"இது ஒரு டைரி குறிப்பு" - தமிழ்நெஞ்சம் ஹிப்ஸ் [ hifs@live.com ] Tel: +65 91897619


தமிழின் அனைத்து சிறந்த நூல்களும் இங்கே அகர வரிசைப்படி தரப்பட்டுள்ளன. பதிவிறக்கம் செய்ய சொடுக்கவும் : http://www.tamilcafe.net/tamilbooks.html


இதோ 773 தமிழ் வலைத்தளங்களின் முகவரிகள் பார்வை இட கீழே சொடுக்கவும் : http://www.esnips.com/doc/e109aefc-bb04-46b1-975b-983e558beac9/Tamizh-Websites

முல்லா தான் மிகவும் குண்டாக இருப்பதை நினைத்து மிகுந்த வருத்தத்தில் இருந்தார், அப்போது நாளிதழில் வந்த ஒரு (கீழ்க்கண்ட) விளம்பரம் கண்ணை கவர்ந்தது

மிகவும் கவர்ச்சிகரமான முறையில் உடம்பு இளைக்க ஒரு வாய்ப்பு !

1) உடல் இளைக்க (சாதாரணம்) – Rs 1,000/- ஒரு மணி நேரம் ( 2 முதல் 5 கிலோ வரை )
2) சூப்பர் ட்ரிம்மர் - Rs 2,000/- இரண்டு மணி நேரம் ( 6 முதல் 10 கிலோ வரை )
3) ஹெவி ட்ரிம்மர் - Rs 3,000/- மூன்று மணி நேரம்( 11 முதல் 15 கிலோ வரை )
4) அல்டிமேட் ட்ரிம்மர் - Rs 10,000/- கால வரையரை இல்லை ( எடை வரையரை இல்லை )

முன்பதிவிற்கு முந்துங்கள்...


முல்லா இந்த விளம்பரத்தைப் பார்த்ததும் அதை முயற்சி செய்து பார்த்துவிடுவது என முடிவெடுத்தார். ஆனாலும், சாதாரண முறையில் முதலில் பரிச்சிக்க விரும்பி அதற்க்கான பணத்தை கட்டினார். அவர் ஒரு காலியான அறையில் விடப்பட்டார். அந்த அறை பதினாறுக்கு பதினாறு என்ற அளவில் இருந்தது. அதன் மூலையில் ஒரு பெண் அமர்ந்திருந்தார் அவளுடைய கையில் ஒரு அட்டை அதில் “ஒரு மணி நேரத்திர்க்குள் என்னை துரத்திப் பிடித்தால் என்னுடன் ஜாலியாக இருக்கலாம்“ என்று எழுதியிருந்தது, முல்லா அந்த பெண்னை துரத்த ஆரம்பித்தார்–அவருக்கு எல்லாம் நல்ல படியாகவே முடிந்தது–அவர் துரத்திய துரத்தலில் அவருடைய எடையும் கனிசமாக குறைந்தது..

முழு திருப்தியுடன் அதற்க்கு அடுத்த முறையை பரிச்சிக்க விரும்பினார் இந்த முறையில் கொஞ்சம் வித்தியாசம். அறையின் அளவு நாற்பதுக்கு நாற்பது, சாதாரண முறையைவிட நல்ல அழகான பெண், கால அவகாசம் இரண்டு மணி நேரம் அவ்வளவுதான், மற்றபடி, முறை ஒன்றுதான். இதிலும் முல்லாவிற்கு முழுதிருப்தி.

மிகவும் மகிழ்ச்சியுடன் அடுத்த முறையை தேர்ந்தெடுத்தார் இதிலும் கொஞ்சம் வித்தியாசம். அறையின் அளவு எழுபத்தைந்துக்கு எழுபத்தைந்து, மிக மிக அழகான பெண், கால அவகாசம் மூன்று மணி நேரம். முல்லா கணிசமாக எடை குறைந்திருந்தார். அவருக்கு, எல்லா முறைகளிலும் தான் சிறப்பாக செய்ததை எண்ணி அளவில்லா ஆனந்தம், கடைசியாக? அல்டிமேட் ட்ரிம்மர் முறையிலும் கலந்து கொள்வது என்று முடிவெடுத்தார், அதற்க்கான பணத்தையும் கட்டினார்.

