"இது ஒரு டைரி குறிப்பு" - தமிழ்நெஞ்சம் ஹிப்ஸ் [ hifs@live.com ] Tel: +65 91897619

புகழ்பெற்ற வேட்கோவர் பெர்னாட் பாலிஸி அழகான வண்ணங்களில் எனாமல் பூசப்பட்ட பளபளப்பான சீனப் பீங்கான் செய்யும் முறையை, மறைந்துபோன அந்தக் கலை ரகசியத்தை மீண்டும் கண்டுபிடிக்க விரும்பினார்.

மாதக்கணக்காக, ஆண்டுக் கணக்காக சோர்வு அடையாமல் தமது பரிசோதனைகளைச் செய்து வந்தார். தம்முடைய உடல் பொருள் ஆவி எல்லாவற்றையும் தம்முடைய ஆராய்ச்சிக்கே பயன்படுத்தினார். இரவு பகலாய் பல நாட்கள் தாம் கட்டிய சூளையிலேயே கவனம் செலுத்தினார், பீங்கான் கோப்பைகள் செய்யவும் அவற்றை சுடவும் புதிய புதிய முறைகளை முடிவே இல்லாதபடி பரீட்சை செய்து பார்த்துக் கொண்டிருந்தார். யாரும் அவருக்கு உதவி செய்யவோ உற்சாகமூட்டவோ இல்லை. அவருடைய நண்பர்களும் அண்டை அயலாரும் அவரைப் பைத்தியக்காரன் என்றார்கள், அவருடைய மனைவிகூட அவரைக் குறை கூறினாள்.

பணம் இல்லாமல் பல தடவைகள் அவர் தம் பரிசோதனைகளை நிறுத்திவைக்க வேண்டியிருந்தது. ஆனால் பணம் கிடைத்ததும் புதிய துணிவோடு வேலையைத் தொடங்குவார். கடைசியாக ஒரு நாள் அவரிடம் சூளைக்கு வேண்டிய விறகுக்குக்கூட வழியில்லாது போயிற்று. அதனால் குடும்பத்தாரின் ஓலத்தையும் பயமுறுத்தல்களையும் சட்டை செய்யாமல் மேசைகள் நாற்காலிகள் முதலிய தமது மர சாமான்களையெல்லாம் கடைசிக் குச்சிவரை நெருப்பில் போட்டுவிட்டார்.

அவை எல்லாம் எரிந்து சாம்பலாயின. பிறகு அவர் சூளையைத் திறந்தார். அது பளபளப்பான பீங்கானால் நிரம்பியிருந்தது. அதனால் அவருக்குப் பெரும் புகழ் கிடைத்தது. ஆனால் அதைக் கண்டுபிடிக்க அவர் எத்தனை ஆண்டுகள் தியாகம் செய்ய வேண்டியிருந்தது!

அவருடைய வெற்றிவேளை வரும் வரை காத்திருக்க முடியாமல், அவருக்கு அளவற்ற தொல்லைகள் கொடுத்து அவருடைய வேலையை மேலும் கஷ்டமாக்கிய அவருடைய மனைவிக்கும் நண்பர்களுக்கும் என்ன இல்லை? பொறுமை இல்லை, அவ்வளவுதான். அது அவரிடம் ஒருபோதும் குறையாது இருந்தது, அவரை ஒருபோதும் கைவிடாதிருந்தது, முடிவில் எல்லாக் கஷ்டங்களையும், இகழ்ச்சிகளையும் வெல்லச் செய்தது. எது? விடாமுயற்சி. எல்லா சக்திகளையும் விட வல்லமையுடைய சக்தி அது.

இந்த உலகில் எதுவுமே விடாமுயற்சியை எதிர்த்து நிற்க முடியாது. மிகப்பெரிய சாதனைகளும் அயராத சிறு முயற்சிகள் பலவற்றின் திரண்ட தொகுதிதான்.

மழைத் துளிகள் ஒன்றன்பின் ஒன்றாக ஒரே இடத்தில் விழுவதனால் பிரம்மாண்டமான பாறைகள் முற்றிலும் அழிந்து போயிருக்கின்றன.

ஒரு மணல் துகள் அதிக சக்தி வாய்ந்ததில்லைதான். ஆனால் அவைகளே நிறைய சேரும்போது மணற் குன்றுகளாகி பெருங்கடலைத் தடுத்துவிடுகின்றன.

நீங்கள் இயற்கை வரலாறு (தாவர இயல், விலங்கு நூல், கருப்பொருள் நூல் இம்மூன்றின் தொகுதி) பற்றிப் படிக்கும்போது எவ்வாறு சிறு உயிரினங்கள் ஒன்றன்மேல் ஒன்றாகப் படிந்து கடலுக்கடியில் மலைகள் உருவாகியுள்ளன, அவற்றின் விடாப்பிடியான முயற்சியினால் எப்படி அற்புதமான தீவுகளும் தீவுக் கூட்டங்களும் கடல் அலைகளுக்கு மேலாகத் தோன்றுகின்றன என்று படிப்பீர்கள்.

நீங்கள் திரும்பத் திரும்பச் செய்யும் சிறு சிறு முயற்சிகளும் பெரிய சாதனைகளைச் செய்ய முடியும் என்று நீங்கள் கருதவில்லையா?

ஸ்ரீ அரவிந்த ஆசிரமக் காலாண்டு வெளியீடு
பொழிபெயர்ப்பு : ச. மகாலிங்கம்

ண்மைக் காலத்தில் உலகில் ஏற்பட்டு வரும் கணினி மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சியின் காரணமாக, மருத்துவ சிகிச்சை முறைகளில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். ஆனால், உயிர்க் கொல்லி நோய்களான புற்றுநோய், எய்ட்ஸ் நோய் போன்றவற்றைக் குணமாக்கும் மருந்துகள் இன்றளவும் கண்டறியப்பட இயலாமல் உள்ளது.

பல்வேறுபட்ட நோய்களுக்கு மருந்துகள் கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சிகள் உலகெங்கும் உள்ள மருந்தியல் ஆய்வு நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புதிய மருந்துகளின் விளைவுகளைப் பற்றி மனிதர்கள் மீது சோதனை செய்யப்படுவதற்கு முன்னர் அவை குரங்கு, எலி, முயல் போன்ற விலங்குகள் மீது வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்ட பின்பே மனிதர்களுக்குப் பயன்படுத்தப்படும் மருந்துகளாக உருவாக்கப்பட்டன.

இவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்ட சில மருந்துகள் மனிதர்களுக்கு தீயவிளைவுகளை ஏற்படுத்தியும் இருக்கின்றன. கர்ப்பிணிப் பெண்களுக்கு தொடக்க மாதங்களில் மயக்கம், தலைசுற்றல், வாந்தி போன்றவை ஏற்படுவது வழமையானதே. 1957 இல் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த மருந்தியல் நிறுவனம் இதற்கான தாலிதோமைட் என்ற மருந்தை உருவாக்கி வெளியிட்டனர். இதன் விற்பனை 40 க்கும் மேற்பட்ட நாடுகளில் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இக்காலக் கட்டத்தில், 1960 ஆம் ஆண்டுக்கு முன் பிறந்த 10,000 குழந்தைகள் உடல் குறைபாடுகளுடன் பிறந்தன. இந்த மருந்து விலங்குகள் மீது சோதனை செய்யப்பட்டது என்பது உண்மைதான்; ஆனால் கருத்தரித்திருந்த விலங்குகள் மீது அவை சோதனை செய்யப்பட்டனவா என்பதைப் பற்றிய விவரங்கள் தெளிவாக இல்லை.

ஜெர்மன் நாட்டு கொலக்னே பல்கலைக் கழக டாக்டர் ஜாகன்நோப்ளாச் என்பவரின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இருந்து இந்த தாலிதோமைட் மருந்தைப் பற்றிய புதிய தகவல்கள் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த மருந்து மனிதரின் உடலில் சூபர்ஆக்சைட் என்னும் நச்சுத்தன்மை கொண்ட ஆக்சிஜன் மூலக்கூறுகளை அதிக அளவில் உருவாக்குகிறது என்றும், அது குழந்தையின் உடலில் வளரும் செல்களில் அழிவை ஏற்படுத்துகிறது என்றும் தெரிய வந்துள்ளது. கருவின் செல்களுக்கு க்ளுடாதியோன் என்னும் மருந்தை செலுத்துவதன் மூலம் இந்த தாலிதோமைட் மருந்தின் பக்கவிளைவுகளைப் போக்கலாம் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதனால் ஏற்கெனவே உடற் குறைபாடுகளுடன் பிறந்துவிட்ட குழந்தைகளுக்கு இது எந்த நன்மையும் செய்யப் போவதில்லை.

இந்தப் புதிய ஆராய்ச்சி ஆழம் நிறைந்ததும், எதிர்காலத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் முக்கியத்துவம் வாய்ந்ததுமாகும். விலங்குகளும் மனிதர்களும் ஒன்று அல்ல, முன்கூட்டி எதிர்பார்க்க இயலாத அளவிற்கு விலங்குகளின் தன்மைகள் மனிதரிடமிருந்து மாறுபட்டிருப்பவையாகும்.

இந்த சோகமான நிகழ்ச்சிக்குப் பின்னர், புதிய மருந்துகளின் விளைவுகளைப் பற்றி மனிதர்கள் மீது சோதனை செய்யப்படுவதற்கு முன்னர் அவை குரங்கு, எலி, முயல் போன்ற விலங்கினங்களில் ஏதேனும் இரண்டின் மீது சோதனை மேற்கொள்ளப்பட்டு, அதனால் பக்க விளைவுகளோ ஆபத்தோ இல்லை என்று தெளிவாகத் தெரிந்த பின்னர்தான் மனிதர்கள் மீது அவற்றை சோதனை செய்து பார்க்க இயலும் என்ற கடுமையான கட்டுப்பாடுகள் இத்தகைய ஆய்வு நிறுவனங்களுக்கு அதிகாரிகளால் விதிக்கப் பட்டன.

தற்போது வெளிவந்துள்ள மேற்கண்ட ஆராய்சி முடிவுகள் இத்தகைய கட்டுப்பாடுகள் தேவையானவையா? பயனுள்ளவையா? என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது. கடந்த நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து மருந்துகளும் விலங்குகளின் மீது சோதனை செய்யப்பட்ட பின் உருவாக்கப்பட்டவைதான் என்று கருதும் சிலர் இக்கட்டுப்பாடு தேவையானதே என வாதிடுகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன் இதனை ஆதரிக்கும் மனு ஒன்றில் கையெழுத்திட்ட 500 க்கும் மேற்பட்ட அறிஞர்களில் நோபல் பரிசு பெற்ற மூவரும் இடம் பெற்றிருந்தனர்.

விலங்குகளின் மீது சோதனை செய்யும் போது, அந்த மருந்துகள் மனிதர்கள் மீது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அறிந்து கொள்ளுவது முக்கியமானது. மனிதர் மீது பாதிப்பை ஏற்படுத்திய மேற்கூறப்பட்ட தாலிதோமைட் ஏன் விலங்குகளின் மீதான சோதனையின் போது எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை?

இதை மற்றொரு கோணத்திலும் பார்க்கலாம். விலங்குகளின் மீதான சோதனையில் பாதிப்பை ஏற்படுத்தாத மருந்துகள் மனிதர் மீது பாதிப்பை ஏற்படுத்துவது போல, மனிதர் மீது பாதிப்பை ஏற்படுத்தாத மருந்துகள் சில விலங்குகள் மீது பாதிப்பை ஏற்படுத்தவும் கூடும் என்று சில ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இக்கோட்பாடு உண்மையாக இருக்குமானால், மனிதர்கள் மீது பாதிப்பை ஏற்படுத்தாத பல அரிய மருந்துகளின் கண்டுபிடிப்புகள் மீதான முயற்சிகள், விலங்குகள் மீதான சோதனையுடன் கைவிடப்பட்டுவிடுகின்றன என்பதை மறுக்கமுடியாது. இதன் காரணமாக எத்தனை அரிய மருந்துகள் கண்டுபிடிக்கப்படாமல் கைவிடப்பட்டிருக்கக்கூடும் என்ற சிந்தனையே வியப்பை அளிப்பதாக உள்ளது.

விலங்குகள் மீது வெற்றிகரமாக சோதனை மேற்கொள்ளப்பட்ட 100 மருந்துகளில், 92 மருந்துகள் மனிதர்கள் மீது பயன்படுத்தும் சோதனையில் வெற்றி பெறத் தவறிவிட்டன. ஆனால் மனிதர்களுக்குப் பயன்படுத்தும் மருந்துகளில் எத்துணை மருந்துகள் விலங்குகளுக்கு பாதிப்பை ஏற்படுத்த இயலும் என்பதை ஒரு விலங்கியல் மருத்துவரால் பட்டியலளிக்க முடியும். சாதாரண ஆஸ்பிரின் கூட விலங்குகளுக்கு பாதிப்பை ஏற்படுத்த இயன்றது என்பது விந்தையானதே. என்றாலும் மருந்தியல் ஆராய்ச்சியில் விலங்குகள் மீதான சோதனையைக் கட்டாயமாக மேற்கொள்ள வேண்டும் என்ற நடைமுறைக்கு மாற்றாக வேறொரு நடைமுறையை மேற்கொள்ள இயலாத நிலையில், தாலிதோமைட் போன்ற மற்றொரு பெரும் சோகம் நிகழாமல் இருக்கும் என்று நம்புவோமாக.

- தகவல்: இனியவன் (துபாய்)
தமிழ்வடிவம்: த.க.பாலகிருஷ்ணன்.

http://files.periyar.org.in/unmaionline/2009/may/01-15_2009/page16.php?0945-560_உண்மை_0000-1100_01-15_2009

ள்ளிகள் கல்லூரிகளில் உள்ள வேதியல் ஆய்வுக்கூடங்கள் பார்த்திருப்பீர்களே அது போலத்தான் இன்றைய நவீன சமையலறைகள் மாறி விட்டன. இயற்கை உணவுகளை கொஞ்சம் கொஞ்சமாக மறந்து விட்டோம். சூப்பர் மார்கெட் ஷெல்ஃப்களில் குவிந்து கிடக்கும் உணவுப்பொருட்கள் எல்லாவற்றிலும் சுவைக்காவும், நிறத்திற்காகவும் , கெடாமல் வைத்திருக்கவும் பலவித ஆபத்தான இரசாயனப் பொருட்கள் சேர்க்கப்படுகிறது. இது பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் விளம்பரங்கள் சொல்லும் பச்சைப் பொய்களின் கவர்ச்சியில் மயங்கி வாய்க்குள் அள்ளித் திணித்து கொள்கிறோம். உணவுப்பொருட்களில் உண்டான வியாபாரப் போட்டியின் விளைவு இன்றைக்கு 100% தரமான இயற்கையான உணவு உண்பது என்பது குதிரைக்கொம்பு தான்.

உணவில் சுவை கூட்டும் ரசாயனப்பொருட்களில் எந்த விதமான ஊட்டசத்தும் இல்லை . இவைதேவையற்றது, ஊட்ட சத்து சேர்க்கப்பட்டவை என கூறப்படும் உணவும் உண்மையில் பல இயற்கையான ஊட்ட ச்த்துகள் நீக்கப்பட்டு சில ரசாயனங்கள் சேர்க்கப்பட்டது தான். பல உணவுப்பொருட்களில் இயற்கையான பொருட்களுக்கு பதில் அது போன்ற சுவை தரும் செயற்கையான சுவையூட்டிகள் மட்டுமே உள்ளன.

வெனிலா கலக்கப்படும் உணவு வகைகளில் பேன்களைக் கொல்ல பயன் படுத்தப்படும் பைப்பர் ஹோல் என்ற இராசயனப் பொருள் சேர்க்கப்படுகிறது.

