"இது ஒரு டைரி குறிப்பு" - தமிழ்நெஞ்சம் ஹிப்ஸ் [ hifs@live.com ] Tel: +65 91897619

வாழ்க்கையை வாழ வேண்டுமென்று இல்லாமல்! வாழ்க்கையை வசப்படுத்துங்கள்...!



பாடல் வரிகள் & பாடியவர்: சுஜித்ஜி.

பாடலுக்கு இசை: சந்தோஷ்.


மனித மனங்கள் எப்போதும் விசித்திரமானவை. அச்சப்பட்டு அடங்கி ஒடுங்கி வாழும் இயல்பு சமூகத்தில் ஒரு சில மனிதர்களுக்கு இருப்பதும், ஒரு சிலர் தனது தடைகளையும், தடங்கல்களையும் தாண்டி வெற்றிக் கொடி பதிப்பதும் நாம் கண் கூடாகக் காண்பவையே!

கலைகள் எப்போதும் மனதிற்கு மகிழ்வினைத் தருகின்றவையாகவே விளங்குகின்றன, இந்த வகையில் மேற்குலகில் பல புரட்சிகளையும், சர்ச்சைகளையும் ஏற்படுத்திய, ஏற்படுத்தி வருகின்ற சொல்லிசையை (Rap Music) தனது கருத்துக்களை மக்களுக்குச் சொல்வதற்கேற்ற ஊடகமாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார் ஒரு இளங் கலைஞன், அவர் தான் இன்று எல்லோராலும் உலகெங்கும் ''வாழ்வும் வரும் சாவும் வரும்.....'' எனும் பாடலினூடாக அறியப்பட்ட சுஜித்ஜி அவர்கள்.

இக் கலைஞன் தன் வாழ்வில் தான் சந்தித்த துயர்களையும், தமிழிசைக்குள் சொல்லிசை ஊடாக நமது மக்களுக்குத் தனது கருத்துக்களைச் சொல்வதற்காக தான் ஆரம்பகாலத்தில் பாடல்களை உருவாக்கி வெளியிட்ட போது சமூகம் தனக்கு ஏற்படுத்திய வலிகளையும் பாடலாக்கியுள்ளார். இந்தப் பாடல் மனதிற்கு நம்பிக்கை தருகின்ற நல்ல பல கருத்துக்களை உள்ளடக்கிய பாடலாகும். 'அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்' என்பது எம் ஆன்றோர் பழமொழி. இந்தப் பழமொழிக்கமைவாக சுஜித்ஜி எப்படி அடிமேல் அடி வைத்துள்ளார் என்று படித்துப் பாருங்கள்.

அடிமேல் அடிபட்டு பொடியாய் உடைபட்டு புதிதாய்
உருப்பெற்று தெளிவாய் நடைபோடு
எதுக்கு மினக்கெட்டு எவர்க்கோ கை கட்டு விதியை
விலக்கிட்டு உனை நீ சரிக்கட்டு

அடிமேல் அடிபட்டு பொடியாய் உடைபட்டு புதிதாய்
உருப்பெற்று தெளிவாய் நடைபோடு
எதுக்கு மினக்கெட்டு எவர்க்கோ கை கட்டு விதியை
விலக்கிட்டு உனை நீ சரிக்கட்டு

இந்த சமுதாயம் என்றும் தரும் காயம்
வாழ்ந்தா அது வெறுக்கும் தாழ்ந்தா ஏறி மிதிக்கும்
அது ஆட்டு மந்தை சேர்ந்து கூவும் சந்தை
தனிமனித கருத்து எத்தனை பேருக் கிருக்கு
ஊர் சொன்னா சரி பிழை சொன்னா பிழை
உருக்குனக்குப் பயம் கிடைச்சதென்ன நயம்
உனக்கமைதி போகும் தொல்லை குடி புகும்
நிம்மதி இனி இல்லை இன்னுமா விளங்கேல்லை
இந்த சமுதாயம் என்றும் தரும் காயம்
வாழ்ந்தா அது வெறுக்கும் தாழ்ந்தா ஏறி மிதிக்கும்!

அடிமேல் அடிபட்டு பொடியாய் உடைபட்டு புதிதாய்
உருப்பெற்று தெளிவாய் நடைபோடு
எதுக்கு மினக்கெட்டு எவர்க்கோ கை கட்டு விதியை
விலக்கிட்டு உனை நீ சரிக்கட்டு!

அடிமேல் அடிபட்டு பொடியாய் உடைபட்டு புதிதாய்
உருப்பெற்று தெளிவாய் நடைபோடு
எதுக்கு மினக்கெட்டு எவர்க்கோ கை கட்டு விதியை
விலக்கிட்டு உனை நீ சரிக்கட்டு!

சேர்ந்து வாழும் போது அவர் சிரிக்கிறார்
மேலே போக எண்ணக் குழி பறிக்கிறார்
நல்லோர் இவரா?
நய வஞ்சர் இவரா?
தீயில் வெந்த பின்பும் பினிக்ஸ் பறக்குமே!
சிலிர்ப்புடன் உள்ளுணர்வு பிறக்குமே!
எங்கே வந்து பார்!
என்னைக் கீழே தள்ளிப் பார்!
வந்து தள்ளிப் பார், கொள்ளி வைத்துப்பார்!
வாழ்வினை வாழுவேன் வாழ்வினில் வெல்லுவேன்!

அடிமேல் அடிபட்டு பொடியாய் உடைபட்டு புதிதாய்
உருப்பெற்று தெளிவாய் நடைபோடு
எதுக்கு மினக்கெட்டு எவர்க்கோ கை கட்டு விதியை
விலக்கிட்டு உனை நீ சரிக்கட்டு

அடிமேல் அடிபட்டு பொடியாய் உடைபட்டு புதிதாய்
உருப்பெற்று தெளிவாய் நடைபோடு
எதுக்கு மினக்கெட்டு எவர்க்கோ கை கட்டு விதியை
விலக்கிட்டு உனை நீ சரிக்கட்டு!

என் வார்த்தை பிழையாது - பேர்
பலத்தில் வளையாது

நான் சொல்லி விட்டே போவேன்
உன் தோளைத் தட்டிப்போவேன்!
வாழ்வின் அடி மட்டம் நான்
கண்ட பின் இக் கட்டம்
வந்து நின்றே சொல்வேன் - இம்
மாயைதனைக் கொல்வேன்!
குள்ள நரிக் கூட்டம் அது என்றும் உன்னில் நோட்டம்
இங்கு வாழ்ந்து நீயும் காட்டு அதைத் தூர நீயும் ஓட்டு
வாழ்ந்து காட்டி விடு ஊரின் வாய்கள் மூடிவிடு
நிலம் கடல் வானம் எங்கும் நிம்மதியைக் காணு
நான் சொல்லி விட்டே போவேன்!
உன் தோளைத் தட்டிப்போவேன்!

அடிமேல் அடிபட்டு பொடியாய் உடைபட்டு புதிதாய்
உருப்பெற்று தெளிவாய் நடைபோடு
எதுக்கு மினக்கெட்டு எவர்க்கோ கை கட்டு விதியை
விலக்கிட்டு உனை நீ சரிக்கட்டு!

அடிமேல் அடிபட்டு பொடியாய் உடைபட்டு புதிதாய்
உருப்பெற்று தெளிவாய் நடைபோடு
எதுக்கு மினக்கெட்டு எவர்க்கோ கை கட்டு விதியை
விலக்கிட்டு உனை நீ சரிக்கட்டு!

http://melbkamal.blogspot.com/2009/01/blog-post_6942.html


பாலஸ்தீன் என்றால், இஸ்ரேலுக்குப் பக்கத்தில் இருக்கிற ஒரு சுதந்திரதேசம் என்று இன்றுவரை தவறாகவே நினைத்துக் கொண்டிருப்போருக்கும், இஸ்ரேல் பாலஸ்தீன் விவகாரங்கள் எது ஒன்றுமே தெரியாமல், தினசரி அங்கிருந்து வரும் குண்டுவெடிப்புச் செய்திகளை மட்டும் வாசித்துக் கொண்டிருப்போருக்கும், பிரிட்டனின் காலனிகளாக இருந்து, இரண்டாம் உலகப்போருக்குப்பின் வரிசையாக ஒவ்வொரு நாடாகச் சுதந்திரமடைந்துவிட்ட நிலையில், இருபத்தொன்றாம் நூற்றாண்டு பிறந்தபிறகும் அடிமை வாழ்வைத்தொடரும் பாலஸ்தீனில் அப்படி என்னதான் பிரச்னை என்று அறிய விரும்புவோருக்கும் இது ஒரு சந்தர்ப்பம்.