வரவேர்ப்பாளர் அவரிடம் பதினாறாவது மாடிக்கு நடந்து செல்லும் படி சொன்னார், முல்லாவும் தான் அடையப்போகும் சந்தோஷத்தை எண்ணியவரே கஷ்டப்பட்டு பதினாறாவது மாடியை அடைந்தார். அங்கு அவர் நார்ப்பத்திரண்டாவது மாடிக்கு பதினைந்து நிமிடத்திற்குள் ஓடி வந்து சேர வேண்டும். அப்படி வந்தால் தான் பயிற்சி உண்டு என தெரிவிக்கப்பட்டது, முல்லாவிற்கு வேறு வழியும் இல்லை, தான் காணப்போகும் மிக மிக அற்புதமான அனுபவத்தை நினைத்தவாறு உயிரைக் கொடுத்து ஓடி மாடியை 13 நிமிடத்தில் அடைந்தார். அது மிகப்பரந்த ஒரு மொட்டை மாடி அதன் அளவு சுமார் 500X500 அடி பரப்பளவு இருக்கும், அதன் மூலையில் ஒரு பெரிய அறை அவ்வளவுதான். அவர் மொட்டை மாடியை அடைந்ததும் அவருக்குப்பின் கதவு மூடப்பட்டது, முல்லா மூச்சு வாங்கியவாரே அந்த அறையை நோக்கி நடந்தார் அங்கே! " நான் உன்னை துரத்திப் பிடித்தால், என் ஆசை தீர உன்னை அனுபவிப்பேன் “ என்ற வாசகம் எழுதிய அட்டையுடன் அமைதியாக ஒரு பெரிய மனிதக்குரங்கு அமர்ந்திருந்தது.

-ஓஷோ

அன்பு என்பது எப்போதும் மிக ஆழமானது, மலரும் தன்மையுடையது. அது முழுமையில் கலக்கும் அற்புதக்கலை. யாரும், யாருக்காகவும் இல்லை. உள்ளுக்குள் தனி விருப்பு-வெறுப்புகள் உண்டு, மற்றவர்க்கும் அதே. தனிமையை நாம் விரும்புவதில்லை, அதில் வெறுப்பும் விரக்தியும் உணர்கிறீர்கள். ஆனால், தனியாக சுற்றித்திரிவது தனிமையாகாது ! அது பிரக்ஞை நிலையில் உச்சத்தன்மையில் இருப்பதாகும். அந்த நிலையில் பரவும் அன்பு கொண்டாட்டமானது உங்கள் அன்பை, உங்கள் பாட்டை, உங்கள் இசையை, உங்கள் ஆடலை மற்றும் இந்த அழகிய மரங்களை, வெகுளி நிறைந்த அந்த பறவைகளின் ஒலியை, இரவில் தெரியும் நட்சத்திரங்களை இப்படி எல்லாவற்றையும் உணர்வுபூர்வமாக கொண்டாடுங்கள் பிறரோடு உண்மையாகப் பங்கிடுவது எதுவென்றால், உங்கள் ஆழ்ந்த அமைதி, ஆனந்தம் மற்றும் கொண்டாட்டம்தான். அப்பொழுது உங்கள் இதயம் மெல்ல மெல்ல உருகி, மற்றவர்களோடு ஒன்று கலக்கும் . அப்பொழுது உங்கள் அன்பு ஆத்மிகமாக மாறுகிறது.

- ஓஷோ


விடிந்ததென்பாய் நீ அனுதினமும் - வான்
வெளுப்பது உனது விடியலில்லை
முடிந்ததென்பாய் ஒரு காரியத்தை - இங்கு
முடிதல் என்பது எதற்குமில்ல

மணந்தேன் என்பாய் சடங்குகளும் - வெறும்
மாலை சூட்டலும் மணமில்லை
இணைந்தேன் என்பாய் உடற்பசியால் - உடல்
இரப்பதும் கொடுப்பதும் இணைப்பல்ல.

கற்றேன் என்பாய் கற்றாயா? - வெறும்
காகிதம் தின்பது கல்வியில்லை
பெற்றேன் என்பாய் எதைப்பெற்றாய்? - வெறும்
பிள்ளைகள் பெறுவது பெறுவதல்

குளித்தேன் என்பாய் யுகயுகமாய் - நீ
கொண்ட அழுக்கோ போகவில்லை
அளித்தேன் என்பாய் உண்மையிலே - நீ
அளித்த தெதுவும் உனதல்

உடை அணிந்தேன் எனச் சொல்லுகிறாய் - வெறும்
உடலுக் கணிவது உடையல்ல
விடையைக் கண்டேன் என்றுரைத்தாய் - ஒரு
வினாவாய் நீயே நிற்கின்றாய

தின்றேன் என்பாய் அணுஅணுவாய் - உனைத்
தின்னும் பசிகளுக் கிரையாவாய்
வென்றேன் என்பர் மனிதரெல்லாம் - பெறும்
வெற்றியிலே தான் தோற்கின்றார

ஆட்டத்தில் உன்னை இழந்து விட்டாய் - உன்
அசலைச் சந்தையில் விற்றுவிட்டாய்
கூட்டத்தில் எங்கோ தொலைந்துவிட்டாய் - உனைக்
கூப்பிடும் குரலுக்கும் செவிடானாய

‘நான்’ என்பாய் அது நீயில்லை - வெறும்
நாடக வசனம் பேசுகிறாய்
‘ஏன்’? என்பாய் இது கேள்வியில்லை - அந்த
ஏன் எனும் ஒளியில் உனைத் தேடு?

