திடீரெனத் தோன்றி படுவேகத்தில் பரவி பல நாடுகளை அச்சுறுத்திக் கொண்டுள்ளது ஸ்வைன் ப்ளூயென்ஸா எனப்படும் ஸ்வைன் ப்ளூ. இது பன்றிகளில் இருந்து மனிதனுக்குப் பரவுவதால் பன்றிக் காய்ச்சல் எனப்படுகிறது. (பன்றிக்கு பிக் தவிர ஹாக்ஸ், ஸ்வைன் என பல பெயர்கள் உண்டு)
ரிபோ நியூக்ளிக் ஆசிட் எனப்படும் ஆர்என்ஏவை (டிஎன்ஏ மாதிரி) தனது ஜெனிட்டிக் மெட்டீரியலாக (ஜீன்) கொண்ட வைரஸ்கள் உருவாக்கும் நோய்கள் தான் இன்ப்ளூயென்சா (Influenza).
இப்போது ஸ்வைன் ப்ளூவைப் பரப்பி வருவது Orthomyxoviridae என்ற ரகத்தைச் சேர்ந்த வைரஸ் (swine influenza virus-SIV). பன்றிகளுக்குள் நுழைந்துவிட்டால் அதன் சுவாசப் பாதையில் வலம் வரும் இந்த வைரஸ் முதலில் பன்றிகளைக் கொல்லும். இந்த வைரசில் பல வகைகள் (strains) உண்டு.
மேலும் ஆர்என்ஏவை அடிப்படையாகக் கொண்ட இந்த நுண்ணுயிர்களுக்கு உருமாறும் (mutate) திறன் உண்டு. பொதுவாக பன்றிகளில் வாழும் ஒரு வைரஸ் மனிதனுக்குள் புகுந்தால் அதை மனிதனின் தற்காப்பு சிஸ்டம் (Immune system) அழித்துவிடும். ஆனால், இந்த மியூட்டேசன் எனப்படும் உருமாறும் திறன் மூலம் மனிதனின் தற்காப்பு சிஸ்டத்தை வென்று விடுகிறது இந்த வைரஸ்.
இதனால் தான் பன்றிகளில் இருந்து மனிதனுக்குள் புகுந்து தாண்டவமாட ஆரம்பித்துள்ளது இந்த வைரஸ். இம்முறை மெக்சிகோவின் பன்றிகள் வளர்ப்பு பண்ணைகளில் இருந்து தான் இந்த வைரஸ் மனிதனுக்குள் ஊடுருவியிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.
மெக்சிகோவில் பன்றிகளுக்கு இது எப்படி பரவியது என்ற கேள்விக்கு சரியான பதில் இல்லை. ஆனாலும், ஐரோப்பாவிலிருந்து பறவைகள் மூலம் இந்த வைரஸ் வட அமெரிக்காவுக்கு வந்திருக்க வேண்டும். அங்கு மெக்சிகோவில் பன்றிகளில் புகுந்து உருமாறி மனிதனுக்குப் பரவியிருக்க வேண்டும் என்கிறார்கள்.
இந்த வைரசின் ஆர்என்ஏவை சோதனையிட்டதில் வட அமெரிக்க பன்றிகளில் காணப்படும் வைரசில் உள்ள சில ரசாயனங்களும், அதே நேரத்தில் ஐரோப்பிய பன்றிகளில் காணப்படும் வைரசின் சில வேதிப் பொருட்களும் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் தான் இந்த வைரஸ் ஐரோப்பாவிலிருந்து தான் மெக்சிகோ-வட அமெரிக்காவுக்கு வந்திருக்க வேண்டும் என்கிறார்கள்.
மனிதனுக்குள் நுழைந்துவிட்டால் அவர்களது உடலில் பல்கிப் பெருகி சுவாசம் மூலம் அடுத்தவருக்குப் பரவும் திறன் கொண்டது இந்த வைரஸ். இப்போது பரவிக் கொண்டிருக்கும் வைரசுக்கு H5N1 என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள்.
இவ்வாறு மனிதனிலிருந்து மனிதனுக்குப் பரவும் இந்த பன்றி்க் காய்ச்சல் , பன்றியின் மாமிசத்தை உண்பதால் பரவாது என்கிறார்கள். காரணம், 75 டிகிரி அளவுக்கு மாமிசம் சூடாகும்போதே இந்த வைரஸ் அழி்ந்துவிடும்.