டின் களில் அடைக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட பழங்களில் துணிகளையும் தோல்களையும் கழுவப் பயன்படுத்தப்படும் பென்சி அஸிடெட், எதில் அசிடெட், அமில் அசிடெட் முதலியன சேர்க்கப்படுகின்றன. இது உடலுக்கு அதிகம் கேடானது.

கடைகளில் கிடைக்கும் பலவகை ஆப்பிள் பழங்களின் தோலை நகத்தால் சிறிது நெருடிப்பார்த்தால் அதிலிருந்து மெழுகு உதிர்ந்து வரும். ஆப்பிள் கெடாமல் இருக்க தோலில் மெழுகு தடவி பேக் செய்கிறார்கள். நாம் அதை அப்படியே உண்கிறோம்.

கேக்குகளில் எண்ணெய் உறையவைக்க சோடியம் அலுமினியம் சேர்க்கப்படுகிறது. இந்த எண்ணெய் உண்பதற்கு ஏற்றது அல்ல. மாவை வெண்மையாகவும் உப்ப வைக்கவும் பிளீச்சிங் பவுடரும், பிற பவுடர்களும் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றால் உடல் நலத்திற்குத் தீமையே!

வெண்ணெய் நீக்கப்பட்ட பால் அடர்த்தியாக இருக்க வேண்டும் என்பதற்காக சில பால் நிறுவனங்கள் கலக்கும் ரசாயனப் பொருள் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடியது என்று ஆய்வுகள் எச்சரிக்கின்றன.

விவசாயிகள் தங்கள் பயிர்களை பாதுகாக்க பல வித ஆபத்தான ரசாயன பூச்சிக்கொல்லிகள் உபயோகிக்கிறார்கள். இதன் விளைவாக நாம் உண்ணும் அரிசி, பருப்பு, காய்கறிகளிலும் கான்சர், மலட்டுத்தன்மை உருவாக்கும் பூச்சிமருந்து எச்சங்கள் இருக்கின்றன. பழங்களை பழுக்கவைக்க கூட ரசாயனங்கள் உபயோகிக்கிறார்கள். இயற்கையான பூச்சி ஒழிப்பு முறையில் இயற்கையான உரம் இட்டு வளர்ந்த உணவுப்பொருளே சிறந்தது. இதற்கான திட்டங்களையும் ஊக்குவித்தலகளையும் பயிற்சியையும் அரசு விவசாயிகளுக்கு வழங்கி இயற்கையான உணவு எங்கும் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

ஜெனெடிக் என்ஜினீயரிங்க் மூலம் பெறப்படும் புது விதமான உணவுப்பொருட்கள் மனித உடலில் உண்டாக்கும் பாதிப்புகளை அறிய பல காலமாகலாம். சரியான ஆராய்ச்சிமுடிவுகளை அறியாமலேயே அவற்றை சந்தைப்படுத்துவது காசு கொடுத்து வாங்கி உண்ணும் மக்கள உடலிலேயே உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் சோதனைகளை நிகழ்த்துவதாகிறது.

பொதுவாக உணவுப்பொருளில் சேர்க்கப்படும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய சில பொருட்கள்:

பென்சோயேட்ஸ் (Benzoates) : பதனீட்டுப் பொருள். ஆஸ்துமா நோய் உள்ளவர்களிடையே நெஞ்சில் இறுக்கமான உணர்வை ஏற்படுத்தும். தொண்டையில் அரிப்பு அல்லது புண் ஏற்படலாம்.

Butylated Hydroxyanisole (BHA), Butylated Hydroxytoluene (BHT) : காற்றுபுகாமலிருக்க பயன்படுத்தப்படும் பொருள்-பொதுவாக குழந்தை உணவுகள் சுவிங்கம், தாவர எண்ணெய் ஆகியவற்றை கெடாமல் வைத்திருக்கிறது். இது கான்சர் காரணி மற்றும் சிலரிடையே தோல் எரிச்சலை ஏற்படுத்தலாம்.

எப்.டி. & சி (FD & C dyes) : வர்ணங்கள்-இது சிலரிடையே அரிப்பை ஏற்படுத்தலாம். குழந்தைகளின் நடத்தையில் மாற்றத்தைஏற்படுத்தலாம்.

Monosodium Glutamate (MSG) : தலைவலி, குமட்டல், வயிற்றுப்போக்கு, வியர்வை, நெஞ்சில் இறுக்கம், கழுத்துக்குப் பின்னால் எரிச்சல், ஆஸ்துமா நோயாளிகளிடையே அதிக ஆஸ்துமாவை ஏற்படுத்தும். குறிப்பாக விளையாட்டு வீரர்கள் திடீரெனெ இதய நோய் தாக்குதலுக்குள்ளாவதில் இதன் பங்கு இருப்பதாக கூறப்படுகிறது.

நைட்ரேட் (Nitrates) : பதனீட்டுப் பொருள்-தலைவலி.

பாராபென் (Parabents) : பதனீட்டுப் பொருள்-கடுமையான தோல் நோய், வீக்கம் அரிப்பு.

சல்பைட் (Sulfites) : பதனீட்டுப் பொருள்-வைட்டமின் B1 ஐ அழிக்கிறது. நெஞ்சில் இறுக்கம், வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, குறைந்த இரத்த அழுத்தம், பலஹீனம், சிறு அளவு கூட சிலரிடையே ஆஸ்துமா நோயை ஏற்படுத்தும், மோசமாக்கும்.

Propyl Gallate: இது எண்ணெய் மற்றும் கொழுப்புப் பொருட்கள் கெடாமல் வைத்திருக்க உதவும். தாவர எண்ணெய், பதப்படுத்தப்பட்டஇறைச்சி, உருளைக்கிழங்கு சிப்ஸ், சிக்கன் சூப்பேஸ் மற்றும் சுவிங்கம் ஆகியவற்றில் பயன் படுத்துகிறார்கள். இது புற்று நோய் உருவாக்ககூடும்.

Potassium Bromate: ரொட்டிகளில் சேர்க்கப்படும் இந்தப்பொருள் புற்று நோய் ஏற்ப்படுத்தலாம்.

Aspartame (Equal, Nutra Sweet): இது டயட் சோடா மற்றும் டயட் உணவுகளில் சர்க்கரைக்குப்பதில் பயன்படுத்தப்படும் செயற்கை இனிப்பு. இது மூளையில் டியூமர் கட்டியை உருவாக்கும் என அறியப்பட்டது. மிக குறைந்த அள்வு உட்கொள்ளுவது கூட Lymphomas மற்றும் Leukemi நோயை உருவாக்ககூடும். சிலருக்கு தலைவலி, மந்தம், மனக்குழப்பம் , மத்திய நரம்பு மண்டல பாதிப்பு, மாதவிடாய் பாதிப்பு, கருவில் மூளைப்பாதிப்பு உருவாக்கக்கூடும்.

Neotame: இது Aspartame போன்றது ஆனால் அதை விட அதிக நச்சுடையது.

Acesulfame-K: சர்க்கரையை விட 200 மடங்கு இனிப்பான இப்பொருள். கேக்குகள், சுவிங்கம், ஜெல்லி, மற்றும் குளிர் பானங்களில் சேர்க்கப்படுகிறது. இது கேன்சர், தைராய்ட் பாதிப்பு உண்டாக்கலாம்.

Olestra: இது ஒரு செயற்க்கைக் கொழுப்பு. உடலால் உறிஞ்சப்படாதது, வயிற்றோட்டம் , வயிற்று வலி போன்ற பல பாதிப்புகளை உண்டாக்கும்.

Sodium Nitrite (Sodium Nitrate): இறைச்சி பதப்படுத்தவதில் உபயோகப்படுகிறது. இது கான்சர் காரணியான Nitrosamine ஐ உருவாக்குகிறது.

Hydrogenated Vegetable Oil: இவ்வாறு பதப்படுத்தப்பட்ட தாவர எண்ணெய்கள் Trans Fat ஐ உருவாக்குகிறது. இது இதய நோய் மற்றும் நீரிழிவுக்கு வழி வகுக்கும்.

Brominated Vegetable Oil : பிறவிக்குறைபாடு, உடல் உறுப்பு வளர்ச்சியின்மைக்கு காரணமாகும்.

Blue 1 and Blue 2: குளிர்பானங்கள் மற்ரும் மிட்டாய்களில் உபயோகப்படும் சாயப்பொருள். இது கான்சர் மற்றும் ட்யூமர் உருவாக்ககூடும்.

Red 3: மிட்டாய் மற்றும் செர்ரியில் பயன்படும் வண்ணப்பொருள் இது தைராய்ட் மற்றும் ட்யூமர் உருவாக்கக்கூடும்.

Yellow 6: கேக்குகள், மிட்டாய்கல், ஜெல்லிக்கள், சாசேஜ் ஆகியவற்றில் பயன் படுத்தப்படுகிறது. அட்ரீனல், சிறுநீரகக்கட்டி, மற்றும் கான்சர் உருவாக்கக் கூடியது.

330 and E330 Citric Acid: இயற்கையான சிட்ரிக் ஆசிட் கெடுதல் இல்லை. ஆனால் செயற்கையாக தயாரிக்கப்படும் சிட்ரிக் ஆசிடில் அதன் தயாரிப்பு முறையின் போது அதிலிருந்து Sulfur மற்றும் Sulfites முழுமையாக நீக்கப்படா விட்டால் ஆஸ்த்மா, அலர்ஜி உண்டாக வாய்ப்புள்ளது. சிட்ரிக் ஆசிட் கலந்த பானம் அதிகம் அருந்துவது பற்களுக்கு கேடு.

924 & E924 Potassium Bromate (Agent used in Bleaching Flour): நரம்பு மண்டலம், சிறுநீரகம், அஜீரணம், மற்றும் புற்றுநோய்க் காரணி.

407 & E407 Carrageenan (Thickening & Stabilizing Agent) : இவை ஆஸ்த்மா, அல்சர், கான்சர் போன்றவற்றை உருவாக்ககூடும்.

Sucralose (Splenda): 40%thymus gland ஐ சுருங்கச்செய்வதாக சோதனை முடிவுகள் சொல்கின்றன. சிறுநீரகம் மற்றும் ஈரல் வீக்கம், மற்றும் ஈரலில் சுண்ணாம்பு சத்தை படியச்செய்கிறது. உண்ணத்தகுந்ததல்ல.

கேசரிப் பவுடர் உடல் நலத்திற்கு நல்லதல்ல. வீட்டில் செய்யும் எந்த உணவிலும் நிறத்திற்காக கேசரிப்பவுடர் அல்லது புஷ் பவுடர் சேர்க்காதீர்கள்.

குளிர் பானங்கள் மிட்டாய்களில் சேர்க்கப்படும் பல வித கவர்ச்சியான வண்ணங்கள் புற்று நோய், மூளைக்கட்டி, தைராய்ட், அட்ரீனல் மற்றும் சிறுநீரக பாதிப்புகளுக்கு வழிவகுக்கும்.


சாயங்கள்: 104 & E104 Quinoline Yellow, 107 & E107 Yellow 2G, 110 & E110 Sunset Yellow, 122 & E122 Azorubine, Carmoisine, 123 & E123 Amaranth, 124 & E124 Ponceau, Brilliant Scarlet, 127 & E127 Erythrosine, E128 Red 2G, 129 & E129 Allura Red AC, E131 Patent Blue, 132 & E132 Indigotine, இண்டிகோ கார்மினே 133 & E133 ப்ரில்லியன்ட் ப்ளூ 151 & E151 Activated Vegetable Carbons, Brilliant Black154 Food Brown, Kipper Brown, Brown FK155 & E155 Chocolate Brown HT, Brown HT
போன்ற சாயப் பொருட்கள் ஹைப்பர் ஆக்டிவிட்டி, ஆஸ்த்மா, புற்று நோய் உருவாக்ககூடும்.

120 & E120 Carmines, Cochineal
142 & E142 Acid Brilliant Green, Green S,
160b & E160b Bixin, Norbixin, Annatto Extracts
போன்ற சாயப் பொருட்கள் ஹைப்பர் ஆக்டிவிட்டி,ஆஸ்த்மா போன்றவற்றை உருவாக்ககூடும்.

143 Fast Green இது ஆஸ்த்மா உருவாக்கும்.

150 & E150 Caramelஇது ஹைப்பர் ஆக்டிவிட்டி உருவாக்கும்.

உணவு பதன ரசாயனங்கள்:

E173 Aluminium - இது ஒரு கான்சர் காரணி
E180 Latol Rubine, Pigment Rubine
210 & E210 Benzoic Acid
250 & E250 Sodium Nitrite
இவை ஹைப்பர் ஆக்டிவிட்டி,ஆஸ்த்மா,கான்சர் போன்றவற்றை உருவாக்ககூடும்.

200 & E200-203 Potassium & Calcium Sorbates ,Sorbic Acid
211 & E211 Sodium Benzoate
220 & E220 Sulphur Dioxide also Sulfur dioxide
E228 Potassium Bisulfite, Potassium Hydrogen Sulfite or Potassium Bisulphite, Potassium Hydrogen Sulfite280 to 283 Calcium or Potassium or Sodium Propionates, Propionic Acid
319 & E319 TBHQ, Tert Butylhydroquinone
627 & E627 Disodium Guanylate (Flavour Enhancers)
இவை ஹைப்பர் ஆக்டிவிட்டி, ஆஸ்த்மா போன்றவற்றை உருவாக்ககூடும்.

212 & E212 Potassium Benzoate,
213 & E213 Calcium Benzoate,
E214 Ethyl Para Hydroxybenzonate,
E215 Sodium Ethyl Para Hydroxybenzonate,
216 & E216 Propyl P Hydroxybenzonate, Propylparaben
E217 Sodium Propyl P Hydroxybenzonate
221 & E221 Sodium Sulfite or Sodium Sulphite
222 Sodium Bisulfite or Sodium Bisulphite
223 & E223 Sodium Metabisulfite or Sodium Metabisulphite
224 & E224 Potassium Metabisulphite or Potassium Metabisulfite
225 & E225 Potassium Sulfite or Potassium Sulphite
E226 Calcium Sulfite or Calcium Sulphite
E227 Calcium Hydrogen Sulphite or Calcium Hydrogen Sulfite
260 & E260 Acetic Acid, Glacial
311 & E311 Octyl Gallate
312 & E312 Dodecyl Gallate
631 & E631 Disodium Inosinate 5 (Flavour Enhancers)
635 & E635 Disodium Ribonucleotides 5 (Flavour Enhancers)
1403 Bleached Starch (Thickenner and Stabiliser)
இவை ஆஸ்த்மா உருவாக்கும்.

E230 Diphenyl, Biphenyl
E231 Orthophenyl Phenol
E236 Formic Acid
E239 Hexamine, Hexamethylene Tetramine
இவை ஒரு கான்சர் காரணி

249 & E249 Potassium Nitrate
310 & E310 Propyl Gallate
இவை ஆஸ்த்மா, கான்சர் போன்றவற்றை உருவாக்ககூடும்.

251 & E251 Sodium Nitrate
252 & E252 Potassium Nitrate
இவை ஹைப்பர் ஆக்டிவிட்டி, கான்சர் போன்றவற்றை உருவாக்ககூடும்.

413 & E413 Tragacanth (Thickener & Emulsifier)
414 & E414 Acacia Gum (Food Stabilizer)
416 Karaya Gum (Laxative, Food Thickener & Emulsifier)
441 & E441 Gelatine (Food Gelling Agent)
536 & E536 Potassium Ferrocyanide (Anti Caking Agent)
928 & E928 Benzoyl Peroxide (Bleaching Flour and Bread Enhancer Agent)
இது ஆஸ்த்மா உருவாக்ககூடும்.