- கவிக்கோ அப்துல் ரகுமான்
(தொகுப்பு - சுட்டுவிரல்)

மேலும் : http://www.kavikko.blogspot.com/


சென்னையின் அரிய புகைப்படங்கள்:
http://www.flickr.com/photos/30886342@N00/sets/72057594094737914/show/

தமிழ்நாட்டின் தலைநகரும் இந்தியாவின் நான்காவது பெரிய நகரும் ஆகும். 1996ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்நகரம் மெட்ராஸ் (Madras) என்று அழைக்கப்பட்டு வந்தது. சென்னை, வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்த துறைமுக நகரங்களுள் ஒன்று. சுமார் 7.45 மில்லியன் மக்கள் வாழும் இந்நகரம், உலகின் 35 பெரிய மாநகரங்களுள் ஒன்று. 17ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் சென்னையில் கால் பதித்தது முதல், சென்னை நகரம் ஒரு முக்கிய நகரமாக வளர்ந்து வந்திருக்கிறது. சென்னை, தென்னிந்தியாவின் வாசலாக கருதப்படுகிறது. சென்னை நகரில் உள்ள மரினா கடற்கரை, உலகின் நீளமான கடற்கரைகளுள் ஒன்று. சென்னை, கோலிவுட் எனப்படும் தமிழ்த் திரைப்படத்துறையின் தாயகம். பல விளையாட்டு அரங்கங்கள் உள்ள சென்னையில் பல விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறுகின்றன.

மேலும் விவரமறிய : கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88

நன்றி : விக்கிபீடியா

உலகின் மிகப் பழமையான நாகரீகத்தையும் மொழியையும் உடைய தேசம் சீனா. சீன மொழி பல்லாயிரம் ஆண்டு வரலாறுடையது. உலகில் கோடானுகோடி மக்கள் இதனைப் பயன்படுத்துகின்றனர். உலகின் ஐந்தில் ஒரு பகுதியினர் சீனாவில் வசிக்கின்றனர் (~1.3 பில்லியன்), சீன மொழியைப் பயன்படுத்துகின்றனர். உலகில் நால்வரில் ஒருவர் சீனர். ஒவ்வொரு ஆண்டு அதிகமான வெளிநாட்டவர் சீனாவுக்கு வந்து பயணம் மேற்கொள்கின்றனர் அல்லது வணிகம் செய்கின்றனர். சீனாவை, சீன மக்களை, சீன மொழியை, பண்பாட்டை, தொழில்நுட்பத்தை அறிந்து கொள்வது இன்றைய உலகமயமாதல் சூழலில் அவசியமாகிறது.

தமிழ் மூலம் சீனம் கற்க கீழேவுள்ள வலை தளத்துக்கு செல்லவும்:
http://tamil.cri.cn/1/2004/07/13/Zt23@10341.htm

இம்'மூவர்ண'க் கொடி 26 ஜனவரி 1950 இல் இந்தியா குடியரசு நாடாகும் வரையிலும், அதன் பிறகும் இக்கொடி தேசியக் கொடியாக விளங்கி வருகிறது.

சாதுக்களின் நிறமான காவி நிறம், பொருளை துயிலுற குறிப்பதாகும். நம் தலைவர்கள், பொருள் சேர்ப்பதை துயிலுண்டு, வேலையின் காரணத்திற்கு தம்மை அர்ப்பணிக்க வேண்டும். ஒளியை குறிக்கும் வகையில் நடுவில் உள்ள வெள்ளை நிறம், நம் நன்னடத்தையின் பாதைக்கு வழி காட்ட வேண்டும். பச்சை நிறம், நம் நிலத்திற்கு உள்ள உறவையும் அதிலிருந்து வளரும் செடிகளின் பாரமாக அமைந்த நம் வாழ்வையும் குறிக்கும். அசோக சக்கரமோ, கொடியின் கீழ் வேலையாற்றும் மக்களுக்கு நியாய தருவத்தின் அடிப்படையாக அமையும். மேலும் சக்கரம், சுழலை குறிக்கும் வடிவமாக அமையும். நிற்கதியில் சாவு உண்டு, சுழலில் வாழ்வு உண்டு. இந்திய நாடானது, இனிமேலும் மாற்றங்களை எதிர்க்காமல், முன்னெறிச் செல்ல வேண்டும். இச்சக்கரமானது, அமைதியான மாற்றத்தை குறிக்கும் ஒரு சின்னமாக அமையும்.

-இராதாகிருஷ்ணன் (முன்னாள் இந்தியக் குடியரசுத் துணைத்தலைவர்)

முந்தைய கொடிகள் :

நிவேதிதாவின் கல்கத்தாக் கொடி (1904)



பைக்கஜி காமா அம்மையார் (22 ஆகஸ்ட் 1907), ஜெர்மனியின் ஸ்டுட்கார்ட் என்ற நகரில், ஏற்றியக் கொடி



பால கங்காதர திலகர் மற்றும் அன்னி பெசண்ட் அம்மையார் சேர்ந்து தொடங்கிய சுயாட்சி போராட்டத்தில் (1917) பயன்படுத்தப் பட்ட கொடி.



