கணவன் மனைவி எனும் பந்தம் உறுதியாக நல்லவிதமாக இருந்தால்தான் பிள்ளைகளை நல்ல படியாக வளர்க்க முடியும்.
சில வீடுகளில் ஆடு பகை குட்டி உறவு என்ற ரீதியில் இருப்பார்கள்.
கணவன் மனைவிக்கு இடையே பெரும் மோதல் இருக்கும். அதனால் பிள்ளை மட்டும் தங்கள் விருப்பப்படி இருக்க வேண்டும், அதாவது எனது பிள்ளைதான் என்று சொல்வதில் பெருமை.
சில தகப்பன்கள் பிள்ளையின் எதிரேயே மனைவியை திட்டுவது, அடிப்பது, சண்டையிடுவது ஆகியவற்றை செய்வார்கள். மிக கீழ்த்தரமான வார்த்தைகளையும் சிலர் ப்ரயோகிப்பார்கள். இது பிள்ளையின் மனதில் தாயின் மரியாதையை குறைத்து விடும்.
மேலும் ஒரு படி மேலே போய் சில தகப்பன்கள் பிள்ளைகளை ஒற்றனைப் போல் வைத்திருப்பார்கள். அதாவது,” நான் இல்லாத போது அம்மா என்ன செய்யறான்னு” எனக்கு சொல்லணும். சொன்னா நான் சாக்லேட் வாங்கித் தருவேன். என்று சொல்வார்கள். இது மிக மிகத் தவறு.
இப்படி பட்ட மனநிலையில் வரும் பிள்ளையின் எதிர் காலம் என்னவாகும்.
மனைவியும் சில தவறுகளைச் செய்கிறாள். பிள்ளையின் மீது இருக்கும் பாசத்தினால் சில சமயங்களில் பிள்ளையை காக்க தகப்பனிடம் சில விடயங்களை சொல்லாமல் இருந்து விடுவாள்.
”அம்மாவுக்குத் தெரியும். அம்மா திட்ட மாட்டாங்க. அப்பா கிட்ட சொன்னா தோல உரிச்சிடுவாருன்னு அம்மா அப்பா கிட்டயும் சொல்ல மாட்டாங்கன்னு” சொல்லும் பிள்ளை நல்லதாக வளர்க்கப்பட்ட பிள்ளையல்ல”.
சில பெண்கள் பிள்ளையிடன் கடைக்குச் செல்லும் போது, கணவன் திட்டுவார் என்று தெரிந்தும் ஒரு பொருள் தான் ஆசைப் பட்டதை வாங்கியிருப்பார். பிள்ளை போய் போட்டுகொடுத்துவிட்டால்!!
“இந்தா இந்த சாக்லேட் வெச்சுக்கோ. அப்பா கிட்ட இதெல்லாம் சொல்லக்கூடாது!” என்று சொன்னால் நாளை அந்தக் குழந்தை நீ செஞ்சதை நான் சொல்லவில்லை, நான் செய்வதை நீயும் சொல்லாதே” என்று பிளாக் மெயில் செய்ய ஏதுவாகும்.
மற்ற விடயத்தில் எப்படியோ? கணவன் மனைவி இருவரும் பிள்ளை வளர்ப்பு விடயத்தில் ஒத்த கருத்து உடையவர்களாக இருந்தால் தான் வளரும் தலைமுறை நல்ல குடிமகன்களாக, அன்னை தந்தையின் பால் மரியாதை, பாசம் கொண்ட தலைமுறையாக உருவாகும்.
உனக்கு அம்மாவை பிடிக்குமா? அப்பாவை பிடிக்குமா என்கின்ற கேள்வியே தவறு. அம்மா, அப்பா இல்லாமல் பிள்ளை இல்லை. ஆகவே இருவரும் ஒன்று எனும் எண்ணம் பிள்ளைக்கு வரவேண்டும்.
