குழந்தையாகவே இருந்துவிடுமோ என்கிற அச்சம் இன்று உலக நாடுகள் அனைத்துக்கும் எழுந்திருக்கிறது. யாசர் அராஃபத் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், "இனி அங்கே அமைதிக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்" என்று பேசியதன் உள்ளர்த்தம் புரிந்த அனைவருமே நிலைகுலைந்து போனார்கள்.
அராஃபத் இல்லாத பாலஸ்தீனியர்களின் வாழ்வில் அமைதி என்பது இல்லை என்பது, சற்றே விவரமறிந்தவர்களுக்குத் தெரியும். ஏனென்றால், கடந்த நூறு வருடங்களில் பாலஸ்தீன் கண்ட ஒரே தலைவர் அராஃபத்தான். இன்னொரு பெயரை யோசித்துச் சொல்ல முடியுமா யாராலாவது? இப்போது இடைக்கால அதிபராகப் பொறுப்பேற்றிருக்கும் ராவி ஃபட்டோவின் (Rawhi Fattouh) பெயரையோ, பிரதமர் அகமது கரியின் (Ahmed Qurie) பெயரையோ இதற்கு முன்னால் கேள்விப்பட்டிருக்கிறோமா நாம்?
அதுதான் பிரச்னை. பாலஸ்தீன் ஒரு தலைவனற்ற தேசமாகப் பிறந்து, வளர்ந்து, நடுவில் ஒரு தலைவரைப் பெற்று, இப்போது மீண்டும் தலைவனற்ற தேசமாகியிருக்கிறது. மீண்டும் அங்கே கோரத்தாண்டவமாட நாள் பார்த்துக்கொண்டிருக்கிறது இஸ்ரேல்.
யோசித்துப் பார்த்தால் கொஞ்சம் வியப்பாகத்தான் இருக்கும். 1948-ம் வருடம் வரை இஸ்ரேல் என்றொரு தேசம் கிடையாது. அது, யூதர்களின் மனத்தில்தான் அதுநாள்வரை கருவாக வளர்ந்து கொண்டிருந்தது. திடீரென்று ஒருநாள் பிரிட்டிஷ்காரர்கள் பாலஸ்தீனைக் கூறுபோட்டார்கள். அவர்கள்தாம் அப்போது அந்தப்பகுதியை ஆண்டுகொண்டிருந்தவர்கள். ஒரு கூறுக்கு இஸ்ரேல் என்று பெயரிட்டார்கள். அது யூதர்களின் தேசமானது. இன்னொரு கூறு பாலஸ்தீனிய அரேபியர்களின் இடமாகவே தொடர்ந்து இருக்கும் என்று சொன்னார்கள். ஆனால் நடந்தது வேறு.
இஸ்ரேலை யூதர்கள் ஸ்தாபித்ததை விரும்பாத சில அரேபிய தேசங்கள் (எகிப்து, ஜோர்டன், சிரியா, லெபனான், ஈராக்) தலைவர்களற்ற பாலஸ்தீனியப் போராளிகளுடன் இணைந்து இஸ்ரேலை எதிர்த்தன. 1948-ம் ஆண்டு நடைபெற்ற இந்த முதல் யுத்தத்தின் இறுதியில் இஸ்ரேல் ஒவ்வொரு நாட்டுடனும் ஓர் அமைதி ஒப்பந்தம் செய்துகொண்டு, போரை ஒரு முடிவுக்குக் கொண்டுவந்தது. அந்த ஒப்பந்தங்களின் அடிப்படையில் ஜோர்டன் படை முன்னேறி வந்த மேற்குக்கரை (West Bank)யின் பெரும்பகுதி அந்நாட்டுக்கே சொந்தம் என்றானது. எகிப்துப் படைகள் நிலைகொண்ட காஸா பகுதி, எகிப்தின் சொந்தமானது. கூறுபோட்ட பிரிட்டன், தன்வேலை அதோடு முடிந்ததாகச் சொல்லி விலகிக்கொண்டது. பாலஸ்தீனிய அராபியர்கள் வேறுவழியின்றி, தனியே போராட்டத்தில் குதித்தார்கள். ஐம்பதாண்டு காலத்துக்கு மேலாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் அந்தப் போராட்டத்தில் அவர்கள் எத்தனையோ வீழ்ச்சிகளைப் பார்த்திருக்கிறார்கள். ஆனால், அராஃபத்தின் மறைவைக் காட்டிலும் ஒரு பெரிய வீழ்ச்சி அங்கே இதுகாறும் ஏற்பட்டதில்லை.
இஸ்ரேல்-பாலஸ்தீன் பிரச்னையின் சுருக்கத்தை நான்கு வரியில் சொல்லுவதென்றால், அது மேலே உள்ளதுதான். ஆனால் இது நான்கு வரிகளில் முடிகிற விஷயம் இல்லை. நாலாயிரம் வருட சரித்திரச் சிக்கல்களை உள்ளடக்கியது.
எத்தனையோ நூற்றாண்டுகளாக உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஊர் ஊராகத் தப்பியோடிக் கொண்டிருந்தவர்கள் யூதர்கள். இதிகாச காலங்களில் அவர்கள் ஓடிக்கொண்டிருந்தார்கள். புராண காலங்களில் தலைதெறிக்க ஓடிக்கொண்டிருந்தார்கள். சரித்திர காலம் வந்தபோதும் வாழ வழியில்லாமல்தான் ஓடிக்கொண்டிருந்தார்கள். பின்னால் நவீன உலகம் உருவான பிறகும் அவர்களது ஓட்டம் ஓயவில்லை. சொந்தமாக ஒரு துண்டு நிலம் இல்லாமல், எல்லா தேசங்களிலிருந்தும் அடித்துத் துரத்தப்பட்டவர்கள் அவர்கள். ஜெர்மனியில் ஹிட்லரால் யூதகுலத்துக்கு நேர்ந்த கொடுமைகள் விவரிப்புகளுக்கு அப்பாற்பட்டவை. ரத்தக்கறை படிந்த அந்தச் சரித்திரமெல்லாம் இன்னமும்கூட உலராமல் அதே ஈரத்துடன்தான் இருக்கிறது. காலம் காலமாக வதைபட்டே மடிந்தவர்கள், 1948-ல்தான் இஸ்ரேல் என்றொரு தேசத்தைத் தமக்காக உருவாக்கிக்கொண்டு அதில் வந்து வாழ ஆரம்பித்தார்கள். வாழ்வதற்கு ஒரு துண்டு நிலமில்லாது போவதன் முழு வலியும் அறிந்தவர்கள், எப்படி பாலஸ்தீனிய அராபியர்களை அதே அவதிக்கு உள்ளாக்கினார்கள்? பழிவாங்குவதென்றாலும் விரட்டியவர்களையல்லவா பழிவாங்கவேண்டும்? விரட்டியவர்களுடனேயே சேர்ந்து, வாழ இடம்கொடுத்தவர்களையா பழிவாங்குவார்கள்? இஸ்ரேல் ஏன் இப்படியொரு காரியம் செய்யவேண்டும்?
தொட்டால் அல்ல முகர்ந்து பார்த்தாலே கூடப் பற்றிக்கொள்ளக்கூடிய மிகத்தீவிரமான பிரச்னையின் மையப்புள்ளி இது. ஏனெனில் இதில் அரசியல் மட்டுமல்ல; மதமும் கலந்திருக்கிறது. மதமும் அரசியலும் இரண்டறக் கலந்த இடத்தில் பற்றிக்கொள்ள பெட்ரோல் இருந்துதான் ஆகவேண்டுமென்று அவசியமா என்ன? இருபத்தோறாம் நூற்றாண்டில் மிகப்பெரிய சிக்கல்களை உலகுக்குத் தரப்போகிற இஸ்ரேல் - பாலஸ்தீன் பிரச்னையின் வேர்களை முதலில் ஆராயலாம். விழுதுகளிலும் கிளைகளிலும் பரவியிருக்கும் விஷத்தின் வீரியம் அப்போதுதான் புரியும்
http://documents.scribd.com/docs/6asfiyuktxkb5fws6xm.pdf
John Pilger: "Palestine is Still the Issue"
தலைப்பு : Who is Wrong? Who is Right?, அன்றும் இன்றும், கட்டுரைகள், வரலாறு, வீடியோ
1947
கொண்டாட்டங்கள்... கொடியேற்றம்... என்று தேசம் விடுதலையை கொண்டாடிய ஆண்டு. இருட்டிலே வாங்கினோம் என்று பின்னர் நம்மில் பலரும் கேலி பேசினாலும்; வாஸ்கோடகாமா 1498-ஆம் ஆண்டு கால் வைத்த நாள் துவங்கிய கொடுமைகளும் வேதனைகளும், போராட்டங்களும் அரசியல் அரங்கிலேனும் ஒரு முடிவுக்கு வந்ததே என மக்கள் கொண்டாடினர்.
ஆனால் 1947 என்பது விடுதலையின் ஆண்டு மட்டுமல்ல.
இந்தியா என்கிற ஒரு தேசம் இந்தியா-பாகிஸ்தான் என இரண்டாக்கப்பட்டது. மத்தியும் தெற்கும் கொண்டாட்டத்திலிருந்த நாட்களில் மேற்கிலும் கிழக்கிலும் வடக்கின் பல பகுதிகளிலும் பிரிவினையின் அர்த்தத்தை கோடான கோடி மக்கள் வர்ணிக்க முடியாத துயரங்களுடனும் இழப்புகளுடனும் உள்வாங்கிக் கொண்டிருந்தனர். பிரிவினைக்குக் காரணம் முஸ்லீம்லீக் தான் என்று ஒரு சாரரும் ஜின்னாதான் என்று சிலரும்; காங்கிரஸ்தான் என்று ஒரு சாராரும் காலம் காலமாக சாதி இந்துக்கள் இஸ்லாமியரை தீண்டத்தகாதவராக நடத்தியதுதான் காரணம் என்று பலரும் - இதெல்லாம் தவறு, விடுதலைக்குப் பிறகு வேலைவாய்ப்பு மற்றும் அதிகாரத்தில் பங்கு பற்றிய அச்சம் கொண்டிருந்த இஸ்லாமிய உயர் மத்தியவர்க்கமும்; செல்வந்தரும்தான் பிரிவினைக்கு வித்திட்டனர் என்று ஒரு வாதமும் எல்லாவற்றுக்கும் மேலாக பிரிட்டிஷ் ஆட்சியாளன் பின்த்தாளும் சூழ்ச்சியும் தாங்கள் போன பிறகு இந்தியர்கள் தமக்குள் வெட்டிக்கொண்டு சாகட்டும் என்கிற அவர்களின் நல்லெண்ணமும் தான் காரணம் என ஒரு வாதமும் - என தேசமெங்கும் வாதப்பிரதிவாதங்கள் நடந்து கொண்டிருக்க அறுவைச் சிகிச்சை நடந்து முடிந்தது.