காலம் இரக்கமற்றது. ஒரு சரியான தலைவன் இல்லாத காரணத்தினாலேயே சொந்தநாட்டில் அகதிகளாக லட்சக்கணக்கான பாலஸ்தீனியர்களை அது ஐம்பதாண்டுகளுக்கு மேலாக வறுத்தெடுத்துவிட்டது. பிறகு, அராஃபத் என்றொரு தலைவனைக் கொடுத்தது. இன்னொரு ஐம்பதாண்டு காலத்துக்கு, அவர் இடைவிடாத போராட்டங்களை நடத்திவந்தார். முதலில் ஆயுதப்போராட்டம். பிறகு, அமைதிப் போராட்டம். சுதந்திர சூரிய வெளிச்சம் அம்மக்களின்மீது இன்னும் விழவில்லை. அராஃபத்தால் சிறு மெழுகுவர்த்திகளை மட்டுமே ஏற்றிவைக்க முடிந்தது. இப்போது அவரது அத்தியாயமும் முடிந்துவிட்டது. மீண்டும் பாலஸ்தீனின் கழுத்துக்கு மேலே கேள்விக்குறியாக அந்தப் பழைய கத்தி தொங்கத் தொடங்கிவிட்டது. நூற்றாண்டுகாலக் கத்தி, இன்னும் கூர்மழுங்காத கத்தி.

அதன் கூர்மை மழுங்கிவிடக் கூடாது என்பதில் இஸ்ரேலுக்கு கவனம் அதிகம். இஸ்ரேல் அந்த விஷயத்தில் கவனமாக இருப்பதைக் கண்காணிப்பதில் அமெரிக்காவுக்கு ஆர்வம் அதிகம். அமெரிக்காவின் அந்த ஆர்வத்துக்கு உடன்படுவதில் பிரிட்டனுக்கு விருப்பம் அதிகம். இஸ்ரேலும் அமெரிக்காவும் பிரிட்டனும் எடுக்கும் நிலைப்பாட்டை, இந்த ஒரு விஷயத்தில் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பதில் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் ஈடுபாடு அதிகம்.

எண்ணெய் வளம் கொழிக்கும் அரபு மண்ணில், எண்ணெயே இல்லாத ஒருபகுதி உண்டென்றால் அது பாலஸ்தீன்தான். அங்கே எண்ணெய் இல்லாதது இன்று ஒரு பொருட்டே இல்லை. முதலில், பாலஸ்தீனே இப்போது இல்லை என்பதுதான் விஷயம்.

பாலஸ்தீன் என்றொரு பிரதேசத்தை இந்தியா போன்ற சில நாடுகள் இன்று அங்கீகரித்து, தூதரக உறவுகள் வைத்துக்கொண்டிருந்தாலும் பெரும்பாலான மேற்கத்திய நாடுகள் பாலஸ்தீனை இன்னும் அங்கீகரிக்கவில்லை. புரியும்படி சொல்லுவதென்றால், உலக வரைபடத்தில் இன்று பாலஸ்தீன் என்றொரு சுதந்திர தேசத்தைப் பார்க்க முடியாது. லெபனான், சிரியா, ஜோர்டன், சவுதி அரேபியா, எகிப்து ஆகிய தேசங்கள் சுற்றி நின்று கும்மியடிக்க, நடுவே ஒரு சிறு எலும்புத்துண்டு மாதிரி இருக்கும் பிரதேசத்தில் புள்ளிவைத்து, எழுதக்கூட இடமில்லாமல் சற்றுத்தள்ளி இஸ்ரேல் என்று குறித்திருப்பார்கள். அந்தச் சிறிய புள்ளியை உற்றுப்பார்த்தால் அதற்குள் இன்னும் இரண்டு சிறிய புள்ளிகள் தெரியும். ஒன்றில் ஜெருசலேம் (Jerusalem) என்றும் இன்னொன்றில் காஸா (Gaza) என்றும் எறும்பு எழுத்தில் எழுதியிருக்கும்.

எங்கே பாலஸ்தீன்?

அதுதான் கேள்வி. அதுதான் பிரச்னை. உண்மையில் "பாலஸ்தீன்" என்பது இன்று வரையிலும் ஒரு கோரிக்கை மட்டுமே. ஒரு தனிநாட்டுக்கான கோரிக்கை. என்னதான் 1988-லேயே அராஃபத், சுதந்திர பாலஸ்தீன் பிரகடனத்தை அறிவித்துவிட்டாலும், 1993-ல் இஸ்ரேலுடனான அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகியிருந்தாலும், அமைதிக்கான நோபல் பரிசை இஸ்ரேலியப் பிரதமர் யிட்ஸாக் ராபினுடன் (Yitzhak Rabin) அவர் பகிர்ந்துகொண்டிருந்தாலும், 1996-ல் அங்கே ஒரு பொதுத்தேர்தலே நடந்து, அராஃபத் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பாலஸ்தீனிய அதிபராகப் பொறுப்பேற்றுக்கொண்டாலும், ஒரு குட்டி நாடாளுமன்றம் அங்கே செயல்பட்டாலும் பாலஸ்தீன் ஒரு சுதந்திர தேசம் இல்லை. இன்றுவரையிலும் இல்லை. இல்லாவிட்டால் எப்படி அவரை இஸ்ரேல் அரசு வீட்டுச் சிறையில் மாதக்கணக்கில் வைத்திருக்க முடியும்? ஒரு சுதந்திர தேசத்தின் அதிபரை, அவரது சொந்த மண்ணில், சொந்த வீட்டில் இன்னொரு தேசம் சிறைவைப்பது என்பதைக் கதைகளில் கூடப் படிக்க முடியாதல்லவா? திரைப்படங்களில் கூடப் பார்க்க முடியாதல்லவா?

இருபதாம் நூற்றாண்டின் மிகப்பெரிய சரித்திர மோசடி என்றால் அது இஸ்ரேல், பாலஸ்தீனுக்கு இழைத்ததுதான். இதில் சந்தேகமே இல்லை. கற்பனைக்கு அப்பாற்பட்ட தீவிரவாதச் செயல்கள் அங்கே நடந்தன. கொத்துக்கொத்தாகக் கொன்று குவித்தார்கள். இடித்த கட்டடங்கள், உடைத்த சாலைகள், அடைத்த கதவுகளுக்கு அளவே இல்லை. குழந்தைகள், ஆண்கள், பெண்கள் பாகுபாடே கிடையாது. "கொல், கொல், கொல்" என்னும் சொல் மட்டுமே தாரக மந்திரமாக இருந்தது.

அங்கே பொருளாதாரம் உயரவில்லை. போராட்டங்கள் மிகுந்தன. கல்வி வளரவில்லை. கலவரங்கள் மிகுந்தன. அடியில் குண்டு வைத்துவிட்டே அமைதி குறித்துப் பேசினார்கள். அரபு மண்ணின் சவலைக் குழந்தையான பாலஸ்தீன் என்பது இறுதிவரை ஒரு கனவுக்குழந்தையாகவே இருந்துவிடுமோ என்கிற அச்சம் இன்று உலக நாடுகள் அனைத்துக்கும் எழுந்திருக்கிறது. யாசர் அராஃபத் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், "இனி அங்கே அமைதிக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்" என்று பேசியதன் உள்ளர்த்தம் புரிந்த அனைவருமே நிலைகுலைந்து போனார்கள்.

அராஃபத் இல்லாத பாலஸ்தீனியர்களின் வாழ்வில் அமைதி என்பது இல்லை என்பது, சற்றே விவரமறிந்தவர்களுக்குத் தெரியும். ஏனென்றால், கடந்த நூறு வருடங்களில் பாலஸ்தீன் கண்ட ஒரே தலைவர் அராஃபத்தான். இன்னொரு பெயரை யோசித்துச் சொல்ல முடியுமா யாராலாவது? இப்போது இடைக்கால அதிபராகப் பொறுப்பேற்றிருக்கும் ராவி ஃபட்டோவின் (Rawhi Fattouh) பெயரையோ, பிரதமர் அகமது கரியின் (Ahmed Qurie) பெயரையோ இதற்கு முன்னால் கேள்விப்பட்டிருக்கிறோமா நாம்?

அதுதான் பிரச்னை. பாலஸ்தீன் ஒரு தலைவனற்ற தேசமாகப் பிறந்து, வளர்ந்து, நடுவில் ஒரு தலைவரைப் பெற்று, இப்போது மீண்டும் தலைவனற்ற தேசமாகியிருக்கிறது. மீண்டும் அங்கே கோரத்தாண்டவமாட நாள் பார்த்துக்கொண்டிருக்கிறது இஸ்ரேல்.