அம்மாவுக்கு தெரியாமல் அப்பாவிடம் பர்மிஷன் வாங்கிக்கொள்ளலாம் என்றோ அப்பாவுக்கு தெரியாமல் அம்மாவிடம் சொல்லிவிட்டு சென்றுவிடலாம் என்றோ குழந்தை நடந்துகொள்கிறது என்றால் இருவரும் சேர்ந்து சரியாக வளர்க்க வில்லை என்பது தான் பொருள்.
http://parentsclub08.blogspot.com/2008/08/blog-post_28.html
தலைப்பு : சிந்திக்க சில நிமிடங்கள், படித்ததில் பிடித்தது
தமிழில் தட்டச்சு செய்ய முதலில் யுனிக்கோட் (Unicode) பற்றித் தெரிந்திருக்க வேண்டும். இதற்குமுன்னால் பயன்பாட்டில் இருந்த அஸ்கி (ASCII) என்ற முறையில் 8 bits மட்டுமே ஒரு எழுத்துக்காக பதிவு செய்யப்படுகிறது. இந்தமுறையில் ஆங்கிலம் மற்றும் அதனை ஒட்டிய மிகச்சில மொழிகளே பதியப்பட்டு வந்தன. மற்ற மொழிகளைப் பதிய அதில் வழிமுறை இல்லை. முக்கியமாகத் தமிழ் போன்ற அதிக எழுத்துக்களைக் கொண்ட மொழிகளின் எழுத்துருக்களைப் பதிய ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு பதிவெண் (CODE) அஸ்கி முறையில் சாத்தியமில்லை. உதாரணமாக A என்ற ஆங்கில எழுத்துக்கு 65 என்ற அஸ்கி பதிவெண் பயன்படுகிறது. இப்படியாக ஒவ்வொரு எழுத்தைப் பதியும்போதும் கணிப்பொறி அந்த எழுத்துக்கான அஸ்கி பதிவெண்ணைப் பதிந்து வைக்கிறது. பிறகு நமக்குக் காட்டும்போது பதிவெண்ணை எழுத்துருக்களாக மாற்றிக்காட்டுகிறது (Convertion of ASCII Code to ASCII Character). அதன்பிறகு உருவாக்கப்பட்ட யுனிக்கோட் முறையானது ஒவ்வோர் எழுத்துக்கும் 16 bits அதாவது 2 bytes பதிவு செய்கிறது. அதனால் அதிக எழுத்துருக்களை நம்மால் பதிவு செய்யமுடிகிறது. இந்த யுனிக்கோட் முறைதான் உலகில் உள்ள பெரும்பாலான மொழிகளை அரவணைத்துக்கொண்டுள்ளது. அந்த வகையில் நமது உயிரினும்மேலான தமிழும் அதன்மூலம் பயன்பெறுகிறது. பயன்படுத்துபவர்களின் நண்பன் (User friendly) என்ற பெருமையை எப்போதும் தக்கவைத்துக்கொண்டிருக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனமும் தனது புதிய விண்டோஸ் பதிப்புகளில் லதா என்ற தமிழ் எழுத்துருவை இணைத்து உலகமெல்லாம் பரப்பி பெருந்தொண்டாற்றியுள்ளது. உங்களின் கணினியிலும் இது சாத்தியம். அதற்கு முன் உங்கள் விண்டோஸில் ControlPanel> Regional Settings என்ற அமைப்பைத் திறந்து Languages என்ற பக்கத்தில் Supplemental Language Support என்ற பகுதியில் Install files for complex script and right-to-left languages (Including Thai) என்பது தேர்வாகியிருக்க வேண்டும். அதைத் தேர்வு செய்தால் அதற்கான கோப்புகளை Windows CD யிலிருந்து பெற்றுக்கொள்ளும் (உங்களிடம் Windows CD ஐ அது கேட்கும்). பின் கணினியை மீண்டும் செயல்படுத்த வேண்டும் (Restart). இப்பொழுது நீங்கள் உங்கள் விண்டோஸ் கணிப்பொறியில் ஏதேனும் ஒரு