421 & E421 Mannitol (Artificial Sweetener) இது ஹைப்பர் ஆக்டிவிட்டி உருவாக்கக் கூடும்.

430 Polyxyethylene Stearate (Emulsifier)
431 Polyxyl Stearate (Emulsifier)
E432 - E435 Polyoxyethylene Sorbitan Monostearate (Emulsifiers Gelling Stabilisers Thickeners Agents)
433 - 436 Polysorbate (Emulsifiers)
466 Sodium CarboxyMethyl Cellulose
507 & E507 Hydrochloric Acid (Hydrolyzing Enhancer & Gelatin Production)
518 & E518 Magnesium Sulphate (Tofu Coagulant)
553 & E553 & E553b Talc (Anti Caking, Filling, Softener, Agent)
903 & E903 Camauba Wax (Used in Chewing Gums, Coating and Glazing Agents)
905 & 905 ABC Paraffin and Vaseline, White Mineral Oil (Solvents, Coating and Glazing,

Anti Foaming Agents, Lubricant in Chewing Gums)
925 & E925 Chlorine (Agent used in Bleaching Flour, Bread Enhancer and Stabiliser)
926 Chlorine Dioxide (Bleaching Flour and Preservative Agent
950 & E950 Potassium Acesulphame (Sweetener)
952 & E952 Cyclamate and Cyclamic Acid (Sweeteners)
954 & E954 Saccharine (Sweetener)
1202 & E1202 Insoluble Polyvinylpyrrolidone Insoluble (Stabiliser and Clarifying Agent added to Wine, Beer, Pharmaceuticals)
இவை ஒரு கான்சர் காரணி.

அப்பப்பா ...பயங்கரம் ..சில கம்பனிகளின் பொருளாசைக்கு பலியாகி எத்தனை விதமான வடிவத்தில் ரசாயனபொருட்களை நமது உணவில் கலந்து உள்ளே தள்ளுகிறோம். இனியாவது எந்தஉணவுப் பொருள் வாங்கினாலும் அதன் “INGREDIENTS”அல்லது “காங்டைன்ஸ்" என்று இட்டிருப்பதை ஒருமுறை வாசித்துப் பார்த்துவிட்டு புற்றுநோய் போன்ற பேராபத்துகளை விலைகொடுத்து வாங்க வேண்டுமா? பிள்ளைகளுக்கு தரலாமா? என்றெல்லாம் ஒன்றுக்கு இரண்டு யோசித்து வாங்குங்கள்.

பெரியவர்களைப்போல் குழந்தைகள் உடல் உணவில் கலந்துள்ள இந்த விஷ்ப் பொருட்களை விரைந்து வெளியேற்ற இயலாது. ஆனால் துரதிஸ்ட வசமாக அனேக குழந்தை உணவுகளே விஷம் மலிந்து கிடக்கிறது.

சர்க்கரை, உப்பு , எண்ணெய் அதிக அளவு உட்கொள்வது உண்ணும் மூளையின் இயற்கையான ரசாயன சமநிலையை பாதித்து, உணவில் அதிக ஆர்வம்
உண்டாக்கி அத்தகைய உணவுகளுக்கு அடிமையாக்கிவிடும்.

ஹோட்டல்கள், ரெஸ்டாரென்ட்களில் சாப்பிடுவதை அடியோடு தவிர்க்கவும். முடிந்தவரை உணவுப்பொருட்களை அதன் அடிப்படை பொருளாகவே அவ்வப்போது வாங்கி ஃப்ரெஷ் ஆகவே உண்ணுங்கள். அதற்கேற்ப உணவுப் பழக்கத்திலும் மாற்றம் செய்து கொள்ளுங்கள். பணத்தையும் மிச்சப் படுத்துங்கள்.

http://sathik-ali.blogspot.com/2009/06/blog-post_08.html


காமசூத்திரம் படைத்த இந்தியாவில், தற்போது காமத்தைப் பற்றிய அறிவு சமூகத்தில் எந்த அளவுக்கு உள்ளது என்பது உடலியலாளர்களும், உளவியலாளர்களும் கருத்து சொல்ல வேண்டிய முக்கிய அம்சமாகும்.

மறைந்த மருத்துவர் மாத்ருபூதம், மருத்துவர் நாராயண ரெட்டி போன்றவர்கள் பாலியல் குறித்து வெளிப்படையாகவும், விஞ்ஞான ரீதியாகவும் பேசத்தொடங்கியவுடன் பாலியல் குறித்த விவாதங்கள் பொதுத்தளத்தில் அதிகரிக்கத் தொடங்கின. எனினும் ஓரினச்சேர்க்கை போன்ற சிறுபான்மை பாலுறவு குறித்து பரவலான விவாதங்கள் நடைபெறுவது அரிதாகவே உள்ளது.

இத்தகைய தளத்தில் ஈடுபடுவோரும், ஓரினச்சேர்க்கையாளராக அடையாளம் காணப்படும் வாய்ப்பிருப்பதால், இது குறித்து பரவலான விவாதங்கள் எழுப்பப்படவில்லை என்றே தோன்றுகிறது.

சட்டத்தின் பார்வையில்.....

பாலியல் குறித்த விவ(கா)ரங்கள் சட்டத்தின் பார்வையில் சற்றும் தெளிவில்லாமலே, சற்றுக் குழப்பமாகவும்கூட உள்ளது என்பதே உண்மை.

இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 377, “இயற்கை முறைக்கு மாறாக, ஆடவன் அல்லது பெண் எவருடனேனும், விலங்கு எதனுடனேனும் தன்னிச்சையாக காமவிகார உடலுறவு கொள்கிற எவரொருவரும் ஆயுள் சிறை தண்டனை; அல்லது 10 ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடிய ஒரு கால அளவுக்கு சிறை தண்டனை ஆகிய இவற்றில் இரண்டில் ஒன்றை தண்டனையாக விதிக்க வேண்டும். மற்றும் அவரை அபராதத்திற்கு உள்ளாக்கவும் செய்யலாம்”

மேற்கூறிய சட்ட வாசகத்தில் “இயற்கை முறை” என்று கொடுக்கப்பட்டுள்ள சொற்றொடருக்கு விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை. எனவே இயற்கை முறைக்கு மாறாக என்ற வாசகத்திலும் தெளிவில்லை. இந்த குழப்பம் தங்கள் வாழ்வுரிமையை பாதிப்பதாகவும் எனவே இந்த சட்டப்பிரிவை திருத்த வேண்டும் அல்லது நீக்க வேண்டும் என்று குரல்கள் தற்போது வலுத்து வருகின்றன.

குறி்ப்பாக திருநங்கைகள் (அ) அரவானிகள் மற்றும் ஓரினச் சேர்க்கையாளர்கள் ஆகிய இருதரப்பினரே இந்த சட்டப்பிரிவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதைக்குறித்து பார்க்கும் முன்னர், இயற்கை முறை உடலுறவு என்பதற்கு இதுவரை நீதிமன்றங்கள் கொண்ட பொருளை பார்க்கலாம்.

மனிதனைத்தவிர அனைத்து உயிரினங்களும் உடலுறவை, இனப்பெருக்கத்திற்கான வழிவகையாகவே பயன்படுத்துகின்றன. மனிதன் மட்டுமே உடலுறவை பெரும்பாலான நேரங்களில் இன்ப நுகர்வுக்கான வழியாகவும், மிகச்சில நேரங்களில் கோபத்தை வெளி்க்காட்டும் வழியாகவும் (உ-ம்: காவல் நிலையம் உள்ளிட்ட இடங்களில் நிகழும் பாலியல் வன்முறை) பார்க்கிறான். எனவே மனிதத்தன்மையை எடுத்துவிட்டால் இனப்பெருக்கத்திற்கு செய்யப்படும் உடலுறவு மாத்திரமே இயற்கையானதாகும்.

இந்த அளவுகோலின்படி பார்த்தால் அரசு அமைப்புகளே வலியுறுத்தும் குடும்பக் கட்டுப்பாடு மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாடு வழிவகைகள் அனைத்துமே இயற்கைக்கு மாறான வகையைச் சேர்ந்ததுதான். இந்த தவறுக்காக மக்களை தண்டிப்பது என்பது நடைமுறையில் இயலாத காரியம். மேலும் இந்த நிலைப்பாட்டை தற்போதைய நிலையில் யாரும் ஏற்க முடியாது.

திருநங்கைகள்

இந்நிலையில் திருநங்கைகள் (அ) அரவானிகளின் தரப்பு வாதத்தை புரிந்து கொள்ள முயற்சிப்போம்.

திருநங்கைகளுக்கு ஆண்-பெண்ணுக்குரிய பாலுறுப்புகள் இருப்பதில்லை. இருந்தாலும் அவை பயன்படுவதில்லை. அதற்காக அவர்களுக்கு பாலுணர்வே இல்லாமல் போய்விடுவதில்லை. ஏனெனில் பாலுணர்வு என்பது உடல் மட்டுமே சார்ந்தது அல்ல! மனமும் முக்கிய பங்கு வகிக்கும் பாலுணர்வு வேட்கை திருநங்கைகளுக்கும் இருக்கும் என்பதே மருத்துவ உண்மை.

ஆனால் இந்த திருநங்கைகள் எந்த விதத்தில் பாலுணர்வு வேட்கையை தணிக்க முயற்சித்தாலும் மேற்கூறிய சட்டத்தின் பார்வையில் அது குற்றமாகவே இருக்கிறது.

திருநங்கைகள் யாரும் விரும்பி திருநங்கைகளாக பிறப்பதில்லை. இயற்கையின் போக்கில் காரணம் புரியாத விந்தைகளில் ஒன்றாகவே திருநங்கைகள் உருவாவதும் உள்ளது. அதற்காக திருநங்கைகளுக்கு உயிரின் அடிப்படை வேட்கையான பாலுணர்வு வேட்கை இருக்கக்கூடாது என்றும் எதிர்பார்க்கக் முடியாது.

இயற்கைக்கு மாறான பாலுறவு என்ற பெயரில் திருநங்கைகளின் பாலுணர்வு வேட்கைகளை தடைசெய்யும் சட்டங்களை அமல்படுத்தும் முன்னர், அந்த திருநங்கைகளின் பாலுணர்வு வேட்கையை தணிப்பதற்கான வழியையும் காட்டவேண்டும் என்று எதிர்பார்ப்பதில் நியாயம் உள்ளது.

ஓரினச்சேர்க்கையாளர்கள்

அதேபோல ஓரினச்சேர்க்கையாளர்களும் இந்த சட்டத்தால் மிகவும் பாதிக்கப்படுவதாக கூறுகின்றனர். திருநங்கைகளை சகித்துக் கொள்பவர்கள்கூட ஓரினச் சேர்க்கையாளர்களை ஏற்க மறுக்கின்றனர்.

சமூகத்தில் ஓரினச் சேர்க்கையினரை பார்க்கும் விதத்திலேயே பல பிரசினைகள் உள்ளன. தன்பாலின இச்சை என்பது தீய பழக்கம் என்று ஒரு தரப்பினரும், அது ஒரு நோய் என்று ஒரு தரப்பினரும் கருதுகின்றனர். ஆனால் ஓரினச்சேர்க்கை என்பது இயற்கைக்கு மாறானது என்பதில் பெரும்பாலானோர் ஒருமித்த கருத்து கொண்டுள்ளனர்.

இந்த கருத்தின் அடிப்படையிலேயே இந்திய தண்டனை சட்டம் இயற்றப் பட்டுள்ளது. இங்கிலாந்தின் அடிமை நாடாக இந்தியா இருந்த காலத்தில் “மெக்காலே” என்பவரால் எழுதப்பட்ட இந்த சட்டம் கிறிஸ்தவ மதக்கொள்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டது. இந்தியாவிலும்கூட இத்தகைய இயற்கைக்கு மாறானதாக கூறப்படும் பாலுறவை எதிர்ப்பவர்கள், மதம் சார்ந்த இலக்கியங்களிலேயே இத்தகைய உறவுகள் இருப்பதை வசதியாக மறந்து விடுகின்றனர்.

மேலும் இத்தகைய பாலுறவுகளை அங்கீகரிப்பதும், தண்டிக்காமல் விடுவதும் இத்தகைய இயற்கைக்கு மாறான பாலுறவை அதிகரிக்கும் என்ற கருத்தும் முன்வைக்கப் படுகிறது.

ஆனால், “தன்பாலின இச்சை” இல்லாதவர்கள் யாரையும், இத்தகைய பாலுறவுக்கு ஆட்படுத்த முடியாது என்றே, ஓரினச் சேர்க்கையாளர்கள் கூறுகின்றனர். இதனை மருத்துவம் மற்றும் உளவியல் நிபுணர்களும் ஆதரிக்கின்றனர்.

அவ்வாறு தன்பாலின இச்சை இல்லாதவர்களை, இயற்கைக்கு மாறான பாலுறவுக்கு ஆட்படுத்த விழையும் நபர்களை தண்டிக்க பல வழிகள் உள்ளன. இத்தகைய சந்தர்ப்பத்தில் தன்னை தற்காத்துக் கொள்ள விரும்பும் ஒரு நபர், எதிராளிக்கு மரணத்தை ஏற்படுத்திவிட்டால்கூட அது கொலை ஆகாது என்பதே சட்டமாக உள்ளது. (இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு: 100)

இந்த சட்டப்பிரிவின்படி, “இயற்கைக்கு மாறான காம இச்சை”யுடன் தாக்கும் ஒரு நபரால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்ற சூழலில், தம்மை தற்காத்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபடுபவரின் செயற்பாட்டில் எதிரி இறந்து விட்டாலும் அது கொலை ஆகாது. அதற்கு பதிலாக “கொலை ஆகாத மரணம் ஏற்படுத்தும் குற்றம்” என்பதாகவே கருதப்படும்.

எனவே, இயற்கைக்கு மாறான பாலுறவை தடை செய்யாவிட்டால், அத்தகைய இயற்கைக்கு மாறான பாலுறவு அதிகரித்து விடும் என்ற அச்சம் மறைந்து விடுகிறது.

அடுத்தது என்ன?

இந்த நிலையில் பாலியல் சிறுபான்மையினராகிய திருநங்கைகள் மற்றும் ஓரினச் சேர்க்கையாளர்களின் மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில் இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 377-ஐ நீக்க வேண்டும் என்ற கருத்திற்கு பல பிரமுகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த கருத்தில் உங்களுக்கு உடன்பாடு இருந்தால் நீங்களும் ஆதரவு தெரிவிக்கலாம்.

அதேபோல, ஓரினச் சேர்க்கையாளர்களையோ, திருநங்கைகளையோ நேரில் அடையாளம் காணும் தருணங்களில் அருவருப்போ, அச்சமோ அடையாமல் அவர்களையும் சாதாரண மனிதர்களே என்று ஏற்றுக் கொள்வது உங்கள் அறிவு விசாலமடைவதை குறிக்கும். அவர்களுடன் இயல்பாக பழக முயற்சிப்பது உங்கள் மனிதாபிமானத்தை காண்பிக்கும்.

http://www.makkal-sattam.org


திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக கூறப்பட்டாலும், திருமணம் செய்து கொண்டவர்கள் வாழ்வதென்னவோ இந்த பூவுலகில்தான். திருமண வாழ்வும் சொர்க்கமாகவோ, நரகமாகவோ மாறுவதும் அவரவர் கைகளிலும், சுற்றுப்புறத்தில் உள்ளவர்களின் கைககளிலும்தான் இருக்கிறது.

சமூகரீதியில் திருமணம் என்ற நிகழ்வு பல்வேறு பெயர்களில் புனிதமாக கருதப்பட்டாலும், உரிய வயதடைந்த இரு எதிர்பாலினர் இணைந்து வாழ்வதற்கான ஒரு ஒப்பந்தமாகவே திருமணம் விளங்குகிறது.