இந்த வைரஸ் தாக்கினால் காய்ச்சல், தலைவலி, உடல் வலி, குளிர் காய்ச்சல், தொண்டை வலி, வயிற்றுப் போக்கு, வாந்தி போன்றவை ஏற்படும். கவனிக்காமல் விட்டால் பெரும் ஆபத்தை ஏற்படுத்தலாம்.
இந்த வைரஸை கட்டுப்படுத்த amantadine, rimantadine, Tamiflu (oseltamivir) and Relenza (zanamivir) உள்பட சில மருந்துகள் உள்ளன. ஆனால், முன் கூட்டியே தடுக்கும் வாக்சீன்கள் இல்லை. இந்த மருத்துகளையும் மருத்துவர் ஆலோசனைப்படியே பயனபடுத்த வேண்டும்.
(இதில் அமெரிக்கா மற்றும் மெக்சிகோவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிசேசை அளித்தபோது இந்த வைரஸ் amantadine and rimantadine ஆகியவற்றுக்குக் கட்டுப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது)
அதே நேரத்தில் கொஞ்சம் தற்காப்பு நடவடிக்கைகள் மூலம் இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பலாம். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து விலகி இருப்பது, நோய் தாக்கப்பட்டவர்கள் இருந்தால் அங்கு நடமாடும்போது மூக்கையும் வாயையும் மூடும் பில்டர்களை அணிவது, கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுவது, நோய் தாக்குதல் உள்ள பகுதிகளுக்குப் போய்விட்டு வந்தால் வாய், கண், மூக்கில் கைகளை வைப்பதை தவிர்ப்பது, வீட்டில் குப்பை சேராமல் தவிர்ப்பது போன்றவை அதில் சில.
நோய் தாக்கப்பட்டவர் இருமல் வந்தால் துணியை வைத்து வாயை மூடிக் கொண்டு இருமினால் அடுத்தவருக்குப் பரவாது.
இந் நிலையில் இந்த வைரசுக்கு தடுப்பூசி (வாக்சீன்) கண்டுபிடிக்கும் பணியில் உலகின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் இறங்கியுள்ளன. ஆனால், அதற்குள் நோயைக் கட்டுப்படுத்தாவிட்டால் பெரிய சிக்கலை உலகம் எதி்ர்கொள்ளப் போவது நிச்சயம்.
-ஏ.கே.கான் (கட்டுரையாளர் தட்ஸ்தமிழ் ஆசிரியர்)
http://thatstamil.oneindia.in/editor-speaks/2009/04/28-world-battles-swine-flu-as-death-toll-threat.html
தலைப்பு : inbox, உங்களுக்கு தெரியுமா?
காபாவைச் சுற்றி மக்கா மஸ்ஜித் விரிவாக்கம்!
ஜித்தா: மக்காவிலிருக்கும் இறையில்லமான மஸ்ஜித்-அல்-ஹராம் பள்ளி மேலதிகமாக ஐந்து இலட்சம் பேர் தொழ வசதியாக இருக்கும் படி விரிவாக்கப்படும் எனத் தெரிகிறது.
மக்காவிலுள்ள மஸ்ஜித்-அல்-ஹராம் பள்ளியின் புதிய விரிவாக்கத் திட்டத்திற்கு, இரு புனிதப் பள்ளிகளின் பணியாளரும் சவூதியின் அரசருமான மன்னர் அப்துல்லாஹ் ஆணையிட்டுள்ளார். இதன் மூலம் தற்போது மக்காவில் வழிபடுபவர்களைவிட மேலும் ஐந்து இலட்சம் முஸ்லிம்கள் தங்கி வழிபட வசதியானதாக இருக்கும் என்று மக்காவின் நகரத்தந்தை உஸாமா அல்-பர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
"இது மக்காவின் புனிதப் பள்ளியின் மிகப் பெரும் மேம்பாட்டுத் திட்டங்களில் ஒன்றாகும். இத்திட்டத்தில் மக்கா பள்ளியின் முகப்புத் தோற்றத்தையும் மாற்றக் கூடிய திட்டமும் அடங்கும் என்று அல்-பர் கூறினார். இந்த விரிவாக்கம் மூலம் பள்ளியின் வடக்கு மற்றும் வடமேற்கு பகுதியில் மேலதிகமான முஸ்லிம்கள் தொழ அதிகமான இடவசதி கிடைக்கும் என்றும் கூறினார்.