எடிட்டரை ( MS Word, Wordpad…) திறந்து Fonts பகுதியில் பார்க்கலாம் அல்லது Start > Accessories > System Tools > Character Map என்ற மென்பொருட்கருவியைத் திறந்தும் பார்க்கலாம். ஆனால் இந்த லதா என்ற எழுத்துருவினைப் பயன்படுத்தி எவ்வாறு வரிகளைக் கோர்ப்பது என்பது பலருக்கும் புரியாத புதிராகவே இருக்கலாம். இதற்காக பல மென்பொருட்கள் இணையத்தில் இலவசமாகவே கிடைக்கின்றன. அவற்றில் மிகவும் எளிமையானதாகக் கருதப்படுவது இ-கலப்பை எனப்படும் மென்பொருள் ஆகும். இதனை தமிழா.காம்
( www.thamizha.com ) எனும் இணையதளத்தில் நாம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த மென்பொருள் பதிவிறக்கம் செய்யப்பட்டு கணிணியில் பதியும்போது Windows துவங்கும்போதே துவங்கும்படி தன்னை அமைத்துக்கொள்ளும். பதியப்பட்டவுடன் வலது கீழ்மூலையில் ஒரு K என்ற எழுத்தினைக் கொண்ட சிறிய விசைப்படம் (Button) தோன்றும். பிறகு நீங்கள் ஏதேனும் ஒரு எடிட்டரைத் திறந்து Alt மற்றும் 2 என்ற விசைகளை (Keys) ஒருசேர அழுத்தி தட்டச்சு செய்யத்துவங்கினால் தமிழில் எழுத்துக்கள் தோன்றும். ஆங்கில வார்த்தையாகவே தட்டச்சு செய்யலாம். உதாரணமாக தமிழ் என்ற வார்த்தையை தட்டச்சு செய்ய thamiz என்ற ஆங்கில எழுத்துக்களை விசைப்பலகையில் அழுத்த வேண்டும். தானம் என்று தட்டச்சு செய்ய thaanam என்ற விசைகளை அழுத்த வேண்டும். (குறிலுக்கு ஒரு a நெடிலுக்கு இரண்டு a). ஆங்கில மொழிக்கு மாற Alt மற்றும் 1 என்ற விசைகளை ஒருசேர அழுத்த வேண்டும். பிறகு மீண்டும் தமிழுக்கு மாற Alt மற்றும் 2 என்ற விசைகளை ஒருசேர அழுத்தலாம். வேறு முறையிலும் மொழியை மாற்றலாம் அதாவது கணிணித்திரையின் வலது கீழ்மூலையில் ஒரு K என்ற எழுத்தினைக் கொண்ட சிறிய விசைப்படம் (Button) இருக்கும். அதனை உங்கள் சுட்டியால் (Mouse) தொட்டு (Click) வருகிற வாய்ப்புகளில் UNICODETAMIL என்ற வாய்ப்பைத் தேர்ந்தெடுக்கலாம். மீண்டும் அவ்வாறே No Keyman Keyboard என்ற வாய்ப்பைத் தேர்வு செய்து ஆங்கில மொழிக்கு மாறலாம். இவற்றிலெல்லாம் என்ன சிறப்பென்றால் தட்டச்சு செய்ய மட்டுமே இந்த மென்பொருள் வேண்டும். படிக்க அது தேவையில்லை. அதாவது இவ்விதம் நீங்கள் தமிழில் தட்டச்சு செய்த கோப்புக்களை (Files) வேறு எந்தக் கணிப்பொறியிலும் இந்த மென்பொருளின் துணையின்றிக்காணலாம்! தமிழில் E-Mail அனுப்பலாம். தமிழில் Chat செய்யலாம். ஏன் ஒரு கோப்புக்கு அல்லது கோப்பரைக்கு பெயரே (File Name or Folder Name) தமிழில் வைக்கலாம். என்ன ஆச்சரியமாக இருக்கிறதா!… எல்லாம் யுனிக்கோட் செய்யும் மாயம். முயற்சி செய்து பாருங்கள் உங்களின் கணிணி Windows 2000, XP or Vista இவற்றில் ஏதாவதொன்றாய் இருந்தால்….! லினக்ஸ் இயக்கமும் இதற்கு உதவும்.