யோசித்துப் பார்த்தால் கொஞ்சம் வியப்பாகத்தான் இருக்கும். 1948-ம் வருடம் வரை இஸ்ரேல் என்றொரு தேசம் கிடையாது. அது, யூதர்களின் மனத்தில்தான் அதுநாள்வரை கருவாக வளர்ந்து கொண்டிருந்தது. திடீரென்று ஒருநாள் பிரிட்டிஷ்காரர்கள் பாலஸ்தீனைக் கூறுபோட்டார்கள். அவர்கள்தாம் அப்போது அந்தப்பகுதியை ஆண்டுகொண்டிருந்தவர்கள். ஒரு கூறுக்கு இஸ்ரேல் என்று பெயரிட்டார்கள். அது யூதர்களின் தேசமானது. இன்னொரு கூறு பாலஸ்தீனிய அரேபியர்களின் இடமாகவே தொடர்ந்து இருக்கும் என்று சொன்னார்கள். ஆனால் நடந்தது வேறு.

இஸ்ரேலை யூதர்கள் ஸ்தாபித்ததை விரும்பாத சில அரேபிய தேசங்கள் (எகிப்து, ஜோர்டன், சிரியா, லெபனான், ஈராக்) தலைவர்களற்ற பாலஸ்தீனியப் போராளிகளுடன் இணைந்து இஸ்ரேலை எதிர்த்தன. 1948-ம் ஆண்டு நடைபெற்ற இந்த முதல் யுத்தத்தின் இறுதியில் இஸ்ரேல் ஒவ்வொரு நாட்டுடனும் ஓர் அமைதி ஒப்பந்தம் செய்துகொண்டு, போரை ஒரு முடிவுக்குக் கொண்டுவந்தது. அந்த ஒப்பந்தங்களின் அடிப்படையில் ஜோர்டன் படை முன்னேறி வந்த மேற்குக்கரை (West Bank)யின் பெரும்பகுதி அந்நாட்டுக்கே சொந்தம் என்றானது. எகிப்துப் படைகள் நிலைகொண்ட காஸா பகுதி, எகிப்தின் சொந்தமானது. கூறுபோட்ட பிரிட்டன், தன்வேலை அதோடு முடிந்ததாகச் சொல்லி விலகிக்கொண்டது. பாலஸ்தீனிய அராபியர்கள் வேறுவழியின்றி, தனியே போராட்டத்தில் குதித்தார்கள். ஐம்பதாண்டு காலத்துக்கு மேலாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் அந்தப் போராட்டத்தில் அவர்கள் எத்தனையோ வீழ்ச்சிகளைப் பார்த்திருக்கிறார்கள். ஆனால், அராஃபத்தின் மறைவைக் காட்டிலும் ஒரு பெரிய வீழ்ச்சி அங்கே இதுகாறும் ஏற்பட்டதில்லை.

இஸ்ரேல்-பாலஸ்தீன் பிரச்னையின் சுருக்கத்தை நான்கு வரியில் சொல்லுவதென்றால், அது மேலே உள்ளதுதான். ஆனால் இது நான்கு வரிகளில் முடிகிற விஷயம் இல்லை. நாலாயிரம் வருட சரித்திரச் சிக்கல்களை உள்ளடக்கியது.

எத்தனையோ நூற்றாண்டுகளாக உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஊர் ஊராகத் தப்பியோடிக் கொண்டிருந்தவர்கள் யூதர்கள். இதிகாச காலங்களில் அவர்கள் ஓடிக்கொண்டிருந்தார்கள். புராண காலங்களில் தலைதெறிக்க ஓடிக்கொண்டிருந்தார்கள். சரித்திர காலம் வந்தபோதும் வாழ வழியில்லாமல்தான் ஓடிக்கொண்டிருந்தார்கள். பின்னால் நவீன உலகம் உருவான பிறகும் அவர்களது ஓட்டம் ஓயவில்லை. சொந்தமாக ஒரு துண்டு நிலம் இல்லாமல், எல்லா தேசங்களிலிருந்தும் அடித்துத் துரத்தப்பட்டவர்கள் அவர்கள். ஜெர்மனியில் ஹிட்லரால் யூதகுலத்துக்கு நேர்ந்த கொடுமைகள் விவரிப்புகளுக்கு அப்பாற்பட்டவை. ரத்தக்கறை படிந்த அந்தச் சரித்திரமெல்லாம் இன்னமும்கூட உலராமல் அதே ஈரத்துடன்தான் இருக்கிறது. காலம் காலமாக வதைபட்டே மடிந்தவர்கள், 1948-ல்தான் இஸ்ரேல் என்றொரு தேசத்தைத் தமக்காக உருவாக்கிக்கொண்டு அதில் வந்து வாழ ஆரம்பித்தார்கள். வாழ்வதற்கு ஒரு துண்டு நிலமில்லாது போவதன் முழு வலியும் அறிந்தவர்கள், எப்படி பாலஸ்தீனிய அராபியர்களை அதே அவதிக்கு உள்ளாக்கினார்கள்? பழிவாங்குவதென்றாலும் விரட்டியவர்களையல்லவா பழிவாங்கவேண்டும்? விரட்டியவர்களுடனேயே சேர்ந்து, வாழ இடம்கொடுத்தவர்களையா பழிவாங்குவார்கள்? இஸ்ரேல் ஏன் இப்படியொரு காரியம் செய்யவேண்டும்?

தொட்டால் அல்ல முகர்ந்து பார்த்தாலே கூடப் பற்றிக்கொள்ளக்கூடிய மிகத்தீவிரமான பிரச்னையின் மையப்புள்ளி இது. ஏனெனில் இதில் அரசியல் மட்டுமல்ல; மதமும் கலந்திருக்கிறது. மதமும் அரசியலும் இரண்டறக் கலந்த இடத்தில் பற்றிக்கொள்ள பெட்ரோல் இருந்துதான் ஆகவேண்டுமென்று அவசியமா என்ன? இருபத்தோறாம் நூற்றாண்டில் மிகப்பெரிய சிக்கல்களை உலகுக்குத் தரப்போகிற இஸ்ரேல் - பாலஸ்தீன் பிரச்னையின் வேர்களை முதலில் ஆராயலாம். விழுதுகளிலும் கிளைகளிலும் பரவியிருக்கும் விஷத்தின் வீரியம் அப்போதுதான் புரியும்

நிலமெல்லாம் ரத்தம் பா.ராகவன் முழுதும் வாசிக்க:

http://documents.scribd.com/docs/6asfiyuktxkb5fws6xm.pdf

John Pilger: "Palestine is Still the Issue"



Why Has This Documentary, Never Been Broadcast On U.S. Media ?

Twenty-five years ago, I made a film called Palestine Is Still The Issue. It was about a nation of people - the Palestinians - forced off their land and later subjected to a military occupation by Israel. An occupation condemned by the United Nations and almost every country in the world, including Britain. - John Pilger

Gaza

மத்திய தரைக்கடல் ஓரம் 40 கிலோ மீட்டர் நீளமும் 10 கிலோ மீட்டர் அகலமும் உடைய ஒரு துண்டு நிலமே காஸா பகுதியாகும். 15 லட்சம் மக்களை அடர்த்தியாகக் கொண்ட பகுதியாகும். 1948-ல் இஸ்ரேல் என்ற நீதியற்ற நாடு உருவானதிலிருந்தே காஸா விடுதலைப் போராளிகளின் பகுதியாகவே விளங்கியது. இஸ்ரேல் உருவாகியபோது காஸா பகுதி எகிப்தின் நிர்வாகத்தின் கீழ் இருந்தது. 1967-ல் நடந்த அரபு இஸ்ரேல் போரின் போது காஸாப் பகுதியை இஸ்ரேல் கைப்பற்றியது.

2005-ல் காஸாவிலிருந்து யூத குடியிருப்புகளை வெளியேற்றம் செய்யப் போவதாக இஸ்ரேல் அரசு போக்கு காட்டியது. ஆனால் பாலஸ் தீனத்தையே திறந்தவெளி சிறைச்சாலையாக மாற்றிட முனைந்தது. குடிநீரையும், வான்வெளியையும் தனது கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டது. காஸா நகரில் மட்டும் 4 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். காஸாவுக்கு அடுத்தபடியாக கான்யூனஸில் 2 லட்சம் மக்களும் மத்திய காஸா மற்றும் ரஃபா பகுதியில் ஒன்றரை லட்சம் மக்களும் வாழ்கின்றனர்.

இஸ்ரேலின் இன வெறிக் கொள்கை காஸாவை சர்வதேச சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தியுள்ளது.

"அகதிகளின் நாடு"

காஸாவில் வாழும் பெரும்பான்மையான மக்கள், அகதிப் பெற்றோர்களுக்குப் பிறந்தவர்கள் ஆவர். இஸ்ரேலின் வான்தாக்குதலில் இருந்து உயிர்தப்பிய அப்பாவிகள் அனைவருக்கும் அடைக்கலம் தரும் பூமியாக காஸா விளங்கி வருகிறது. இங்கு செல்வாக்குடன் திகழும் ஹமாஸ் போராளிகளின் ஆளுமையும் அதற்கு முக்கிய காரணமாகும்.