மன்னர் அப்துல்லாஹ் சென்ற சனிக்கிழமை இந்த விரிவாக்கப் பணிக்காக ஆணை பிறப்பித்தார். நகராட்சி மற்றும் ஊரகத்துறை அமைச்சர் இளவரசர் மிதேப், இத்திட்டத்தில் நடைபாதை சுரங்கங்கள் மற்றும் சேவை நிலையங்களும் இருக்கும் என்று கூறினார்.
இந்த அரசாணை மக்கா பெரிய பள்ளியின் வடக்கு மற்றும் வடமேற்குப் பகுதியில் உள்ள 3 இலட்சம் சதுர மீட்டர் நிலங்களைக் கையகப்படுத்தும் உத்தரவையும் உள்ளடக்கியுள்ளது. இதற்கென்று அமைக்கப்பட்ட விசேஷ குழுக்கள் இந்த நிலங்களின் விலை மதிப்பீடு செய்யத் துவங்கியுள்ளன என்றும் மிதேப் கூறினார்.
மஸ்ஜிதைச் சுற்றியுள்ள சுமார் 1000 சொத்துக்கள் இந்த விரிவாக்கத் திட்டப்பணிக்காக இடிக்கப்பட்டு, கட்டுமானம் விரைவில் துவங்கும். இதற்காக 6 பில்லியன் சவூதி ரியால்கள் ஈட்டுத்தொகையாக அரசு ஒதுக்கியுள்ளது. இப்பணி புதிய திட்டத்தினை துவக்க இயலும் விதமாக 60 நாட்களுக்குள் முடிக்கப்படும்.
"புதிய சுரங்க நடைபாதைகள் மூலம் பள்ளிவளாகத்தின் வடக்குப் பகுதியை இணைக்கும் கட்டுமானப் பணிகளும் இத்திட்டத்தின் ஓர் அங்கமாக இருக்கும்" என்றும் அவர் மேலும் கூறினார்.
இப்புனிதப் பள்ளியின் முதல் பெரிய விரிவாக்கப்பணி 1925ல் சவூதி அரேபியாவை நிறுவிய மன்னர் அப்துல் அஜீஸின் உத்தரவின் படி நிறைவேற்றப்பட்டது. 1989ல் அப்போதைய சவூதி மன்னர் ஃபஹத், மஸ்ஜித்-அல்-ஹராமின் மாபெரும் விரிவாக்கத்தைச் செயல்படுத்தி 1,52,000 சதுர மீட்டர் பரப்பளவிலிருந்த தொழும் இடத்தை 3,56,000 சதுர மீட்டராக அதிகரிக்கச்செய்தார்.
பள்ளியின் சுற்றுப்புற வளாகம் 40 ஆயிரம் சதுர மீட்டர்களுக்கும் அதிகமாகும் என்றும் இதில் ஒரு இலட்சம் மக்கள் வழிபட வசதியிருக்கும் என்றும் கணிக்கப்படுகிறது.
ஷூரா எனும் ஆலோசனைக் குழு மேலதிகமான நிதி ஒதுக்கீடு மூலம் இரு புனிதபள்ளிகளின் தலைமைக்கு உதவி, அதன் மூலம் மேலும் சிறப்பான சேவைகளை புனித உம்ரா மற்றும் ஹஜ் காலத்தில் இப்பள்ளிக்கு வரும் ஹாஜிகளுக்கும் பயணிகளுக்கும் வழங்கவும் மேலும் இவ்வகையில் பயனுள்ள அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ளவும் பரிந்துரைத்துள்ளது.
மேலும் மஸ்ஜிதின் மாடி மற்றும் சுற்றுப்புற வளாகங்களில் நிழற்குடைகள் நிறுவவேண்டி ஆய்வுகளை மேற்கொள்ளவும், பள்ளியின் வடக்குப் பகுதியில் நகரும் மின்படிகளை மேற்கூரை வளாகம் வரை நிறுவி வழிபட வந்துள்ளவர்கள் கூட்ட நெரிசல் வேளையில் சிரமம் குறையும் முகமாக இவற்றைச் செயல்படுத்தவும் இக்குழு பரிந்துரைத்துள்ளது.