- பொன்னு. கணேஷ் குமார்
http://technicalganesh.wordpress.com/தமிழில்-எழுத/
( www.thamizha.com ) எனும் இணையதளத்தில் நாம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த மென்பொருள் பதிவிறக்கம் செய்யப்பட்டு கணிணியில் பதியும்போது Windows துவங்கும்போதே துவங்கும்படி தன்னை அமைத்துக்கொள்ளும். பதியப்பட்டவுடன் வலது கீழ்மூலையில் ஒரு K என்ற எழுத்தினைக் கொண்ட சிறிய விசைப்படம் (Button) தோன்றும். பிறகு நீங்கள் ஏதேனும் ஒரு எடிட்டரைத் திறந்து Alt மற்றும் 2 என்ற விசைகளை (Keys) ஒருசேர அழுத்தி தட்டச்சு செய்யத்துவங்கினால் தமிழில் எழுத்துக்கள் தோன்றும். ஆங்கில வார்த்தையாகவே தட்டச்சு செய்யலாம். உதாரணமாக தமிழ் என்ற வார்த்தையை தட்டச்சு செய்ய thamiz என்ற ஆங்கில எழுத்துக்களை விசைப்பலகையில் அழுத்த வேண்டும். தானம் என்று தட்டச்சு செய்ய thaanam என்ற விசைகளை அழுத்த வேண்டும். (குறிலுக்கு ஒரு a நெடிலுக்கு இரண்டு a). ஆங்கில மொழிக்கு மாற Alt மற்றும் 1 என்ற விசைகளை ஒருசேர அழுத்த வேண்டும். பிறகு மீண்டும் தமிழுக்கு மாற Alt மற்றும் 2 என்ற விசைகளை ஒருசேர அழுத்தலாம். வேறு முறையிலும் மொழியை மாற்றலாம் அதாவது கணிணித்திரையின் வலது கீழ்மூலையில் ஒரு K என்ற எழுத்தினைக் கொண்ட சிறிய விசைப்படம் (Button) இருக்கும். அதனை உங்கள் சுட்டியால் (Mouse) தொட்டு (Click) வருகிற வாய்ப்புகளில் UNICODETAMIL என்ற வாய்ப்பைத் தேர்ந்தெடுக்கலாம். மீண்டும் அவ்வாறே No Keyman Keyboard என்ற வாய்ப்பைத் தேர்வு செய்து ஆங்கில மொழிக்கு மாறலாம். இவற்றிலெல்லாம் என்ன சிறப்பென்றால் தட்டச்சு செய்ய மட்டுமே இந்த மென்பொருள் வேண்டும். படிக்க அது தேவையில்லை. அதாவது இவ்விதம் நீங்கள் தமிழில் தட்டச்சு செய்த கோப்புக்களை (Files) வேறு எந்தக் கணிப்பொறியிலும் இந்த மென்பொருளின் துணையின்றிக்காணலாம்! தமிழில் E-Mail அனுப்பலாம். தமிழில் Chat செய்யலாம். ஏன் ஒரு கோப்புக்கு அல்லது கோப்பரைக்கு பெயரே (File Name or Folder Name) தமிழில் வைக்கலாம். என்ன ஆச்சரியமாக இருக்கிறதா!… எல்லாம் யுனிக்கோட் செய்யும் மாயம். முயற்சி செய்து பாருங்கள் உங்களின் கணிணி Windows 2000, XP or Vista இவற்றில் ஏதாவதொன்றாய் இருந்தால்….! லினக்ஸ் இயக்கமும் இதற்கு உதவும்.
- பொன்னு. கணேஷ் குமார்
http://technicalganesh.wordpress.com/தமிழில்-எழுத/
தலைப்பு : inbox, உங்களுக்கு தெரியுமா?, மொழி
"உங்களுக்கு இடையில் ஒரு பெண் பத்து ஆண்களுடன் இணைந்து உறவு கொள்வதும் உங்களின் தாய், சகோதரிகளை இவ்விதம் நடப்பதற்கு சம்மதிப்பதும் பூர்வ ஆச்சாரமாக இருந்து வருகின்ற நிலையில், நீங்கள் அனைவரும் விபச்சாரத்தில் பிறந்தவர்களும் ஆண், பெண் உறவு விஷயத்தில் நிலத்தில் மேய்ந்து நடக்கும் கால்நடைகளை விட கீழான வெட்கமற்றவர்களுமாகின்றீர்கள். இவ்விதமுள்ள பாவகரமான துர் ஆச்சாரங்களை விட்டொழித்துச் சாதாரண மனிதர்களைப் போன்று வாழ்வதற்கு நாம் இதன் மூலம் உங்களுக்குக் கட்டளையிடுகின்றோம்"
நாகரீகம் வளர்வதற்கு முந்தைய கற்காலத்தில், மனிதன் கால்நடைகளைப் போன்று வாழ்ந்தான் என்பதை வரலாற்றுப் பாடங்களில் படித்துள்ளோம். அத்தகைய காலகட்டங்களில் அச்சமூகத்திற்குத் தலைமையேற்ற ஏதோ ஒரு நல்ல பண்பாட்டுப் பழக்கவழக்கங்களைக் கொண்ட மன்னன் மேற்கண்டக் கட்டளையை இட்டுள்ளான் என நினைத்தால்.... அது தவறு!