ஆனால் மக்களில் ஒரு பகுதியினர் வேறு விதமாகவும் நினைத்தனர். இந்து - முஸ்லீம் கலவரங்கள் இத்தோடு ஒழிந்துவிடுமல்லவா? முஸ்லீம்களுக்கே தனியாக ஒரு நாடு என்று கொடுத்துவிட்டோம். இத்தோடு பகைமையின் கதை முடிந்தது என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
ஆனால் பகைமையின் வேர்கள் இன்னமும் ஆழமாக இரு நாட்டு மண்ணிலும் ஊடுருவி நின்று வருங்காலத்திலும் தொடர தேசப்பிரிவினை மேலும் ஒரு காரணமாகி விட்டதை அவர்கள் அன்று அறிந்திருக்கவில்லை.
இன்றுவரை தொடர்ந்து நம் மீது கருநிழல் கவிழ்க்கும் மிகப்பெரிய சரித்திர நிகழ்வாக பிரிவினை இருந்து வருகிறது.
தமிழர்களாகிய நம்மால் - அதிலும் இன்று வாழ்கிற நம்மால் - தேசப்பிரிவினை உணர்ந்து கொள்ளப்படவில்லை. இன்றைய வகுப்புவாதப் பிரச்சினைகளை புரிந்து கொள்ள தேசப்பிரிவினை பற்றிய ஒரு மீள்பார்வை நமக்கு அவசியம்.
1947 ஜூன் 3 அன்று இரண்டு நாடுகளாக இந்தியாவைப் பிரிக்கும் திட்டத்தை பிரிட்டிஷ் அரசு அறிவித்தது. அப்போது இந்தியாவில் இடைக்கால அரசு ஆட்சியில் இருந்தது. அந்த அரசு ஒரு பிரிவினை கமிட்டி-யை நியமித்தது. கவர்னர் ஜெனரல் தலைமையில் சர்தார் வல்லபாய் படேல், டாக்டர் ராஜேந்திர பிரசாத், திரு.லியாகத் அலிகான் மற்றும் சர்தார் அப்துர் ரப் நிஷ்தர் ஆகியோரைக் கொண்டு அக்குழு இயங்கியது.
ஜூன் 18, 1947-ல் பிரிட்டிஷ் பாராளுமன்றம் இந்திய விடுதலை மசோதாவையும் பிரிவினை மசோதாவையும் நிறைவேற்றியது. மூன்றே அனுபந்தங்களையும் பிரிவினைகளையும் மட்டுமே கொண்ட அந்த மசோதா தேசப் பிரிவினையை அமுல்படுத்த பத்து நிபுணர் குழுக்களை நியமித்தது.
அவை:
1. அமைப்பு, ஆவணங்கள், அரசு அலுவலர்
2. சொத்துக்கள் மற்றும் கடன்கள்
3. மத்திய வருவாய்
4. ஒப்பந்தங்கள்
5. கரன்சி, நாணயம் மற்றும் பரிவர்த்தனை
6. பொருளாதார உறவுகள் - குழு - 1
7. பொருளாதார உறவுகள் - குழு - 2
8. வாழுமிடம்
9. வெளியுறவு
10.ராணுவம்
இந்த நிபுணர்குழு எதுவும் இடம் பெயர்ந்த மக்களின் துயரத்தையோ நடைபெற்ற கலவரங்களையோ பற்றி கவனிக்கவேயில்லை.
1947 ஜூன் 30 அன்று 'எல்லைக் குழு' ( Boundry Commission ) நியமிக்கப்பட்டது. பஞ்சாப் பவுண்டன் கமிஷன், பெங்கால் பவுண்டன் கமிஷன் என இரு குழுக்கள்.
இரண்டு குழுக்களுக்கும் தலைவராக சர்.சின்ல் ரேட்கிளிஃப் (Sir Cyril Radcliff) பிரிட்டிஷ் சட்ட வல்லுநர் நியமிக்கப்பட்டார்.
பஞ்சாப் பவுண்டன் கமிஷன்
1. சர்சின்ல் ரேட்கிளிஃப்
2. ஜஸ்டிஸ் தின் மொகம்மது
3. ஜஸ்டிஸ் முகமது முனிர்
4. ஜஸ்டிஸ் மெகர்சந்த் மகாஜன்
5. ஜஸ்டிஸ் தேஜாசிங்
வங்காள பவுண்டன் கமிஷன்
1. சர் சின்ல் ரேட் கிளிஃப்
2. ஜஸ்டிஸ் பி.கே. முகர்ஜி
3. ஜஸ்டிஸ் சி.சி. பிஸ்பாஸ்
4. ஜஸ்டிஸ் அபு சலேஷ் முகமது அக்ரம்
5. ஜஸ்டிஸ் எஸ். ஏ. ரஹ்மான்
ஒவ்வொரு குழுவிலும் இரண்டு இந்துக்கள் இரண்டு முஸ்லீம்கள் ஆனால் எல்லோரும் நீதிபதிகள். சாதாரண மக்களிலிருந்தோ இயக்கங்களிலிருந்தோ எவருமில்லை என்பதை கவனிக்க வேண்டும்.
பொதுமக்களிடமிருந்து பிரிவினை குறித்த மனுக்களை இக்கமிஷன்கள் வரவேற்றன. காங்கிரஸ் கட்சி, முஸ்லீம் லீக், இந்து மகாசபை, மற்றும் சீக்கிய அமைப்புகளும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட வாதங்களை இக்கமிஷன்களிடம் முன்வைத்தன. ஆனால் பெரும்பான்மையினரான படிப்பறிவற்ற இந்திய மக்களிடம் எவரும் கருத்து கேட்கவில்லை.
இரண்டு கமிஷன்களில் இருந்த உறுப்பினர்களுக்கு இடையிலும் தீர்க்கவே முடியாத கருத்து முரண்பாடுகள் நிலவின. வேறுவழியின்றி சட்டப்படி எது சரியோ அதைச் செய்ய கமிஷனின் தலைவர் சர் சின்ல் ரேட்கிளிப்புக்கு கமிஷன் உறுப்பினர்கள் அதிகாரம் வழங்கினர்.
1947 ஆகஸ்டு 17 அன்று சர்சின்ல் ரேட்கிளிஃப் தனது தீர்ப்பை வழங்கினார்.
இரண்டு தரப்புக்கும் திருப்தி தராத தீர்ப்பாக அது அமைந்தது.
ஆகஸ்டு 17 அன்று இருநாட்டு பிரதமர்களும் அம்பாலாவில் சந்தித்து மக்களை (இந்துக்களையும் சீக்கியர்களையும் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கும் முஸ்லீம்களை இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கும்) பரிமாறிக்கொள்ள ஒப்புக்கொண்டனர்.
ஆனால் அந்தத் தேதிக்கு முன்பாகவே இங்கிருந்து 5 லட்சம் மக்களும் அங்கிருந்து 5 லட்சத்துக்கு மேலான மக்களும் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்தபடி இடம் பெயர்ந்துவிட்டிருந்தனர் என்பதுதான் சரித்திரத்தின் குரூர நகைச்சுவையாகும்.
இடம்பெயர்தல்:
நடுவில் கோடு கிழித்து இரண்டு தேசமாக்கிவிட்டால் வகுப்புவாத அரசியல் அன்றோடு முடிவுக்கு வந்துவிடும் என்று நியாய உணர்வுள்ள பலரும் கருதினர். லட்சோப லட்சம் மக்கள் இப்படி இடம் பெயர நேரிடும் என காந்திஜி கூட நினைக்கவில்லை. ஆனால் நவகாளியிலும்; ராவல்பிண்டியிலும் 1946 இறுதியிலிருந்து நடைபெற்று வந்த கலவரங்கள் மக்களை வேறு விதமாக நினைக்கச் செய்தன.
ஆனால் பிரிவினை பற்றிய பேச்சு மக்களிடம் புழங்க ஆரம்பித்த காலத்தில் மக்களும் அப்படித்தான் நினைத்தனர்.
ராஜேந்திரசிங் (மூன்று சக்கரவாகன ஓட்டுநர், டெல்லி) அளித்த பேட்டியில் கூறினார்.
"அரசர்களும், அரசியல்வாதிகளும் தலைவர்களும் எப்பவுமே அதிகாரத்துக்காக போராடுவது வழக்கம் தான். அரசர்களும் தலைவர்களும் மாறிக்கொண்டே இருந்ததுதானே நமது சரித்திரம். ஆனால், மக்கள் எப்போது மாறினார்கள்? (ராஜே மகராஜே பதல்தே ரஹத்தே ஹை பர் ப்ரஜா கப் பத்லி ஹை?)"
பஞ்சாப் மக்களும் இப்படித்தான் பேசிக்கொண்டார்கள். ராஜா ரஞ்சித்சிங் ஆட்சிக்கு வந்தார். மக்கள் இடம் பெயரவில்லை. சீக்கியர்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வந்தனர். அப்போதும் மக்கள் இடம் பெயரவில்லை. ஆங்கிலேயர் ஆட்சிக்கு வந்தனர். அப்போதும் மக்கள் எங்கும் துரத்தப்படவில்லையே. எனவே அப்படி ஒன்றும் நடக்காது என்றுதான் சாதாரண மக்களும் நம்பிக் கொண்டிருந்தனர்.
ஆனால் நடந்து கொண்டிருந்த நிகழ்ச்சிப் போக்குகளை கவனித்த படித்தவர்க்கம் இதை முன்கூட்டியே உணர்ந்தது. காங்கிரஸ் கட்சி அலுவலகங்களுக்கு எண்ணற்ற கடிதங்கள் வந்து குவிந்தன. அன்று காங்கிரசிலிருந்த 14-5-1947 தேதியிட்டு கிருபளானி அவர்களுக்கு வந்த ஒரு கடிதம்:
"பஞ்சாபில் இருக்கும் சிறுபான்மையினரான எங்களை (இந்துக்கள், சீக்கியர்களை) பார்த்து நீங்கள் கூறுகிறீர்கள். எங்களை நாங்களே பாதுகாத்துக் கொள்ளமுடியாவிட்டால் புலம்பெயர்ந்து வந்துவிடுங்கள் என்று. மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது உங்கள் அறிக்கை. மாபெரும் காங்கிரஸ் இயக்கம் எங்களை அனாதரவாக நட்டாற்றில் கைவிட்டு விட்டது.