திருமணம் என்பது இருவேறு மனம் மற்றும் உடல்களில் சங்கமமாக மட்டும் அல்லாமல் இருவேறு சமூகங்களின் பிணைப்பாகவும் மாறுகிறது. மேலும் இந்த நிகழ்வு புதிய உயிர்களை, உறவுகளை, உடைமைகளை தோற்றுவித்தல் போன்ற வேறுபல நிகழ்வுகளுக்கும் காரணமாகிறது. எனவே திருமணம் என்ற நிகழ்வை சட்டரீதியாக புரிந்து கொள்வது அவசியம்.

திருமணத்தின் முக்கிய நிர்பந்தமாக மணம் செய்துகொள்ளும் இருவரின் வயது, மணவுறவுக்கான உடல்நிலை, மனநிலை, மணநிலை ஆகியவை முக்கிய இடம் வகிக்கின்றன.

திருமணம் செய்துகொள்ளும் நபர்கள் எந்த சமூகம் சார்ந்தவர்களாக இருப்பினும் அவர்களின் திருமணத்தை சட்டரீதியாக பதிவு செய்வது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. குடியுரிமை, சொத்துரிமை, குழந்தைகளின் வாரிசுரிமை போன்ற பல்வேறு சட்டம் தொடர்பான விவகாரங்களுக்கும் திருமணத்தை பதிவு செய்தல் என்பது அவசியமாகிறது.

இந்த திருமணப்பதிவு, மதப்பழக்க-வழக்கங்களுக்கேற்ப அமைக்கப்பட்டுள்ளது.

மதநம்பிக்கை இல்லாதவர்கள், மதங்களைப் பற்றிய அக்கறை இல்லாதவர்களுக்கான திருமணப்பதிவு “சிறப்பு திருமணச் சட்டம்” (Special Marriages Act) என்ற பிரிவில் விளக்கப்பட்டுள்ளது.

சாதிகளாலும், மதங்களாலும் பிரிக்கப்பட்டிருந்தாலும், மனங்களால் ஒன்றுபட்டவர்களின் திருமணங்களுக்கு அங்கீகாரம் வழங்குவதே இந்த சிறப்புத் திருமண சட்டத்தின் நோக்கம். இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சட்டங்கள் மதம் கடந்த திருமணங்களை ஏற்பதில்லை. குறிப்பாக (பழைய) இந்துச் சட்டம் சாதிகள் கடந்த திருமணங்களை ஏற்பதில்லை. எனவே சாதிகளையும், மதத்தினையும் கடந்து திருமணம் செய்ய விரும்புபவர்கள் இந்த சட்டத்தின்கீழ்தான் திருமணம் செய்ய முடியும்.

திருமணம் செய்வதற்கான நிபந்தனைகள்/தகுதிகள்:

திருமணம் ஆகாத ஆண்/பெண்களும், கணவனை/மனைவியை இழந்தோரும், சட்டரீதியான மணவிலக்கு செய்தோரும் இந்த சட்டத்தின்கீழ் திருமணம் செய்ய தகுதி படைத்தவர்கள். திருமணம் செய்யவிருக்கும் ஆணுக்கோ, பெண்ணுக்கோ உயிருடன் வாழும் வாழ்க்கைத்துணைவர் இருக்கக்கூடாது.

திருமணம் செய்து கொள்ளவிருக்கும் இரண்டு பேரும் மண வாழ்வுக்குத் தேவையான ஆரோக்கியமான மனநிலையோடு இருக்க வேண்டும். உரிய மூளை வளர்ச்சி அடையாதோரும், மனநிலை குன்றியவர்களும் திருமணம் செய்ய முடியாது.

திருமணம் செய்து கொள்ளவிருக்கும் இருவரும் திருமண வாழ்வுக்குத் தேவையான உடல்நிலையை பெற்றிருக்க வேண்டும். மகப்பேறுக்கான தகுதியும் அவர்களுக்கு இருக்க வேண்டும். இதற்கான தகுதி பெறாதவர்கள் திருமணம் செய்ய இயலாது.

திருமணம் செய்யவிருக்கும் மணமகனுக்கு குறைந்தது 21 வயதும், மணமகளுக்கு 18 வயதும் நிறைந்திருக்க வேண்டும்.

திருமணம் செய்யவிருக்கும் மணமக்கள் இருவரும் தடுக்கப்பட்ட உறவுமுறையினராக இருக்கக்கூடாது. எனினும், அவ்வாறான உறவுமுறை திருமணம் அவர்களின் சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டால் சட்டமும் அங்கீகரித்ததாகவே கொள்ளப்படும்.

திருமண அறிவிப்பு:

திருமணம் செய்வதற்கான உரிய தகுதிகளை கொண்ட மணமக்கள், அவர்கள் சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ் திருமணம் செய்து கொள்ளவிருப்பது குறித்து அவர்களில் எவரேனும் ஒருவர் வசிக்கும் மாவட்டத்தில் உள்ள திருமணப் பதிவு அதிகாரிக்கு எழுத்து மூலமாக தெரிவிக்க வேண்டும்.

அதனைப் பெற்றுக் கொண்ட திருமண அதிகாரி, திருமணம் செய்துகொள்ள இருப்பவர்களின் தகுதிகள் குறித்த ஆய்வை மேற்கொண்டு அதில் திருப்தி அடைந்தால், அவர்களின் திருமண அறிவிப்பை உரிய பதிவேட்டில் எழுதுவார். மேலும் அந்த அறிவிப்பின் நகல் ஒன்று அந்த அலுவலகத்தில் அனைவரின் பார்வையிலும் இடம் ஒன்றிலும் வைக்கப்படும்.

இந்த திருமணத்திற்கு சட்டரீதியான மறுப்பு கொண்டுள்ள எவரும், இந்த அறிவிப்பு வெளியான 30 நாட்களில் மறுப்பை தெரிவிக்கலாம். அந்த மறுப்பு ஏற்கப்படாத நிலையிலும், மறுப்புகள் ஏதும் பதிவு செய்யப்படாத நிலையிலும், அறிவிப்பு வெளியிடப்பட்டு 30 நாட்களுக்குப்பின் அந்த திருமணம் பதிவு செய்யப்படும். தவறான காரணங்களுக்காக எவரேனும் மறுப்பு தெரிவிக்கப்பட்டு அது விசாரணையில் தெரியவந்தால், அந்த மறுப்பை தெரிவித்தவருக்கு ஆயிரம் ரூபாய்க்கு மேற்படாத வகையில் அபராதம் விதித்து, அந்த தொகையை முழுமையாகவோ மணமக்களுக்கு திருமண அன்பளிப்பாக அளிக்க உத்தரவிடப்படும்.

திருமண நிகழ்வு:

திருமண அறிவிப்பு வெளியிடப்பட்டு 30 நாட்கள் நிறைவடைந்தபின் எந்த ஒரு நாளிலும் திருமணம் நடைபெறலாம். அன்றைய தினத்தில் மணமக்கள் விரும்பும் முறையில் திருமணத்தை நடத்திக்கொண்டு, திருமண பதிவு அலுவலகத்தில் அதற்காக வைக்கப்பட்டுள்ள படிவத்தில் கையெழுத்திட வேண்டும்

இரு தரப்பிலும் சாட்சியங்கள் கையொப்பம் இட்டதும், திருமணப்பதிவாளர் அந்த திருமணத்தை அங்கீகரித்து கையொப்பம் இடுவார். இதையடுத்து அந்த திருமணம் சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டதாக கருதப்படும். இதற்கான சான்றிதழும் வழங்கப்படும்.

இந்த சட்டத்தின் கீழ் திருமணம் செய்யாமல் மதம் சார்ந்த வேறு முறைகளில் திருமணம் செய்துகொண்டோரும், இந்த சிறப்புத் திருமணச் சட்டத்தின்கீழ் தங்கள் திருமணத்தைப்பதிவு செய்யலாம்.

-பி. சுந்தரராஜன்
(sundararajan@lawyer.com)

http://www.makkal-sattam.org/


1. கிரெடிட் கார்டு என்பது உங்கள் பர்சை உடனடியாக காலி செய்யாவிட்டாலும், உரியகாலத்தில் அளவுக்கதிகமான கட்டணத்தோடு காலி செய்யும். எனவே உங்கள் கிரெடிட் கார்டை கவனமாக பாதுகாக்க/கையாள வேண்டும்.

2. கிரெடிட் கார்டுக்கான விண்ணப்பத்தை நிரப்பும்போது, அதை நீங்களே நிரப்புங்கள். தேவையானபோது மட்டும் விற்பனை பிரதிநிதியின் உதவியை நாடுங்கள். நிரப்பப்பட்ட விண்ணப்பத்தை நகல் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அதைத்தொடர்ந்து கிரெடிட் கார்டுக்காக தனியே ஒருஃபைல் போட்டு கிரெடிட் கார்டு தொடர்பாக பில்கள் உட்பட அனைத்து கடிதத்தொடர்புகளையும், நீங்கள் கிரெடிட் கார்டு மூலம் பெற்ற பொருள் மற்றும் சேவை குறித்து அஞ்சல் மூலம் வரும் விளம்பரங்களையும் சேமித்து வையுங்கள்.

3. கிரெடிட் கார்டு விண்ணப்பத்தின் பின்புறத்தில் அச்சிடப்பட்டுள்ள மற்றும் கிரெடிட் கார்டுடன் வழங்கப்படும் விதிமுறைகளை பொறுமையுடன், முழுமையாக படியுங்கள். விளக்கம் தேவைப்பட்டால் வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகி விளக்கம் பெற தயங்காதீர்கள்.

4. புதிய கிரெடிட் கார்டு வாங்கும்போது இயன்றவரை புகைப்பட கிரெடிட் கார்டை வாங்குங்கள். இதற்காக கூடுதலாக மிகச்சொற்பமான தொகையே வசூலிக்கப்படுகிறது. கிரெடிட் கார்டை பெற்றுக்கொண்ட உடனே மறக்காமல் பின்புறத்தில் கையெழுத்திட வேண்டும். இவை, உங்கள் கார்டை மற்றவர்கள் உபயோகிப்பதை (ஓரளவு) தடுக்கும்.

5. கிரெடிட் கார்டு தொலைந்துபோனால் புகார் கொடுக்க வேண்டிய வங்கியின் புகார் பிரிவு எண்ணை எப்போதும் கையில் (தனியே) வைத்திருக்க மறந்து விடாதீர்கள். அதோடு கிரெடிட் கார்டின் எண்ணையும் குறித்து வைத்திருங்கள். கிரெடிட் கார்டு தொலைந்து விட்டதாக தோன்றினால் உடனடியாக வங்கிக்கு புகார் செய்யுங்கள். மேலும் தொலைபேசி மூலம் புகார் தெரிவித்ததற்கான பதிவெண் வழங்கப்பட்டால் அதையும் குறிப்பிட்டு எழுத்து மூலமான புகாரையும் பதிவு செய்யுங்கள். அதற்கான நகல்களையும் அத்தாட்சிகளையும் ஃபைலில் சேர்க்கவும்.

6. கிரெடிட் கார்டை பயன்படுத்தி பொருட்கள் வாங்கும்போது அவசியம் தேவையான பொருட்களை மட்டுமே வாங்குங்கள். சபலங்களுக்கு இடம் கொடுத்து தேவையற்ற பொருட்களை வாங்கி குவிக்காதீர்கள். ஏனெனில் அதற்கும் நீங்கள்தான் (மிகக்கூடுதலான வட்டியுடன்) பணம் செலுத்த வேண்டும்.

7. ஒவ்வொரு பில்லையும் முழுமையாக சோதனை செய்யுங்கள். நீங்கள் பயன்படுத்திய தொகை மட்டும்தான் பில்லில் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை கவனமாக கண்காணியுங்கள்? தவறுகள் இருந்தால் வங்கி நிர்வாகத்திற்கு உடனடியாக புகார் செய்யுங்கள்.

8. தவறான பில் குறித்து உரிய காலத்தில் தெரிவித்தால் மட்டுமே வங்கிகள், அந்த தவறுகளை களைகின்றன. காலம் தாழ்த்தி செய்யப்படும் புகார்களை வங்கிகள் ஏற்க மறுக்கின்றன.

9. புதிதாக பொருள் வாங்கியிருந்தால், அதற்கான தொகை மட்டுமே அதற்கடுத்த மாத பில்லில் இடம் பெற வேண்டும். அதற்கான வட்டி முதல் மாதத்தில் கணக்கிடக்கூடாது. அவ்வாறு வட்டி முதல் மாதத்திலேயே சேர்க்கப் பட்டிருந்தால் உடனடியாக வங்கி நிர்வாகத்திற்கு புகார் செய்யுங்கள்.

10. உங்கள் அனுமதியின்றியே பலவகையான இன்சூரன்ஸ் திட்டங்களை வாடிக்கையாளர் தலையில் கட்டுவதை வங்கிகள் வழக்கமாக்கி வருகின்றன. எனவே நீங்கள் அனுமதிக்காத எந்த தொகையையும், அது எவ்வளவு சிறிய தொகையாக இருந்தாலும் உடனடியாக வங்கிக்கு தொடர்பு கொண்டு தெளிவு பெறுங்கள். தேவையற்ற கட்டணங்களை தவிருங்கள்.

11. மாதாந்திர பில் தொகையை செலுத்தும்போது இயன்றவரை முழு தொகையையும் செலுத்துங்கள். முடியாவிட்டால் கூடியவரை அதிகபட்ச தொகையை செலுத்துங்கள்.

12. குறைந்தபட்ச தவணைத்தொகை என்ற வலையில் சிக்குவதை தவிர்த்திடுங்கள். அவ்வாறு கட்டும் தொகையின் பெரும்பகுதி வட்டி மற்றும் இதர கட்டணங்களுக்கே நேர் செய்யப்படுவதால் கடன்தொகை குறைவதில்லை என்பதை உணருங்கள்.

13. எந்த பிரசினை தொடர்பாகவும் வங்கி அதிகாரிகளிடம் தொலைபேசி மூலமாக மட்டும் புகார் செய்தால் போதாது. ஏனெனில் யாரிடம் புகார் செய்தீர்கள் என்பதையோ, புகாரை பதிவு செய்தவர் அதன்மீது என்ன நடவடிக்கை எடுத்தார் என்பதையோ கண்டுபிடிக்க முடியாது. எனவே வங்கிக்கு எழுத்து மூலமான புகாரை பதிவு அஞ்சலில் அனுப்புங்கள். அஞ்சல் பெட்டி எண் கொண்ட முகவரிக்கு பதிவு அஞ்சலோ, கூரியர் மூலமான தபாலோ அனுப்ப முடியாது. எனவே கிரெடிட் கார்டு வாங்கும்போதே சரியான, முழுமையான முகவரியை கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள்.

14. ஏற்கனவே உள்ள கிரெடிட் கார்டின் அடிப்படையில், வேறு வங்கியில் புதிய கார்டு பெற முயற்சிப்பவர்கள், பழைய கார்டின் முதல் பக்க நகலை மட்டும் கொடுத்தால் போதுமானது. இரு பக்க நகலையும் கொடுத்தால் அவற்றில் உள்ள கார்டு எண் மற்றும் பாதுகாப்பு எண்ணை பயன்படுத்தி, பழைய கார்டில் உள்ள கடன் அனுமதி தொகையை (Available Balance) வேறு யாரேனும், இணையம் மூலமாகவோ அல்லது வேறு முறைகளிலோ முறைகேடாக பயன்படுத்தும் அபாயம் உள்ளது.