இது நாகரீகம் வளர்ந்து உச்சியை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்த 17 - 18 ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் வாழ்ந்த ஒரு மன்னன் பிறப்பித்தக் கட்டளையாகும். 17 - 18 ஆம் நூற்றாண்டிலும் மக்கள் கால்நடைகளைப் போன்று காணும் ஆடவர், பெண்டிருடன் உறவு வைத்து நடந்தனர் என்பதை நம்பமுடியவில்லை தானே?. ஆனால் அது தான் உண்மை!
சரி, யார் இந்த மன்னன்?. எங்கு, எதற்காக, எந்தத் தருணத்தில் இந்தக் கட்டளையை அந்த மன்னன் பிறப்பித்தான்? என்பதை அறிய ஆவலாக உள்ளதா?.
இவ்வாறு கட்டளையிட்டது, இந்தியாவைப் பலகூறாகப் பிரித்து ஆண்டு கொண்டிருந்த சேர, சோழ, பாண்டிய, பல்லவ, இராஜபுத்திர இன்னபிற மன்னர்களில் எவராவது ஒருவராக இருப்பார் எனக் கருதுவீர்களானால்....... அதுவும் தவறானதே.
இவ்வாறான அதிரடி உத்தரவைப் பிறப்பித்தவர் வேறு யாரும் அல்ல - இந்தியாவை அடக்கியாண்டுக் கொண்டிருந்தப் பரங்கியர்களுக்குச் சிம்மச்சொப்பனமாகத் திகழ்ந்து வரலாற்று ஏடுகளில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்க வீரத்துடன் வாழ்ந்த தீரர் திப்பு சுல்தானே தான்.
கேரள நம்பூதிரிகளின் அக்ரஹார அலங்கோல ஆச்சாரங்களை ஒரே கட்டளையின் மூலம் தகர்த்தெறிந்தத் திப்புவின் இந்தக் கட்டளைக்கான காரணம் என்ன? தனது ஆட்சிபரப்பை விரிவாக்கும் எண்ணத்தில் கேரளத்தில் அடியெடுத்து வைத்தத் திப்புவின் வாயிலிருந்து வெளியான இந்தக் கட்டளைக்கும் அன்றையக் கேரள அரசவைக் கூட்டத்தையும் அடிதட்டு மக்களையும் ஒருங்கே கைகளில் அடக்கி ஆட்சி செய்துகொண்டிருந்த நம்பூதிரிகளுக்கும் என்ன சம்பந்தம்?
திப்புவைக் குறித்துப் பேசப்படும் வரலாற்று நூல்களில் பெரும்பாலானவைகளிலெல்லாம் காணப்படும் பிரசித்தமான இந்தத் திப்புவின் கட்டளைக்குக் காரணம் தான் என்ன?. அதனை அறிந்துக் கொள்ள வேண்டுமெனில், திப்பு கேரளத்தில் கால்பதித்த வேளை கேரள மக்கள் எந்நிலையில் வாழ்ந்து வந்தனர் என்பதைக் குறித்துத் தெரிந்துக் கொள்ள வேண்டும்.
சிறிது வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்ப்போம்....
விஜயநகர சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிக்குப் பின் மைசூரில் பிரபல சக்தியாக வளர்ந்து வந்த ஹைதர் அலியின் படை, அக்காலத்தில் மலபார் என அறியப்பட்டிருந்தக் கேரளத்தினுள் நுழைந்துத் தெற்கு மலபாரை ஆட்சி செய்துக் கொண்டிருந்த கேரள வரலாற்றில் மிகப்பெரிய மஹாராஜாவாக அறியப்பட்டிருந்த சாமிரி ராஜாவை அடக்கி அடிபணியவைத்ததோடு ஹைதர் அலியின் மைசூர் ஆட்சி மலபாருக்கும் விரிவடைந்தது. அதனைத் தொடர்ந்து 1773 ல் மைசூர் ஆட்சியின் மலபார் கவர்னராக ச்ரீநிவாச ராவ் பதவியேற்றது முதல் 1790 வரையுள்ள 16 ஆண்டு காலம் மலபார், மைசூர் ஆட்சியின் கீழ் இருந்தது.