காலம் காலமாக அஹிம்சையை போதித்து போதித்தே பாதுகாக்க தைரியமற்றவராக்கிய எங்களை நிராயுதபாணியாக்கி; காங்கிரஸ் கட்சி இப்போது தப்பி ஓடிவரும்படி ஆலோசனை கூறுகிறது.
நான் கேட்கிறேன். ஓடிவரும் எங்களுக்கு அங்கே எந்த ஏரியாவை ஒதுக்கியிருக்கிறீர்கள்? நாங்கள் மானத்தோடு குடியமர என்ன ஏற்பாடு? நாங்கள் எத்தனை பேர் வருவது? எப்படி வருவது? எங்கள் அசையாச் சொத்துக்களை நாங்கள் என்ன செய்வது? எங்கள் ஒவ்வொருவருக்கும் வேலை தருவீர்களா? உங்கள் நிவாரண முகாம்களில் பிச்சைக்காரர்களைப் போல நீங்கள் வீசியெறியும் ரொட்டித்துண்டுகளுக்காக காத்துக்கிடக்க அழைக்கிறீர்களா?
ஐந்து நதிகள் பாயும் எங்கள் பஞ்சாப் பூமியில் நாங்கள் கவுரவமாக தலை நிமிர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உங்கள் பிகான்களையும் மதராசிகளையும் உ.பி.வாலாக்களையும போலவே. நீங்கள் எங்களையும் வங்காளிகளையும் காவு கொடுத்து உங்கள் நாட்டின் பிற பகுதிகளுக்கு விடுதலை வாங்கித் தந்துள்ளனர்கள்.
பைத்தியங்களைப் போலவும் நாடோடிகளைப் போலவும் எங்கள் மண்ணைவிட்டு ஓடி வர முடியாது. ராவல்பிண்டியில் நடந்தது போல இங்கும் நடக்கும் என்றால் நாங்கள் இந்துக்களாக இருப்பதற்காக ஓடிவந்து உங்களிடம் கையேந்தி நிற்கமாட்டோம். நாங்கள் முஸ்லீம்களாக மாறி விடுவோம்.
உங்கள் வார்த்தை ஜாலங்கள் எங்களுக்குத் தேவையில்லை. நேரடியாக பாதுகாப்பு ஏற்பாடுகள் தேவை. அதற்கு உங்களால் முடியாது என்றால் இந்த பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியை கலைத்துவிடுங்கள். எங்கள் விதியை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.
"கோழைகளே! கோழைத்தனமான உங்கள் தத்துவங்களுக்கும் சொற்பொழிவுகளுக்கும் பெரிய கும்பிடு. நாங்கள் வாழ்கிறோம் அல்லது சாகிறோம். இந்துக்களாக இருக்கிறோம் அல்லது எப்படியோ மாறுகிறோம். உங்களால் எதுவும் செய்ய முடியாத நிலையில் உங்கள் திருவாய்களை பொத்திக் கொண்டு ஓடிவிடுங்கள். எங்கள் கொதிக்கும் பூமியில் கால் வைக்காதீர்கள்" (அகில இந்திய காங்கிரஸ் கட்சி முவணங்கள் கோப்பு எண் இஃ-9 பகுதி-1,1947 பஞ்சாப்) இக்கடிதத்தில் எழுப்பப்பட்ட வினாக்களுக்கு எவரிடத்திலும் விடைகள் இல்லை.
அவரவர் வாழ்க்கையை அவரவர் தீர்மானித்துக் கொள்ளும் பதட்டமான சூழல் நிலவியது.
வசதிபடைத்தவர்கள் பத்திரிகைகளில் விளம்பரம் செய்தனர். "ராவல்பிண்டியில் 14 அறைகள் கொண்ட இரண்டடுக்கு மாளிகையும் நகரை அடுத்து அறுபது ஏக்கர் விளைச்சல் நிலமும் சொந்தமாகக் கொண்ட ஒருவர் இந்தியாவில் கான்பூர் அல்லது லக்னோவை ஒட்டிய நகர்ப் பகுதியில் இதற்கு ஈடான சொத்துக்கள் உடைய ஒருவருடன் அப்படியே பரிமாற்றம் செய்துகொள்ள தயாராக இருக்கிறார். தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி.
இது போன்ற எண்ணற்ற விளம்பரங்கள் தினசரிகளில் வரத் துவங்கின. ஆலை முதலாளிகள் இதுபோல சொத்துக்கள் ஆங்காங்கே இருக்க குடும்பங்கள் மட்டும் இடம் பெயர்ந்து தங்கள் நிலைகளை காப்பாற்றிக் கொண்டனர். ஆகஸ்ட் 15-க்கு முன்பே இந்தப் பரிமாற்றங்கள் நிகழத் துவங்கி விட்டன.
எனினும் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை விட்டு விட்டு உயிரைச் காப்பாற்றிக் கொள்ள பூர்வீக ஊர்களை நிரந்தரமாக துறந்து இருபக்கமும் மக்கள் புலம்பெயர்ந்தனர்.
எப்படி நிகழ்ந்தது? எப்படியெல்லாம் நிகழ்ந்தது?
ஒரு கிராமத்தில் திடீரென ஒரு வதந்தி வேகமாகப்பரவும். "முஸ்லீம் குண்டர்கள் (அது முஸ்லீம் கிராமமாக இருந்தால் இந்து குண்டர்கள்) நம் ஊரை நோக்கி ஆயுதங்களோடு வந்து கொண்டிருக்கிறார்கள், வதந்தி பரவியதும் உடனே ஊரே பதறி எழும். பெண்கள் குழந்தைகள் எல்லோரும் ஒரே வீட்டில் பாதுகாப்பாக கூடுவார்கள். ஆண்கள் ஆயுதபாரியாகி எதிர்த்தாக்குதலுக்குத் தயாராவார்கள். பல இடங்களில் மோதல்கள் நடந்தன. சொத்துக்கள் சூறையாடப்பட்டன. மக்கள் கொல்லப்பட்டார்கள். கட்டாய மதமாற்றத்துக்கு நிர்பந்திக்கப்பட்டார்கள். பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள்.
இது போன்ற சம்பவங்கள் நடக்க நடக்க நாளுக்கு நாள் பீதி அதிகரித்தது. பல கிராமங்கள் ஊரைக் காலி செய்துவிட்டு கால்நடைகளுடனும் தட்டுமுட்டுச் சாமான்களுடனும் இந்தியாவை (அல்லது பாகிஸ்தானை) நோக்கி நடக்க ஆரம்பித்தனர். வழியில் உள்ள கிராம மக்களும் சேர்ந்து கொள்வார்கள். சாலைப்பயணம் நீள நீள நடக்கின்ற கூட்டமும் பத்தாயிரம் பேர் இருபதாயிரம் பேர் எனப் பெருகும். இந்த ஊர்ந்து போகும் மக்கள் திரளை 'கஃபிலா' (Kafila) என்று அழைத்தனர். மிகப் பெ ரிய கஃபிலாவில் ஒரு சமயம் 4 லட்சம் பேர் நடந்து வந்தனர். இந்த அனாதரவான கஃபிலா ஒரு இடத்தைக் கடக்க எட்டு நாள் ஆனது.
இடையில் மதவெறியர்களின் தாக்குதலுக்கு இந்த கஃபிலா ஆளாகும். பெண்கள் கடத்திச் செல்லப்படுவார்கள். ஒன்றும் செய்ய முடியாது. கதறி அழுதபடி 'கஃபிலா' வின் பயணம் தொடரும். எதிரெதிர் திசைகளில் கஃபிலாக்களின் நகர்தல் - குடிக்க நீரின்றி, உண்ண உணவின்றி, நோய்க்கு மருந்தின்றி, செத்துச் செத்து விழுந்த மக்கள் ஏராளம்.
பின்னர் பல கிராமங்களில் "தாக்குதலுக்குப் படைவருகிறது" என்ற வதந்தி பரவியதுமே கற்பழிக்கப்படலாம் என்ற அச்சத்தின் விளைவாக படை எதுவும் வருவதற்கு முன்னே பெண்கள் தீக்குளித்தும் வீட்டுக்கிணறுகளில் விழுந்தும் தற்கொலை செய்து தங்கள் மானம் காத்துக் கொண்டனர். அல்லது தங்கள் வீட்டு ஆண்களால் முன்கூட்டியே கொல்லப்பட்டனர். இந்த (தற்)கொலைகள் முடிந்த பிறகு எந்த தாக்குதலும் நடக்காமலே வீண் வதந்தியாகப் போன சம்பவங்களும் உண்டு.
குறைந்தது 10 லட்சம் பேர் கொல்லப்பட்டனர். பஞ்சாபில் மட்டும் ஒரு கோடிப்பேருக்கு மேல் எல்லையை கடந்தனர். 75000 பெண்கள் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகினர்.
கடத்தப்பட்ட தங்கள் பெண்கள், குழந்தைகள் பற்றி முறையாக புகார் தந்தவர்கள் பலர். விபரம் தெரியாமல் கண்ணீருடன் காலத்தில் புதைந்து போனவர்கள் பலர். புகார்களின் எண்ணிக்கை பெருகப் பெருக 1949ல் இந்திய அரசு ஒரு சட்டம் கொண்டு வந்தது. "கடத்தப்பட்டவர்களின் மீட்பு மற்றும் மறுவாழ்வுக்கான சட்டம் 1949" கடத்தப்பட்டவர் யார் என்பதை அந்தச் சட்டம் விளக்கியது.
1-3-1947-க்குப் பிறகும் 1-1-1949-க்கு முன்பும் தங்கள் குடும்பத்தாரிடமிருந்து பிரிக்கப்பட்ட 16 வயதுக்கு கீழ்ப்பட்ட ஆண் மற்றும் எல்லா வயது பெண்களும் இந்த தேதிகளுக்கு இடையே பிறந்த குழந்தைகளும் கடத்தப்பட்டவராக கருதப்படுவர்.