1921ஆம் ஆண்டு தற்காலிகமாக ஏற்கப்பட்ட கொடி




1931-ல் வலியுறுத்தப்பட்ட அரக்கு நிற சக்கரத்தை கொண்ட காவிக் கொடி



1931ஆம் ஆண்டு ஏற்கப்பட்டு, இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப் பட்ட இந்தியக் கொடி



இரண்டாம் உலகப் போரின் போது, சுபாஸ் சந்திர போஸின் இந்திய தேசிய படை பயன்படுத்திய கொடி




இந்தியா தேசியக் கீதம்



நன்றி : விக்கிபீடியா

இருபதாம் நூற்றாண்டு தெடக்கத்திலிருந்து் காணும் பொருட்களை அப்படியே வரையாமல், நிறங்களையும், வடிவங்களையும் பயன்படுத்தி வரையப்படும் ஓவியம் Abstract ஓவியமாகும். இயல்பான காட்சிகளை எளிய வடிவத்தில் கற்பனை திறனுடன் அப்படியே காட்சிகளை பிரதிபலிக்காமல் மறைமுகமாக உணர்த்தும் ஓவியம். நுட்பம், உலகக் காட்சிகளின், வெளித் தோற்றத்துக்குப் புலப்படாத, உள்ளார்ந்த பண்புகளை ஓவியத்தில் கொண்டு வருவதற்கு உதவியது.

சதுரங்கம் இருவர் விளையாடும் ஒரு பலகை விளையாட்டாகும். இப்பலகை,8 வரிசைகளிலும், 8 நிரல்களிலும் (8 x 8) அமைந்த கட்டங்களைக் கொண்ட சதுர வடிவமானது. ஒரு பக்கத்துக்கு 16 காய்கள் வீதம், 32 காய்கள் கறுப்பு வெள்ளை நிறங்களில் இவ் விளையாட்டில் பயன்படுகின்றன. மதியூகமும், தந்திரமும் இவ் விளையாட்டுக்கு முக்கியமானதாகும். இந்தியாவில் ஏழாம் நூற்றாண்டுல் கண்டுப்பிடிக்கப்பட்டு விளையாடப்பட்டு வந்த சதுரங்கம் என்னும் விளையாட்டிலிருந்தே இது வளர்ச்சியடைந்தது என்பது பொதுமறை.

மடகாஸ்கர் (Madagascar) தீவுக்கு 900 கிமீ கிழக்கே; ஆப்பிரிக்கா கண்டத்திற்கு தென் கிழக்கு கடலோரப் பகுதியில் இருக்கும் ஒரு தீவு மொரிசியஸ் (Mauritius). இந்நாட்டில் ஏறக்குறைய 30 000 தமிழர்கள் வாழ்கின்றனர். இந் நாட்டு பணத்தில் தமிழ் எழுத்துக்களை காணலாம்.

இயற்பெயர்: அருண்மொழிவர்மன்

தந்தை:சுந்தர சோழன் (கி.பி 957 முதல் கி.பி 973 வரை)

தாயார்: சேர நாட்டு வானவன் மாதேவி

பிறப்பு: ஐப்பசி திங்கள் சதய நன்னாள்.

ஆட்சிக்காலம்: கி.பி 985 முதல் கி.பி 1012

தலைநகரம்: தஞ்சாவூர்

அரசி: உலக
மாதேவியார்
வானவன் மாதேவியார்
சோழ மகாதேவியார்

பிள்ளைகள்: இராஜேந்திர சோழன்
மாதேவடிகள்
குந்தவை

முன்னவன்: உத்தம சோழன் (கி.பி 950 முதல் கி.பி 957 வரை சோழ நாட்டை ஆண்ட கண்டராதித்த சோழனின் மகனாவான்)

பின்னவன்: இராஜேந்திர சோழன் (இராஜேந்திர சோழனே முதன் முதலில் அயல்நாட்டிற்குப் [சோழநாடு; இலங்கை, மாலத்தீவு, கடாரம், ஸ்ரீவிஜயம், மலேயா (சிங்கப்பூர் - மலேசியா), சுமத்ரா] பெரும் படை எடுத்துச் சென்ற எடுத்துச் சென்ற முதல் இந்திய மன்னன் ஆவான். மகிபாலனை வென்று வங்காள தேசத்தை சோழநாட்டுடன் இணைத்தவன் அதன் வெற்றியைச் சிறப்பிக்கவே கங்கை கொண்ட சோழபுரம் என்னும் புதிய தலைநகரத்தை உருவாக்கி தன்னுடைய ஆட்சியை அங்கிருந்து நிர்வகித்தான். அங்கே சிவபெருமானுக்காக இராஜேந்திரன் கட்டிய கற்கோயில் சோழர் காலக் கட்டிடக்கலைக்கு ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக இன்றளவும் விளங்கி வருகிறது)

இறப்பு: கி.பி. 1014

சாதனை: சோழப் பேரரசின் வரலாற்றில் இராஜராஜ சோழனின் முப்பதாண்டு ஆட்சிக்காலமே பொற்காலமாக விளங்கியது.
ஆட்சி முறை, இராணுவம், நுண்கலை, கட்டடக்கலை, சமயம், இலக்கியம் ஆகிய பல்வேறு துறைகளில் புதிய எழுச்சியைக் கண்ட சோழப்பேரரசின் கொள்கைகளை இவனுடைய ஆட்சியில் உருப்பெற்றவையே.