15. புதிய கார்டு வாங்கும்போது உண்மையான ஆவணங்களை கொடுத்து கிரெடிட் கார்டு வாங்குங்கள். விற்பனை பிரதிநிதிகளை முழுமையாக நம்பாதீர்கள். அவர்கள் கூடுதலான கிரெடிட் கார்டை விற்று அதிக ஊக்கத்தொகை பெறுவதற்காக போலியான ஆவணங்கள் மூலம் கிரெடிட் கார்டை பெற்றுத்தரக்கூடும். பிரசினை வந்தால் அவர்கள் தப்பிவிடுவார்கள். போலி ஆவணம் கொடுத்து வங்கியை ஏமாற்றியதற்காக சட்டரீதியான நடவடிக்கையை நீங்கள் எதிர்கொள்ள நேரிடும்.

16. உங்கள் சம்பளம் ஏதேனும் வங்கி மூலம் வழங்கப்பட்டால், அந்த வங்கியின் கிரெடிட் கார்டு வாங்குவதை தவிர்த்து விடுங்கள். ஏனெனில் உங்களுக்கும், வங்கிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், (தவறு வங்கியின் பக்கம் இருந்தாலும்கூட) உங்கள் சம்மதம் இன்றியே, உங்கள் சம்பள பணத்தை வங்கிகள் "ஸ்வாகா" செய்து விடும் அபாயம் உள்ளது.

17. தவிர்க்கமுடியாத காரணங்களால் கிரெடிட் கார்டு கடன் தவணை கட்டத்தவறும்போது வசூல் குண்டர்கள் உங்களை மிரட்டினால் காவல் நிலையத்தையோ, வழக்கறிஞரையோ அணுகுங்கள்.

18. கிரெடிட் கார்டு நிறுவனங்களுக்கு எதிரான உங்கள் உரிமைகளை பாதுகாக்க இந்த விவகாரங்களை கையாளும் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகளை கண்டறிந்து வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இந்த அமைப்புகளை அறிமுகப்படுத்துங்கள்.

19. கிரெடிட் கார்டு வழங்கும் நிறுவனங்கள், வாடிக்கையாளர்களிடம் நடந்து கொள்ள வேண்டிய நெறிமுறைகள் குறித்து மத்திய ரிசர்வ் வங்கி மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் ஆகிய அமைப்புகள் திட்டவட்டமான விதிமுறைகளை வகுத்துள்ளன. அவற்றில் கூறப்பட்டுள்ளபடி உங்கள் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

20. உங்கள் உரிமைகள் மீறப்பட்டால் உடனடியாக வங்கிக்கும், இந்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ள வங்கி குறைதீர்ப்பு அதிகாரிக்கும் புகார் செய்யுங்கள். அதோடு உங்கள் குறைகளை இந்த வலைப்பூவிலோ அல்லது www.creditcardwatch.org என்ற இணைய தளத்திலோ பதிவு செய்யுங்கள். அது தவறிழைக்கும் வங்கிகளை அம்பலப்படுத்துவதற்கும் மற்ற வாடிக்கையாளர்கள் விழிப்படைவதற்கும் உதவும்.


(கிரெடிட் கார்டு குறித்த நுகர்வோர் தரப்பு தகவல்களுக்கும், ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளுக்கும் www.creditcardwatch.org என்ற இணையதளத்தை பார்க்கவும்)


- மக்கள் சட்டம் குழு
http://www.makkal-sattam.org


ன்னம்பிக்கையுடன் வாழ உடல் ஆரோக்கியமாய் இருப்பதுடன் நல்ல குணங்களும் அவசியம் தேவைப்படுகிறது.

மிகுந்த தன்னம்பிக்கையுடன் திட்டமெல்லாம் தீட்டி, ஏற்பாடுகள் செய்து, செயல்படச் செல்லும்போது அவரிட் ஒருவர் “நீ வெட்டி முறித்த மாதிரி தான்” என எதிர்மறையாக கூறிவிட்டால், அச் சொற்கள் அவரது தன்னம்பிக்கையையே அசைந்துவிடும்.

வாதம் என்பது நம் உடலில் ஓடும் மூன்று பூதங்களில் ஒன்றான காற்றைக் குறிக்கும் சொல். மற்ற இரண்டு நீரும் வெப்பமும், காற்று இல்லாமல் எந்த உயிரினமும் வாழ முடியாது. அத்தகைய அத்தியாவசியச் சிறப்புடையது காற்று. பிடிவாதம் என்ற சொல்லையே இங்கு வாதம் எனக் குறிப்பிடுகிறோம். பெரும்பாலோனோருக்கு வாயுத்தொல்லை இருக்கும். அதனால் மிகவும் சிரமப்பட்டு வருவர். அதேபோல்தான் பிடிவாதம் என்ற குணமும் வாழ்க்கையில் பல சிக்கல்களை உண்டாக்கும்.

பிடிவாதம்

மற்றவர்கள் சொல்வதை ஏற்றுக் கொள்ளாமல் தனது கருத்தே சரியென வலியுறுத்தி, அதை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற மனநிலைதான் பிடிவாதம். முதுமொழி ஒன்று உண்டு. “வாதத்துக்கு மருந்து உண்டு; பிடிவாத்த்துக்கு மருந்து இல்லை” என்று, “பிடித்த முயலுக்கு மூன்றே கால்” என்று மொழியையும் பிடிவாதம் தொடர்பாய் கிராமப்புறங்களில் கூறுவர். தனது எண்ணம், பேச்சு, செயல் எல்லாவற்றையுமே எவ்வித மாற்றுக் கருத்தும் கூறாமல் மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென கட்டாயப்ப படுத்துவர். இதற்கு அவர்களது சிறு வயது முதலேயான பழக்கம், குடும்பத்தில் அவரது வருமானம் ஆகியவை காரணமாகும். சில சமயங்களில் பிடிவாதம் பிடிப்பதால், வெற்றி நிலையை அடையலாம். ஆனால், சுற்றியிருப்பவர்கள் மத்தியில் இவருக்கு கெட்ட பெயர் உண்டாகும். இருந்தாலும் தனது தவறை ஏற்காமல், தன் செயலுக்கு நியாயமான காரணங்களைத் தேடிக் கூறுவர்.

வாதம்

கலந்துரையாடலில் ஒரு வகை விவாதம். தனது கருத்தை வலியுறுத்திக் கூறுவதே விவாதம். அது உண்மையாகவும் இருக்கலாம்; வேறானதாகவும் இருக்கலாம். இதனை “சொற்போர்” என்றும், DEBATE என்றும் கூறுவர். பட்டிமன்றங்கள் வழக்காடு மன்றங்களில் இவ்வகையான சொற்போரைக் கேட்கிறோம். தமது கருத்தை வலியுறுத்தி பேசும் அணியினர் மாற்றணியினரைத் தாக்கி அனல்தெளிக்கப் பேசுவர். இறுதியில் நண்பர்களாய் உரையாடிச் செல்வர்.

ஆனால், நடைமுறை வாழ்க்கையில் விளைவு வேறாக இருக்கிறது. ஒருவர் தவறான ஒரு செய்தியைத் தெரிவிக்கும் போது, நமக்கு அது தவறு எனத் தெரிந்து சரியானது இது எனக் கூறினால், அதை அவர் ஏற்றுக் கொள்ளாமல் தான் கூறுவது சரியெனத்திரும்பக் கூறுவர். ஒரு வழியாக கடைசியில் பல உதாரணங்களுடன் எடுத்துக் கூறி எல்லோரையும் ஒப்புக்கொள்ளச் செய்து விடலாம். ஆனால், இந்த விவாத்தத்தின் மூலம் தனி நபருடனான நட்புக்கு பின்னடைவு உண்டாகிவிடும்.

விதண்டாவாதம்

பேச்சு வழக்கில் ஒரு சிலரைக் கூறுவோம். “சரியான விதாண்டாவாதம்” என்று. பிடிவாதம் என்பது வேறு; விவாதம் என்பது வேறு. இரண்டுக்கும் அடிப்படை நோக்கம் ஒன்றே ஆனாலும். பிடிவாதம் நெருங்கியவர்கள் மத்தியில்தான் செல்லுபடியாகும். விவாதம் என்பது பேச்சுத்திறனை வைத்து, பொருள் ஞானத்தை வைத்து எங்கும் செல்லுபடியாகும். நியாயத்தை ஏற்றுக்கொள்ள மறுத்து தனது நிலையிலேயே இருந்து பேசுவதை விதண்டாவாதம் என்று கூறுகிறோம்.

மொழியும் பேச்சும்

தங்கள் கருத்தை, எண்ணத்தை வெளிப்படுத்தும் வழிதான் மொழி. முதலில் உடல் உறுப்புகளின் அசைவைக் கொண்டு (Body Language) தங்கள் கருத்தை வெளியிட்ட மக்கள், மொழியைப் பயன்படுத்த ஆரம்பித்த பின், சிந்திக்க ஆரம்பித்தார்கள். சிந்தனையின் வெளிப்பாடுதான் பேச்சாக வெளி வந்தது. தனது கருத்தைத் தெளிவாக, மற்றவர்கள் புரிந்து கொள்ளுமாறு கூறுவதே சிறந்த பேச்சு. அதேபோல் மற்றவர்கள் கூறுவதைச் சரியாகக் கவனித்து, உரிய பதில் கூற வேண்டும். ஆனால் பிடிவாதக்காரர்கட்கு மற்றவர்களது பேச்சைப் பற்றிய கவலையே கிடையாது. தான் சொல்வதே சரியெனக் கூறுவர். விவாதத்தில் நிலைமை வேறு. பிறர் என்ன சொன்னார்களோ, அதை ஆதாரத்துடன் மறுத்துப்பேச வேண்டும். இரண்டுக்குமே அடிப்படை பேச்சாக இருந்தாலும், பிடிவாதத்தில் ஒரு கட்டத்தில் சர்வாதிகாரம் தலைதூக்கி, “இப்படித்தான்” என முடித்துவிடுவர். விவாதங்களில் தங்கள் புலமையை, ஞானத்தை வெளிக்காட்டும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

தன்னம்பிக்கைக்கு பாதிப்பு

பிடிவாதமும் , விவாதமும் தன்னம்பிக்கையை எவ்வகையில் பாதிக்கிறது? அடிப்படையில் பிடிவாத குணம் உள்ளவர்கள் தைரியசாலிகள் அல்லர். வறட்டு கௌரவம் பார்ப்பவ்கள் எளிதில் கற்பனையாக எதையாவது நினைத்து வருத்தப்படுவார்கள். தன்னால் இது முடியாது என்ற தன்னம்பிக்கையின்மையை மறைப்பதற்காகவே ‘பிடிவாதம்’ என்ற வேடத்தை போட்டுக் கொண்டவர்கள். இவரால் தனித்து எதையும் வெற்றிகரமாகச் செய்ய முடியாததால்தான், பிறரது துணையை ஆதரவைத் தனது பிடிவாதத்தால் பெற முயற்சிக்கிறார்.

விவாதங்களில் கலந்து கொள்வோர் ஒரு பொருள் தொடர்பாகப் பல விபரங்களைச் சேகரிக்க வேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் தனது கருத்தை மாற்றிக் கொள்ளாமல் உரிய ஆதாரங்களுடன் பேச வேண்டும். இம் மாதிரி பேசும் போது எதிரில் இருப்பவரை வெற்றி கொள்ளலாம். ஆனால் இருவருக்கும் இடையிலான நட்புக்கு கேடு உண்டாகும்.

நடைமுறை

பொதுவாக நமது வீடுகளில், பணி புரியும் அலுவலகங்களில், அல்லது நண்பர்களுடன் உரையாடும்போது இது போன்ற விவாதங்கள் நடைபெறுகின்றன. குடும்பத்தலைவர் அல்லது குடும்பத்துக்கு அதிக அளவு பொருள் தருபவர் அல்லது அந்தக் குடும்பத்தில் மிக அதிகமாகப் படித்தவர் என்ற நிலையில் நல்ல கருத்துக்களைப் பிடிவாதமாய் கூறுவதை விட, எல்லோருடைய கருத்தையும் கேட்ட பின் தனது கருத்தைக் கூறினால் ஏற்றுக்கொள்வார்கள்.

தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வழிகள்

அனைவருக்கும் உரிய அங்கீகாரம் கொடுக்க வேண்டும். அவர்கள் சிறியவர்களானாலும், கல்வியறிவு இல்லாதவர்களாயிருந்தாலும், அவர்கட்கும் திறமைகள் உள்ளன என்பதை ஏற்றுக் கொண்டு அவர்களது கருத்தையும் கேட்டு ஆலோசிக்க வேண்டும். நான்தான் இங்கு எல்லாமே என்ற தன் முனைப்பை விட வேண்டும்.பிறரது கருத்துக்கள் தவறு என்றால் விளக்கமாக அவர்களிடம் எடுத்துக் கூறும் பொறுமை வேண்டும். நல்ல கருத்துக்களைக் கூறுவோர்க்கு பரிசுகள் வழங்கி உற்சாகப்படுத்தலாம்.

அதேபோல விவாதங்கள் என்று எடுத்துக்கொண்டால், யாருடன் என்பதை முதலில் அறிய வேண்டும். ஒது நிகழ்ச்சியெனில் ஆணித்தரமாய் பேசத் தயார் செய்ய வேண்டும். தனிப்பட்ட முறையில் என்றால், பிறர் கூறும் ஏற்க முடிந்த கருத்துக்களை ஏற்கும் மனப்பக்குவமும், தவறென்றால் அவர் மனம் புண்படாமல் தவறு எனக்கூறும் சாந்த நிலையும் பெறவேண்டும்.

பொதுவாகவே தனியே தவறை ஒப்புக்கொள்ளும் நாம், பிறர் முன்னிலையில் அது சரியென்றே கூறுவோம். இம்மாதிரி சிக்கலான சூழ்நிலைகளை முடிந்த அளவு தவிர்க்க வேண்டும். பல புத்தகங்கள் படிக்க வேண்டும். இவ்வாறெல்லாம் செய்தால் பிடிவாதமும், விவாதமும் நமக்கு தன்னம்பிக்கையை குறைக்காது. ஏனெனில் நாம் பிடிவாதத்தை விட்டு விடுவோம். பிறரது உணர்வுகட்கு மதிப்பு தருவோம். அதனால் நமது தன்னம்பிக்கையுடன் மற்றவர்களுடைய தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். வாழ்க வளமுடன்!

- பன்னீர் செல்வம் ச. ம


தன்னம்பிக்கை.நெட் 


ரு மனங்கள் ஒப்பி உடன் வாழ்வதே திருமணம். திருமணம் என்ற சடங்கு நடந்து விட்ட காரணத்தாலேயே இரு முரண்பட்ட மனங்கள் உடன் வாழ்வது தேவையில்லாதது.

‘திருமணம் என்பது ஒரு சமூக ஒப்பந்தம் மட்டுமே’ என்பதை புரிந்து கொண்டால், திருமணம் என்ற சடங்கில் எந்த தெய்வீகத்தன்மையோ, புனிதத்தன்மையோ இல்லை என்பதை புரிந்து கொண்டால் ‘மணவிலக்கு’ என்ற சொல் எந்த விதத்திலும் அச்சுறுத்தாது.

இரு மனங்கள் இணையும் திருமணத்தில், ஏதோ ஒரு மனம் உடன்பட முடியாவிட்டால் திருமணத்திற்கு முன்னரே பிரிவது அனைவருக்கும் நலம் பயக்கும். ஆனால் இந்திய திருமணச் சூழலில் திருமணத்திற்கு முன் மணம் செய்து கொள்ளவிருக்கும் இருவரும் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வது அவ்வளவு எளிதல்ல.