http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=739&Itemid=192
வேட்பாளர்கள் அதிகாரபூர்வமாகச் செலவிட வேண்டிய வரம்பு லட்சங்களில் இருந்தாலும், ஒவ்வொரு தொகுதியிலும் பல கோடிகள், தெருக்கோடிகளில் புரள்கின்றன என்பது ஊரறிந்த ரகசியம். பதவிக்காக பல நூறு கோடிகளை வாரி இறைத்து ஆட்சியைப் பிடிக்க எத்தனிக்கும் அரசியல் கட்சிகளில் ஏதாவது ஒன்று, தெருவோரப் பராரிக்காகக் குரல் எழுப்புகிறதா என்று பார்த்தால், அப்படி ஒரு சிந்தனையே எந்தவொரு அரசியல் இயக்கத்துக்கும் இருப்பதாகவே தெரியவில்லை. வாக்குகளைப் பெற பிரியாணி விருந்து தரப்படுவதாக எல்லாம் செய்திகள் வருகின்றன. ஆனால், அன்றாடம் காய்ச்சிகளின் வாழ்வில் நிரந்தரமாக அவனது பசியைத் தீர்க்க வேண்டாம். அதற்கான திட்டங்களையாவது ஏதாவது ஒரு கட்சி தனது தேர்தல் அறிக்கையில் முன்வைத்திருக்கிறதா என்றால் இல்லை. ஓட்டுக்காக ஆலாய்ப் பறக்கும் அரசியல்வாதிகள் ஒருபுறம், ஒரு வேளைக் கஞ்சிக்காக ஏங்கித் தவிக்கும் குடிமக்கள் மறுபுறம். இந்திய ஜனநாயகத்தின் விசித்திரமான பரிமாணங்களில் இதுவும் ஒன்று. இத்தனை கோடி ரூபாய்கள் தேர்தல் என்கிற சாக்கில் வாரி இறைக்கப்படும் வேளையில், ஐக்கிய நாடுகள் சபையில் உலக உணவுத் திட்டத்தின் அறிக்கை ஒன்று வெளிவந்திருக்கிறது. அந்த அறிக்கையைப் படித்தால் திகைப்பும் வியப்பும். இந்தியாவில் பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு அதிகம் என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. உலகில், வயிற்றில் ஈரத் துணியைப் போட்டுக் கொண்டு பசியைப் போக்க எத்தனிக்கும் மனிதர்களில் பாதிக்கும் அதிகமானோர் வாழ்வது இந்தியாவில்தான் என்கிறது அந்த அறிக்கை. அதுமட்டுமா? ஆண்டுதோறும் இந்தியாவில் மரணமடையும் சிசுக்களில் 50 சதவிகிதம் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைவால்தான் மரணமடைவதாகக் கூறுகிறது அந்த அறிக்கை. சஹாரா பாலைவனத்தை ஒட்டியுள்ள ஆப்பிரிக்க நாடுகளில்கூட ஊட்டச்சத்துக் குறைந்த குழந்தைகளின் எண்ணிக்கை 28 சதவிகிதம்தான். ஆனால், நமது பொன்னான பாரத பூமியில் உலகில் எங்குமே இல்லாத அளவுக்கு 47 சதவிகிதம். சர்வதேச உணவு ஆராய்ச்சி நிறுவனம் என்று ஓர் அமைப்பு. இந்த அமைப்பு இந்தியப் பசிக் குறியீடு என்று அத்தனை தாலுகாவிலும் புள்ளிவிவரங்களைத் திரட்டி ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. பட்டினி மற்றும் ஊட்டச்சத்துக் குறைவு ஆகிய இரண்டு விஷயங்களிலும் ஆபத்தான நிலையில் இந்தியா இருக்கிறது என்றும், இதைப் பற்றி ஆட்சியாளர்களும், வறுமைக்கோட்டுக்கு மேலே உள்ள இந்தியக் குடிமக்களும் கவலைப்படுவதாகவே தெரியவில்லை என்றும் ஆதங்கப்படுகிறது அந்த அறிக்கை. ஆட்சியாளர்களிடம் கேட்டால், பொது விநியோக முறையில் ரேஷன் கடைகள் மூலம் குறைந்த விலைக்கு அரிசியும் கோதுமையும் கொடுக்கிறோம் என்றும் குழந்தைகளுக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் மதிய