தஞ்சைப் பெரியகோவில்

தஞ்சைப் பெருவுடையார் கோயில் அல்லது பிருகதீசுவரர் கோயில் தஞ்சாவூரிலுள்ள இந்து சமயக் கோயிலும் உலகப் பாரம்பரியச் சின்னமும் ஆகும். இக்கோயில், சோழப் பேரரசு அதன் உச்ச நிலையிலிருந்தபோது் 10 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. ஆரம்பத்தில் இராஜராஜேஸ்வரம் என்றும், பின்னர், தஞ்சையை நாயக்கர்கள் ஆண்டகாலத்தில், தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும் அழைக்கப்பட்டது, மராட்டிய மன்னர்களால் ஆளப்பட்டபோது 17, 18ஆம் நூற்றாண்டுகளில் பிருகதீசுவரம் ஆகியது. நாளடைவில் தஞ்சைப் பெரியகோவில் என அறியப்படுகிறது.

இக்கோயில் கட்டப்பட்ட காலத்தில், தமிழ்நாடு முழுவதும் ஒரே குடைக்கீழ் இருந்ததுடன், எல்லைக்கு அப்பாலும் பெருமளவு வருவாயும் கிடைத்துவந்தது. இத்தகையதொரு பிரம்மாண்டமான கோயிலை சுமார் 7 ஆண்டுகளில் கட்டிமுடிப்பதற்குத் பெரும் ஆள்பலம் துணையாக இருந்தது. இராஜராஜனின் 25ம் ஆண்டின் 275ம் நாளில் இது கட்டி முடிக்கப்பட்டது. இக்கோயில் தென் இந்திய வரலாற்றில் தலைசிறந்த சின்னமாக விளங்குவதுடன் தமிழ் கட்டடக் கலைக்கே பெருமை தேடித்தரும் கலைக் கருவூலமாகவும் இம்மன்னனின் ஒப்பற்ற ஆட்சியின் நினைவுச் சின்னமாகவும் இன்றளவும் இக்கோயில் விளங்கி வருகிறது.

1987-ல் யுனெஸ்கோ அமைப்பால் உலகப்பாரம்பரியச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டன.

காற்றுக்குக் காது நிலை. சிவனுடைய காதிலே காற்று நிற்கிறான். காற்றில்லாவிட்டால் சிவனுக்குக் காது கேட்காது. காற்றுக்குக் காதில்லை. அவன் செவிடன்.

காதுடையவன் இப்படி இரைச்சலிடுவானா? காதுடையவன் மேகங்களை ஒன்றோடொன்று மோதவிட்டு, இடியிடிக்கச் சொல்லி வேடிக்கை பார்ப்பானா? காதுடையவன் கடலைக் கலக்கி விளையாடுவானா? காற்றை, ஒலியை, வலிமையை வணங்குகின்றோம்.

பாலைவனம். மணல், மணல், மணல். பல யோஜனை தூரம் ஒரே மட்டமாக நான்கு திசையிலும் மணல்.

மாலை நேரம். அவ்வனத்தின் வழியே ஒட்டைகளின் மீதேறி ஒரு வியாபாரக் கூட்டத்தார் போகிறார்கள்.

வாயு சண்டனாகி வந்துவிட்டான். பாலைவனத்து மணல்களெல்லாம் இடைவானத்திலே சுழல்கின்றன. ஒரு க்ஷணம் யம வாதனை. வியாபாரக் கூட்டம் முழுதும் மணலிலே அழிந்து போகிறது. வாயு கொடியோன். அவன் ருத்ரன். அவனுடைய ஓசை அச்சந் தருவது. அவனுடைய செயல்கள் கொடியன. காற்றை வாழ்த்துகின்றோம்.

வீமனும் அனுமானும் காற்றின் மக்கள் என்று புராணங்கள் கூறும். உயிருடையனவெல்லாம் காற்றின் மக்களே என்பது வேதம். உயிர் தான் காற்று. உயிர் பொருள். காற்று அதன் செய்கை. பூமித்தாய் உயிரோடிருக்கிறாள். அவளுடைய மூச்சே பூமியிலுள்ள காற்று. காற்றே உயிர்.

அவன் உயிர்களை அழிப்பவன். காற்றே உயிர். எனவே உயிர்கள் அழிவதில்லை. சிற்றுயிர் பேருயிரோடு சேர்கிறது. மரணமில்லை. அகிலவுலகமும் உயிர் நிலையே. தோன்றுதல், வளர்தல், மாறுதல், மறைதல் - எல்லாம் உயிர்ச் செயல். உயிரை வாழ்த்துகின்றோம்.