ஐக்கிய நாடுகள் சபையின் புள்ளிவிவரப்படி ஜபலிய்யா அகதிகள் முகாமில் 1 லட்சத்து 6,091 பேரும், ரஃபா முகாமில் 95,187 பேரும், சதிப் பகுதியில் 57,120 பேரும், கான்யூனிஸ் பகுதியில் 63,219 பேரும், பரெஜில் 28,770 பேரும், மகாஜியில் 22,666 பேரும், தெய்ரில் பலாஹில் 19,534 பேரும் வசிக்கின்றனர்.

Israel attacks Gaza (The Terrorist State of Israel is back at it again)





1947

கொண்டாட்டங்கள்... கொடியேற்றம்... என்று தேசம் விடுதலையை கொண்டாடிய ஆண்டு. இருட்டிலே வாங்கினோம் என்று பின்னர் நம்மில் பலரும் கேலி பேசினாலும்; வாஸ்கோடகாமா 1498-ஆம் ஆண்டு கால் வைத்த நாள் துவங்கிய கொடுமைகளும் வேதனைகளும், போராட்டங்களும் அரசியல் அரங்கிலேனும் ஒரு முடிவுக்கு வந்ததே என மக்கள் கொண்டாடினர்.

ஆனால் 1947 என்பது விடுதலையின் ஆண்டு மட்டுமல்ல.


இந்தியா என்கிற ஒரு தேசம் இந்தியா-பாகிஸ்தான் என இரண்டாக்கப்பட்டது. மத்தியும் தெற்கும் கொண்டாட்டத்திலிருந்த நாட்களில் மேற்கிலும் கிழக்கிலும் வடக்கின் பல பகுதிகளிலும் பிரிவினையின் அர்த்தத்தை கோடான கோடி மக்கள் வர்ணிக்க முடியாத துயரங்களுடனும் இழப்புகளுடனும் உள்வாங்கிக் கொண்டிருந்தனர். பிரிவினைக்குக் காரணம் முஸ்லீம்லீக் தான் என்று ஒரு சாரரும் ஜின்னாதான் என்று சிலரும்; காங்கிரஸ்தான் என்று ஒரு சாராரும் காலம் காலமாக சாதி இந்துக்கள் இஸ்லாமியரை தீண்டத்தகாதவராக நடத்தியதுதான் காரணம் என்று பலரும் - இதெல்லாம் தவறு, விடுதலைக்குப் பிறகு வேலைவாய்ப்பு மற்றும் அதிகாரத்தில் பங்கு பற்றிய அச்சம் கொண்டிருந்த இஸ்லாமிய உயர் மத்தியவர்க்கமும்; செல்வந்தரும்தான் பிரிவினைக்கு வித்திட்டனர் என்று ஒரு வாதமும் எல்லாவற்றுக்கும் மேலாக பிரிட்டிஷ் ஆட்சியாளன் பின்த்தாளும் சூழ்ச்சியும் தாங்கள் போன பிறகு இந்தியர்கள் தமக்குள் வெட்டிக்கொண்டு சாகட்டும் என்கிற அவர்களின் நல்லெண்ணமும் தான் காரணம் என ஒரு வாதமும் - என தேசமெங்கும் வாதப்பிரதிவாதங்கள் நடந்து கொண்டிருக்க அறுவைச் சிகிச்சை நடந்து முடிந்தது.

ஆனால் மக்களில் ஒரு பகுதியினர் வேறு விதமாகவும் நினைத்தனர். இந்து - முஸ்லீம் கலவரங்கள் இத்தோடு ஒழிந்துவிடுமல்லவா? முஸ்லீம்களுக்கே தனியாக ஒரு நாடு என்று கொடுத்துவிட்டோம். இத்தோடு பகைமையின் கதை முடிந்தது என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

ஆனால் பகைமையின் வேர்கள் இன்னமும் ஆழமாக இரு நாட்டு மண்ணிலும் ஊடுருவி நின்று வருங்காலத்திலும் தொடர தேசப்பிரிவினை மேலும் ஒரு காரணமாகி விட்டதை அவர்கள் அன்று அறிந்திருக்கவில்லை.

இன்றுவரை தொடர்ந்து நம் மீது கருநிழல் கவிழ்க்கும் மிகப்பெரிய சரித்திர நிகழ்வாக பிரிவினை இருந்து வருகிறது.

தமிழர்களாகிய நம்மால் - அதிலும் இன்று வாழ்கிற நம்மால் - தேசப்பிரிவினை உணர்ந்து கொள்ளப்படவில்லை. இன்றைய வகுப்புவாதப் பிரச்சினைகளை புரிந்து கொள்ள தேசப்பிரிவினை பற்றிய ஒரு மீள்பார்வை நமக்கு அவசியம்.

1947 ஜூன் 3 அன்று இரண்டு நாடுகளாக இந்தியாவைப் பிரிக்கும் திட்டத்தை பிரிட்டிஷ் அரசு அறிவித்தது. அப்போது இந்தியாவில் இடைக்கால அரசு ஆட்சியில் இருந்தது. அந்த அரசு ஒரு பிரிவினை கமிட்டி-யை நியமித்தது. கவர்னர் ஜெனரல் தலைமையில் சர்தார் வல்லபாய் படேல், டாக்டர் ராஜேந்திர பிரசாத், திரு.லியாகத் அலிகான் மற்றும் சர்தார் அப்துர் ரப் நிஷ்தர் ஆகியோரைக் கொண்டு அக்குழு இயங்கியது.

ஜூன் 18, 1947-ல் பிரிட்டிஷ் பாராளுமன்றம் இந்திய விடுதலை மசோதாவையும் பிரிவினை மசோதாவையும் நிறைவேற்றியது. மூன்றே அனுபந்தங்களையும் பிரிவினைகளையும் மட்டுமே கொண்ட அந்த மசோதா தேசப் பிரிவினையை அமுல்படுத்த பத்து நிபுணர் குழுக்களை நியமித்தது.

அவை:

1. அமைப்பு, ஆவணங்கள், அரசு அலுவலர்
2. சொத்துக்கள் மற்றும் கடன்கள்
3. மத்திய வருவாய்
4. ஒப்பந்தங்கள்
5. கரன்சி, நாணயம் மற்றும் பரிவர்த்தனை
6. பொருளாதார உறவுகள் - குழு - 1
7. பொருளாதார உறவுகள் - குழு - 2
8. வாழுமிடம்
9. வெளியுறவு
10.ராணுவம்

இந்த நிபுணர்குழு எதுவும் இடம் பெயர்ந்த மக்களின் துயரத்தையோ நடைபெற்ற கலவரங்களையோ பற்றி கவனிக்கவேயில்லை.

1947 ஜூன் 30 அன்று 'எல்லைக் குழு' ( Boundry Commission ) நியமிக்கப்பட்டது. பஞ்சாப் பவுண்டன் கமிஷன், பெங்கால் பவுண்டன் கமிஷன் என இரு குழுக்கள்.

இரண்டு குழுக்களுக்கும் தலைவராக சர்.சின்ல் ரேட்கிளிஃப் (Sir Cyril Radcliff) பிரிட்டிஷ் சட்ட வல்லுநர் நியமிக்கப்பட்டார்.

பஞ்சாப் பவுண்டன் கமிஷன்

1. சர்சின்ல் ரேட்கிளிஃப்
2. ஜஸ்டிஸ் தின் மொகம்மது
3. ஜஸ்டிஸ் முகமது முனிர்
4. ஜஸ்டிஸ் மெகர்சந்த் மகாஜன்
5. ஜஸ்டிஸ் தேஜாசிங்

வங்காள பவுண்டன் கமிஷன்

1. சர் சின்ல் ரேட் கிளிஃப்
2. ஜஸ்டிஸ் பி.கே. முகர்ஜி
3. ஜஸ்டிஸ் சி.சி. பிஸ்பாஸ்
4. ஜஸ்டிஸ் அபு சலேஷ் முகமது அக்ரம்
5. ஜஸ்டிஸ் எஸ். ஏ. ரஹ்மான்

ஒவ்வொரு குழுவிலும் இரண்டு இந்துக்கள் இரண்டு முஸ்லீம்கள் ஆனால் எல்லோரும் நீதிபதிகள். சாதாரண மக்களிலிருந்தோ இயக்கங்களிலிருந்தோ எவருமில்லை என்பதை கவனிக்க வேண்டும்.


பொதுமக்களிடமிருந்து பிரிவினை குறித்த மனுக்களை இக்கமிஷன்கள் வரவேற்றன. காங்கிரஸ் கட்சி, முஸ்லீம் லீக், இந்து மகாசபை, மற்றும் சீக்கிய அமைப்புகளும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட வாதங்களை இக்கமிஷன்களிடம் முன்வைத்தன. ஆனால் பெரும்பான்மையினரான படிப்பறிவற்ற இந்திய மக்களிடம் எவரும் கருத்து கேட்கவில்லை.