உணவுத் திட்டம் நிறைவேற்றப்படுகின்றன என்றும் கூறித் தப்பித்துக் கொள்கிறார்கள். வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள குடிமக்களை முன்னிறுத்தி செயல்படுத்தப்படுவதாகக் கூறும் பொது விநியோக முறை, குறிப்பிட்ட சில மாநிலங்களில் மட்டும்தான் செயல்படுகிறது. இந்தியாவின் பெருவாரியான மாநிலங்களில் இன்றும் ரேஷன் கடைகள் அடையாளம் காணப்படவோ, அமைக்கப்படவோ இல்லை. வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் மனிதர்கள் என்று அடையாளம் காட்டப்பட்டவர்களும் சரி, தங்களுக்கென்று ஒரு விலாசம் இருப்பவர்கள் மட்டுமே. விலாசமே இல்லாமல் தெருவோரவாசிகளாக, குடிசைகளிலும், புறம்போக்கு நிலங்களிலும் வாழ்பவர்களாக அன்றாடம் கூலி வேலை செய்து வயிற்றைக் கழுவுகிறவர்களாக இருப்பவர்கள் இந்தியாவில் கோடிக்கணக்கில் இருப்பதைப் பற்றி பொது விநியோகத் துறையோ, அரசோ, ஏன், நாமோ கவலைப்படுகிறோமா? மன்னர்களின் ஆட்சிக் காலத்திலும் பசி, பட்டினி, வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் இவையெல்லாம் இருந்தன. ஆனால், பசித்தவனுக்கு உணவு அளிப்பது புண்ணியம் என்று அறிவுறுத்தப்பட்டது. அன்னதான சத்திரங்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டு, வேலை இல்லாதவனும், வறுமையில் வாடுபவனும் பசியாற வழிகோலப்பட்டது. புண்ணியம் தேடுவது போய் பணம் சேர்ப்பது மட்டுமே குறியாகிவிட்டதன் விளைவுதான், பாரதத்தின் பட்டினிப் பட்டாள எண்ணிக்கை உலக சாதனையாக மாறியிருக்கிறது. அதிகரித்து வரும் பசித்திருப்போர், பட்டினி கிடப்போர் எண்ணிக்கை மக்களாட்சிக்கு மட்டுமல்ல, சட்ட ஒழுங்குக்கே சவாலாக மாறும் சாத்தியங்கள் ஏராளம். இந்த முக்கியமான பிரச்னையை முன்னிறுத்தாமல் உலகமயம் பற்றியும், கறுப்புப் பணம் பற்றியும் பேசிக் கொண்டு, பணத்தை இறைத்து வெற்றிபெற விழையும் அரசியல் கட்சிகள் ஒரு விஷயத்தை மறந்துவிடக் கூடாது. அது - ஓடப்பராயிருக்கும் ஏழையப்பர் உதையப்பராகி விட்டால்...
http://www.தினமணி.காம்/தலையங்கம்
தலைப்பு : inbox
தமிழ் மொழியில் "கலாச்சாரம்" (Culture) என்ற வார்த்தை இருக்கிறதே அது "கலை" "ஆச்சாரம்" என்ற இரண்டு சொற்கள் இணைந்து உருவான கூட்டுச்சொல் (Compound-word). இதில் "கலை" என்ற வார்த்தை எப்படி வந்தது என்றால் இயற்கை வளத்தை வாழ்வின்வளமாக அறிவின் நுட்பத்தினாலே, கைத்தினாலேயே உருமாற்றி, அழகுபடுத்தி நாம் துய்க்கிறோம் பாருங்கள், அதுதான் கலை.
ஆக மனிதன் வாழ்வே கலைதான். அப்படி இந்தக் கலையின் காரணமாக விளைவு தனக்கோ, பிறர்க்கோ, தற்காலத்திலோ, பிற்காலத்திலோ, அறிவுக்கோ, உடல் உணர்ச்சிகளுக்கோ துன்பம் எழாது விழிப்போடு இருந்து கொண்டு, அளவோடு, முறையோடு கலையை நாம் பழகி வந்தோமானால், அந்த நெறியின் பெயரே "ஆச்சாரம்" துன்பம் எழாமல் காக்கக் கூடிய ஒரு நெறி, ஒரு முறை, ஒரு அளவு, இது எல்லாம் பார்த்தோமானால், அதன் பெயர் ஆச்சாரம் என்று சொல்லுவார்கள். அதனால் கலை + ஆச்சாரம் = கலாச்சாரம் என்றானது.
