"இது ஒரு டைரி குறிப்பு" - தமிழ்நெஞ்சம் ஹிப்ஸ் [ hifs@live.com ] Tel: +65 91897619


மரணம்!
ஒரு நிகழ்வு.
ஓவ்வொரு கணமும் நடைபெறுகின்றது.
நாம் எதிர்கொள்கின்றோமோ? இல்லையோ?
நாம் அதைக் கவனிக்கின்றோமோ? இல்லையோ?
அது நம்முடன் இருக்கின்றது. வாழ்கின்றது.
நம் மூச்சைப்போல..

மூச்சை உள்ளெடுக்கின்றது முதல் முறை…
ஒரு குழந்தை பிறக்கும் பொழுது…
இதுவே வாழ்வின் ஆரம்பம்…
ஒரு நாள் வயது சென்று இறக்கின்றது.
இதுவே வாழ்வின் முடிவு…
மூச்சை வெளியே விடுகின்றது இறுதியாக…

மூச்சை உள்ளேயெடுக்கும் ஒவ்வொரு கணமும்
பிறப்பு நடைபெறுகின்றது.
மூச்சை வெளியேவிடும் ஒவ்வொரு கணமும்
மரணம் நடைபெறுகின்றது. ஆகவே
ஒன்றை முதலில் புரிந்து கொள்ளவேண்டும்.
மரணம் என்பது எதிர்காலத்தில் நடைபெறப்போகும் ஒன்றல்ல.
நமக்காக காத்துக்கொண்டிருக்கவில்லை.
மரணம் வாழ்க்கையின் ஒரு பகுதி.
இக் கணம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற
ஒரு நிகழ்வு.

வாழ்வும் இறப்பும்
இயற்கையின் இரு பரிமாணங்கள்.
மரணமும் வாழ்க்கையும் இரு சிறகுகள்.
ஓன்று இல்லாமல் மற்றது இல்லை.
ஒரே நேரத்தில் ஒன்றாக நடைபெறுகின்ற ஒன்று.
மரணம் வாழ்க்கைக்கு எதிரானதல்ல.
மரணமின்றி வாழ்க்கை சாத்தியமே இல்லை.
மரணத்தின் அடித்தளத்தில்தான்
வாழ்க்கை இருக்கின்றது.

இறப்பு என்பது என்ன?
இது தொடர்பாக நாம் சரியான புரிதலைக் கொண்டிருக்கவேண்டும்.
மரணம் வாழ்க்கையின் எதிரி அல்ல. நண்பர்.
நாம் பிறந்ததிலிருந்து நம்முடன் வாழ்கின்றது.
நம்மிலிருந்து வெளிச் செல்லும்
ஒவ்வொரு மூச்சும் ஒவ்வொரு சிறிய மரணம்.
நம் பயம் காரணமாக
மரணத்தை எதிர்காலத்தில்
கொண்டு சென்று வைத்துள்ளோம்.

மனம் தன்னால் புரிந்து கொள்ளமுடியாத விடயங்களை தவிர்த்துவிடும்.
மூன்று விடயங்கள் மனதிற்கு அப்பாற்பட்டது.
மனதால் புரிந்து கொள்ளமுடியாதது.
வாழ்க்கை, காதல், மரணம் என்பன…
வாழ்க்கை என்னவென்று தெரியாமலே
வாழ்க்கையை ஏற்றுகொள்கின்றது மனம்!.
மரணத்தை ஏற்றுக்கொள்வது என்பது
மனதிற்கு தொடர்ச்சியான ஒரு பிரச்சனை.
ஆகவே மரணத்தை எதிர்காலத்திற்கு தள்ளிவைத்துவிட்டது.
வரும் பொழுது எதிர்கொள்ளலாம் என்றிருக்கின்றது.

காதலுக்கு பல விடயங்களை பதிலீடாக
மனம் உருவாக்கியுள்ளது.
ஓன்றின் மீதான பற்றை (Possiveness)
நாம் காதல் என சிலவேளைகளில் கூறுவோம்.
அல்லது ஒன்றுடனான நெருக்கத்தை (Attachment)
நாம் காதல் எனக் கூறுவோம்.
சிலவேளைகளில் ஆதிக்கத்தையும் (Power)
நாம் காதல் எனக் கூறுவோம் –
இவை எல்லாம் தன்முனைப்பின் (Ego) விளையாட்டுக்கள்.
இவற்றுடன் காதலுக்கு ஒரு தொடர்பும் இல்லை.
உண்மையில் இவற்றினால் தான்
காதல் சாத்தியமே இல்லாதிருக்கின்றது.

வாழ்வும் மரணமும் இரு கரைகள் போன்றது.
இவற்றுக்கு இடையில் காதல் எனும்
நதி பாய்வதற்கு சாத்தியமுள்ளது.
ஆனால் இது ஒரு “சாத்தியம்” மட்டுமே.

மரணத்தைப் புரிந்துகொள்வோமானால்
மரணத்திலிருந்து நம்மைப் பாதுபகாப்பது தொடர்பாக
சிந்திக்கவே தேவையில்லை.
மரணம் நம்மைக் கொலை செய்யவில்லை.
நாம் வாழும் பொழுது
நமக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கும்
ஒரு நிகழ்வே மரணம்,
வாழ்வு இதனால் அழிக்கப்படவில்லை.
மாறாக ஒவ்வொரு கணமும்
வாழ்வு புதிதாகப் பிறக்கின்றது.
பழைய மலர்கள் ஊதிர
புதிய மலர்கள் தோன்றுகின்றன.
ஒவ்வொரு கணமும்
நாம் இறந்து மறுபிறப்பு எடுக்கின்றோம்.
ஒவ்வொரு கணமும் பழையது மறைந்து
புதியது நம்மில் பிறக்கின்றது.
இது ஒரு தொடர்ச்சியான அதிசயம்.

புரியவேண்டிய இரண்டாவது விடயம்…
மரணம் என்பது நிச்சயமானது.
மற்றவை எல்லாம் நிச்சயமற்றவை.
மற்றவை நடக்கலாம். நடக்காமலும் விடலாம்.
ஆனால் நாம் பிறந்தபோதே
மரணம் நிச்சயிக்கப்பட்டுவிட்டது.
இதைப் புரிந்துகொண்டோமானால்
நாம் நிம்மதியாக இருக்கலாம்.
அமைதியாக கவலையின்றி வாழலாம்.
நிச்சமற்ற தன்மையினால் தான்
கவலை வருகின்றது.
மரணம்!
நிச்சயமானது என்பதை ஏற்றுக்கொள்வோமாயின்
அமைதியான மரணம்
ஒவ்வொருவருக்கும் கிடைக்கும்.
கண்களைத் திறந்து
உங்கள் இறப்பையும் பிறப்பையும் கவனியுங்கள்.
பிரக்ஞையுடன் கவனியுங்கள்.
தவிர்க்காமல் ஏற்றுக்கொள்ளுங்கள்.
ஒருவர் தன் வாழ்வை
முழுமையாக வாழ்வாராயின்
மரணத்தைக் கண்டு பயங்கொள்ளமாட்டார்.
மரணத்தை அழைப்பீர்கள்.

http://www.fixbuy.com/awareness/tamil