இரண்டு கமிஷன்களில் இருந்த உறுப்பினர்களுக்கு இடையிலும் தீர்க்கவே முடியாத கருத்து முரண்பாடுகள் நிலவின. வேறுவழியின்றி சட்டப்படி எது சரியோ அதைச் செய்ய கமிஷனின் தலைவர் சர் சின்ல் ரேட்கிளிப்புக்கு கமிஷன் உறுப்பினர்கள் அதிகாரம் வழங்கினர்.

1947 ஆகஸ்டு 17 அன்று சர்சின்ல் ரேட்கிளிஃப் தனது தீர்ப்பை வழங்கினார்.

இரண்டு தரப்புக்கும் திருப்தி தராத தீர்ப்பாக அது அமைந்தது.

ஆகஸ்டு 17 அன்று இருநாட்டு பிரதமர்களும் அம்பாலாவில் சந்தித்து மக்களை (இந்துக்களையும் சீக்கியர்களையும் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கும் முஸ்லீம்களை இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கும்) பரிமாறிக்கொள்ள ஒப்புக்கொண்டனர்.

ஆனால் அந்தத் தேதிக்கு முன்பாகவே இங்கிருந்து 5 லட்சம் மக்களும் அங்கிருந்து 5 லட்சத்துக்கு மேலான மக்களும் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்தபடி இடம் பெயர்ந்துவிட்டிருந்தனர் என்பதுதான் சரித்திரத்தின் குரூர நகைச்சுவையாகும்.

இடம்பெயர்தல்:

நடுவில் கோடு கிழித்து இரண்டு தேசமாக்கிவிட்டால் வகுப்புவாத அரசியல் அன்றோடு முடிவுக்கு வந்துவிடும் என்று நியாய உணர்வுள்ள பலரும் கருதினர். லட்சோப லட்சம் மக்கள் இப்படி இடம் பெயர நேரிடும் என காந்திஜி கூட நினைக்கவில்லை. ஆனால் நவகாளியிலும்; ராவல்பிண்டியிலும் 1946 இறுதியிலிருந்து நடைபெற்று வந்த கலவரங்கள் மக்களை வேறு விதமாக நினைக்கச் செய்தன.


ஆனால் பிரிவினை பற்றிய பேச்சு மக்களிடம் புழங்க ஆரம்பித்த காலத்தில் மக்களும் அப்படித்தான் நினைத்தனர்.

ராஜேந்திரசிங் (மூன்று சக்கரவாகன ஓட்டுநர், டெல்லி) அளித்த பேட்டியில் கூறினார்.

"அரசர்களும், அரசியல்வாதிகளும் தலைவர்களும் எப்பவுமே அதிகாரத்துக்காக போராடுவது வழக்கம் தான். அரசர்களும் தலைவர்களும் மாறிக்கொண்டே இருந்ததுதானே நமது சரித்திரம். ஆனால், மக்கள் எப்போது மாறினார்கள்? (ராஜே மகராஜே பதல்தே ரஹத்தே ஹை பர் ப்ரஜா கப் பத்லி ஹை?)"


பஞ்சாப் மக்களும் இப்படித்தான் பேசிக்கொண்டார்கள். ராஜா ரஞ்சித்சிங் ஆட்சிக்கு வந்தார். மக்கள் இடம் பெயரவில்லை. சீக்கியர்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வந்தனர். அப்போதும் மக்கள் இடம் பெயரவில்லை. ஆங்கிலேயர் ஆட்சிக்கு வந்தனர். அப்போதும் மக்கள் எங்கும் துரத்தப்படவில்லையே. எனவே அப்படி ஒன்றும் நடக்காது என்றுதான் சாதாரண மக்களும் நம்பிக் கொண்டிருந்தனர்.

ஆனால் நடந்து கொண்டிருந்த நிகழ்ச்சிப் போக்குகளை கவனித்த படித்தவர்க்கம் இதை முன்கூட்டியே உணர்ந்தது. காங்கிரஸ் கட்சி அலுவலகங்களுக்கு எண்ணற்ற கடிதங்கள் வந்து குவிந்தன. அன்று காங்கிரசிலிருந்த 14-5-1947 தேதியிட்டு கிருபளானி அவர்களுக்கு வந்த ஒரு கடிதம்:

"பஞ்சாபில் இருக்கும் சிறுபான்மையினரான எங்களை (இந்துக்கள், சீக்கியர்களை) பார்த்து நீங்கள் கூறுகிறீர்கள். எங்களை நாங்களே பாதுகாத்துக் கொள்ளமுடியாவிட்டால் புலம்பெயர்ந்து வந்துவிடுங்கள் என்று. மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது உங்கள் அறிக்கை. மாபெரும் காங்கிரஸ் இயக்கம் எங்களை அனாதரவாக நட்டாற்றில் கைவிட்டு விட்டது.

காலம் காலமாக அஹிம்சையை போதித்து போதித்தே பாதுகாக்க தைரியமற்றவராக்கிய எங்களை நிராயுதபாணியாக்கி; காங்கிரஸ் கட்சி இப்போது தப்பி ஓடிவரும்படி ஆலோசனை கூறுகிறது.

நான் கேட்கிறேன். ஓடிவரும் எங்களுக்கு அங்கே எந்த ஏரியாவை ஒதுக்கியிருக்கிறீர்கள்? நாங்கள் மானத்தோடு குடியமர என்ன ஏற்பாடு? நாங்கள் எத்தனை பேர் வருவது? எப்படி வருவது? எங்கள் அசையாச் சொத்துக்களை நாங்கள் என்ன செய்வது? எங்கள் ஒவ்வொருவருக்கும் வேலை தருவீர்களா? உங்கள் நிவாரண முகாம்களில் பிச்சைக்காரர்களைப் போல நீங்கள் வீசியெறியும் ரொட்டித்துண்டுகளுக்காக காத்துக்கிடக்க அழைக்கிறீர்களா?


ஐந்து நதிகள் பாயும் எங்கள் பஞ்சாப் பூமியில் நாங்கள் கவுரவமாக தலை நிமிர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உங்கள் பிகான்களையும் மதராசிகளையும் உ.பி.வாலாக்களையும போலவே. நீங்கள் எங்களையும் வங்காளிகளையும் காவு கொடுத்து உங்கள் நாட்டின் பிற பகுதிகளுக்கு விடுதலை வாங்கித் தந்துள்ளனர்கள்.

பைத்தியங்களைப் போலவும் நாடோடிகளைப் போலவும் எங்கள் மண்ணைவிட்டு ஓடி வர முடியாது. ராவல்பிண்டியில் நடந்தது போல இங்கும் நடக்கும் என்றால் நாங்கள் இந்துக்களாக இருப்பதற்காக ஓடிவந்து உங்களிடம் கையேந்தி நிற்கமாட்டோம். நாங்கள் முஸ்லீம்களாக மாறி விடுவோம்.


உங்கள் வார்த்தை ஜாலங்கள் எங்களுக்குத் தேவையில்லை. நேரடியாக பாதுகாப்பு ஏற்பாடுகள் தேவை. அதற்கு உங்களால் முடியாது என்றால் இந்த பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியை கலைத்துவிடுங்கள். எங்கள் விதியை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.


"கோழைகளே! கோழைத்தனமான உங்கள் தத்துவங்களுக்கும் சொற்பொழிவுகளுக்கும் பெரிய கும்பிடு. நாங்கள் வாழ்கிறோம் அல்லது சாகிறோம். இந்துக்களாக இருக்கிறோம் அல்லது எப்படியோ மாறுகிறோம். உங்களால் எதுவும் செய்ய முடியாத நிலையில் உங்கள் திருவாய்களை பொத்திக் கொண்டு ஓடிவிடுங்கள். எங்கள் கொதிக்கும் பூமியில் கால் வைக்காதீர்கள்" (அகில இந்திய காங்கிரஸ் கட்சி முவணங்கள் கோப்பு எண் இஃ-9 பகுதி-1,1947 பஞ்சாப்) இக்கடிதத்தில் எழுப்பப்பட்ட வினாக்களுக்கு எவரிடத்திலும் விடைகள் இல்லை.


அவரவர் வாழ்க்கையை அவரவர் தீர்மானித்துக் கொள்ளும் பதட்டமான சூழல் நிலவியது.

வசதிபடைத்தவர்கள் பத்திரிகைகளில் விளம்பரம் செய்தனர். "ராவல்பிண்டியில் 14 அறைகள் கொண்ட இரண்டடுக்கு மாளிகையும் நகரை அடுத்து அறுபது ஏக்கர் விளைச்சல் நிலமும் சொந்தமாகக் கொண்ட ஒருவர் இந்தியாவில் கான்பூர் அல்லது லக்னோவை ஒட்டிய நகர்ப் பகுதியில் இதற்கு ஈடான சொத்துக்கள் உடைய ஒருவருடன் அப்படியே பரிமாற்றம் செய்துகொள்ள தயாராக இருக்கிறார். தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி.