காற்றே வா. மகரந்தத் தூளைச் சுமந்துகொண்டு, மனத்தை மயலுறுத்துகின்ற இனிய வாசனையுடன் வா. இலைகளின் மீதும், நீரலைகளின் மீதும் உராய்ந்து, மிகுந்த ப்ராண - ரசத்தை எங்களுக்குக் கொண்டு கொடு. காற்றே வா. எமது உயிர் - நெருப்பை நீடித்து நின்ற நல்லொளி தருமாறு செய். சக்தி குறைந்து போய், அதனை அவித்துவிடாதே. பேய்போல வீசி, அதனை மடித்துவிடாதே. மெதுவாக, நல்ல லயத்துடன், நெடுங்காலம் நின்று வீசிக் கொண்டிரு. உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம். உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம். உன்னை வழிபடுகின்றோம்.

சிற்றெரும்பைப் பார். எத்தனை சிறியது; அதற்குள்ளே கை, கால், வாய், வயிறு, எல்லா அவயங்களும் கணக்காக வைத்திருக்கிறது.

யார் வைத்தனர்? மஹாசக்தி. அந்த உறுப்புகளெல்லாம் நேராகவே தொழில் செய்கின்றன. எறும்பு உண்ணுகின்றது. உறங்குகின்றது. மணம் செய்து கொள்கின்றது. குழந்தை பெறுகிறது. ஓடுகிறது. தேடுகிறது. போர் செய்கிறது. நாடு காக்கிறது. இதற்கெல்லாம் காற்று தான் ஆதாரம்.

மஹா சக்தி காற்றைக் கொண்டுதான் உயிர் விளையாட்டு விளையாடுகின்றாள். காற்றைப் பாடுகிறோம். அஃது அறிவிலே துணிவாக நிற்பது; உள்ளத்திலே விருப்பு வெறுப்புகளாவது. உயிரிலே உயிர் தானாக நிற்பது. வெளியுலகத்திலே அதன் செய்கையை நாம் அறிவோம். நாம் அறிவதில்லை. காற்றுத் தேவன் வாழ்க.

மழைக்காலம். மாலை நேரம். குளிர்ந்த காற்று வருகிறது. நோயாளி உடம்பை மூடிக்கொள்ளுகிறான். பயனில்லை.

காற்றுக்கு அஞ்சி உலகத்திலே இன்பத்துடன் வாழ முடியாது. பிராணன் காற்றாயின் அதற்கு அஞ்சி வாழ்வதுண்டா? காற்று நம்மீது வீசுக. அது நம்மை நோயின்றிக் காத்திடுக. மலைக்காற்று நல்லது. வான் காற்று நன்று. ஊர்க்காற்றை மனிதர் பகைவனாக்கி விடுகின்றனர். அவர்கள் காற்றுத் தெய்வத்தை நேரே வழிபடுவதில்லை.

அதனால் காற்றுத்தேவன் சினமெய்தி அவர்களை அழிக்கின்றான். காற்றுத் தேவனை வணங்குவோம். அவன் வரும் வழியில் சேறு தங்கலாகாது. நாற்றம் இருக்கலாகாது. அழுகின பண்டங்கள் போடலாகாது. புழுதி படிந்திருக்கலாகாது. எவ்விதமான அசுத்தமும் கூடாது. காற்று வருகின்றான். அவன் வரும் வழியை நன்றாகத் துடைத்து நல்ல நீர் தெளித்து வைத்திடுவோம். அவன் வரும் வழியிலே சோலைகளும் பூந்தோட்டங்களும் செய்து வைப்போம். அவன் வரும் வழியிலே கர்ப்பூரம் முதலிய நறும் பொருள்களைக் கொளுத்தி வைப்போம். அவன் நல்ல மருந்தாக வருக. அவன் நமக்கு உயிராகி வருக; அமுதமாகி வருக. காற்றை வழிபடுகின்றோம். அவன் சக்தி குமாரன், மஹாராணியின் மைந்தன். அவனுக்கு நல்வரவு கூறுகின்றோம். அவன் வாழ்க.

காற்றே வா. மெதுவாக வா. ஜன்னல் கதவை அடித்து உடைத்து விடாதே. காயிதங்களையெல்லாம் எடுத்து விசிறி எறியாதே. அலமாரிப் புத்தகங்களைக் கீழே தள்ளிவிடாதே. பார்த்தாயா? இதோ, தள்ளிவிட்டாய். புஸ்தகத்தின் ஏடுகளைக் கிழித்துவிட்டாய். மறுபடி மழையைக் கொண்டுவந்து சேர்த்தாய். வலியிழந்தவற்றைத் தொல்லைப்படுத்தி வேடிக்கை பார்ப்பதிலே நீ மஹா சமர்த்தன்.

