"இது ஒரு டைரி குறிப்பு" - தமிழ்நெஞ்சம் ஹிப்ஸ் [ hifs@live.com ] Tel: +65 91897619

இயற்பெயர்: அருண்மொழிவர்மன்

தந்தை:சுந்தர சோழன் (கி.பி 957 முதல் கி.பி 973 வரை)

தாயார்: சேர நாட்டு வானவன் மாதேவி

பிறப்பு: ஐப்பசி திங்கள் சதய நன்னாள்.

ஆட்சிக்காலம்: கி.பி 985 முதல் கி.பி 1012

தலைநகரம்: தஞ்சாவூர்

அரசி: உலக
மாதேவியார்
வானவன் மாதேவியார்
சோழ மகாதேவியார்

பிள்ளைகள்: இராஜேந்திர சோழன்
மாதேவடிகள்
குந்தவை

முன்னவன்: உத்தம சோழன் (கி.பி 950 முதல் கி.பி 957 வரை சோழ நாட்டை ஆண்ட கண்டராதித்த சோழனின் மகனாவான்)

பின்னவன்: இராஜேந்திர சோழன் (இராஜேந்திர சோழனே முதன் முதலில் அயல்நாட்டிற்குப் [சோழநாடு; இலங்கை, மாலத்தீவு, கடாரம், ஸ்ரீவிஜயம், மலேயா (சிங்கப்பூர் - மலேசியா), சுமத்ரா] பெரும் படை எடுத்துச் சென்ற எடுத்துச் சென்ற முதல் இந்திய மன்னன் ஆவான். மகிபாலனை வென்று வங்காள தேசத்தை சோழநாட்டுடன் இணைத்தவன் அதன் வெற்றியைச் சிறப்பிக்கவே கங்கை கொண்ட சோழபுரம் என்னும் புதிய தலைநகரத்தை உருவாக்கி தன்னுடைய ஆட்சியை அங்கிருந்து நிர்வகித்தான். அங்கே சிவபெருமானுக்காக இராஜேந்திரன் கட்டிய கற்கோயில் சோழர் காலக் கட்டிடக்கலைக்கு ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக இன்றளவும் விளங்கி வருகிறது)

இறப்பு: கி.பி. 1014

சாதனை: சோழப் பேரரசின் வரலாற்றில் இராஜராஜ சோழனின் முப்பதாண்டு ஆட்சிக்காலமே பொற்காலமாக விளங்கியது.
ஆட்சி முறை, இராணுவம், நுண்கலை, கட்டடக்கலை, சமயம், இலக்கியம் ஆகிய பல்வேறு துறைகளில் புதிய எழுச்சியைக் கண்ட சோழப்பேரரசின் கொள்கைகளை இவனுடைய ஆட்சியில் உருப்பெற்றவையே.



தஞ்சைப் பெரியகோவில்

தஞ்சைப் பெருவுடையார் கோயில் அல்லது பிருகதீசுவரர் கோயில் தஞ்சாவூரிலுள்ள இந்து சமயக் கோயிலும் உலகப் பாரம்பரியச் சின்னமும் ஆகும். இக்கோயில், சோழப் பேரரசு அதன் உச்ச நிலையிலிருந்தபோது் 10 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. ஆரம்பத்தில் இராஜராஜேஸ்வரம் என்றும், பின்னர், தஞ்சையை நாயக்கர்கள் ஆண்டகாலத்தில், தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும் அழைக்கப்பட்டது, மராட்டிய மன்னர்களால் ஆளப்பட்டபோது 17, 18ஆம் நூற்றாண்டுகளில் பிருகதீசுவரம் ஆகியது. நாளடைவில் தஞ்சைப் பெரியகோவில் என அறியப்படுகிறது.

இக்கோயில் கட்டப்பட்ட காலத்தில், தமிழ்நாடு முழுவதும் ஒரே குடைக்கீழ் இருந்ததுடன், எல்லைக்கு அப்பாலும் பெருமளவு வருவாயும் கிடைத்துவந்தது. இத்தகையதொரு பிரம்மாண்டமான கோயிலை சுமார் 7 ஆண்டுகளில் கட்டிமுடிப்பதற்குத் பெரும் ஆள்பலம் துணையாக இருந்தது. இராஜராஜனின் 25ம் ஆண்டின் 275ம் நாளில் இது கட்டி முடிக்கப்பட்டது. இக்கோயில் தென் இந்திய வரலாற்றில் தலைசிறந்த சின்னமாக விளங்குவதுடன் தமிழ் கட்டடக் கலைக்கே பெருமை தேடித்தரும் கலைக் கருவூலமாகவும் இம்மன்னனின் ஒப்பற்ற ஆட்சியின் நினைவுச் சின்னமாகவும் இன்றளவும் இக்கோயில் விளங்கி வருகிறது.

1987-ல் யுனெஸ்கோ அமைப்பால் உலகப்பாரம்பரியச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டன.