இதில் 9 ஆண்டுகள் ஹைதர் அலியும் 7 ஆண்டுகள் திப்புவும் ஆட்சி செலுத்தினர். மிகக் குறுகிய இந்தக் காலயளவில் மலபார் மக்களின் வாழ்க்கை முறையில் ஒரு புரட்சியையே ஏற்படுத்த திப்பு முனைந்திருந்தாலும் இஸ்லாமிய பெயர் கொண்ட ஒரு நவீனத்துவ முகம் கொண்டிருந்ததால் அவரின் சீர்திருத்தங்கள் மூட பழக்க வழக்கங்களிலும் கீழ்த்தர ஆச்சாரமுறைகளிலும் கண்மூடித்தனமான நம்பிக்கை வைத்திருந்த அச்சமூகத்தில் தேவையான மாற்றங்களை ஏற்படுத்தாமல் போனது.
அக்காலகட்டத்தில், சமூகத்தின் எல்லாப் பகுதி மக்களையும் தம் கைகளில் அடக்கி வைத்திருந்த நம்பூதிரிமார்கள், தாழ்த்தப்பட்ட பெண்களையும் ஆண்களையும் அடக்கியாண்டு மோசம் செய்து கொண்டிருந்தனர். தங்களைத் தெய்வத்தின் பிரதிநிதிகளாகவும் பூஜிக்கப்பட வேண்டியவர்களாகவும் அவர்கள் மனதில் நினைத்துக் கொண்டிருந்தனர். அந்த எண்ணத்தைச் சமூகத்தில் விதைப்பதிலும் அவர்கள் வெற்றி பெற்றிருந்தனர்.
"அவரின் - நம்பூதிரியின் - உடல் பவித்ரமானதாகும். சலனம் தெய்வீகக் காட்சியாகும். அவர் உண்டு மீந்த உணவு அமிர்தமாகும். மனித உயிர்களில் ஏற்றவும் உயர்ந்த நிலையில் பூஜிக்கப்பட வேண்டியவர்களாவர்; பூமியில் தெய்வத்தின் பிரதிநிதிகளாவர். இக்காரணங்களால் அவர்களுடன் எந்தப் பெண்ணிற்கு உறவு கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கப்பெறுகின்றதோ அவள் பாக்கியம் பெற்றவள்" என்று அக்காலத்தில் தாழ்த்தப்பட்ட மக்களிடையே நம்பிக்கை ஊட்டப்பட்டிருந்தது.
"நம்பூதிரியை மகிழ்ச்சியடைய வைப்பது தெய்வத்தைத் திருப்திபடுத்துவதற்குச் சமமானதாகும். நாயர் பெண்களுடன் சயனிப்பதற்கான உரிமை கடவுள் அவர்களுக்கு வழங்கியதாகும். அதனை நிராகரிப்பவர்கள் - எதிர்ப்பவர்கள் - தெய்வக்குற்றத்திற்கு ஆளாவர்". இது போன்ற மூடநம்பிக்கைகள் சமூகத்தில் மிகுந்த நம்பிக்கையுடன் பரவியிருந்தக் காரணத்தால், அழகான பெண் குழந்தைகளைப் பெற்றிருந்த நாயர் குடும்பங்கள் தங்கள் பெண்களை ஏதாவது ஒரு நம்பூதிரியுடன் சயனிக்க வைக்க மனப்பூர்வமாக விரும்பியிருந்தனர்.
"சூத்திரப் பெண்கள் பத்தினித்தன்மையைப் பேண வேண்டிய அவசியம் இல்லை எனவும் நம்பூதிரிகளின் ஆசாபாசங்களை நிறைவேற்றி வைக்க சுயம் சமர்ப்பிக்கப்பட்டவர்கள் என்றும் இது கேரளத்திற்கு ஆச்சாரங்களைப் பரிசளித்தப் பரசுராமன் போட்டக் கட்டளையாகும் என ஆச்சாரங்களைக் கற்பித்துப் போற்றும் பிராமணர்கள் தெரிவிக்கின்றனர்". (சி. அச்சுதமேனோன் - கொச்சின் மாநில கையேடு - 1910. பக்கம் 193. C. ACHCHUTHA MENON - Cochin State Manual - 1910 Page No: 193)
http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=995&Itemid=363
தலைப்பு : அந்த நாள், படித்ததில் பிடித்தது, வரலாறு
Subscribe to:
Posts (Atom)