நொய்ந்த வீடு. நொய்ந்த கதவு. நொய்ந்த கூரை. நொய்ந்த மரம். நொய்ந்த உடல். நொய்ந்த உயிர். நொய்ந்த உள்ளம். இவற்றைக் காற்றுத் தேவன் புடைத்து நொறுக்கிவிடுவான். சொன்னாலும் கேட்கமாட்டான். ஆதலால், மானிடரே வாருங்கள். வீடுகளைத் திண்மையுறக் கட்டுவோம். கதவுகளை வலிமையுறச் சேர்ப்போம். உடலை உறுதி கொள்ளப் பழகுவோம். உயிரை வலிமையுற நிறுத்துவோம். உள்ளத்தை உறுதி செய்வோம். இங்ஙனம் செய்தால் காற்று நமக்குத் தோழனாகி விடுவான். காற்று மெலிய தீயை அவித்துவிடுவான். வலிய தீயை வளர்ப்பான். அவன் தோழமை நன்று. அவனை நித்தமும் வாழ்த்துகின்றோம்.

மழை பெய்கிறது. ஊர் முழுதும் ஈரமாகிவிட்டது. தமிழ் மக்கள் எருமைகளைப்போல எப்போதும் ஈரத்திலேயே நிற்கிறார்கள். ஈரத்திலேயே உட்காருகிறார்கள். ஈரத்திலேயே நடக்கிறார்கள். ஈரத்திலேயே படுக்கிறார்கள். ஈரத்திலேயே சமையல். ஈரத்திலேயே உணவு.

உலர்ந்த தமிழன் மருந்துக்குக் கூட அகப்படமாட்டான்.

ஓயாமல் குளிர்ந்த காற்று வீசுகிறது. தமிழ் மக்களிலே பலருக்கு ஜ்வரம் உண்டாகிறது. நாள்தோறும் சிலர் இறந்து போகிறார்கள். மிஞ்சியிருக்கும் மூடர் 'விதிவசம்' என்கிறார்கள். ஆமடா, விதிவசந்தான். 'அறிவில்லாதவர்களுக்கு இன்பமில்லை' என்பது ஈசனுடைய விதி.

சாஸ்திரமில்லாத தேசத்திலே நோய்கள் விளைவது விதி.

தமிழ் நாட்டிலே சாஸ்திரங்களில்லை. உண்மையான சாஸ்திரங்களை வளர்க்காமல், இருப்பனவற்றையும் மறந்து விட்டுத் தமிழ் நாட்டுப் பார்ப்பார் பொய்க் கதைகளை மூடரிடங் காட்டி வயிறு பிழைத்து வருகிறார்கள். குளிர்ந்த காற்றையா விஷமென்று நினைக்கிறாய்? அது அமிழ்தம். நீ ஈரமில்லாத வீடுகளில் நல்ல உடைகளுடன் குடியிருப்பாயானால் காற்று நன்று; அதனை வழிபடுகின்றோம்.

காற்றென்று சக்தியைக் கூறுகின்றோம். எற்றுகிற சக்தி. புடைக்கிற சக்தி. மோதுகிற சக்தி. சுழற்றுவது. ஊதுவது. சக்தியின் பல வடிவங்களிலே காற்றும் ஒன்று. எல்லாத் தெய்வங்களும் சக்தியின் கலைகளேயாம். சக்தியின் கலைகளையே தெய்வங்களென்கிறோம். காற்று சக்தி குமாரன். அவனை வழிபடுகின்றோம்.
காக்கை பறந்து செல்லுகிறது. காற்றின் அலைகளின் மீது நீந்திக்கொண்டு போகிறது. அலைகள் போலிருந்து, மேலே காக்கை நீந்திச் செல்வதற்கு இடமாகும் பொருள் யாது? காற்று அன்று. அஃதன்று காற்று. அது காற்றின் இடம், வாய் நிலயம். கண்ணுக்குத் தெரியாதபடி அத்தனை நுட்பமாகிய பூதத்தூள்களே (காற்றடிக்கும்போது) நம்மீது வந்து மோதுகின்றன. அத்தூள்களைக் காற்றென்பது உலக வழக்கு. அவை வாயுவல்ல. வாயு ஏறிவரும் தேர். பனிக்கட்டியிலே சூடேறினால் நீராக மாறி விடுகிறது. நீரிலே சூடேற்றினால் 'வாயு'வாகி விடுகிறது. தங்கத்திலே சூடேற்றினால் திரவமாகி உருகிவிடுகிறது. அத்திரவத்திலே சூடேற்றினால் 'வாயு'வாகின்றது.

இங்ஙனமே, உலகத்துப் பொருள்களனைத்தையும் 'வாயு' நிலைக்குக் கொண்டு வந்துவிடலாம். இந்த 'வாயு' பௌதிகத் தூள். இதனை ஊர்ந்துவரும் சக்தியையே நாம் காற்றுத் தேவனென்று வணங்குகிறோம்.

காக்கை பறந்து செல்லும் வழி காற்றன்று. அந்த வழியை இயக்குபவன் காற்று. அதனை அவ்வழியிலே தூண்டிச் செல்பவன் காற்று. அவனை வணங்குகின்றோம். உயிரைச் சரணடைகின்றோம்.