உரிய காரணம் இன்றி பிரியும் துணையை மீண்டும் அழைக்க ‘மணவாழ்வுரிமை மீட்பு சட்டம்’ பயன்படுகிறது.

பொருந்தாத திருமணத்திற்குப்பின், பிரிவதைத்தவிர வேறு வழியில்லை என்று முடிவெடுப்பவர்களுக்கும் சட்டம் வழிகாட்டுகிறது.

சிறப்புத் திருமணச் சட்டத்தின் பிரிவு 27, இந்து திருமணச் சட்டத்தின் பிரிவு 13, (கிறிஸ்தவர்களுக்கான) இந்திய திருமண முறிவுச் சட்டம் ஆகியவை மத சடங்குகளில் ஈடுபாடு இல்லாதவர்கள் (Agnostics), நாத்திகர்கள் (Atheists), இந்துக்கள், கிறிஸ்தவர்கள் ஆகியவர்களுக்கான மணமுறிவு உரிமைகளை விளக்குகின்றன.

சிறப்புத் திருமணச் சட்டத்தின்படி
1. வாழ்க்கைத் துணைவர் அல்லாத வேறொருவருடன் விரும்பி உடலுறவு கொள்ளுதல்,
2. மனுதாரரை உடல்ரீதியாகவோ, மனரீதியாகவோ கொடுமை செய்தல்,
3. மனுதாரரை இரண்டுக்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு கைவிட்டுச் செல்லுதல்,
4. தம்பதிகளில் ஒருவர் தீர்க்க முடியாத அளவில் மனநோய்க்கு ஆளாதல்,
5. தம்பதிகளில் ஒருவர் எளிதில் தொற்றக்கூடிய பால்வினை நோயால் பாதிக்கப்படுதல்,
6. தம்பதிகளில் ஒருவர் தொடர்ந்து ஏழு ஆண்டுகளுக்கு மேலாக உயிருடன் உள்ளாரா? இல்லையா? என்பதை தெரியாதிருத்தல்,
7. திருமணமான கணவன் ஓரினப்புணர்ச்சி(Sodomy), விலங்குகளுடன் புணர்ச்சி (Bestiality) கொண்ட குற்றம் செய்தல்,
8. தம்பதிகளில் ஒருவர் இந்திய தண்டனை சட்டத்தில் கூறப்பட்டுள்ள குற்றம் ஒன்றிற்காக ஏழு ஆண்டுகளுக்கு குறையாத சிறைத்தண்டனை பெறுதல்

ஆகிய சூழ்நிலைகளின்போது பாதிக்கப்பட்டவர் உரிய நீதிமன்றத்தை அணுகி மணமுறிவு கேட்டு மனுச் செய்யலாம்.

இந்து திருமணச் சட்டத்தின்படி திருமணம் செய்தவர்கள், காரணம் 8 தவிர மேற்கண்ட காரணங்களுக்காகவோ, கணவரோ/மனைவியோ இல்லறத்திலிருந்து விலகி துறவறம் மேற்கொண்டாலோ, இந்து மதத்திலிருந்து வேறு மதத்திற்கு மாறினாலோ அதைக்காரணமாக கூறி மணவிலக்கு கோரலாம்.

கிறிஸ்தவ திருமணச் சட்டத்தின்படி திருமணம் செய்த ஒரு ஆண், மனைவியை மணவிலக்கு செய்ய வேண்டுமெனில், திருமணத்திற்கு பின்னர் மனைவி மாற்றானுடன் உடலுறவு செய்தால் மட்டும் அதை நிரூபித்து மணவிலக்கு கோரலாம்.

1. கிறிஸ்தவ திருமணச் சட்டப்படி திருமணம் செய்த கணவன், திருமணத்திற்கு பின் கிறிஸ்தவ மதத்தொழிலை விட்டு விலகி வேறு மதம் சார்ந்த தொழிலை மேற்கொண்டாலோ,
2. உடலுறவு கொள்ளத் தடை செய்யப்பட்ட உறவு முறையில் உள்ள வேறு ஒரு பெண்ணோடு உடலுறவுக் குற்றம் (incestuous adultery) புரிந்தாலோ,
3. மற்றொரு பெண்ணை இரண்டாவதாக மணம் செய்து கொண்டு அவளுடன் பிறன்மனைப் புணர்ந்தாலோ (bigamy with adultery),
4. வன்முறைப்புணர்ச்சி, இயற்கைக்கு மாறான புணர்வு, விலங்குகளுடன் புணர்தல்,
5. நெறிகெட்ட வாழ்க்கை காரணமாக பெண்ணை கொடுமை செய்தாலோ,
6. இரண்டு ஆண்டுகளுக்கு மேல் மனைவியை துறந்து சென்று விட்டாலோ,
7. ஆண்மையற்று இருந்தாலோ ...
மனைவி மணவிலக்கு கோரி உரிய நீதிமன்றத்தில் மணவிலக்கு கோரலாம்.

இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களுக்கான சட்டமும் மணவிலக்கு குறித்த அம்சங்களை விவரிக்கிறது.

இஸ்லாமிய ஆண்களுக்கு மணமுறிவு குறித்து அளிக்கப்படும் உரிமைகள் எல்லை அற்றதாக உள்ளது.

மனைவிக்கு காரணத்தை தெரிவிக்காமலே “தலாக்” எனப்படும் மணமுறிவை அறிவிக்க இஸ்லாமிய ஆண் உரிமை படைத்தவனாகிறான். மேலும் மனைவிக்கு தெரிவிக்காமலே கூட தலாக்கை செயல்படுத்தும் திறன் இஸ்லாமிய ஆண்களுக்கு இருக்கிறது. இதில் நீதிமன்றம் தலையிடுவதில்லை.

இந்தியாவில் உள்ள இஸ்லாமிய பெண்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இஸ்லாமியர்கள் திருமண இழப்பு சட்டம், 1939ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன்படி...

நான்கு ஆண்டுகளுக்கு மேல் கணவன் காணாமல் போய்விட்டால்,

மனைவிக்கு தேவையான பராமரிப்பு செலவுத்தொகையை கணவன் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு கொடுக்கத்தவறினால்,

கணவனுக்கு ஏழு ஆண்டுகளோ, அதற்கு அதிகமாகவோ சிறைத்தண்டனை விதிக்கப்பட்டால்,

கணவனுக்கு விதிக்கப்பட்ட திருமணக்கடமைகளான மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளுதல், குழந்தைகளை பராமரித்தல் ஆகியவற்றை கணவன் மூன்று ஆண்டுகளுக்கு புறக்கணித்தால்,

கணவன் ஆண்மையற்று இருந்தால், தொழுநோய் பீடிக்கப்பட்டிருந்தால், தொற்றக்கூடிய பால்வினை நோய் இருந்தால், திருமணத்திற்கு தேவையான மனவளர்ச்சி இல்லாமலிருந்தால் ...

...பாதிக்கப்பட்ட இஸ்லாமியப் பெண் உரிய நீதிமன்றத்தை அணுகி மணமுறிவு பெறலாம்.

இத்தகைய வழக்கு விசாரணைகளை பொதுவில் நடத்தாமல், மூடிய அறைக்குள் நடத்தவும் (In Camera Proceedings), வழக்கு விவரங்களை செய்தியாளர்கள் வெளியிடாமல் தடுக்கவும் முடியும். வழக்கு தரப்பினர்கள் உடன்படும் நிலையில் வழக்கு விசாரணையை துரிதப்படுத்தி இசைவின் பேரில் மணமுறிவு (Divorce by Mutual Consent) பெறவும் இயலும்.

இத்தகைய மணமுறிவு கேட்கும் தரப்பினர் உரிய வருவாய் இன்றி அவதியுறும் நிலையில், எதிர் தரப்பினர் வருவாய் படைத்தவர் என்று நிரூபிக்க இயலும் நிலையில் மனுதாரருக்கு தற்காலிக அல்லது நிரந்தர பராமரிப்பு கோரவும் இயலும்.

எனவே, பொருந்தா மண உறவில் யாரும் விருப்பமின்றி நீடிக்கவேண்டிய தேவையில்லை. எனவே துணிந்து முடிவெடுங்கள்.

அதற்கு முன் உங்கள் எதிர்காலம் குறித்தும், குழந்தைகள் (இருந்தால்) எதிர்காலம் குறித்தும் ஆழச் சிந்தித்துவிட்டு...!

- சுந்தரராஜன்
(sundararajan@lawyer.com)

http://www.makkal-sattam.org/search/label/வாழ்க்கை

                                                     

னித சமுதாயம் தோன்றி, சிந்தனை வளர்ந்த நிலையிலிருந்தே, ‘உயிர்’ என்பது பற்றி பல்வேறு கருத்துகள் உருவாகத் தொடங்கின. ஆரம்பகாலத்தில் இந்தச் சிந்தனைகள் யாவுமே, உயிர் என்பது கடவுளால் தோற்றுவிக்கப்பட்டது என்ற கருத்தோட்டம் கொண்டதாகவே இருந்தன.

வேறு எப்படி உயிர் என்பது தோன்றியிருக்கக் கூடும்? மனிதனால் உயிரைப் படைக்க முடியுமா? புதிய ஒரு மிருகத்தையோ பறவையையோ உருவாக்க முடியுமா? உயிரைப் போக்கக்கூடிய மனிதனால், இறந்த ஒரு சடலத்துக்குள் உயிரைப் புகுத்த முடியுமா?

இந்தக் கேள்விகளுக்கு பல நூற்றாண்டுகளாக யாருக்கும் பதில் சொல்லத் தெரியவில்லை. பிறகு 19-ம் நூற்றாண்டு தொடங்கி துளித்துளியாக சில விஷயங்கள் புரிய ஆரம்பித்தன.

அவற்றுள் ஒன்று, மனிதர்களுக்குப் பெரும் அதிர்ச்சி தரக்கூடியதாக அமைந்தது. அதுதான் பரிணாம வளர்ச்சி எனப்படும் கொள்கை. சார்லஸ் டார்வின் (1809-1882) என்பவரும் ஆல்ஃபிரட் வாலேஸ் (1823-1913) என்பவரும் தனித்தனியாகக் கண்டுபிடித்த கொள்கை இது. இதன் அடிப்படையில் உருவானதே பரிணாம உயிரியல் (Evolutionary Biology) என்ற துறை.

பரிணாம வளர்ச்சிக் கொள்கைக்கு முந்தையதாக, மனிதனுக்கு உயிர்கள் பற்றி என்ன புரிதல் இருந்தது? உலகில் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் உள்ளன. அவை நகராத தாவரங்களாக இருக்கலாம்; அல்லது நகரும் விலங்குகளாக (ஊர்வன, பறப்பன, ஓடுவன என்று எதுவாகவும்) இருக்கலாம். ஆனால், இவை அனைத்தையும் நம் எல்லாவற்றுக்கும் மேலாக இருக்கும் சக்தி ஒன்று (கடவுள் என்று வைத்துக்கொள்வோம்), ஒவ்வொன்றும் இப்படி இப்படித்தான் இருக்கவேண்டும் என்று தீர்மானித்து, உருவாக்கியுள்ளது.

அதாவது காயிலே புளிப்பதும், கனியிலே இனிப்பதும் முன்னதாகவே தீர்மானிக்கப்பட்டது. ஒட்டகச் சிவிங்கிக்குக் கழுத்து நீளமாக இருப்பதுவும் யானைக்குத் தும்பிக்கை இருப்பதுவும் முன்கூட்டியே பிரபஞ்ச சக்தியால் தீர்மானிக்கப்பட்டு, உருவாக்கப்பட்டுள்ளது. மனிதனின் கண்கள், காதுகள், ரத்த ஓட்டம், கைகள், கால்கள் என்று எதை எடுத்தாலும் குத்துமதிப்பாக இந்த நீளம், இந்த அகலம், இந்த வடிவம் என்று எல்லாமே முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டவை.

சில மாறுபாடுகள் இருக்கலாம். ஒரு சிங்கத்தைப்போல இன்னொரு சிங்கம் இருப்பதில்லை. குரங்குகள் என்று இனத்துக்குள் பல கிளைகள் உள்ளன. ஒரு கிளைக்குள் இருக்கும் பல்வேறு தனிப்பட்ட குரங்குகளும் வித்தியாசமாகத் தோற்றம் அளிக்கின்றன. சில ஊனமாகப் பிறக்கின்றன. யாவுமே கடவுளின் லீலைகளே.

ஆனால், பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு இதை மறுத்தது. ஓர் உயிரினத்திலிலிருந்து நாளடைவில், மற்றொரு முற்றிலும் புதிய, வித்தியாசமான உயிரினம் உருவாகக்கூடும் என்றது இந்தக் கோட்பாடு. அதற்குத் துணையாக எண்ணற்ற உதாரணங்களைக் காட்டினார் டார்வின்.

கடவுள் அல்லது பிரபஞ்ச சக்தி என்ற ஒரு கோட்பாடு இல்லாமலேயே, புதிது புதிதாக உயிரினங்கள் உருவாக முடியும். இந்த உலகத்தில் பல்வேறு உயிரினங்கள் வாழ்ந்த காலத்தில் மனிதன் என்ற உயிரினமே இல்லாமல் இருந்தது. ஆனால் இப்போது மனிதன் என்ற உயிரினம் உள்ளது. இன்று இல்லாத பல உயிரினங்கள் நாளை உருவாகலாம். இன்று இருக்கும் பல உயிரினங்கள் நாளை இல்லாமல் போகலாம்.

அப்படியென்றால் எந்த அடிப்படையில் இந்தப் புதிய உயிரினங்கள் உருவாகின்றன? எந்த அடிப்படையில் அவை அழிகின்றன?

இந்த இடத்தில்தான் டார்வின் தனது கோட்பாடான ‘இயற்கைத் தேர்வு’ என்பதை முன்வைத்தார். எந்த உயிரினம் பிழைக்கிறது அல்லது எந்தப் புதிய உயிரினம் ‘தோன்றுகிறது’ என்பதை இயற்கைதான் தீர்மானிக்கும். ஆனால், இந்த இடத்தில் ‘இயற்கை’ என்றால் அது யாரோ ஒருவர் உட்கார்ந்து திடீரென எடுக்கும் ஒரு முடிவல்ல இது. சுற்றுச் சூழலும் பிற உயிரினங்களும் ஒரு குறிப்பிட்ட உயிரினத்தின், அந்த உயிரினத்தின் தனிப்பட்ட நபர்கள்மீது உருவாக்கும் விளைவு.

இதை முழுமையாகப் புரிந்துகொள்வதற்குமுன், நாம் தெரிந்துகொள்ளவேண்டிய வேறு ஒன்று உள்ளது. அதைப் பார்த்துவிட்டு இயற்கைத் தேர்வுக்கு வருவோம்.


ர் உயிரினத்துக்கும் அதில் உள்ள ஒரு தனிப்பட்ட உயிருக்கும் என்ன தொடர்பு? இரண்டு வெவ்வேறு உயிரினங்களில் உள்ள இரண்டு தனித்தனி உயிர்களுக்கு இடையே என்ன தொடர்பு? அதாவது ஒரு குறிப்பிட்ட யானைக்கும், ஒரு குறிப்பிட்ட குரங்குக்கும் இடையே ஏதாவது தொடர்பு உள்ளதா?

வாழை மரங்களைப் பார்த்தால் பெரும்பாலும் ஒரே மாதிரியாகத் தெரிகின்றன. தாய் மரம், குலை தள்ளியபிறகு குட்டி மரம் பக்கத்தில் தோன்றுகிறது. ஒரு மரத்திலிருந்து விழும் கனியின் விதையைக் கொண்டு, மற்றொரு மரம், கிட்டத்தட்ட முந்தைய மரம் போன்றே உருவாகிறது.