ஆங்கிலேயர்கள் நமது நாட்டுக்கு வந்த போது பார்த்தார்கள்; நல்ல அழகான சொல்லாக இருக்கிறது, நாமும் உச்சரிக்கலாம் என்று எடுத்தவர்கள், இடையிலேயுள்ள நெடிலை விட்டுவிட்டு "Culture" என்று தங்கள் அகராதிக்கு எடுத்துச் சென்றார்கள். "கலாச்சாரம்" என்ற வார்த்தையை வைத்துக் கொண்டு பார்த்தோமானால் எப்பொழுதுமே இயற்கை வளத்தை வாழ்வின் வளமாக மாற்றி, அறிவினாலோ, கைத்திறனாலோ, உருமாற்றி அழகுபடுத்தியே துய்த்து வாழக் கூடியவர்களாகவே நாம் இருக்கிறோம்.
- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
தலைப்பு : inbox
( www.thamizha.com ) எனும் இணையதளத்தில் நாம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த மென்பொருள் பதிவிறக்கம் செய்யப்பட்டு கணிணியில் பதியும்போது Windows துவங்கும்போதே துவங்கும்படி தன்னை அமைத்துக்கொள்ளும். பதியப்பட்டவுடன் வலது கீழ்மூலையில் ஒரு K என்ற எழுத்தினைக் கொண்ட சிறிய விசைப்படம் (Button) தோன்றும். பிறகு நீங்கள் ஏதேனும் ஒரு எடிட்டரைத் திறந்து Alt மற்றும் 2 என்ற விசைகளை (Keys) ஒருசேர அழுத்தி தட்டச்சு செய்யத்துவங்கினால் தமிழில் எழுத்துக்கள் தோன்றும். ஆங்கில வார்த்தையாகவே தட்டச்சு செய்யலாம். உதாரணமாக தமிழ் என்ற வார்த்தையை தட்டச்சு செய்ய thamiz என்ற ஆங்கில எழுத்துக்களை விசைப்பலகையில் அழுத்த வேண்டும். தானம் என்று தட்டச்சு செய்ய thaanam என்ற விசைகளை அழுத்த வேண்டும். (குறிலுக்கு ஒரு a நெடிலுக்கு இரண்டு a). ஆங்கில மொழிக்கு மாற Alt மற்றும் 1 என்ற விசைகளை ஒருசேர அழுத்த வேண்டும். பிறகு மீண்டும் தமிழுக்கு மாற Alt மற்றும் 2 என்ற விசைகளை ஒருசேர அழுத்தலாம். வேறு முறையிலும் மொழியை மாற்றலாம் அதாவது கணிணித்திரையின் வலது கீழ்மூலையில் ஒரு K என்ற எழுத்தினைக் கொண்ட சிறிய விசைப்படம் (Button) இருக்கும். அதனை உங்கள் சுட்டியால் (Mouse) தொட்டு (Click) வருகிற வாய்ப்புகளில் UNICODETAMIL என்ற வாய்ப்பைத் தேர்ந்தெடுக்கலாம். மீண்டும் அவ்வாறே No Keyman Keyboard என்ற வாய்ப்பைத் தேர்வு செய்து ஆங்கில மொழிக்கு மாறலாம். இவற்றிலெல்லாம் என்ன சிறப்பென்றால் தட்டச்சு செய்ய மட்டுமே இந்த மென்பொருள் வேண்டும். படிக்க அது தேவையில்லை. அதாவது இவ்விதம் நீங்கள் தமிழில் தட்டச்சு செய்த கோப்புக்களை (Files) வேறு எந்தக் கணிப்பொறியிலும் இந்த மென்பொருளின் துணையின்றிக்காணலாம்! தமிழில் E-Mail அனுப்பலாம். தமிழில் Chat செய்யலாம். ஏன் ஒரு கோப்புக்கு அல்லது கோப்பரைக்கு பெயரே (File Name or Folder Name) தமிழில் வைக்கலாம். என்ன ஆச்சரியமாக இருக்கிறதா!… எல்லாம் யுனிக்கோட் செய்யும் மாயம். முயற்சி செய்து பாருங்கள் உங்களின் கணிணி Windows 2000, XP or Vista இவற்றில் ஏதாவதொன்றாய் இருந்தால்….! லினக்ஸ் இயக்கமும் இதற்கு உதவும்.