இந்திய மற்றும் பாகிஸ்தானியர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு புகார்களின் அடிப்படையில் இரு நாடுகளிலும் தேடும்பணி நடைபெற்றது. பலர் மீட்கப்பட்டு அவரவர் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
1957 வரை தேடும்பணி தொடர்ந்தது. 1957 உடன் இச்சட்டம் காலாவதியானது. அதற்கு மேல் தேடுவதற்கு இரு நாடுகளிலும் அனுமதி இல்லை.
தொலைந்தவர்கள் தொலைந்து போனவர்கள்தான். ஆகஸ்டு 1956-ல் கராச்சியிலிருந்து வெளிவந்த (Dauhn) டான் என்ற பத்தின்கை ஒரு தந்தையின் சோகத்தை எழுதியிருந்தது. இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு துரத்தப்பட்ட குவா மருத்தீன் அகமத் என்பவர் வழியில் தன் பெண் குழந்தை கடத்தப்பட்டதை பற்றி பாகிஸ்தான் அரசுக்கு புகார் செய்தார். அரசு எதுவுமே செய்யாததால் அவரே தன் மகளைத் தேடி இந்தியாவுக்கு தன்சொந்த நகருக்கு வந்தார்.
அவர் பல சில்லறைக் காரணங்களைக் காட்டி கைது செய்யப்பட்டு பாகிஸ்தானுக்கு திருப்பப்பட்டார். மீண்டும் மகளைத் தேடி இந்தியா வந்த அவர் " பாகிஸ்தான் உளவாளி " என குற்றம் சாட்டப்பட்டு 1951ல் சிறையிலடைக்கப்பட்டார். விடுதலையான பிறகு பாகிஸ்தான் சென்று மீண்டும் அரசுக்கு விண்ணப்பித்தார். இந்திய அரசு அவருக்கு உதவாதது பற்றிகூட அவர் வருத்தப்படவில்லை. பாகிஸ்தான் அரசு எதுவுமே செய்யவில்லையே என வருந்தி கடிதங்கள் எழுதிக் கொண்டே இருந்தார். அதற்குள் 1957 வந்துவிட்டது. கடத்தப்பட்டவர்களை மீட்கும் சட்டமும் காலாவதி ஆனது. இரு நாடுகளிலும் வாழ்ந்த எத்தனையோ தந்தையரைப்போல அவரும் அவரது மகளை நிரந்தரமாக இழந்த சோகத்துடன் உறைந்து போயிருப்பார். இதுபோல கற்பழிக்கப்பட்ட பெண்களுக்குப் பிறந்து அனாதையான குழந்தைகளை என்ன செய்வது என்பது இரு நாடுகளிலும் பிரச்சினை ஆனது. ஒரு இந்து தகப்பனுக்கும் முஸ்லீம் பெண்ணுக்கும் பிறந்த குழந்தை எந்த மதத்தை சேரும்? அல்லது முஸ்லீம் தகப்பனுக்கும் இந்து தாய்க்கும் பிறந்த குழந்தையை எங்கே வைத்திருப்பது? இந்தியாவிலா?பாகிஸ்தானிலா? அது எந்த நாட்டுப் பிரஜையாக இருக்கும்?
நாடாளுமன்ற அவைகளில் அமைச்சர் பெருமக்கள் அறிஞர்கள் விவாதித்தனர். தகப்பனின் மதம் தான் குழந்தைக்கும் பொருந்தும் என பெரும்பாலோனோர் பேசினர். ஆனால் இந்த குழந்தைகளைப் பொறுத்தவரை பாலியல் பலாத்காரம் செய்த கயவர்களல்லவா தகப்பன்கள்? தகப்பன் என்ற வார்த்தை அவர்களுக்குப் பொருந்துமா?
அதிர்ச்சியூட்டும் கருத்துக்களை அறிஞர்கள் அவைகளில் அள்ளி வீசிக் கொண்டிருக்க அனாதைக் குழந்தைகள் இந்திய பாகிஸ்தான் தெருக்களில் குழந்தை உழைப்பாளிகளாக பிச்சைக்காரர்களாக சில்லறைத் திருடர்களாக தங்கள் பால்ய காலத்தை கரைக்கத் துவங்கி விட்டிருந்தனர். ஆசிரமங்களில் இருந்த அனாதைக் குழந்தைகளை தத்து எடுத்துச் சென்றவர்களும் ஆண் குழந்தைகளையே எடுத்துச் சென்றனர். பெண் குழந்தைகளை வேறு நோக்கங்களுக்காக தத்து எடுத்துச் சென்றனர். பலர் தத்து எடுத்துச் சென்ற பெண் குழந்தைகளை ரொம்ப சேட்டை செய்வதாகக் கூறி மீண்டும் ஆசிரமத்திலேயே கொண்டுவிட்டனர்.
நாங்கள் யார்
இதற்கிடையே 50,000 தாழ்த்தப்பட்ட குடும்பங்கள் பாகிஸ்தானிலிருந்து தப்பி இந்தியா வந்து சேர்ந்திருந்தனர். நிவாரண முகாம்களில் அவர்களுக்கு அடைக்கலம் தராமல் அதிகாரிகள் தட்டிக் கழித்தனர். எல்லைப்பகுதியில் இரண்டு வகையான நிவாரண முகாம்கள் அப்போது இயங்கின. பாகிஸ்தானிலிருந்து தப்பி வந்த இந்துக்கள் சீக்கியர்களுக்கான முகாம் ஒன்று. பாகிஸ்தான் செல்வதற்காக காத்திருக்கும் முஸ்லீம்களுக்கான முகாம் ஒன்று. சாதி இந்துக்களை முகாம்களில் சேர்க்க முழு முயற்சியில் ஈடுபட்ட அதிகாரிகள் தாழ்த்தப்பட்ட மக்களை எதிலும் சேர்க்க மறுத்தனர். முகாம்களில் இருப்பவர்களுக்குத்தான் ரேஷன் கிடைக்கும்.
1947 டிசம்பர் வாக்கில் டாக்டர் அம்பேத்கார் இது குறித்து நேருவுக்கு கடிதம் எழுதினார். ஒன்றும் நடக்கவில்லை. பாகிஸ்தானில் நிலபுலன் வைத்திருந்தவர்கள் அதற்கான சான்றுகளை இந்திய அதிகாரிகளிடம் காட்டினால் அவர்களுக்கு மாற்று ஏற்பாடாக இங்கு முஸ்லீம்கள் விட்டுச் சென்ற நிலபுலன்கள் ஈடாகத் தரப்பட்டன. இதே நடைமுறை பாகிஸ்தானிலும் இருந்தது.
ஆனால் தாழ்த்தப்பட்ட மக்கள் நிலங்களில் காலம் காலமாய் பாடுபட்டார்களே ஒழிய உடமையாளர்களாக இருக்கவில்லை. எனவே சட்டப்படி இந்திய அதிகாரிகளிடம் விவசாயிகள் என்று நிரூபிக்க அவர்களிடம் எந்த சான்றும் இருக்கவில்லை. ஈடாகப்பெற நிலமும் கிட்டவில்லை. நிவாரண முகாம்களில் ரேஷனும் கிட்டவில்லை.
பொறுப்புக்கு வந்ததும் முதல்காரியமாக பாகிஸ்தான் அரசு தாழ்த்தப்பட்ட தீண்டத்தகாத மக்கள் இந்தியாவுக்கு புலம் பெயர்வதை உடனடியாக தடை செய்து உத்தரவு பிறப்பித்தது. எல்லா தாழ்த்தப்பட்டோரும் இந்தியா சென்று விட்டால் கக்கூஸ் அள்ளுவது யார்? சாக்கடை அள்ளுவது யார்?அத்தியாவசியப் பணி பராமரிப்பு சட்டத்தின் (ESMA)கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டு கக்கூஸ்களுக்கு அனுப்பப்பட்டனர். இந்தியாவிலும் இது தான் நடந்தது.
தாழ்த்தப்பட்ட மக்கள் முஸ்லீம்களும் அல்லர். இந்துக்களும் அல்லர் என்றால் நாங்கள் யார்? நாங்கள் தீண்டத்தகாதவர்கள் உங்கள் பார்வையில் அசுத்தமானவர்கள் எங்களுக்கு "அசுத்தஸ்தான்" என்று தனி நாடு கொடுங்கள் என்றெல்லாம் குரல்களும் இயக்கங்களும் கிளம்பின.
திரு. பியாலால் (Mr.Beah Lall) 1946 நவம்பரில் "அகில இந்திய அசுத்தஸ்தான் இயக்கத்தை" நிறுவினார். "இந்துக்களும் முஸ்லீம்களும் தங்களின் எண்முக்கையை உயர்த்திக் கொள்வதற்காக இப்போது தீண்டத்தகாத எங்களை தங்கள் பக்கம் இழுக்கிறார்கள். ஆனால் இந்துஸ்தான், பாகிஸ்தான், இங்கிலீஸ்தான் ஆகிய இந்த மூன்று ஸ்தானவாதிகளும் எங்களை காலம் காலமாக கசக்கிப் பிழிந்ததை நாங்கள் மறக்க முடியுமா? நாங்கள் இந்தியாவில்தான் பிறந்தோம் எனவே இந்தியாவின் ஒரு பகுதியை "அசுத்தஸ்தான்" ஆக்கித்தாருங்கள் எங்கள் வழியை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்ற திரு பியாலால் பிரகடனம் செய்தார்.
1947 மார்ச் 6 - இல் நடைபெற்ற உத்திரபிரதேச தாழ்த்தப்பட்டோர் சம்மேளன மாநாட்டில் பேசிய இடைக்கால அரசின் சட்ட உறுப்பினர் ஜே.என்.மண்டல், "எனக்கு காந்திஜியின் மீது பெரிய நம்பிக்கை எதுவும் இல்லை. ஹரிஜனங்களுக்கு கோயில் கதவுகளை திறந்து விட்டு சமபந்தி போஜனம் செய்தால் போதுமா? எனவே நான் லீக்குடன் கை கோர்க்க தயாராகி விட்டேன். முஸ்லீம்கள் நம்மைப்போல ஏழைகள். பின்தங்கியவர்கள். தீண்டத்தகாதவர்கள் " என முழங்கினார்.