இது போன்ற எண்ணற்ற விளம்பரங்கள் தினசரிகளில் வரத் துவங்கின. ஆலை முதலாளிகள் இதுபோல சொத்துக்கள் ஆங்காங்கே இருக்க குடும்பங்கள் மட்டும் இடம் பெயர்ந்து தங்கள் நிலைகளை காப்பாற்றிக் கொண்டனர். ஆகஸ்ட் 15-க்கு முன்பே இந்தப் பரிமாற்றங்கள் நிகழத் துவங்கி விட்டன.

எனினும் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை விட்டு விட்டு உயிரைச் காப்பாற்றிக் கொள்ள பூர்வீக ஊர்களை நிரந்தரமாக துறந்து இருபக்கமும் மக்கள் புலம்பெயர்ந்தனர்.

எப்படி நிகழ்ந்தது? எப்படியெல்லாம் நிகழ்ந்தது?

ஒரு கிராமத்தில் திடீரென ஒரு வதந்தி வேகமாகப்பரவும். "முஸ்லீம் குண்டர்கள் (அது முஸ்லீம் கிராமமாக இருந்தால் இந்து குண்டர்கள்) நம் ஊரை நோக்கி ஆயுதங்களோடு வந்து கொண்டிருக்கிறார்கள், வதந்தி பரவியதும் உடனே ஊரே பதறி எழும். பெண்கள் குழந்தைகள் எல்லோரும் ஒரே வீட்டில் பாதுகாப்பாக கூடுவார்கள். ஆண்கள் ஆயுதபாரியாகி எதிர்த்தாக்குதலுக்குத் தயாராவார்கள். பல இடங்களில் மோதல்கள் நடந்தன. சொத்துக்கள் சூறையாடப்பட்டன. மக்கள் கொல்லப்பட்டார்கள். கட்டாய மதமாற்றத்துக்கு நிர்பந்திக்கப்பட்டார்கள். பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள்.


இது போன்ற சம்பவங்கள் நடக்க நடக்க நாளுக்கு நாள் பீதி அதிகரித்தது. பல கிராமங்கள் ஊரைக் காலி செய்துவிட்டு கால்நடைகளுடனும் தட்டுமுட்டுச் சாமான்களுடனும் இந்தியாவை (அல்லது பாகிஸ்தானை) நோக்கி நடக்க ஆரம்பித்தனர். வழியில் உள்ள கிராம மக்களும் சேர்ந்து கொள்வார்கள். சாலைப்பயணம் நீள நீள நடக்கின்ற கூட்டமும் பத்தாயிரம் பேர் இருபதாயிரம் பேர் எனப் பெருகும். இந்த ஊர்ந்து போகும் மக்கள் திரளை 'கஃபிலா' (Kafila) என்று அழைத்தனர். மிகப் பெ ரிய கஃபிலாவில் ஒரு சமயம் 4 லட்சம் பேர் நடந்து வந்தனர். இந்த அனாதரவான கஃபிலா ஒரு இடத்தைக் கடக்க எட்டு நாள் ஆனது.

இடையில் மதவெறியர்களின் தாக்குதலுக்கு இந்த கஃபிலா ஆளாகும். பெண்கள் கடத்திச் செல்லப்படுவார்கள். ஒன்றும் செய்ய முடியாது. கதறி அழுதபடி 'கஃபிலா' வின் பயணம் தொடரும். எதிரெதிர் திசைகளில் கஃபிலாக்களின் நகர்தல் - குடிக்க நீரின்றி, உண்ண உணவின்றி, நோய்க்கு மருந்தின்றி, செத்துச் செத்து விழுந்த மக்கள் ஏராளம்.


பின்னர் பல கிராமங்களில் "தாக்குதலுக்குப் படைவருகிறது" என்ற வதந்தி பரவியதுமே கற்பழிக்கப்படலாம் என்ற அச்சத்தின் விளைவாக படை எதுவும் வருவதற்கு முன்னே பெண்கள் தீக்குளித்தும் வீட்டுக்கிணறுகளில் விழுந்தும் தற்கொலை செய்து தங்கள் மானம் காத்துக் கொண்டனர். அல்லது தங்கள் வீட்டு ஆண்களால் முன்கூட்டியே கொல்லப்பட்டனர். இந்த (தற்)கொலைகள் முடிந்த பிறகு எந்த தாக்குதலும் நடக்காமலே வீண் வதந்தியாகப் போன சம்பவங்களும் உண்டு.


குறைந்தது 10 லட்சம் பேர் கொல்லப்பட்டனர். பஞ்சாபில் மட்டும் ஒரு கோடிப்பேருக்கு மேல் எல்லையை கடந்தனர். 75000 பெண்கள் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகினர்.

கடத்தப்பட்ட தங்கள் பெண்கள், குழந்தைகள் பற்றி முறையாக புகார் தந்தவர்கள் பலர். விபரம் தெரியாமல் கண்ணீருடன் காலத்தில் புதைந்து போனவர்கள் பலர். புகார்களின் எண்ணிக்கை பெருகப் பெருக 1949ல் இந்திய அரசு ஒரு சட்டம் கொண்டு வந்தது. "கடத்தப்பட்டவர்களின் மீட்பு மற்றும் மறுவாழ்வுக்கான சட்டம் 1949" கடத்தப்பட்டவர் யார் என்பதை அந்தச் சட்டம் விளக்கியது.

1-3-1947-க்குப் பிறகும் 1-1-1949-க்கு முன்பும் தங்கள் குடும்பத்தாரிடமிருந்து பிரிக்கப்பட்ட 16 வயதுக்கு கீழ்ப்பட்ட ஆண் மற்றும் எல்லா வயது பெண்களும் இந்த தேதிகளுக்கு இடையே பிறந்த குழந்தைகளும் கடத்தப்பட்டவராக கருதப்படுவர்.

இந்திய மற்றும் பாகிஸ்தானியர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு புகார்களின் அடிப்படையில் இரு நாடுகளிலும் தேடும்பணி நடைபெற்றது. பலர் மீட்கப்பட்டு அவரவர் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

1957 வரை தேடும்பணி தொடர்ந்தது. 1957 உடன் இச்சட்டம் காலாவதியானது. அதற்கு மேல் தேடுவதற்கு இரு நாடுகளிலும் அனுமதி இல்லை.

தொலைந்தவர்கள் தொலைந்து போனவர்கள்தான். ஆகஸ்டு 1956-ல் கராச்சியிலிருந்து வெளிவந்த (Dauhn) டான் என்ற பத்தின்கை ஒரு தந்தையின் சோகத்தை எழுதியிருந்தது. இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு துரத்தப்பட்ட குவா மருத்தீன் அகமத் என்பவர் வழியில் தன் பெண் குழந்தை கடத்தப்பட்டதை பற்றி பாகிஸ்தான் அரசுக்கு புகார் செய்தார். அரசு எதுவுமே செய்யாததால் அவரே தன் மகளைத் தேடி இந்தியாவுக்கு தன்சொந்த நகருக்கு வந்தார்.


அவர் பல சில்லறைக் காரணங்களைக் காட்டி கைது செய்யப்பட்டு பாகிஸ்தானுக்கு திருப்பப்பட்டார். மீண்டும் மகளைத் தேடி இந்தியா வந்த அவர் " பாகிஸ்தான் உளவாளி " என குற்றம் சாட்டப்பட்டு 1951ல் சிறையிலடைக்கப்பட்டார். விடுதலையான பிறகு பாகிஸ்தான் சென்று மீண்டும் அரசுக்கு விண்ணப்பித்தார். இந்திய அரசு அவருக்கு உதவாதது பற்றிகூட அவர் வருத்தப்படவில்லை. பாகிஸ்தான் அரசு எதுவுமே செய்யவில்லையே என வருந்தி கடிதங்கள் எழுதிக் கொண்டே இருந்தார். அதற்குள் 1957 வந்துவிட்டது. கடத்தப்பட்டவர்களை மீட்கும் சட்டமும் காலாவதி ஆனது. இரு நாடுகளிலும் வாழ்ந்த எத்தனையோ தந்தையரைப்போல அவரும் அவரது மகளை நிரந்தரமாக இழந்த சோகத்துடன் உறைந்து போயிருப்பார். இதுபோல கற்பழிக்கப்பட்ட பெண்களுக்குப் பிறந்து அனாதையான குழந்தைகளை என்ன செய்வது என்பது இரு நாடுகளிலும் பிரச்சினை ஆனது. ஒரு இந்து தகப்பனுக்கும் முஸ்லீம் பெண்ணுக்கும் பிறந்த குழந்தை எந்த மதத்தை சேரும்? அல்லது முஸ்லீம் தகப்பனுக்கும் இந்து தாய்க்கும் பிறந்த குழந்தையை எங்கே வைத்திருப்பது? இந்தியாவிலா?பாகிஸ்தானிலா? அது எந்த நாட்டுப் பிரஜையாக இருக்கும்?