- பொன்னு. கணேஷ் குமார்
http://technicalganesh.wordpress.com/தமிழில்-எழுத/
தலைப்பு : inbox, உங்களுக்கு தெரியுமா?, மொழி
- தினமலர் ( 24-11-2008 )
தலைப்பு : inbox, உங்களுக்கு தெரியுமா?

தமிழின் அனைத்து சிறந்த நூல்களும் இங்கே அகர வரிசைப்படி தரப்பட்டுள்ளன. பதிவிறக்கம் செய்ய சொடுக்கவும் : http://www.tamilcafe.net/tamilbooks.html

இதோ 773 தமிழ் வலைத்தளங்களின் முகவரிகள் பார்வை இட கீழே சொடுக்கவும் : http://www.esnips.com/doc/e109aefc-bb04-46b1-975b-983e558beac9/Tamizh-Websites

சென்னையின் அரிய புகைப்படங்கள்:
http://www.flickr.com/photos/30886342@N00/sets/72057594094737914/show/
தமிழ்நாட்டின் தலைநகரும் இந்தியாவின் நான்காவது பெரிய நகரும் ஆகும். 1996ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்நகரம் மெட்ராஸ் (Madras) என்று அழைக்கப்பட்டு வந்தது. சென்னை, வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்த துறைமுக நகரங்களுள் ஒன்று. சுமார் 7.45 மில்லியன் மக்கள் வாழும் இந்நகரம், உலகின் 35 பெரிய மாநகரங்களுள் ஒன்று. 17ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் சென்னையில் கால் பதித்தது முதல், சென்னை நகரம் ஒரு முக்கிய நகரமாக வளர்ந்து வந்திருக்கிறது. சென்னை, தென்னிந்தியாவின் வாசலாக கருதப்படுகிறது. சென்னை நகரில் உள்ள மரினா கடற்கரை, உலகின் நீளமான கடற்கரைகளுள் ஒன்று. சென்னை, கோலிவுட் எனப்படும் தமிழ்த் திரைப்படத்துறையின் தாயகம். பல விளையாட்டு அரங்கங்கள் உள்ள சென்னையில் பல விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறுகின்றன.
மேலும் விவரமறிய : கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88
நன்றி : விக்கிபீடியா
தலைப்பு : inbox
உலகின் மிகப் பழமையான நாகரீகத்தையும் மொழியையும் உடைய தேசம் சீனா. சீன மொழி பல்லாயிரம் ஆண்டு வரலாறுடையது. உலகில் கோடானுகோடி மக்கள் இதனைப் பயன்படுத்துகின்றனர். உலகின் ஐந்தில் ஒரு பகுதியினர் சீனாவில் வசிக்கின்றனர் (~1.3 பில்லியன்), சீன மொழியைப் பயன்படுத்துகின்றனர். உலகில் நால்வரில் ஒருவர் சீனர். ஒவ்வொரு ஆண்டு அதிகமான வெளிநாட்டவர் சீனாவுக்கு வந்து பயணம் மேற்கொள்கின்றனர் அல்லது வணிகம் செய்கின்றனர். சீனாவை, சீன மக்களை, சீன மொழியை, பண்பாட்டை, தொழில்நுட்பத்தை அறிந்து கொள்வது இன்றைய உலகமயமாதல் சூழலில் அவசியமாகிறது.
தமிழ் மூலம் சீனம் கற்க கீழேவுள்ள வலை தளத்துக்கு செல்லவும்:
http://tamil.cri.cn/1/2004/07/13/Zt23@10341.htm
தலைப்பு : inbox
இம்'மூவர்ண'க் கொடி 26 ஜனவரி 1950 இல் இந்தியா குடியரசு நாடாகும் வரையிலும், அதன் பிறகும் இக்கொடி தேசியக் கொடியாக விளங்கி வருகிறது.