இன்னும் சிலர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு போதிய வசதிகளும் சலுகைகளும் செய்து தராவிட்டால் அவர்கள் முஸ்லீம்களாக மதம் மாறிவிடுவார்கள். அது பிறகு காங்கிரசுக்கும் இந்துக்களுக்கும் பெரிய இடைஞ்சலாக வந்து சேரும் என்று நியந்தும் மிரட்டியும் பேசிப்பார்த்தனர்.
எவ்வாறாயினும் தாழ்த்தப்பட்டவரின் குரல்களை எந்த நாடும் (விசேஷமாக கவனிப்பது இருக்கட்டும்) கண்டு கொள்ளவே இல்லை. தலைவர்கள் உடனடியாக கவனிக்க வேறு ஆயிரம் பிரச்சனைகள் இருந்தன.
ஆனால் தேசப்பிரிவினையை ஒட்டி கலவரங்களின் போது தாழ்த்தப்பட்ட மக்கள் தாக்கப்படவில்லை. துன்புறுத்தப்படவில்லை. 1947 மார்ச் மாதத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட ராவல்பிண்டி பகுதியில் சுற்றுப்பயணம் செய்த அகில இந்திய தாழ்த்தப்பட்டோர் சம்மேளன பொதுச் செயலாளர் பி.என். ராஜ்போஜ எழுதினார். நான் சுற்றுப்பயணம் செய்த எந்தப்பகுதியிலும் தாழ்த்தப்பட்டவர் எவரும் கலவரத்தால் பாதிக்கப்படவில்லை என்பதை கண்டேன். இந்துக்களை போல தோற்றமளித்த தாழ்த்தப்பட்டவர் சிலர் ஒரு சில இடங்களில் தவறுதலாக தாக்கப்பட்டுள்ளனர். மற்றபடி வேறு எங்கும் இல்லை.
ஆனால் தாழ்த்தப்பட்ட பெண்களும் மற்ற இந்து, முஸ்லீம் பெண்களைப் போல கற்பழிக்கப்பட்ட சம்பவங்கள் நிறைய உண்டு.
பெண்ணின் உடம்பின் மீது எழுதப்படும் சரித்திரம்:
வகுப்புவாதம் தலைவிரித்தாடிய அந்த நாட்களில் பெண்கள் நடத்தப்பட்ட விதங்களை வகைப்படுத்திப் பார்ப்பது அவசியம்.
"அவர்களு"டைய பெண்களை இழிவுபடுத்துவது அவர்களுடைய மதத்தை -நம்பிக்கைகளை - அவர்களுடைய தன்மானத்தை ஆழமாக, கிழிக்கும் செயல் என்பதாக பரஸ்பரம் இந்துக்களும் முஸ்லீம்களும் புரிந்து கொண்டிருந்தனர்.
மாற்று மதத்தவரின் இளம் பெண்களை கடத்திச் சென்றனர். பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கினர். அவர்களை கெடுத்ததன் மூலம் தங்கள் மதத்துக் குழந்தை அவர்களின் வயிற்றில் வளர வித்திட்டனர். பெண்முன் உடம்பின் மீது செய்யும் ஆக்கிரமிப்பு பிற மதத்தவர் மீது நாட்டிய வெற்றிக்கொடியானது.
"அவர்களது" பெண்களை நிர்வாணமாக்கி நடுத்தெருவில் ஓடச்செய்வது.
பெண்களை நிர்வாணமாக்கி அவர்களது மார்பகங்களை அறுத்து எறிவது (இதனால் இறந்தவர்கள் ஏராளம்).
பெண் உறுப்பு மற்றும் மார்பகங்களில் பிறைச்சந்திரன் திரிசூலம் சின்னத்தை சூட்டுகோலால் வரைவது என்றும் அழியாத கேவலமாக பெண்முன் அந்தரங்க உறுப்பில் மாற்று மதத்தின் சின்னம்.
"அவர்கள்" தாக்க வருகிறார்கள் என்று அறிந்தும் தாங்கள் வீட்டுப் பெண்களை கொன்று விட்டு தப்பிச் செல்வது அல்லது தம் வீட்டுப் பெண்களை தற்கொலை செய்து கொள்ளுமாறு தூண்டுவது - நிர்ப்பந்திப்பது - வழிகாட்டுவது.
தங்கள் உயிரை பலியாகக் கொடுத்த தம்வீட்டுப் பெண்களை குல தெய்வாக்கி இன்றும் வணங்கிவருவது தற்கொலை செய்ய மறுத்து இன்றும் உயிர்வாழும் தம்வீட்டுப் பெண்களை மாற்றுக் குறைவாக மதிப்பது.
முடிவற்று நீண்டு செல்லும் துயர்மிக்க கதைகளை தேசப்பின்வினை நமக்குப்பரிசாகத் தந்துவிட்டது.
தேசப்பின்வினையில் பாகிஸ்தான் பகுதியிலிருந்து உயிர் தப்பி "நம்ம தேசம்" இந்தியாவுக்கு வந்து நிம்மதியாக பெருமூச்சு விட்ட ஆயிரக்கணக்கான சீக்கியக் குடும்பங்கள் 1984-ல் இந்திராகாந்தி கொலை செய்யப்பட்ட போது மீண்டும் அதே 1947-ஐ அனுபவித்தனர். டெல்லியிலும் மீரட்டிலும் கான்பூரிலும் என காங்கிரஸ் குண்டர்களும் இந்து வெறியர்களும் சீக்கிய மக்கள் மீது தொடுத்த தாக்குதல் அதிர்ச்சி மிக்க பல கேள்விகளை எழுப்புகின்றது.
1992 டிசம்பரில் பாபர் மசூதி இடிப்பை தொடர்ந்து பம்பாயில் முஸ்லீம் மக்கள் மீது தொடுக்கப்பட்ட திட்டமிட்ட தாக்குதல் ஆயிரக்கணக்கான முஸ்லீம் மக்களை அகதிகளாக்கி பம்பாயை விட்டு ஓடவைத்தது.
தமிழக தென்மாவட்ட சாதிக்கலவரங்களின் போது பல கிராமங்களில் மக்கள் ஊரைக்காலி செய்து விட்டு மறைந்து திரிந்தார்கள் - அகதிகளாக.
ஒரு வார்த்தையில் சொல்வதானால் "1947'' திரும்பத் திரும்ப நம் நாட்டில் நடந்து கொண்டே இருக்கிறது.
1947 - ஐ மீண்டும் மறுவாசிப்பு செய்வதும் கட்டுடைத்துப் பார்ப்பதும் இன்றைய வகுப்புவாதத்தின் வேர்களை அடையாளம் காண உதவக்கூடும்.
ஒரு நூற்றாண்டு விடைபெறும் புள்ளியில் 1947 நமக்கு முன் வைக்கும் கேள்விகள் பல.
லட்சக்கணக்கில் மக்கள் கொல்லப்பட்டது தீவிரவாதிகளால் அல்ல. சாதாரணமாக - இணக்கமாக -இயல்பாக - வாழ்ந்து கொண்டிருந்த இந்துக்களும் முஸ்லீம்களும் பரஸ்பரம் கொலையாளிகளாகவும் பெண்களை கடத்துபவர்களாகவும் கற்பழிக்கிறவர்களாகவும் மாறியது எப்படி? சமாதான காலங்களில் தூவப்படும் வகுப்புவாத விதைகள் கொழுந்து விட்டெரிய சந்தர்ப்பங்கள்தான் தேவைப்படுகின்றன. நாம் சமாதானமான நேரங்களில் சும்மா இருந்துவிட்டு கலவரம் முடிந்த பிறகு மட்டும் தீவிரமாக வகுப்புவாத எதிர்ப்பு இயக்கம் நடத்துவதால் என்ன பயன் விளையும்?
கலவர நேரங்களில் மனிதர்கள் தங்கள் எல்லா அடையாளங்களும் மறக்கடிக்கப்பட்டு இந்து, முஸ்லீம் அல்லது தம் சாதி என்ற ஒற்றை அடையாளத்துடன் மோதுகிறார்கள். எப்போதும் தங்கள் பன்முக அடையாளங்களை இழக்காதிருக்க இடைவிடாத கருத்துலக இயக்கம் தேவை அல்லவா? பெண்முன் உடம்பு இலகுவான ஆக்கிரமிப்புக்கான நிலப்பரப்பாக தொடர்வதை எந்த நூற்றாண்டில் நாம் முடிவுக்குக் கொண்டு வரப்போகிறோம்?குடும்ப மானம் என்பது என்ன? மதத்தின் மானம் தேசத்தின் மானம் என்பதெல்லாம் என்ன? பாலியல் பலாத்காரத்தை வெறும் உடல் மீதான வன்முறையைப் போல பாவிக்க நமது புரையோடிப்போன கலாச்சாரத்தை எப்படி ஒழிக்கப்போகிறோம்? வக்கிரங்கள் ஒழியும் நாள் எது? பெண்ணுக்கு நாம் சொல்லப்போகும் பதில் என்ன?
தாழ்த்தப்பட்ட - தீண்டத்தகாதவர் என ஒதுக்கப்பட்ட - மக்களுக்கு நம் தேசமும் நம் சரித்திரமும் முட்டிக் கொள்ளும் மதங்களும் என்ன பதில் சொல்லப் போகின்றன?
கலவரங்களின்போது அனாதையாக்கப்படுகிற குழந்தைகளின் பால்யம் அதிர்ச்சியில் குன்றிப்போவதை நாம் எப்படி சரி செய்யப்போகிறோம்?
1947 என்பது ஒரு ஆண்டு அல்ல. 1947 என்பது இந்திய விடுதலை மட்டுமல்ல. மேலே நீளமாக பேசப்பட்டுள்ள அத்தனை துயரங்கள் அவலங்கள மனிதக் கேவலங்கள் இவற்றின் ஒட்டு மொத்தமான குறியீடுதான் - 1947.
http://thatstamil.oneindia.in/art-culture/visai/aug05/tamilselvan.html
India Gains Independence
1947 PARTITION OF INDIA
ஏன் இந்த சண்டை ? - காஷ்மிர்
Parition of India 1947
http://en.wikipedia.org/wiki/Partition_of_India#The_Partition_Factor_In_The_Status_Of_Indian_Muslims_.5B21.5D_.5B22.5D
தீண்டதகாத நாடு?