நாடாளுமன்ற அவைகளில் அமைச்சர் பெருமக்கள் அறிஞர்கள் விவாதித்தனர். தகப்பனின் மதம் தான் குழந்தைக்கும் பொருந்தும் என பெரும்பாலோனோர் பேசினர். ஆனால் இந்த குழந்தைகளைப் பொறுத்தவரை பாலியல் பலாத்காரம் செய்த கயவர்களல்லவா தகப்பன்கள்? தகப்பன் என்ற வார்த்தை அவர்களுக்குப் பொருந்துமா?

அதிர்ச்சியூட்டும் கருத்துக்களை அறிஞர்கள் அவைகளில் அள்ளி வீசிக் கொண்டிருக்க அனாதைக் குழந்தைகள் இந்திய பாகிஸ்தான் தெருக்களில் குழந்தை உழைப்பாளிகளாக பிச்சைக்காரர்களாக சில்லறைத் திருடர்களாக தங்கள் பால்ய காலத்தை கரைக்கத் துவங்கி விட்டிருந்தனர். ஆசிரமங்களில் இருந்த அனாதைக் குழந்தைகளை தத்து எடுத்துச் சென்றவர்களும் ஆண் குழந்தைகளையே எடுத்துச் சென்றனர். பெண் குழந்தைகளை வேறு நோக்கங்களுக்காக தத்து எடுத்துச் சென்றனர். பலர் தத்து எடுத்துச் சென்ற பெண் குழந்தைகளை ரொம்ப சேட்டை செய்வதாகக் கூறி மீண்டும் ஆசிரமத்திலேயே கொண்டுவிட்டனர்.

நாங்கள் யார்

இதற்கிடையே 50,000 தாழ்த்தப்பட்ட குடும்பங்கள் பாகிஸ்தானிலிருந்து தப்பி இந்தியா வந்து சேர்ந்திருந்தனர். நிவாரண முகாம்களில் அவர்களுக்கு அடைக்கலம் தராமல் அதிகாரிகள் தட்டிக் கழித்தனர். எல்லைப்பகுதியில் இரண்டு வகையான நிவாரண முகாம்கள் அப்போது இயங்கின. பாகிஸ்தானிலிருந்து தப்பி வந்த இந்துக்கள் சீக்கியர்களுக்கான முகாம் ஒன்று. பாகிஸ்தான் செல்வதற்காக காத்திருக்கும் முஸ்லீம்களுக்கான முகாம் ஒன்று. சாதி இந்துக்களை முகாம்களில் சேர்க்க முழு முயற்சியில் ஈடுபட்ட அதிகாரிகள் தாழ்த்தப்பட்ட மக்களை எதிலும் சேர்க்க மறுத்தனர். முகாம்களில் இருப்பவர்களுக்குத்தான் ரேஷன் கிடைக்கும்.

1947 டிசம்பர் வாக்கில் டாக்டர் அம்பேத்கார் இது குறித்து நேருவுக்கு கடிதம் எழுதினார். ஒன்றும் நடக்கவில்லை. பாகிஸ்தானில் நிலபுலன் வைத்திருந்தவர்கள் அதற்கான சான்றுகளை இந்திய அதிகாரிகளிடம் காட்டினால் அவர்களுக்கு மாற்று ஏற்பாடாக இங்கு முஸ்லீம்கள் விட்டுச் சென்ற நிலபுலன்கள் ஈடாகத் தரப்பட்டன. இதே நடைமுறை பாகிஸ்தானிலும் இருந்தது.

ஆனால் தாழ்த்தப்பட்ட மக்கள் நிலங்களில் காலம் காலமாய் பாடுபட்டார்களே ஒழிய உடமையாளர்களாக இருக்கவில்லை. எனவே சட்டப்படி இந்திய அதிகாரிகளிடம் விவசாயிகள் என்று நிரூபிக்க அவர்களிடம் எந்த சான்றும் இருக்கவில்லை. ஈடாகப்பெற நிலமும் கிட்டவில்லை. நிவாரண முகாம்களில் ரேஷனும் கிட்டவில்லை.


பொறுப்புக்கு வந்ததும் முதல்காரியமாக பாகிஸ்தான் அரசு தாழ்த்தப்பட்ட தீண்டத்தகாத மக்கள் இந்தியாவுக்கு புலம் பெயர்வதை உடனடியாக தடை செய்து உத்தரவு பிறப்பித்தது. எல்லா தாழ்த்தப்பட்டோரும் இந்தியா சென்று விட்டால் கக்கூஸ் அள்ளுவது யார்? சாக்கடை அள்ளுவது யார்?அத்தியாவசியப் பணி பராமரிப்பு சட்டத்தின் (ESMA)கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டு கக்கூஸ்களுக்கு அனுப்பப்பட்டனர். இந்தியாவிலும் இது தான் நடந்தது.

தாழ்த்தப்பட்ட மக்கள் முஸ்லீம்களும் அல்லர். இந்துக்களும் அல்லர் என்றால் நாங்கள் யார்? நாங்கள் தீண்டத்தகாதவர்கள் உங்கள் பார்வையில் அசுத்தமானவர்கள் எங்களுக்கு "அசுத்தஸ்தான்" என்று தனி நாடு கொடுங்கள் என்றெல்லாம் குரல்களும் இயக்கங்களும் கிளம்பின.

திரு. பியாலால் (Mr.Beah Lall) 1946 நவம்பரில் "அகில இந்திய அசுத்தஸ்தான் இயக்கத்தை" நிறுவினார். "இந்துக்களும் முஸ்லீம்களும் தங்களின் எண்முக்கையை உயர்த்திக் கொள்வதற்காக இப்போது தீண்டத்தகாத எங்களை தங்கள் பக்கம் இழுக்கிறார்கள். ஆனால் இந்துஸ்தான், பாகிஸ்தான், இங்கிலீஸ்தான் ஆகிய இந்த மூன்று ஸ்தானவாதிகளும் எங்களை காலம் காலமாக கசக்கிப் பிழிந்ததை நாங்கள் மறக்க முடியுமா? நாங்கள் இந்தியாவில்தான் பிறந்தோம் எனவே இந்தியாவின் ஒரு பகுதியை "அசுத்தஸ்தான்" ஆக்கித்தாருங்கள் எங்கள் வழியை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்ற திரு பியாலால் பிரகடனம் செய்தார்.

1947 மார்ச் 6 - இல் நடைபெற்ற உத்திரபிரதேச தாழ்த்தப்பட்டோர் சம்மேளன மாநாட்டில் பேசிய இடைக்கால அரசின் சட்ட உறுப்பினர் ஜே.என்.மண்டல், "எனக்கு காந்திஜியின் மீது பெரிய நம்பிக்கை எதுவும் இல்லை. ஹரிஜனங்களுக்கு கோயில் கதவுகளை திறந்து விட்டு சமபந்தி போஜனம் செய்தால் போதுமா? எனவே நான் லீக்குடன் கை கோர்க்க தயாராகி விட்டேன். முஸ்லீம்கள் நம்மைப்போல ஏழைகள். பின்தங்கியவர்கள். தீண்டத்தகாதவர்கள் " என முழங்கினார்.

இன்னும் சிலர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு போதிய வசதிகளும் சலுகைகளும் செய்து தராவிட்டால் அவர்கள் முஸ்லீம்களாக மதம் மாறிவிடுவார்கள். அது பிறகு காங்கிரசுக்கும் இந்துக்களுக்கும் பெரிய இடைஞ்சலாக வந்து சேரும் என்று நியந்தும் மிரட்டியும் பேசிப்பார்த்தனர்.

எவ்வாறாயினும் தாழ்த்தப்பட்டவரின் குரல்களை எந்த நாடும் (விசேஷமாக கவனிப்பது இருக்கட்டும்) கண்டு கொள்ளவே இல்லை. தலைவர்கள் உடனடியாக கவனிக்க வேறு ஆயிரம் பிரச்சனைகள் இருந்தன.

ஆனால் தேசப்பிரிவினையை ஒட்டி கலவரங்களின் போது தாழ்த்தப்பட்ட மக்கள் தாக்கப்படவில்லை. துன்புறுத்தப்படவில்லை. 1947 மார்ச் மாதத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட ராவல்பிண்டி பகுதியில் சுற்றுப்பயணம் செய்த அகில இந்திய தாழ்த்தப்பட்டோர் சம்மேளன பொதுச் செயலாளர் பி.என். ராஜ்போஜ எழுதினார். நான் சுற்றுப்பயணம் செய்த எந்தப்பகுதியிலும் தாழ்த்தப்பட்டவர் எவரும் கலவரத்தால் பாதிக்கப்படவில்லை என்பதை கண்டேன். இந்துக்களை போல தோற்றமளித்த தாழ்த்தப்பட்டவர் சிலர் ஒரு சில இடங்களில் தவறுதலாக தாக்கப்பட்டுள்ளனர். மற்றபடி வேறு எங்கும் இல்லை.