சாதுக்களின் நிறமான காவி நிறம், பொருளை துயிலுற குறிப்பதாகும். நம் தலைவர்கள், பொருள் சேர்ப்பதை துயிலுண்டு, வேலையின் காரணத்திற்கு தம்மை அர்ப்பணிக்க வேண்டும். ஒளியை குறிக்கும் வகையில் நடுவில் உள்ள வெள்ளை நிறம், நம் நன்னடத்தையின் பாதைக்கு வழி காட்ட வேண்டும். பச்சை நிறம், நம் நிலத்திற்கு உள்ள உறவையும் அதிலிருந்து வளரும் செடிகளின் பாரமாக அமைந்த நம் வாழ்வையும் குறிக்கும். அசோக சக்கரமோ, கொடியின் கீழ் வேலையாற்றும் மக்களுக்கு நியாய தருவத்தின் அடிப்படையாக அமையும். மேலும் சக்கரம், சுழலை குறிக்கும் வடிவமாக அமையும். நிற்கதியில் சாவு உண்டு, சுழலில் வாழ்வு உண்டு. இந்திய நாடானது, இனிமேலும் மாற்றங்களை எதிர்க்காமல், முன்னெறிச் செல்ல வேண்டும். இச்சக்கரமானது, அமைதியான மாற்றத்தை குறிக்கும் ஒரு சின்னமாக அமையும்.
-இராதாகிருஷ்ணன் (முன்னாள் இந்தியக் குடியரசுத் துணைத்தலைவர்)
முந்தைய கொடிகள் :
நிவேதிதாவின் கல்கத்தாக் கொடி (1904)

பைக்கஜி காமா அம்மையார் (22 ஆகஸ்ட் 1907), ஜெர்மனியின் ஸ்டுட்கார்ட் என்ற நகரில், ஏற்றியக் கொடி

பால கங்காதர திலகர் மற்றும் அன்னி பெசண்ட் அம்மையார் சேர்ந்து தொடங்கிய சுயாட்சி போராட்டத்தில் (1917) பயன்படுத்தப் பட்ட கொடி.

1921ஆம் ஆண்டு தற்காலிகமாக ஏற்கப்பட்ட கொடி

1931-ல் வலியுறுத்தப்பட்ட அரக்கு நிற சக்கரத்தை கொண்ட காவிக் கொடி

1931ஆம் ஆண்டு ஏற்கப்பட்டு, இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப் பட்ட இந்தியக் கொடி

இரண்டாம் உலகப் போரின் போது, சுபாஸ் சந்திர போஸின் இந்திய தேசிய படை பயன்படுத்திய கொடி

இந்தியா தேசியக் கீதம்
நன்றி : விக்கிபீடியா
தலைப்பு : inbox
இருபதாம் நூற்றாண்டு தெடக்கத்திலிருந்து் காணும் பொருட்களை அப்படியே வரையாமல், நிறங்களையும், வடிவங்களையும் பயன்படுத்தி வரையப்படும் ஓவியம் Abstract ஓவியமாகும். இயல்பான காட்சிகளை எளிய வடிவத்தில் கற்பனை திறனுடன் அப்படியே காட்சிகளை பிரதிபலிக்காமல் மறைமுகமாக உணர்த்தும் ஓவியம். நுட்பம், உலகக் காட்சிகளின், வெளித் தோற்றத்துக்குப் புலப்படாத, உள்ளார்ந்த பண்புகளை ஓவியத்தில் கொண்டு வருவதற்கு உதவியது.
தலைப்பு : inbox
சதுரங்கம் இருவர் விளையாடும் ஒரு பலகை விளையாட்டாகும். இப்பலகை,8 வரிசைகளிலும், 8 நிரல்களிலும் (8 x 8) அமைந்த கட்டங்களைக் கொண்ட சதுர வடிவமானது. ஒரு பக்கத்துக்கு 16 காய்கள் வீதம், 32 காய்கள் கறுப்பு வெள்ளை நிறங்களில் இவ் விளையாட்டில் பயன்படுகின்றன. மதியூகமும், தந்திரமும் இவ் விளையாட்டுக்கு முக்கியமானதாகும். இந்தியாவில் ஏழாம் நூற்றாண்டுல் கண்டுப்பிடிக்கப்பட்டு விளையாடப்பட்டு வந்த சதுரங்கம் என்னும் விளையாட்டிலிருந்தே இது வளர்ச்சியடைந்தது என்பது பொதுமறை.
தலைப்பு : inbox
மடகாஸ்கர் (Madagascar) தீவுக்கு 900 கிமீ கிழக்கே; ஆப்பிரிக்கா கண்டத்திற்கு தென் கிழக்கு கடலோரப் பகுதியில் இருக்கும் ஒரு தீவு மொரிசியஸ் (Mauritius). இந்நாட்டில் ஏறக்குறைய 30 000 தமிழர்கள் வாழ்கின்றனர். இந் நாட்டு பணத்தில் தமிழ் எழுத்துக்களை காணலாம்.

தலைப்பு : inbox