அசைகின்ற இலையிலே உயிர் நிற்கிறதா? ஆம். இரைகின்ற கடல் நீர் உயிரால் அசைகின்றதா? ஆம். கூரையிலிருந்து போடும் கல் தரையிலே விழுகின்றது. அதன் சலனம் எதனால் நிகழ்வது? உயிருடைமையால். ஓடுகின்ற வாய்க்கால் எந்த நிலையில் உளது? உயிர் நிலையில். ஊமையாக இருந்த காற்று ஊதத் தொடங்கிவிட்டதே! அதற்கு என்ன நேரிட்டிருக்கிறது? உயிர் நேரிட்டிருக்கிறது.

வண்டியை மாடு இழுத்துச் செல்கிறது. அங்கு மாட்டின் உயிர் வண்டியிலும் ஏறுகிறது. வண்டி செல்லும் போது உயிருடனேதான் செல்கிறது. காற்றாடி? உயிருள்ளது. நீராவி வண்டி உயிருள்ளது; பெரிய உயிர். யந்திரங்களெல்லாம் உயிருடையன.

பூமிப்பந்து இடைவிடாமல் மிக்க விசையுடன் சுழல்கின்றது. அவள் தீராத உயிருடையவள். பூமித்தாய். எனவே அவள் திருமேனியிலுள்ள ஒவ்வொன்றும் உயிர் கொண்டதேயாம்.

அகில முழுதும் சுழலுகிறது. சந்திரன் சுழல்கின்றது. ஞாயிறு சுழல்கின்றது. கோடி கோடி கோடி கோடி யோஜனை தூரத்துக்கப்பாலும், அதற்கப்பாலும், அதற்கப்பாலும், சிதறிக் கிடக்கும் வானத்து மீன்களெல்லாம் ஓயாது சுழன்று கொண்டே தானிருக்கின்றன. எனவே இவ்வையகம் உயிருடையது. வையகத்தின் 'உயிரையே' காற்றென்கின்றோம். அதனை முப்போதும் போற்றி வாழ்த்துதல் செய்கின்றோம்.

காற்றைப் புகழ நம்மால் முடியாது. அவன் புகழ் தீராது. அவனை ரிஷிகள் 'ப்ரத்யக்ஷம் ப்ரஹ்ம' என்று போற்றுகிறார்கள்.

ப்ராண வாயுவைத் தொழுகின்றோம். அவன் நம்மைக் காத்திடுக. அபாநனைத் தொழுகின்றோம். அவன் நம்மைக் காக்க. வ்யாநனைத் தொழுகின்றோம். அவன் நம்மைக் காக்க. உதாநனைத் தொழுகின்றோம். அவன் நம்மைக் காக்க. சமாநனைத் தொழுகின்றோம். அவன் நம்மைக் காக்க. காற்றின் செயல்களையெல்லாம் பரவுகின்றோம். உயிரை வணங்குகின்றோம். உயிர் வாழ்க.

உயிரே நினது பெருமை யாருக்குத் தெரியும்? நீ கண்கண்ட தெய்வம். எல்லா விதிகளும் நின்னால் அமைவன. எல்லா விதிகளும் நின்னால் அழிவன. உயிரே, நீ காற்று, நீ தீ, நீ நிலம், நீ நீர், வானம். தோன்றும் பொருள்களின் தோற்ற நெறி நீ. மாறுவனவற்றை மாற்றுவிப்பது நின் தொழில். பறக்கின்ற பூச்சி, கொல்லுகின்ற புலி, ஊர்கின்ற புழு, இந்தப் பூமியிலுள்ள எண்ணற்ற உயிர்கள், எண்ணற்ற உலகங்களிலுள்ள எண்ணேயில்லாத உயிர்த்தொகைகள் - இவையெல்லாம் நினது விளக்கம்.

மண்ணிலும், நீரிலும், காற்றிலும் நிரம்பிக் கிடக்கும் உயிர்களைக் கருதுகின்றோம். காற்றிலே ஒரு சதுர அடி வரம்பில் லக்ஷக்கணக்கான சிறிய ஜந்துக்கள் நமது கண்ணுக்குத் தெரியாமல் வாழ்கின்றன.

ஒரு பெரிய ஜந்து; அதன் உடலுக்குள் பல சிறிய ஜந்துக்கள்; அவற்றுள் அவற்றிலுஞ் சிறிய பல ஜந்துக்கள்; அவற்றுள் இன்னுஞ் சிறியவை - இங்ஙனம் இவ்வையக முழுதிலும் உயிர்களைப் பொதிந்து வைத்திருக்கிறது.

மஹத் - அதனிலும் பெரிய மஹத் - அதனிலும் பெரிது - அதனிலும் பெரிது.

அணு - அதனிலும் சிறிய அணு - அதனிலும் சிறிது - அதனிலும் சிறிது.

இரு வழியிலும் முடிவில்லை. இருபுறத்திலும் அநந்தம். புலவர்களே, காலையில் எழுந்தவுடன் உயிர்களையெல்லாம் போற்றுவோம். 'நமஸ்தே வாயோ, த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்மாஸி'.