ஆனால் தாழ்த்தப்பட்ட பெண்களும் மற்ற இந்து, முஸ்லீம் பெண்களைப் போல கற்பழிக்கப்பட்ட சம்பவங்கள் நிறைய உண்டு.

பெண்ணின் உடம்பின் மீது எழுதப்படும் சரித்திரம்:

வகுப்புவாதம் தலைவிரித்தாடிய அந்த நாட்களில் பெண்கள் நடத்தப்பட்ட விதங்களை வகைப்படுத்திப் பார்ப்பது அவசியம்.


"அவர்களு"டைய பெண்களை இழிவுபடுத்துவது அவர்களுடைய மதத்தை -நம்பிக்கைகளை - அவர்களுடைய தன்மானத்தை ஆழமாக, கிழிக்கும் செயல் என்பதாக பரஸ்பரம் இந்துக்களும் முஸ்லீம்களும் புரிந்து கொண்டிருந்தனர்.

மாற்று மதத்தவரின் இளம் பெண்களை கடத்திச் சென்றனர். பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கினர். அவர்களை கெடுத்ததன் மூலம் தங்கள் மதத்துக் குழந்தை அவர்களின் வயிற்றில் வளர வித்திட்டனர். பெண்முன் உடம்பின் மீது செய்யும் ஆக்கிரமிப்பு பிற மதத்தவர் மீது நாட்டிய வெற்றிக்கொடியானது.

"அவர்களது" பெண்களை நிர்வாணமாக்கி நடுத்தெருவில் ஓடச்செய்வது.

பெண்களை நிர்வாணமாக்கி அவர்களது மார்பகங்களை அறுத்து எறிவது (இதனால் இறந்தவர்கள் ஏராளம்).

பெண் உறுப்பு மற்றும் மார்பகங்களில் பிறைச்சந்திரன் திரிசூலம் சின்னத்தை சூட்டுகோலால் வரைவது என்றும் அழியாத கேவலமாக பெண்முன் அந்தரங்க உறுப்பில் மாற்று மதத்தின் சின்னம்.

"அவர்கள்" தாக்க வருகிறார்கள் என்று அறிந்தும் தாங்கள் வீட்டுப் பெண்களை கொன்று விட்டு தப்பிச் செல்வது அல்லது தம் வீட்டுப் பெண்களை தற்கொலை செய்து கொள்ளுமாறு தூண்டுவது - நிர்ப்பந்திப்பது - வழிகாட்டுவது.

தங்கள் உயிரை பலியாகக் கொடுத்த தம்வீட்டுப் பெண்களை குல தெய்வாக்கி இன்றும் வணங்கிவருவது தற்கொலை செய்ய மறுத்து இன்றும் உயிர்வாழும் தம்வீட்டுப் பெண்களை மாற்றுக் குறைவாக மதிப்பது.

முடிவற்று நீண்டு செல்லும் துயர்மிக்க கதைகளை தேசப்பின்வினை நமக்குப்பரிசாகத் தந்துவிட்டது.

தேசப்பின்வினையில் பாகிஸ்தான் பகுதியிலிருந்து உயிர் தப்பி "நம்ம தேசம்" இந்தியாவுக்கு வந்து நிம்மதியாக பெருமூச்சு விட்ட ஆயிரக்கணக்கான சீக்கியக் குடும்பங்கள் 1984-ல் இந்திராகாந்தி கொலை செய்யப்பட்ட போது மீண்டும் அதே 1947-ஐ அனுபவித்தனர். டெல்லியிலும் மீரட்டிலும் கான்பூரிலும் என காங்கிரஸ் குண்டர்களும் இந்து வெறியர்களும் சீக்கிய மக்கள் மீது தொடுத்த தாக்குதல் அதிர்ச்சி மிக்க பல கேள்விகளை எழுப்புகின்றது.


1992 டிசம்பரில் பாபர் மசூதி இடிப்பை தொடர்ந்து பம்பாயில் முஸ்லீம் மக்கள் மீது தொடுக்கப்பட்ட திட்டமிட்ட தாக்குதல் ஆயிரக்கணக்கான முஸ்லீம் மக்களை அகதிகளாக்கி பம்பாயை விட்டு ஓடவைத்தது.


தமிழக தென்மாவட்ட சாதிக்கலவரங்களின் போது பல கிராமங்களில் மக்கள் ஊரைக்காலி செய்து விட்டு மறைந்து திரிந்தார்கள் - அகதிகளாக.

ஒரு வார்த்தையில் சொல்வதானால் "1947'' திரும்பத் திரும்ப நம் நாட்டில் நடந்து கொண்டே இருக்கிறது.

1947 - ஐ மீண்டும் மறுவாசிப்பு செய்வதும் கட்டுடைத்துப் பார்ப்பதும் இன்றைய வகுப்புவாதத்தின் வேர்களை அடையாளம் காண உதவக்கூடும்.

ஒரு நூற்றாண்டு விடைபெறும் புள்ளியில் 1947 நமக்கு முன் வைக்கும் கேள்விகள் பல.

லட்சக்கணக்கில் மக்கள் கொல்லப்பட்டது தீவிரவாதிகளால் அல்ல. சாதாரணமாக - இணக்கமாக -இயல்பாக - வாழ்ந்து கொண்டிருந்த இந்துக்களும் முஸ்லீம்களும் பரஸ்பரம் கொலையாளிகளாகவும் பெண்களை கடத்துபவர்களாகவும் கற்பழிக்கிறவர்களாகவும் மாறியது எப்படி? சமாதான காலங்களில் தூவப்படும் வகுப்புவாத விதைகள் கொழுந்து விட்டெரிய சந்தர்ப்பங்கள்தான் தேவைப்படுகின்றன. நாம் சமாதானமான நேரங்களில் சும்மா இருந்துவிட்டு கலவரம் முடிந்த பிறகு மட்டும் தீவிரமாக வகுப்புவாத எதிர்ப்பு இயக்கம் நடத்துவதால் என்ன பயன் விளையும்?

கலவர நேரங்களில் மனிதர்கள் தங்கள் எல்லா அடையாளங்களும் மறக்கடிக்கப்பட்டு இந்து, முஸ்லீம் அல்லது தம் சாதி என்ற ஒற்றை அடையாளத்துடன் மோதுகிறார்கள். எப்போதும் தங்கள் பன்முக அடையாளங்களை இழக்காதிருக்க இடைவிடாத கருத்துலக இயக்கம் தேவை அல்லவா? பெண்முன் உடம்பு இலகுவான ஆக்கிரமிப்புக்கான நிலப்பரப்பாக தொடர்வதை எந்த நூற்றாண்டில் நாம் முடிவுக்குக் கொண்டு வரப்போகிறோம்?குடும்ப மானம் என்பது என்ன? மதத்தின் மானம் தேசத்தின் மானம் என்பதெல்லாம் என்ன? பாலியல் பலாத்காரத்தை வெறும் உடல் மீதான வன்முறையைப் போல பாவிக்க நமது புரையோடிப்போன கலாச்சாரத்தை எப்படி ஒழிக்கப்போகிறோம்? வக்கிரங்கள் ஒழியும் நாள் எது? பெண்ணுக்கு நாம் சொல்லப்போகும் பதில் என்ன?

தாழ்த்தப்பட்ட - தீண்டத்தகாதவர் என ஒதுக்கப்பட்ட - மக்களுக்கு நம் தேசமும் நம் சரித்திரமும் முட்டிக் கொள்ளும் மதங்களும் என்ன பதில் சொல்லப் போகின்றன?

கலவரங்களின்போது அனாதையாக்கப்படுகிற குழந்தைகளின் பால்யம் அதிர்ச்சியில் குன்றிப்போவதை நாம் எப்படி சரி செய்யப்போகிறோம்?

1947 என்பது ஒரு ஆண்டு அல்ல. 1947 என்பது இந்திய விடுதலை மட்டுமல்ல. மேலே நீளமாக பேசப்பட்டுள்ள அத்தனை துயரங்கள் அவலங்கள மனிதக் கேவலங்கள் இவற்றின் ஒட்டு மொத்தமான குறியீடுதான் - 1947.

http://thatstamil.oneindia.in/art-culture/visai/aug05/tamilselvan.html

India Gains Independence



1947 PARTITION OF INDIA



ஏன் இந்த சண்டை ? - காஷ்மிர்



Parition of India 1947

http://en.wikipedia.org/wiki/Partition_of_India#The_Partition_Factor_In_The_Status_Of_Indian_Muslims_.5B21.5D_.5B22.5D

தீண்டதகாத நாடு?