தலைப்பு : Who is Wrong? Who is Right?, அந்த நாள், அன்றும் இன்றும், இந்தியா, கட்டுரைகள், வரலாறு, வீடியோ
மனிதர் பூமியில் தோன்றிப் பல மில்லியன் வருடங்களானாலும், பேச்சு மொழியை அதன் ஆரம்ப நிலையில் பயில முயன்றமை சுமார் ஒரு லட்சம் வருடங்களுக்கு முன்புதான் எனக் கருதப்படுகின்றது. மனிதர் மொழியைப் பேசக் கற்றுக் கொண்டமையே மனிதரை நாகரீக வளர்ச்சிக்கு இட்டுச் சென்ற முக்கிய நிகழ்வாகும். எனவே மனித அறிவு பற்றிப் பேசப்புகுமுன். மொழிபற்றியும், குறிப்பாக எழுத்துப் பற்றியும் பேசவேண்டியது அவசியமாகும். ஊடகங்களின் வளர்ச்சி அடிப்படையில் மனித அறிவின் வளர்ச்சி நிலைகளைப் பொதுவாக நான்கு காலகட்டப் பிரிவுகளுள் அடக்கலாம்.
அவையாவன:
1. அடிப்படைத் தேர்ச்சி நிலை
2. வாசிப்பு யுகம்
3. ஒலியினதும் காட்சியினதும் யுகம்
4. இலத்திரனியல் யுகம்
அடிப்படைத் தேர்ச்சிநிலை

எழுத்தறிவுக்கு முற்பட்டகால மனிதர் அக்காலத் தேவையை ஒட்டி தமக்குத் தேவையான கருவிகளை உருவாக்கி அவற்றைக் கையாளப் பழகியதோடு பேச்சு மொழியையும் பயிலத் தொடங்கினர். சில மானிடவியலாளர்களின் கருத்துப்படி சுமார் மூன்று லட்சம் வருடங்களுக்கு முன்பிருந்தே பேச்சுமொழி அறிவு வளர ஆரம்பித்துள்ளது என குறிப்பிடப்பட்டாலும், இதுபற்றி ஆதாரபூர்வமான சான்றுகள் கி. மு. 4000 வரை எதுவுமில்லை.ஆனால், எழுத்தறிவுக்கு முற்பட்டகால மனிதர் தமது அடுத்த சந்ததியினருக்கு விட்டுச் சென்றவைகளில் மிக முக்கியமானவை குகை ஒவியங்களே. வேட்டையாடலுடன் தொடர்புடைய மிருகங்கள், ஆயதங்கள், குறியீடுகள் குறித்த ஓவியங்களாக இவை கலைத்திறனுடன் படைக்கப்பட்டவை. தெற்கு ஐரோப்பாவிலும், ஆசியாவின் பல பாகங்களிலும் வாழ்ந்த குறோ - மக்னோன் மக்கள் கூட்டத்தால் வரையப்பட்ட இக்குகை ஓவியங்கள் தென் ஸ்பெயினிலுள்ள அல்டிமிரா பிரான்சிலுள்ள லாஸ்கோ போன்ற குகைகள் உட்பட 250 குகைகளில் உலகெங்கும் காணப்பட்டுள்ளமையை அறியமுடிகின்றது. ஓவியங்களாகவும் குறியீடுகளாகவும் வரையப்பட்ட இவை 35,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மனிதன் பற்றிய தகவற் களஞ்சியமாகும். இன்றைய அர்த்த்தில் மொழி ஒரு தகவற் பரிமாற்ற ஊடகம் எனக்கொண்டால், இக்குகை ஒவியங்களுக்கும் அதேபண்பு இருப்பதைக் காணலாம். எனவே வரைதல் மூலம் அடுத்த தலைமுறைக்கு தகவற் பரிமாற்றத்தை ஒவியனே மேற் கொள்ளுகிறான். ஆனால் சுமேரியரின் ஆப்பு எழுத்துக்களின் தோற்றத்துடன் (கி. மு. 5000 - கி. மு. 25000) அசாதாரண ஒவியத்திறமையிலிருந்து நீங்கிச் சாதாரண நிலையில் குறியீட்டினூடாக தகவல் சொல்லப்படும் நிலை உருவாகியது.
ஒளிச்சைகை, ஒலிச்சைகை, உடற்சைகை என்பவற்றினூடாக பேச்சுமொழி வளர முடிந்தாலும், ஒரு நிறைவான எழுத்து வடிவை. அதாவது குறிப்பிட்ட ஒலிவடிவத்திற்கேற்ப அகரவரிசையுடன் கூடிய வரிவடிவத்தைப் பெற பல ஆயிரம் ஆண்டுகள் சென்றன. இந்த வரிவடிவ எழுத்துக்களின் தோற்றமே மனிதவரலாற்றின் மிக முக்கியமான நிகழ்வாகும். இது குறித்து ஸ்கிராம் என்பவரது கருத்தைக் குறிப்பிடல் இங்கு பொருத்தமானதாக அமையும்.
“மொழி மனிதனின் மிகப்பெரிய சாதனை எனக்கொண்டால் அவனது மிகப்பெரிய கண்டுபிடிப்பாக அமைவது எழுத்தாகும். எழுத்தின் கண்டுபிடிப்பு சக்கரத்தின் கண்டு பிடிப்பிலும் பார்க்க உயர்வானது மட்டுமன்றி இந்தியர்களால் கண்டுபிடிக்கப்பட்ட பூச்சியத்திலும் பார்க்க மேன்மையானது. நியுட்டனின் கணித கணிப்புகளை விடவும், தொலைபேசி, சலனப்படம், ஏன் கணனிகளின் கண்டுபிடிப்புகளை விடவும் உயர்வானது. காரணம் மனிதனின் நினைவுகளை எழுத்துக்கள் வெளிப்படுத்தின. இதுவரை காலமும் ஒலிச்சைகை, ஒளிச்சைகை மூலம் மட்டுமே தொடர்பு கொண்ட மனிதனின் மட்டுப்படுத்தப்பட்ட தொடர்புச் செயற்பாட்டை எழுத்து அறுத்தெறிந்தது. எழுத்தானது காலத்தையும் வெளியையும் வென்று மொழிக்கும், சித்திரத்திற்கும் பாலமாகியது”.
இந்த எழுத்துக்களின் தொகுப்பே நூல்கள். இவ்வெழுத்துக்கள் என்ன வடிவில் அமைந்திருந்தபோதிலும் (பண்டை சுமேரியரின் ஆப்பு எழுத்துப் பதில்கள் தொடக்கம் இன்றைய கணனியின் இலத்திரன் எழுத்துப் பதிவுகள் வரை) இவை பேணப்பட்டு. பண்பாட்டிற்கு வழங்கப்படும் இடங்களே நூலகங்கள். நூலகங்கள் மனித இனத்தின் தொகுக்கப்பட்ட அறிவினைக் காலத்திற்குப் பொருத்தமான ஊடகங்களில் பாதுகாத்துப் பாவனைக்கு வழங்கிவருகின்றன. இச்செயற்பாடு மனித இனத்தில் தொடர்ச்சியாகவே நடைபெற்று வந்துள்ளது.
கி. மு. 4000 ஆண்டளவில் சுமேரியர்கள் ஈரமான களிமண்ணைத் தட்டையாக்கி கூரான குச்சியால் முக்கோணவடிவங்களில் குறியீடுகளாகத் தமது செய்திகளை எழுத ஆரம்பித்துவிட்டனர். ஈரமான களிமண்தட்டு வேகவைத்துக் கடினமாக்கப்பட்டது. கல்லின் தமது தகவல்களைப் பதிவு செய்வதிலும் பார்க்க, இம்முறை சுலபமானதாகவும் பதிவு செய்யப்பட்ட தகவல்கள் காவிச் செல்லப்படக் கூடியதாகவும், அதனால் முன்னேற்றமானதாகவும் இருந்தது. சுமேரியர்களின் பிற்பட்டகால களிமண்தட்டுப் பதிவுகளில் பொருட்களின் அட்டவணைகள், சட்டங்கள், சடங்குகள் பற்றிய பதிவுகள் மட்டுமன்றி, இலக்கியங்கள் எனக் கருதப்படக் கூடிய அரசர்களின் வீர வாழ்க்கை போன்றனவும் இடம்பெற்றிருந்தன. உலகின் முதற்காவியம் எனக்கருதப்படும் “கில்கமேஷ் காவியம்” களிமண் தட்டுகளில் பதியப்பட்டு சேகரித்து வைக்கப்பட்டிருந்ததை பிற்பட்ட காலத்தில் அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்தனர். அசிரிய மன்னன் அஷர் பனிபல்லினால் நினவே என்னுமிடத்திலுள்ள அவனுடைய அரண்மனையிலேயே இவை சேகரித்துப் வேணப்பட்டிருந்தன. இங்கு கிட்டத்தட்ட 22,000 களிமண் தட்டுகள். முறையாக, பாட ஒழுங்குடன் பேணப்பட்டிருந்தன. மனிதவரலாற்றின் முதல் நூலக உருவாக்கம் இது எனக் கருத இடமளிக்கிறது.
கி. மு. 3000 ஆண்டளவில் எகிப்தியரால் புதிய தகவல் சேமிப்பு ஊடகம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. நைல்நதிக்கரையோரம் வளர்ந்த பப்பிரஸ் என்ற ஒருவகைக் கோரைப் புற்களை ஒழுங்காக வெட்டி ஒரு புல்லின் ஓரத்தை மற்றப் புல்லின் ஒரத்துடன் இணைத்து ஒட்டினர். பல புற்கள் சேர்ந்து ஒரு தடித்த ஒரத்துடன் இணைத்து ஒட்டினர். பல புற்கள் சேர்ந்து ஒரு தடித்த கடதாசி போன்ற அமைப்பை இது பெற்றது. (பப்பிரஸ் என்ற சொல்லிலிருந்துதான் பேப்பர் என்ற சொல் வந்தது) இவை நீளமானதும், சுருட்டக் கூடியதுமாகும். சுமார் 130 அடி நீளமான பப்பிரஸ் சுருள்களும் பாவனையில் இருந்தன. கோரைப் புற்களாலோ அல்லது தூரிகையாலோ எழுதுவதற்குப் பொருத்தமானதாக இது அமைந்திருந்தது. கி. மு. நான்காம் நூற்றாண்டில் கிட்டத்தட்ட 700,000 பப்பிரஸ் சுருள்களைக் கொண்ட மிகப் பெரிய நூலகம் கிரேக்க மன்னன் முதலாம் தொலமியால் (கி. மு. 323 - கி. மு. 283) அலெக்ஸான்திரியாவில் உருவாக்கப்பட்டது. பாடவாரியாக ஒழுங்குபடுத்தப்பட்ட நூலகமாக இது அமைந்திருந்தது. எகிப்தின் முக்கிய ஏற்றுமதிப் பொருட்களுள் ஒன்றாக பப்பிரஸ் அமைந்திந்ததும் இங்கு குறிப்பிடப்பட வேண்டிய விடயமாகும். கிரேக்கர்களைத் தொடர்ந்து உரோமர்கள் எகிப்தைக் கைப்பற்றியதுடன் பப்பிரஸ் ஏற்றுமதியைத் தடைசெய்தனர். இதனால் எகிப்துக்கு வெளியே புதிய ஊடகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட வேண்டிய அவசியம் உருவாகியது.