விலங்குகளுக்கு பெரும்பாலும் தாய், தந்தை என்று இரண்டு பேர் தேவைப்படுகிறார்கள். இருவரும் சேர்ந்து உருவாக்கும் பிள்ளைகள், தாய், தந்தை ஆகிய இருவருடைய பண்புகளையும் குணநலன்களையும் கொண்டவர்களாக இருக்கிறார்கள். மனிதர்களை எடுத்துக்கொண்டால், சில சமயம் குழந்தை பார்க்க ‘அப்பாவைப் போல’ உள்ளது, சில சமயம் ‘அம்மாவைப் போல’. சில சமயம் மூக்கு அப்பாவைப் போலவும், உயரம் அம்மாவைப் போலவும் உள்ளது.

ஆக, பெற்றோர்களிடமிருந்து ஏதோ வழியில் பண்புகள், குணங்கள் பிள்ளைகளுக்குப் போகின்றன என்பது கண்ணால் பார்க்கும்போதே விளங்குகிறது. கிரிகோர் யோஹான் மெண்டல் (1822-1884) என்பவர் பட்டாணிச் செடிகளைக் கொண்டு செய்த சில ஆராய்ச்சிகளில் மிக நுட்பமான சிலவற்றைப் புரிந்துகொண்டார். அவர் அந்த நேரத்தில் வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும், பின்னர் வந்த விஞ்ஞானிகள் தெளிவாகப் புரிந்துகொண்டது இதுதான். மரபணு (gene) என்ற ஒரு குறிப்பிட்ட பொருளின் மூலம்தான் பெற்றோர்களின் பண்புகள் பிள்ளைகளுக்குப் போகின்றன.

தென்னை மரமானாலும் சரி, குரங்கு ஆனாலும் சரி, எருமை மாடு ஆனாலும் சரி, மனிதர்கள் ஆனாலும் சரி, இந்த மரபணுக்கள் மூலம்தான் பண்புகள் பெற்றோரிடமிருந்து பிள்ளைகளுக்குப் போகின்றன.

பிறக்கப்போகும் குழந்தை எருமையின் கொம்புகள் எப்படி வளைந்திருக்கவேண்டும், அதன் தோலின் கருமை எப்படி இருக்கவேண்டும், அது ஆணா, பெண்ணா ஆகியவை அது பிறப்பதற்கு மிக முன்னதாகவே, அந்தக் குழந்தையின் பெற்றோர் எருமைகள் இரண்டும் உடலுறவு கொண்டு ஆணின் விந்தும் பெண்ணின் முட்டையும் இணைந்து சினைமுட்டை உருவாகும்போதே தீர்மானம் ஆகிவிடுகிறது.

பெரும்பாலும் விலங்குகளுக்கு மத்தியில் ஏற்படும் உடலுறவின்போது, தாய், தந்தை இருவரிடமிருந்தும் சம அளவில் மரபணுக்கள் வந்து சேருகின்றன. (தேனீ, எறும்பு போன்ற சில விலங்குகளில் தாயும் தந்தையும் சம அளவில் மரபணுக்களைத் தருவதில்லை. அவற்றைப் பற்றி விளக்கமாக நாம் பார்க்கவேண்டாம்.) இந்த மரபணுக்கள்தான் குழந்தையின் அனைத்துத் தன்மைகளையும் முடிவு செய்கின்றன.

இந்த மரபணுக்கள் ஒருவித புரத ரசாயனங்கள். இவை டி.என்.ஏ என்று சொல்லப்படும் டி-ஆக்சி ரிபோ நியூக்ளிக் அமிலம் என்ற ரசாயன வடிவில் காணப்படுகின்றன.

நமது புராணங்களில் ராட்சதர்களின் உயிர் எங்கேயோ ஏழு கடலுக்கு அப்பால், ஒரு கிளியின் உடலில் மறைத்துவைக்கப்பட்டிருக்கும் என்றெல்லாம் கதை வரும் அல்லவா. அப்படியல்ல இந்த டி.என்.ஏ என்பது. இது உயிரின் ஒவ்வொரு செல்லிலும் உள்ளது.

ஒரு மரத்தை எடுத்துக்கொண்டால், அதன் பட்டையில், அதன் பூவில், அதன் காம்பில், அதன் கனியில், அதன் இலையில் என்று எங்கு பார்த்தாலும் உள்ளது. இரண்டு வெவ்வேறு வேப்ப மரங்களை எடுத்துக்கொண்டு, ஒவ்வொரு மரத்திலிருந்தும் ஓர் இலையையும் ஒரு வேப்பங்கொட்டையையும் கொண்டுவந்து கொடுத்தால், அதில் எந்த இலையும் எந்தக் கொட்டையும் ஒரே மரத்திலிருந்து வந்தது என்பதை மிகச் சரியாகக் கண்டுபிடித்துவிடலாம்!

மனிதர்களிடமிருந்து ஆளுக்கு ஒரு சொட்டு ரத்தம், ஒரு முடி அல்லது துளி நகம் என்று கொண்டுவந்து கொடுத்தால், ரத்தமும் முடியும் நகமும் ஒருவருடையதா இல்லையா என்று கண்டுபிடித்துவிட முடியும்.

இந்த டி.என்.ஏ என்பது நமது கையெழுத்து மாதிரி, நம்முடைய கட்டைவிரல் ரேகை மாதிரி, இல்லையில்லை அவற்றைவிடவும் மேம்பட்டது. ஏமாற்றவே முடியாத தனி அடையாளம். நம் ஒவ்வொருவரின் டி.என்.ஏவும் அடுத்தவருடைய டி.என்.ஏவிலிருந்து மாறியுள்ளது. ஒரே பெற்றோருக்குப் பிறக்கும் வெவ்வேறு குழந்தைகளின் டி.என்.ஏவும் மாறி மாறித்தான் இருக்கும். (இங்கும் தேனீக்கள், எறும்புகள் வித்தியாசப்படும், அவற்றை விட்டுவிடுவோம்.)

மனிதர்களில், இரட்டைக் குழந்தைகள் பிறக்குமல்லவா? அதில் அச்சான இரட்டையர்கள் உண்டு. விந்தும் முட்டையும் இணைந்து உருவான ஒரு சினைமுட்டை, ஏதோ சில காரணங்களால் இரண்டாகப் பிரிந்து, இரண்டும் தனித்தனியாக இரு குழந்தைகளாக மாறும்போதுதான் இந்த ‘அச்சான இரட்டையர்கள்’ பிறக்கிறார்கள். இவர்கள் இருவரது டி.என்.ஏவும் ஒரே அச்சாக இருக்கும். ஆனால், இங்குகூட இவர்கள் இருவரும் ஒரே வயது வரை உயிர்வாழ்வார்கள் என்றோ, இருவரும் ஒரேமாதிரியான உடல நலத்தோடு இருப்பார்கள் என்றோ அறுதியிட்டுச் சொல்லமுடியாது.

இருவரும் வெளி உலகோடு உறவாடும்போது, தங்கள் வளர்ச்சியில் பெரும் மாற்றம் அடைவார்கள்.

இவர்களை விலக்கிவிட்டுப் பார்க்கும்போது, பொதுவாக ஒவ்வோர் உயிருக்கும் அதற்கே உரித்தான ஒரு டி.என்.ஏ உள்ளது என்பதை ஏற்றுக்கொள்ளலாம்.

இப்போது நம்முடைய கேள்விக்கு வருவோம். இரண்டு எருமை மாடுகளை எடுத்துக்கொள்வோம். இவற்றின் டி.என்.ஏ-க்கள் எப்படி இருக்கும்.

கிட்டத்தட்ட ஒன்றாக இருக்கும். சில இடங்களில் மட்டும் மாற்றம் இருக்கும். அந்த மாற்றங்களின் காரணமாகத்தான் ஒன்றின் கொம்பு சற்றே நீண்டும், மற்றொன்றின் கொம்பு சற்றே சுருண்டும் இருக்கும்.

இரண்டு மனிதர்களை எடுத்துக்கொண்டால், அங்கும் அப்படியே. உயரம், அகலம், தோல் நிறம் என்று எதை எடுத்தாலும் அந்த மாற்றங்கள் டி.என்.ஏ மரபணு மாற்றங்களால் உருவானவையே.

பெற்றோர் டி.என்.ஏவுக்கும் பிள்ளைகள் டி.என்.ஏவுக்கு என்ன உறவு? தாயின் டி.என்.ஏவும் மகனின் டி.என்.ஏவும் பாதிக்குப் பாதி அச்சு அசலாக இருக்கும். மகனின் மீதிப் பாதி டி.என்.ஏ, தந்தையின் டி.என்.ஏவுடன் பாதி பொருந்திப் போகும்.

ஒரு குடும்பத்துக்குள்ளாக டி.என்.ஏ அதிகம் பொருத்தம் கொண்டதாக இருக்கும். குடும்பத்துக்கு வெளியே, பொதுவாக ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள் அல்லது ஒரே மாநிலத்தைச் சேர்ந்தவர்களின் டி.என்.ஏவில் அதிக ஒற்றுமை இருக்கும். தொடர்ந்து அவர்கள் தங்களுக்குள் மணம் முடித்து, பிள்ளைகளை உருவாக்கும் காரணத்தால் இப்படி இருக்கும். இந்தியர்களின் டி.என்.ஏ, பொதுவாக அதிக ஒற்றுமை கொண்டதாகவும், சீனர்களின் டி.என்.ஏவைவிட சற்றே வித்தியாசம் கொண்டதாகவும் இருக்கும்.

இன்னும் ஒருபடி மேலே போய், எருமை மாட்டின் டி.என்.ஏவையும் மனிதனின் டி.என்.ஏவையும் ஒப்பிட்டால், இங்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. என்ன? இரு மனிதர்களின் டி.என்.ஏ-க்களுக்கு இடையே இருக்கும் அளவுக்கான ஒற்றுமை இருக்காது.

மொத்தத்தில் உலகில் உள்ள அனைத்து உயிரினங்களின் டி.என்.ஏக்களும் ஒன்றோடு ஒன்று ஏதோ ஓரளவுக்காவது ஒற்றுமை கொண்டதாக இருக்கும். நெருங்கிய இரு உயிரினங்கள் - அதாவது குரங்கும் மனிதனும், எருமை மாடும் பசு மாடும், நாயும் ஓநாயும், புலியும் பூனையும் - என்று எடுத்துக்கொண்டால் ஒற்றுமை அதிகமாக இருக்கும். இல்லாவிட்டால் ஒற்றுமை குறைந்துகொண்டே போகும்.


ப்போது, இயற்கைத் தேர்வுக்கு வருவோம். இயற்கையில் ஒரு ரசாயனம், பல காரணங்களால் வேறொரு ரசாயனமாக மாறும். பாலைக் கொதிக்கவைக்கும்போது, அது காய்ந்த பாலாக மாறுகிறது. அப்போது ரசாயன மாற்றம் ஏற்படுகிறது. பிறகு அந்தக் காய்ந்த பாலில் உறை ஊற்றினால், அது தயிராக மாறுகிறது. மற்றொரு ரசாயன மாற்றம்.

புளிக்கரைசலையும் தக்காளிச் சாற்றையும் மிளகாய்ப் பொடியையும் ஒருசேர அடுப்பில் வைத்துக் கொதிக்கவைத்தால் சில ரசாயன மாற்றங்கள் நிகழ்ந்து, நாம் உண்ணும் ரசமாக மாறுகிறது. சாதம் வேகும்போதும், சப்பாத்தி தீயில் வாட்டப்படும்போதும், அப்பளம் பொறிக்கப்படும்போதும் ரசாயன மாற்றங்கள் நிகழ்ந்தவண்ணம் உள்ளன.

எவ்வளவோ இயற்கைக் காரணங்களால் இந்த ரசாயன மாற்றங்கள் நிகழலாம். மின்சாரம் பாயும்போது, சூடாக்கப்படும்போது, வேறு சில ரசாயனங்கள் மேலே படும்போது, கதிர்வீச்சு படும்போது என்று பல காரணங்கள்.

இப்படிப்பட்ட நிலையில், ஓர் உயிரினத்தின் உடலில் உள்ள சில செல்களில் உள்ள டி.என்.ஏக்கள் மாற்றம் பெறுகின்றன. இந்த மாற்றத்தை அந்த உயிரினம் பெரும்பாலும் சரி செய்துவிடும். அதாவது மாறிய டி.என்.ஏக்களைத் திரும்ப, பழையபடி, மாற்றிவிடும். ஆனால் எல்லா நேரங்களிலும் இது நிகழாது. இப்படி வெறும் ‘சான்ஸ்’ ஆக, ஏதோ ஒரு பிராணியில் ஏதோ சில டி.என்.ஏ மாற்றங்கள் நிகழ, அந்த மாற்றங்கள் அடுத்த வம்சத்துக்குச் செல்லத் தொடங்குகிறது. அதாவது இந்தப் பிராணியின் குட்டிகள் மட்டும் பிறவற்றிலிருந்து ஏதோ ஒரு டி.என்.ஏ மாறுபாட்டை அடைகின்றன.

உதாரணத்துக்கு, நம் வீட்டுச் சமையலறையில் உள்ள கரப்பான் பூச்சி வகைகளை எடுத்துக்கொள்வோம். இரண்டு கரப்புகள் எப்படியோ நம் வீட்டுக்குள் நுழைந்து குட்டிகளாகப் போட்டுத் தள்ளி, அவை சமையலறையில் எங்கு பார்த்தாலும் மேய்கின்றன. நமக்கோ கடும் கோபம். நாளை கடைக்குச் சென்று ஏதாவது கரப்பு மருந்து - ‘ஹிட்’ - வாங்கிவந்து அடித்து, இவற்றைக் கொன்றுவிடவேண்டும் என்று முடிவெடுக்கிறோம்.

இதற்குள் அந்த வம்சத்தில் இரண்டு கரப்புகள் நம் வீட்டு மைக்ரோவேவ் அவனுக்குள் நுழைந்துவிடுகின்றன. மைக்ரோவேவ் கதிர்கள் அவற்றின்மீது பட்டதும் அவற்றின் டி.என்.ஏவில் சிறிய மாற்றம். உடனே அவை தமது வடிவத்தை மாற்றி ஏதோ ஒருவித ராட்சத உருவமாக ஆகிவிடும் என்றெல்லாம் நினைக்கவேண்டாம். அது ஹாலிவுட் சினிமாவில்தான் நடக்கும். இங்கே கண்ணுக்கே தெரியாத சிறு மாற்றம் அதன் உடலுக்குள் உள்ள சில செல்களில் உள்ள டி.என்.ஏக்களில் நிகழ்ந்திருக்கும்.

இந்த இரண்டு மைக்ரோவேவ் சுட்ட கரப்புகளும் சாகவில்லை. அவை உடலுறவு கொண்டு, சில முட்டைகளைப் போடுகின்றன.

அடுத்த நாள், நீங்கள் ‘ஹிட்’ அடிக்கிறீர்கள். பெரும்பான்மை கரப்புகள் சாகின்றன. ஆனால் மைக்ரோவேவ் சுட்ட கரப்புகள் ஈன்ற குழந்தைகள் சில - ஏதோ காரணத்தால், அவற்றின் டி.என்.ஏ மாற்றத்தால் - பிழைத்துவிட்டன. இப்போது என்ன ஆகும்? இந்த ‘ஹிட்’டால் சாகாத கரப்புகள் பல்கிப் பெருகும். மற்றவை அதிகமாக, வேகமாகச் சாகும்.

இந்த டி.என்.ஏ மாற்றம் அந்தக் கரப்புகளைப் பொருத்தவரையில் நன்மைக்கானது. வெகு விரைவில் ‘ஹிட்’ அடித்தால் சாகவே சாகாத ஒரு கரப்புப் படை நமது சமையலறையை ஆக்ரமிக்கும். அப்போது வேறு ஏதேனும் புதிய பூச்சி மருந்தைக் கண்டுபிடித்து அவற்றை அழிக்கவேண்டும்.

