எந்தவொரு விடயத்திலும் எனது தாயாருடன் உண்டாகும் மனஸ்தாபத்தை குறைப்பது எப்படி?
இது எந்தவொரு வீட்டிலும் உண்டாகும் ஒரு குளப்ப நிலையாகும். இதை சந்ததிகளுககு இடையிலான சச்சரவு என்று கூறுவார்கள். அணியும் உடை, உண்ணும் உணவு, படுக்கையறையின் சுவரின் நிறம், நண்பர்கள், வெளியே போய்வருவதிலிருந்து படுக்கைக்கு செல்லும் நேரம் என எல்லாவற்றிலும் அபிப்பிராயபேதம் உண்டாகும்.
இது ஏன் என நீங்கள் சிந்தித்துப்பார்த்தால், நீங்கள் சிறு வயதாக இருக்கும் போது உண்ணும் உணவிலிருந்து உடுக்கும் உடைவரை உங்களுக்கு தேவையானவற்றை உங்கள் பெற்றோர்தான் தீர்மானித்திருக்கிறார்கள். சுயமாக எதையும் தீர்மானிக்க இயலாத அவ்வயதில் இது உங்களுக்குத் தேவையான பாதுகாப்பு மிக்க விடயமாக இருக்கும்.
ஆனால் நீங்கள் வளரத் தொடங்கி இளவயதை அடையும் போது உங்களுக்குத் தேவையானவற்றை நீங்களே தேர்ந்தெடுக்கும் தன்மையை கொண்டு வளரத் தொடங்கும் போது இவற்றை உங்கள் பெற்றோரால் இலகுவாக ஏற்றுக்கொள்ள முடியாதிருக்கும். ஆகவே சில விடயங்களில் உங்களுடன் அவர்கள் ஒத்துப் போக முடியாமல் தவிக்கும போது இருபாலாருக்குமிடையில் சச்சரவும் வாக்குவாதமும் உருவாகும். இதனால் இளவயதினராகிய நீங்கள் உங்களுக்கு தகுந்த மரியாதை பெற்றோரிடமிருந்து கிடைக்கவில்லை என்று கோபமும் பெற்றோருக்கோ நீங்கள் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இல்லை என்ற ஆத்திரமும் உருவாகி உங்கள் இருவருக்கும் இடையேயான இடைவெளி அதிகரிக்கும்.
ஆனால் இந்த சண்டையில் தோன்றும் ஒரு நன்மை என்னவென்றால் பெற்றோருக்கு தமது பிள்ளைகள் சில விடயங்களில் தம்மைவிட வேறுபட்ட கருத்து வேறுபாடுகளை கொண்டிருக்க அவர்களுக்கு உரிமையுண்டு என்பது நன்கு புலப்படும். இருபாலாரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து அடுத்தவரின் கருத்தை புரிந்து நடக்க சில வருடங்கள் பிடித்தாலும் இது மிகவும் ஆரோக்கியமான விடயமாக தோன்றத் தலைப்படும்.
சில வேளைகளில் பெற்றோர் உங்களை புரிந்து கொள்ள மறுக்கும் போது உங்களுக்கு இது சரிப்பட்டு வராது என்று வெறுப்பேற்படக்கூடும். ஆனால் நீங்கள் மனம் திறந்து அவர்களுடன் ஆறுதலாக தெளிவாக பேசி அவர்களை புரியவைக்க முயற்சிப்பீர்களானால் அவர்களுக்கு உங்கள் மேல் மதிப்பும் நம்பிக்கையும் உண்டாகும். இதனால் இருவருமே மகிழ்ச்சியாக வாழ வழிபிறக்கும். ஒன்றை மட்டும் நினைவில் வைத்திருங்கள் உங்கள் பெற்றோரும் ஒரு வயதில் உங்களைப் போல் இளம் பிராயத்தினரே. ஆகவே அவர்களுக்கு நிச்சயம் உங்களை புரிந்து கொள்ள முடியும்.
நீங்கள் உடலுறவை மேற்கொள்வதற்கு உங்களுக்கு எத்தனை வயது ஆக வேண்டும் என நினைக்கிறீர்களா?
16 வயதிற்கு முதல் உடலுறவில் ஈடுபடுவது சட்ட விரோதனமான செயலாகும். அதே நேரம் 16 வயது வந்தவுடன் உடலுறவை மேற்கொள்ளலாம் என்று தவறாக நினைக்க வேண்டாம்.