கி. மு. இரண்டாம் நூற்றாண்டளவில் ஆட்டுத்தோலை நன்கு பதப்படுத்தி அவற்றில் எழுதத் தொடங்கினர். பண்டைய கிரேக்க இராசதானியாக இருந்த பெர்காமம் என்னும் இடத்தில் 200,000 தோற்சுருள்களைக் கொண்ட நூலகம் ஒன்று அமைந்திருந்தது.
எனவே அசையும் தன்மையற்ற கல்லில் தனது நினைவுகளைப் பதியத் தொடங்கிய மனிதர், பின் எடுத்துச் செல்லக் கூடிய, ஒப்பீட்டளவில் சுலபமாக எழுதக்கூடிய, ஆனால் உடையக்கூடிய களிமண் தட்டிற்கு மாறி, பின்பு அவற்றின் அடுத்த கட்ட வளர்ச்சியாக ஒரளவு காகிதத்தை ஒத்த பப்பிரஸ்க்கும் பின் பதனிடப்பட்ட தோலுக்கும் தமது ஊடக மாற்றத்தை ஏற்படுத்தினர். பழைய ஊடகங்களில் குறைபாடுகள் உணரப்படும்போது புதிய ஊடகங்கள் உருவாகுகின்றன. பப்பிரஸ் பாரம் குறைந்த இலகுவான ஊடகமானாலும், அவை சுருட்டப்பட்டே பேணப்பட்டன. தேவையான பகுதிகள் மட்டும் காட்சிக்குத் தெரிய மிகுதியானவை சுருட்டப்பட்ட நிலையில் வாசிக்கப்பட்டன. முன்பு தவறவிட்ட விடயத்தைப் பார்க்க வேண்டுமெனில் திரும்பவும் முழுவதும் குலைக்கப்பட்டு வாசிக்கப்பட வேண்டியிருந்தது. இக்குறைபாட்டை நீக்க எக்கோடியன் வடிவில் இந்நூல்கள் மடிக்கப்பட்டன. தோல்சுருள்கள் ஒன்றின் மேல் ஒன்றாக இன்றைய காகித நூல்கள் வடிவை ஒத்த வகையில் கட்டப்பட்டு வாசிக்கப்பட்டன. இன்றைய நூலை உருவாக்கலில் ஒரு முக்கிய படிநிலையாகும்.
கீழைத்தேய நாடுகளில் மரப்பட்டைகள், ஒலைகள், கல், செம்புத் தகடுகள், பட்டுத்துணிகள் என்பவற்றில் கூரான கருவிகொண்டு எழுதினார். சீனர்கள் மூங்கில் பட்டைகளிலும் மரப்பட்டைகளிலும், பட்டுத்துணிகளிலும் எழுதினர். வடஇந்தியா, தமிழ்நாடு, இலங்கை, பர்மா முதலிய நாடுகளில் ஒலைச்சுவடிகளில் அறிவைப் பதிவு செய்தனர். தமிழர் பனை ஒலைகளையும், சிங்களவர் தலிபத் ஒலைகளையும் தமது பிரதான தகவற் சேமிப்பு ஊடகமாக கொண்டனர். ஓலைகள் ஓழுங்காக நறுக்கப்பட்டு இருபுறமும் மெல்லிய மரப்பலகைகள் பொருத்தப்பட்டு நடுவில் துளையிடப்பட்டு நூலால் ஒழுங்குசேர கட்டப்பட்டு நூலை ஒத்தவடிவில் பாதுகாக்கப்பட்டன. இதைவிட கல்லிலும், செப்புத் தகடுகளிலும் அரசர்கள் தமது செய்திகளைப் பதிவு செய்தனர். கல்வெட்டுக்கள், செப்புப் பட்டயங்கள், செப்பேடுகள் என இவை அழைக்கப்பட்டன.
வாசிப்பு யுகம்
எழுத்தின் வளர்ச்சியைத் தொடர்ந்து எழுதியவை வாசிக்கப்பட வேண்டிய அவசியம் உருவாகியது. பலரால் வாசிக்கப்பட வேண்டுமெனில், எழுதப்பட்ட விடயங்கள் பிரதி செய்யப்பட வேண்டும். முறையாகப் பேணப்படாவிட்டால் இயல்பாகவே அழியும், ஊறுபடும் தன்மையுள்ள ஊடகங்களாக தோல்பப்பிரஸ், மரப்பட்டை, ஒலை போன்றவை அமைந்திருந்தமையும் பிரதி செய்யப்படவேண்டிய அவசியத்தை உருவாக்கின.
பிரதியெடுக்கும் கலை முதலில் வளர்ந்த நாடு சீனா ஆகும். கி. பி 105-ல் சீனாவில் காகிதம் கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. கி. பி. முதலாம் நூற்றாண்டு தொடக்கம் மூன்றாம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதியில் சீனர்கள் மரப்படிமங்களில் எழுத்துக்களையும் தெய்வப் படங்களையும் செதுக்கியமையைக் கொண்டு காகிதத்தில் பிரதி எடுக்கும் நிலையை அடைந்துவிட்டனர். இதைவிட களிமண், மரம் போன்றவற்றில் தனித்தனியாக அச்சுக்களை உருவாக்கி அசையும் அச்சை முதலில் உலகிற்கு வழங்கியவர்களும் சீனர்களே. சீனர்களின் சித்திர எழுத்துகள் அசையும் அச்சுக்குப் பொருத்தமானதாக அமையாதபடியால் இக்கலை மேலும் வளர்த்தெடுக்கப்படாமல் சீனர் சுவர்களுக்கு உள்ளேயே நீண்டகாலம் இருந்தது. ஒருவாறாக காகிதத் தொழில் நுட்பம் 12ம் நூற்றாண்டளவில் அராபியர் ஊடாக ஸ்பெயினை அடைந்து காகிதத் தொழில் ஐரோப்பாவில் வளர ஆரம்பித்தது. இருந்தாலும் மத்தியகால ஐரோப்பாவில் மிருகத் தோலிலிருந்து காகிதத்திற்கு நூல்கள் மாற நீண்டகாலம் எடுத்தது. ஜொகான் குட்டன் பேர்க்கின் முதல் அச்சுநூல் 1455இல் (42வரி பைபிள்) மிருகத்தோலிலேயே அச்சிடப்பட்டமை இங்கு கவனிக்கப்பட வேண்டியது.
வாசிப்பு யுகத்தில் ஏற்பட்ட முக்கிய ஊடக மாற்றம் என்னவெனில் கையெழுத்துப் பிரதி வடிவில் உருவாக்கப்பட்ட நூல்கள் இயந்திரம் மூலம் அச்சிடும் நிலையை அடைந்தது தான். மிருகத்தின் தோல்களில் மிகுந்த மனித உழைப்புடன் மத்தியகால மடாலயங்களில் மதகுருமார் கையாற்செய்து வந்த நூற்பிரதியாக்கற்பணி முடிவுற்று காகிதத்தில் பலநூறு பிரதிகள் செய்யும் நிலைக்கு நூல் உருவாக்கம் வளர்ந்தது. ஜெர்மனியில் மெயின்ஸ் நகரில் ஜொகான் குட்டன் பேர்க்கினால் 1445 -1450 காலப்பகுதியில் உருவாக்கப்பட்ட அசையும் அச்சினாலான அச்சுப்பொறியும் அதனைத் தொடர்ந்து அச்சுக்கலையில் ஏற்பட்ட வளர்ச்சியும் மனித நாகரிகத்தின் மற்றுமொரு திருப்பு முனையாகும்.
வாய்மொழி மரபு வாசிப்பும் எழுத்தறிவு மரபு வாசிப்பும்
இந்தச் சந்தர்ப்பத்தில் வாசிப்பின் தன்மை மாற்றங்கள் பற்றிக் குறிப்பிடுதல் அவசியம். வாசிப்பு அதன் தன்மையில் அச்சு நூல்கள் வருவதற்கு முன்பும் பின்பும் வேறுபட்டிருந்ததை இங்கு நோக்கவேண்டியதவசியம். அச்சு நூல்கள் வருவதற்கு முன்பு சமூகத்தின் பிரதான தொடர்பு முறையாக வாய்மொழி மரபே பேணப்பட்டு வந்தது. எனவே வாசிப்பு என்பது உரத்த வாசிப்பாகவே மத்தியகால ஐரோப்பாவிலும் ஏனைய ஆசிய ஆபிரிக்க நாடுகளிலும் இடம் பெற்றன. வரிவடிவத்தை எட்டாத பல பேச்சு மொழிகளைக் கொண்ட ஆபிரிக்க நாடுகளில் வாய்மொழி மரபு இன்றும் கூட செல்வாக்குள்ள தொடர்பு முறையாக அமைந்துள்ளதைக் காணலாம். வாய்மொழிமரபு வாசிப்பு இசையுடனும் அபிநயத்துடனும் கூடியது. மத்தியகால ஐரோப்பாவின் மொழியும் இலக்கியமும் கிட்டத்தட்ட எமது கால திரைப்பட அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சியை ஒத்ததாகவே அமைந்திருந்தன.