இப்படி தொடர்ச்சியான டி.என்.ஏ மாற்றங்களால், ஒரு கரப்பிலிருந்து சற்றே வித்தியாசமான கரப்பினம் உருவாவதுபோல, கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து அவை பறக்கும் கரப்புகளாக, மிகப்பெரிய கரப்புகளாக மாறி, அங்கிருந்து, கொம்புகள் முளைத்த வண்டுகளாக மாறி, அங்கிருந்து நான்கு கால் முயலாக மாறி… பின் குரங்காக மாறி, பின் மனிதனாக மாறியிருக்கலாம்.

இதைத்தான் இயற்கைத் தேர்வு என்ற கொள்கை முன்வைத்தது. எவ்வளவோ காரணங்களால் ஒரு குறிப்பிட்ட உயிரின் டி.என்.ஏ மாறுகிறது. அந்த மாற்றம் நன்மையைத் தரும் என்ற பட்சத்தில் அந்தப் பிராணியின் குடும்பம் பல்கிப் பெருகுகிறது. இப்படி பல்வேறு மாறுபாடுகள் தோன்றுகின்றன. ஒவ்வொரு மாறுபாடும் பெருமளவுக்கு முதலில் குறிப்பிட்ட உயிரினத்திலிருந்து விலகும்போது, புதிய உயிரினம் தோன்றுகிறது.

இந்தப் புதிய உயிரினங்களின் செயல்பாடுகள், உணவுப் பழக்கம் என அனைத்தும் மாறுதலாக உள்ளன.

இந்த உயிரினங்கள் அனைத்தும் குறைவாக இருக்கும் உணவுக்காக ஒரே பகுதியில் போட்டியிடும்போது, ‘வலியது வாழ்கிறது’, ‘வலிமையற்றது சாகிறது’. இது ஒரு குறிப்பிட்ட உயிரினத்தின் பல்வேறு தனி நபர்களுக்கும் பொருந்தும். பல உயிரினங்களுக்கு இடையிலும் பொருந்தும்.

இப்படியாகத்தான் பல்வேறு புதிய புதிய உயிரினங்கள் தோன்றின. இன்றும் புதிய மாறுபாடுகள் தோன்றிக்கொண்டே இருக்கின்றன.

அப்படியானால் ‘மனிதன் பாதி - மிருகம் பாதி, கலந்து செய்த கலவை’ ஒன்றைக் காண முடியுமா என்று நீங்கள் கேட்கலாம். மனிதத் தலையும் சிங்க உடலும் கொண்ட ஒரு புதிய உருவம்? ம்ஹூம். சான்ஸே இல்லை.

இந்த மாறுபாடுகள் நடக்க பல ஆயிரக்கணக்கான, பல லட்சக்கணக்கான வருடங்கள் ஆகும். இந்த மாற்றங்கள் படிப்படியாக நடப்பவை. நமது வாழ்நாளோ 100 வருடத்துக்கு உட்பட்டது. ஆனால், புதைபடிவங்களைத் தோண்டும்போது எக்கச்சக்கமான உதாரணங்கள் கிடைத்துள்ளன. நாம் சற்றும் எதிர்பார்க்காத இடைநிலை உயிர்கள் கிடைத்துள்ளன.


ரி, டி.என்.ஏ, மரபணு, எல்லாம் சொல்லிவிட்டோம். இதற்கும் உயிருக்கும் என்ன சம்பந்தம் என்று சற்றே அலசுவோம்.

உயிர் என்றால் என்ன?

எது ஒன்று, தானாகவே தனக்குத் தேவையான எரிபொருளை - உணவை - பெற்றுக்கொண்டு, தன்னைத் தானே பிரதி எடுத்துக்கொள்கிறதோ, அதுதான் உயிர். மனிதன் அதைத்தான் செய்கிறான். மாடும் அதைத்தான் செய்கிறது. பேக்டீரியமும் அதைத்தான் செய்கிறது. மாமரமும் அதைத்தான் செய்கிறது.

எல்லா உயிரின் அடிப்படை நோக்கமுமே தன்னை அப்படியே பிரதி எடுத்தல். அப்படியே என்றால், முழுவதுமாக. முடியாவிட்டால், குறைந்தது தன்னில் பாதியையாவது. இங்கே ‘தான்’ என்றால் என்ன? அதுதான் டி.என்.ஏ. எல்லா உயிரும் என்ன செய்ய முயற்சிக்கிறது? தன் டி.என்.ஏவை முழுமையாக, முடியாவிட்டால் தன் டி.என்.ஏவில் பாதியையாவது அல்லது ஒரு பகுதியையாவது பிரதி எடுத்து அடுத்த உயிருக்குள் அதை அனுப்பச் செய்கிறது.

பல உயிர்கள் இப்படி எக்கச்சக்கமான பிரதிகளை உருவாக்குகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்வரையில், மனிதர்கள் நான்கைந்து பிரதிகளை உருவாக்கினார்கள். இப்போதெல்லாம் குடும்பக் கட்டுப்பாடு காரணமாக, ஒன்றில் வந்து நிற்கிறது.

அறிவியல் மேம்பாடு அடைவதற்கு முன்னமேயே, செயற்கையான முறையில் புதிய உயிரினங்களை உருவாக்குவதில் மனிதன் நிறையவே முயற்சி செய்து வெற்றி கண்டுள்ளான். ஒட்டுவகைத் தாவரங்களை உருவாக்குவதன்மூலம், வீரிய விதைகளை உருவாக்குவதன்மூலம் அதிக விளைச்சல் தரும் நெல், பட்டாணி, பருத்தி வகைகளை மனிதன் உருவாக்கினான். அதேபோல, விலங்குகளைச் சரியான முறையில் உறவு கொள்ள வைத்து பல்வேறு வகையான நாய்கள், புறாக்கள், குதிரைகள் போன்ற தனக்கு உபயோகமான விலங்கு வகைகளை உருவாக்கினான்.

ஆனால் 1980-க்குப் பிறகான ஆராய்ச்சிகளில் குளோனிங் என்ற புதிய முறை சிந்தனைக்கு வரத்தொடங்கியது. குளோனிங் என்றால் நகலாக்கம் என்று சொல்லலாம். நகலாக்குவது என்றால் என்ன? ஏற்கெனவே இருக்கும் ஓர் உயிரை - அதாவது ஒரு பிராணியை - அப்படியே அச்சு அசலாக அதேமாதிரி ஆக்குவது.

மல்லிகா ஷெராவத் என்ற தசாவதாரம் திரைப்படத்தில் நடித்த நடிகை போல, அதேமாதிரி அச்சு அசலாக இன்னொரு மல்லிகாவை உருவாக்க முடியுமா? எடுத்த எடுப்பில் விஞ்ஞானிகள் அதை அடைய முயற்சி செய்யவில்லை. பாலிவுட் நடிகைக்கு பதிலாக, ஓர் ஆடு, ஓர் எலி, ஒரு தவளை, ஒரு மாடு என்று யோசித்தார்கள்.

இதை எப்படிச் சாத்தியமாக்குவது? ஒன்றைப் போல அச்சு அசலாக இன்னொன்று வேண்டுமானால் இரண்டுக்கும் ஒரே டி.என்.ஏ இருக்கவேண்டும். ஏற்கெனவே இருக்கும் ஒரு மாட்டின் டி.என்.ஏ போல புதிதாகக் கன்று ஈனும் ஒரு தாய்மாட்டின் வயிற்றுக்குள் எப்படிச் செய்வது?

இதற்கு சில வித்தைகளைக் கண்டுபிடித்தனர் விஞ்ஞானிகள். அதற்கு ஏற்ற கருவிகளும் உருவாக ஆரம்பித்திருந்த காலம் இது.

முதலில் கல்யாணி என்ற மாட்டை எடுத்துக்கொள்வோம். நல்ல பசுமாடு. அதற்கு அழகான சாந்தமான முகம். கிட்டே போனால் முட்டாது. வெள்ளை வெளேரென்ற நிறம். நெற்றியில் திலகம் இட்டதுபோல பிரவுன் வண்ணத்தில் இருக்கும். வயிற்றுப் பகுதியில் சில இடங்களில் கறும் திட்டுகள். இந்த மாட்டின் தோலை உராய்ந்து அல்லது ரத்தம் ஒரு சொட்டு எடுத்து, அதில் உள்ள ஒரு செல்லைப் பிரித்து எடுத்து, அதையும் பிளந்து அதன் நடுவில் உள்ள டி.என்.ஏவை நம் விஞ்ஞானிகள் எடுத்துவிடுகிறார்கள்.

மற்றொரு பக்கம் ஒரு ஆண் மாடு, ஒரு பெண் மாடு. ஆண் மாட்டின் விந்து, பெண் மாட்டின் முட்டை. இவை இரண்டையும் டெஸ்ட் டியூபில் சேர்த்து கருத்தரிக்க வைக்கிறார்கள். நான்கைந்து முட்டைகள் கருத்தரிக்கின்றன.

ஆனால், இவற்றை அப்படியே விடுவதில்லை. இந்த சினைமுட்டை ஒன்றை எடுத்து, கவனமாக ஓட்டைபோட்டு, அதில் உள்ள டி.என்.ஏவை எடுத்துவிட்டு, அந்த இடத்தில் கல்யாணியின் உடம்பிலிருந்து எடுத்த டி.என்.ஏவைப் புகுத்துகிறார்கள். பிறகு இந்த நான்கைந்து ‘கல்யாணி’ சினைமுட்டைகளையும் நான்கைந்து மாடுகளின் கருப்பைக்குள் கவனமாக விட்டுவிடுகிறார்கள்.

சில மாடுகளில் இந்த சினைமுட்டை முழுமையான குட்டியாகக் கருத்தரிக்காமல் வெளியே தள்ளப்படலாம். அதனால்தான் நான்கைந்து. ஏதோ ஒன்றிலாவது இந்த சினைமுட்டை வளர்ந்து கருத்தரித்து, குட்டியாகப் பிறக்குமே என்பதற்காக.

ஒன்று முழுமையாக கருவாகி, குட்டியையும் ஈனுகிறது. என்ன ஆச்சரியம்? அப்படியே கல்யாணி பிறந்தபோது எப்படி இருந்ததோ அதையே உரித்துவைத்தாற்போல உள்ளதே? நெற்றியில் சாந்துப் பொட்டு அப்படியே. தோலின் நிறம் அப்படியே. உடலில் கறும் திட்டுகள் அதே அதே இடங்களில், அதே வடிவத்தில், அதே அளவில்! நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இந்த மாடு வளரும்போது அப்படியே கல்யாணி வளர்ந்தவிதமாகவே உள்ளது - நீங்கள் சரியான போஷாக்கை அப்படியே அளித்துவந்தால்.

இதுதான் நகலாக்கம். கல்யாணியை நகலெடுப்பதுபோல மல்லிகா ஷெராவத்தையும் நகலெடுக்கலாம்.

ஆனால் உலக நாடுகள் யாவுமே மனிதர்களை நகலெடுப்பது அறநெறி சார்ந்த பிரச்னை என்று இதற்கு இதுவரை அனுமதி கொடுக்கவில்லை. உடல் பார்க்க ஒன்றாக இருந்தாலும், மூளை, அது செயல்படும் விதம் ஆகியவை அச்சாக ஒரேமாதிரி இருக்கும் என்று சொல்லமுடியாது. அது வெளிப்புறச் சூழல் எப்படி உள்ளதோ அதைப் பொருத்தே அமையும். குளோன் மல்லிகா ஷெராவத், சினிமாவில் டான்ஸ் ஆடாமல், டாக்டருக்குப் படித்து யாருக்காவது ஊசி போடலாம். அல்லது நாவல் எழுதி புக்கர் பரிசு வாங்கலாம்.


துவரை செய்ததுகூட இருக்கும் உயிரை நகலாக்கி, சிருஷ்டியை நம் கையில் எடுத்துக்கொண்டது. ஆனால் சில விஞ்ஞானிகள் இத்துடன் நிறுத்திக்கொள்ள விரும்பவில்லை. புதிய உயிரைச் சமைப்போம் என்றனர்.

ஏதோ இரண்டு உயிரினங்களின் டி.என்.ஏக்களை எடுத்துக்கொள்ளுங்கள். அவற்றின் டி.என்.ஏக்களை கண்ட இடத்தில் வெட்டி, இரண்டையும் சேர்த்து ஒட்டுங்கள். சிவப்பு ரிப்பன் ஒன்று, கறுப்பு ரிப்பன் ஒன்று. இரண்டையும் ஏதோ ஓரிடத்தில் வெட்டி, சேர்த்துத் தைத்தால் கிடைக்கிறதல்லவா புதிய (திமுக) ரிப்பன். அதைப்போல.

இந்த டி.என்.ஏவை ஒரு சினைமுட்டைக்குள் செலுத்தி, அது குழந்தையாகப் பிறந்தால் எப்படி இருக்கும்?

அதற்கு எத்தனை கை, கால்கள் இருக்கும்? அதற்கு எத்தனை கண்கள், மூக்குகள், வாய்கள் இருக்கும்? அதன் உடல் எப்படி இருக்கும்? நினைக்கவே பயங்கரமாக உள்ளதல்லவா?

இப்படி வெட்டி ஒட்டி உருவாக்கப்படும் டி.என்.ஏவுக்கு, ரிகாம்பினண்ட் டி.என்.ஏ என்று பெயர். ஆனால் அறிவியல் உலகம் மிகவும் பயப்படுகிறது. இப்படி, நமக்கே தெரியாத ஏதோ ஒரு புதிய உயிரினத்தை நாம் உருவாக்க, அது பிறந்தவுடன், நம்மையை கடித்து விழுங்க ஆரம்பித்துவிட்டால்? அதை நம்மால் கொலை செய்யவே முடியவில்லை என்றால்?

என்ன ஆகும்? உலகமே அழிந்துவிடாதா? மனித இனமே நசித்துப் போய்விடாதா?

இந்த உயிரினம் நம்மை விழுங்கித்தான் ஆகவேண்டும் என்பதில்லை. இது ஒரு சிறு வைரஸ் அல்லது பேக்டீரியமாக இருக்கலாம். கண்ணுக்கே தெரியாமல் ஏதோ ஒரு சோதனைச் சாலையில் உருவாகி, வெளியே காற்றோடு பறந்துவந்து, மனிதர்களை ஏதோ ஒரு வியாதியாகப் பீடித்து, கொத்து கொத்தாகக் கொன்று மடியச் செய்யலாம்.

எவ்வளவு நாளைக்குத்தான் விஞ்ஞானிகள் பயந்தபடி இருப்பார்கள்? நாளையே சிலர், யாருக்கும் தெரியாமல் இதைச் செய்தால் என்ன ஆகும்? இந்த நிமிடத்திலேயே யாரோ இந்த உலகின் எங்கோ ஒரு கோடியில் இதைச் செய்துகொண்டிருக்கிறார்கள் என்றால் என்ன நடக்கும்?

இதில் உள்ள அறிவியல் கேள்விகள் என்னென்ன? இருப்பியல் கேள்விகள் என்னென்ன? கடவுள் இருக்கிறாரா, இல்லையா? மனிதனே சிருஷ்டி செய்ய ஆரம்பித்தால், இரண்டு குழுக்களாகப் பிரிந்து, ஆளாளுக்குப் புதிய உயிரினங்களை உருவாக்கி ஒருவர்மேல் ஒருவர் ஏவினால் என்ன ஆகும்?

கேள்விகள் பல? பதில்களே இல்லாமல்...!

- பத்ரி சேஷாத்ரி

http://www.ariviyal.info