இள வயதில் உடலுறவை மேற்கொண்டவர்கள் பிற் காலத்தில் தாங்கள் தவறு செய்து விட்டோமே என்று நினைத்து கவலைப்படுவது பலபேருக்கு தோன்றிய ஒன்றாகும். கூடுதலாக இளவயதினர் உடலுறவை மேற்கொள்ளாவிட்டால் தாங்கள் விரும்பும் நபர் தங்களைவிட்டு வேறு ஒருவருடன் சென்று விடுவார் என்று தப்புக் கணக்கு போட்டு இச்செய்கைக்கு உட்படுகிறார்கள். இது மிகவும் ஒரு கேவலமான நகைப்பிற்குரிய விடயமாகும். உடலுறவு என்பது ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொண்டபின்பு இருவருக்கிடையே உண்டாகும் ஒரு விசேசமான உறவாகும். ஆகவே அவசரப்படாதீர்கள்.
இதற்கான நேரம் வரும் வரை பொறுத்திருங்கள்.
எனக்கு பருக்கள் அதிகம் ஏற்படுகின்றன. இதற்கு மற்றவர்கள் கூறும் விமர்சனங்கள்; பொறுக்க முடியாமல் இருக்கின்றது. இதற்கு வழி ஏதும் சொல்வீர்களா?
உங்களுக்கு உண்டாகியுள்ள பிரச்சனையை போக்குவதற்கு உங்கள் மருத்துவரை நாடுங்கள். அத்துடன் மற்றவர்களின் விமர்சனங்களை நினைத்து கவலைப்படாதீர்கள். சிலவகை நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகளை 6 கிழமைகளிற்கு தொடர்ந்து எடுப்பதன் மூலமோ அல்லது றோகியுட்டன் என்ற குளிசையை எடுப்பதன் மூலமோ இவற்றை மாற்ற முடியும். ஆகவே மனதை தளரவிடாமல் தைரியமாக வைத்திருங்கள்.
TEENS AND THEIR BURNING QUESTIONS
Question: How can I stop fighting with my mom over every thing?
This is a universal problem. It is also called the ‘generation clash’
The clothes you wear, the food you eat, the colour of your bedroom walls, where you go and how you get there, the people you hang with, what time you go to bed. All lead to conflicts.
What do these things have in common, you're asking? They're just a few examples of the many hundreds of things that your parents decided for you when you were a child. As a kid, you didn't have a say in very much that went on; your parents made decisions about everything from the cereal you ate in the morning to the pajamas you wore at night. And it's a good thing, too - kids need this kind of protection and assistance, because they aren't mature enough to take care of themselves and make careful decisions on their own.
But eventually, kids grow up and become teens. And part of being a teen is developing your own identity - one that is separate from the identities of your parents. It's totally normal for teens to create their own opinions, thoughts, and values about life; it's what prepares them for adulthood.
But as you change and grow into this new person who makes his or her own decisions, your parents may have a difficult time adjusting. They aren't used to the new you yet - they only know you as the kid who had everything decided for you and didn't mind.
In most families, it's this adjustment that can cause a lot of fighting between teens and parents. You want to cover your walls with posters; they don't understand why you don't like your icon on the wall. You think it's OK to come home late after school; they would rather that you play a sport. Clashes like these are very common between teens and parents - teens get angry because they feel parents don't respect them and aren't giving them space to do what they like, and parents get angry because they aren't used to not being in control.
It's easy for feelings to get very hurt when there are conflicts like these. And more complicated issues - like the types of friends you have or your attitudes about sex and partying - can cause even bigger arguments, because your parents will always be intent on protecting you and keeping you safe, no matter how old you are.
The good news about fighting with your parents is that in many families the arguing will lessen as parents get more comfortable with the idea that their teen has a right to certain opinions and an identity that may be different from theirs. It can take several years for parents and teens to adjust to their new roles, though. In the meantime, concentrate on communicating with your parents as best you can.
Sometimes this can feel impossible - like they just don't see your point of view and never will. But talking and expressing your opinions can help you gain more respect from your parents, and you may be able to reach compromises that make everyone happy. For example, if you are willing to clean your room in order to stay out an hour later, both you and your parents walk away with a good deal. Keep in mind, too, that your parents were teens once and that in most cases, they can relate to what you're going through.
Question: How old do you think you have to be to have sex?
It’s illegal to be having sex before the age of 16 in most countries.
But that does not mean you have to start having sex when you are 16. We know that most people who start having sex at a young age often regret it and wish they had waited till they were in a really good loving and trusting relationship. Often young people end up having sex because they think the other person won’t ‘love ‘ them or will go out with someone else if they don’t. This is a silly reason to have sex as sex should be something really special- so wait.
Question: I have bad acne and I am being teased all the time. How can you help me?
I have tried everything on the market and nothing seems to work.
There are other things available to help acne from your doctor. Please do go and discuss the problem with your doctor who won’t tease you. There are various antibiotic pills you can take that might help though you might need to take them for at least 6 weeks before you will know if that particular antibiotic works. If it does not you may need to try a different one or as a last resort some special medicine called roacutane. Don’t give up hope.
http://www.tamilhealth.net/index.php?option=com_content&task=view&id=60&Itemid=64
தலைப்பு : கேள்வி-பதில்