“ஒரு ஆசிரியன் தனது படைப்பு நல்லதா கூடாததாக என்பதை பார்வையாளர்கள் மீது பரீட்சித்துப்பார்த்தே அறிந்து கொள்வான். ஏற்றுக்கொள்ளப்பட்டால் அது பின்பற்றிச் செய்வோரால் தொடரப்படும். பார்வையாளனுக்கு வேண்டியது ஒரு கதையே. கதை அக்கால விதிப்படி, குரலாலும் சைகையாலும் கூடிய பாத்திரச் சித்திரிப்பினை கதை சொல்பவனிடமே விட்டுவிட்டது”
வாய்மொழி மரபின் மற்றொரு முக்கிய பண்பு உரத்த வாசிப்புடன் கூடிய மனனம் செய்தலாகும். வாய்மொழி மரபில் வந்த இந்திய மாணவர்களால் பாடநூல்களை மனத்தால் படித்து வார்த்தைக்கு வார்த்தையாக தமது பரீட்சைகளில் வெளிப்படுத்த முடிந்தது. “புனித” சமய நூல்களும் இவ்வாறே மனனம் செய்யப்பட்டன. சிலவேளை இருக்கு வேதத்தின் சகல ஒலைப்பிரதிகளும், அச்சுப் பிரதிகளும் தொலைந்து விட்டால் கூட, எதுவித தவறுமின்றி அட்சரசுத்தமாக அதை வாய்மொழி மரபுமூலம் இன்றும் திருப்பிப் பதிப்பிக்க முடியும். புராண படனம், கதாகாலேட்சேபம், நாட்டார் கதைகள், நாட்டார் பாடல்கள், நாட்டுக்கூத்து போன்ற வாய்மொழி மரபு வடிவங்கள் இன்றும்கூட முழுமையாக அழியாது எமது பிரதேசங்களில் பேணப்பட்டு வருதலை இங்கு நினைவுகூருதல் பொருந்தும். “ஒரு முதியவனின் இறப்பு தீக்கிரையாகும் ஒரு நூலகத்தை ஒத்தது” என இன்றுவரை நிலவிவரும் ஆபிரிக்க பழமொழியினூடாக வாய்மொழிக் கலாசாரத்தின் மனித பெறுமதியை புரிந்துகொள்ள முடியும்.
கட்புல செவிப்புல சாதனங்கள் தோன்றும்வரை உலகிலே பல பாகங்களிலும் இறவாது இன்றும் தொடர்ந்துவரும் வாய்மொழி மரபுப் படைப்புகளை தகவற் செயற்பாட்டிற்காக களஞ்சியப்படுத்த முடியாதிருந்தது. கட்புல செவிப்புல சாதனங்களின் வளர்ச்சியின் பின்பே இவற்றை நூலகங்களிலும், ஆய்வுநிறுவனங்களிலும் களஞ்சியப்படுத்தி தகவற் பரவலாக்கம் செய்ய முடிந்தது என்பதையும் இங்கு கவனத்திற் கொள்ளுதல் வேண்டும்.
இவ்வாறாக மேற்கில் மறுமலர்ச்சிவரை செல்வாக்கு பெற்று விளங்கிய வாய்மொழிக் கலாசாரத்தின் கல்வி அறிவு நடவடிக்கைகள் உரத்த வாசிப்பு, இசை, மனனம் செய்யும் தன்மை, அபிநயம் என்பவற்றைக் கொண்டதுடன் குறுகிய இனக் குழுநிலைப்பயில்வாகவும் அமைந்திருந்தது. வாய்மொழி மரபில் அடிப்படைப் பண்புகளை உற்றுநோக்கின் கீழ்வருவன புலனாகும். அதாவது வாய்மொழி மரபானது செவிப்புலம் சார்ந்ததாகவும், பற்றுள்ளதாகவும், ஆள்நிலைப்பட்டதாகவும். சுட்டிப்பானதாகவும், நெகிழ்ச்சியானதாகவும், சுழல் போக்குள்ளதாகவும், உயர்வு நவிற்சியுள்ளதாகவும் அமைந்திருப்பதைக் காணலாம்.
ஆனால் அச்சுயந்திரத்தின் வருகையும் அதனூடாக உருவாகிய எழுத்தறிவு மரபும் மேற்குறிப்பிடப்பட்ட பண்புகளுக்கு முற்றிலும் எதிரான பண்புகளைக் கொண்ட புதிய யதார்த்தத்தைத் தோற்றுவித்தது. இன்று உலகெங்கும் ஆதிக்கம் செலுத்திவரும் அச்சு நூல்களின் வரலாறு 1445-1450 காலப்பகுதியில் ஜொகான் குட்டன் பேர்க் உருவாக்கிய அசையும் அச்சுகளைக் கொண்ட அச்சுப் பொறியிலிருந்தே ஆரம்பமாகியது. இவரால் உருவாக்கப்பட்ட மரத்தினாலான அச்சுயந்திரம் இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக அடிப்படை மாறுதல்கள் எதுவுமின்றி தொடரப்பட்டது. பதிப்பிக்கப்பட்ட நூல்களும் மத்தியகால கிறிஸ்தவ சமய நூல்களே ஆனால் மின்சாரத்தின் வருகையைத் தொடர்ந்து அச்சுயந்திரத்திலும் அச்சுக்கலையிலும் துரித மாறுதல்கள் ஏற்பட்டன. நீராவி அச்சுப்பொறி, இயந்திரமூலம் நூல்கட்டல், சுழல் அச்சுப்பொறி என்பன 1830 க்குப் பிற்பட்ட காலத்தில் உருவாகிய மாறுதல்களே.
இவ்வளர்ச்சிநிலையால் காகிதத்தில் பெருந்தொகையான நூல்கள் பல்வேறு துறைகளில் அச்சிடப்பட்டன. அச்சுநூல்களின் வருகைக்கு முன்பிருந்த தகவல் ஊடகங்களின் குறைபாடுகள் பலவற்றை அச்சில் வெளிவந்த நூல்கள் தீர்த்து வைக்கும் வகையில் அமைந்தன. அதுமட்டுமன்றி அச்சு வெளியீடுகளின் தோற்றம் முற்று முழுதான புதிய வரலாற்றை உருவாக்கியது. மத்தியகால கைவினைத் தொழில் நுட்பத்திற்கும் நவீன தொழில் நுட்பத்திற்கும் இடையிலான பரிநிலைக்கோட்டை உருவாக்கி வைத்தது. அசையும் அச்சின் வருகையேயாகும்.
“முதன் முதலாக எழுத்து காவிச்செல்லக்கூடிய ஒரு பண்டப் பொருளாக அதாவது தொழிற்சாலையில் உருவாகும் ஒரு சீரான மீண்டும் மீண்டும் உற்பத்தி செய்யப்படக்கூடிய, எல்லோராலும் நுகரப்படக்கூடிய பண்டப் பொருளாக உருவாக்கப்பட்டது” என மைக் லுகான் கூறுகிறார். இந்த உருவாக்கம் இதுவரை இருந்துவந்த கல்விப்பரப்பை விசாலித்தது. கல்வி யாவருக்குமான நிலையை உருவாக்க வழியமைத்தது. கல்வியில் குறிப்பிட்ட வர்க்கத்தினரிடமிருந்து வந்த ஏகபோகம் நீங்க உதவியது லத்தீன் (இந்தியாவில் சமஸ்கிருதம்) போன்ற உயர்குழாம் மொழிகளிலேயே மட்டும் வெளிவந்த கையெழுத்துப் பிரதி நிலை மறைந்து அகரவரிசையுடன் கூடிய ஒலி வரிவடிவ எழுத்துக்களைக் கொண்ட எல்லா மொழிகளிலும் வெளியீடுகள் பெருக ஆரம்பித்தன. இந்த வளர்ச்சி விஞ்ஞானம், தொழில் நுட்பம், சமூக விஞ்ஞானம், சமயம் என எல்லாத்துறைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியது. தேசிய மொழிகளிலும் வெளியீடுகள்; வளர்ச்சி பெற அது தேசியவாதத்தின் வளர்ச்சியாகியது.
அச்சுநூல்களின் பெருக்கமும் அதனால் உருவாகிய வாசிப்புப்பழக்கம், எழுதும் பழக்கம், ‘வாசிப்புக் கலாசாரம்’, ‘எழுத்தறிவுக்கலாசாரம்’ என சமூகமதிப்பைப் பெற்றது.
வாய்மொழி மரபில் செவிப்புலம் சார்ந்திருந்த வாசிப்புப் பண்பு எழுத்தறிவு மரபில் கட்புலம் சார்ந்ததாக மாறியது. ‘கற்பனை செய்தல்’ என்பது செவிப்புலத்தில் இருந்து கட்புலத்திற்கு மாற உரத்த வாசிப்பும் அபிநயமும் தேவையற்றதாகி விட்டது. எதுகை, மோனை, சந்தம் என்பவற்றின் முக்கியத்துவம் குறைந்து மௌனவாசிப்பிற்கு உரிய கவிதைகள், கட்டுரைகள், புனைகதைகள் உருவாகத் தொடங்கின. மௌனமாக வாசிக்கும் விடயங்கள் தனித்தனிக் காட்சிகளாக மனத்திரையில் ஓடும் நிகழ்ச்சியின் போது வாசகனின் செய்கை ஒரு திரைப்படக் கருவியின் செய்கையை ஒத்ததாகிறது.
- இ. கிருஷ்ணகுமார் B. A. , A. S. L. L. A.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
நூல்: களிமண் பதிவுகள் முதல் கணிணிப்பதிவுகள் வரை
மேலுமறிய:
மொழியியல்: http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D
குகை ஓவியம்: http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%88_%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
தலைப்பு : அன்றும் இன்றும், கட்டுரைகள், படித்ததில் பிடித்தது, மொழி, வரலாறு
உள்ளே...
- inbox (14)
- Who is Wrong? Who is Right? (6)
- அந்த நாள் (6)
- அறிவியல் (17)
- அன்றும் இன்றும் (7)
- ஆரோக்கியம் (16)
- இணையம் (5)
- இந்தியா (2)
- உங்களுக்கு தெரியுமா? (27)
- உடலும் உள்ளமும் (14)
- எம்.எஸ். உதயமூர்த்தி (5)
- ஓஷோ (3)
- கட்டுரைகள் (47)
- கவிதைகள் (12)
- கேள்வி-பதில் (12)
- சிந்திக்க சில நிமிடங்கள் (29)
- சுயமுன்னேற்றம் (48)
- நட்சத்திரங்கள் (1)
- படித்ததில் பிடித்தது (40)
- புற்றுநோய் (2)
- மகாகவி பாரதி கவிதைகள் (11)
- மரபணு (8)
- மருத்துவம் (6)
- மொழி (3)
- வரலாறு (19)
- விவேகானந்தர் (1)
- வீடியோ (15)
- ஜே. கிருஷ்ணமூர்த்தி (15)






















