தமிழில் தட்டச்சு செய்ய முதலில் யுனிக்கோட் (Unicode) பற்றித் தெரிந்திருக்க வேண்டும். இதற்குமுன்னால் பயன்பாட்டில் இருந்த அஸ்கி (ASCII) என்ற முறையில் 8 bits மட்டுமே ஒரு எழுத்துக்காக பதிவு செய்யப்படுகிறது. இந்தமுறையில் ஆங்கிலம் மற்றும் அதனை ஒட்டிய மிகச்சில மொழிகளே பதியப்பட்டு வந்தன. மற்ற மொழிகளைப் பதிய அதில் வழிமுறை இல்லை. முக்கியமாகத் தமிழ் போன்ற அதிக எழுத்துக்களைக் கொண்ட மொழிகளின் எழுத்துருக்களைப் பதிய ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு பதிவெண் (CODE) அஸ்கி முறையில் சாத்தியமில்லை. உதாரணமாக A என்ற ஆங்கில எழுத்துக்கு 65 என்ற அஸ்கி பதிவெண் பயன்படுகிறது. இப்படியாக ஒவ்வொரு எழுத்தைப் பதியும்போதும் கணிப்பொறி அந்த எழுத்துக்கான அஸ்கி பதிவெண்ணைப் பதிந்து வைக்கிறது. பிறகு நமக்குக் காட்டும்போது பதிவெண்ணை எழுத்துருக்களாக மாற்றிக்காட்டுகிறது (Convertion of ASCII Code to ASCII Character). அதன்பிறகு உருவாக்கப்பட்ட யுனிக்கோட் முறையானது ஒவ்வோர் எழுத்துக்கும் 16 bits அதாவது 2 bytes பதிவு செய்கிறது. அதனால் அதிக எழுத்துருக்களை நம்மால் பதிவு செய்யமுடிகிறது. இந்த யுனிக்கோட் முறைதான் உலகில் உள்ள பெரும்பாலான மொழிகளை அரவணைத்துக்கொண்டுள்ளது. அந்த வகையில் நமது உயிரினும்மேலான தமிழும் அதன்மூலம் பயன்பெறுகிறது. பயன்படுத்துபவர்களின் நண்பன் (User friendly) என்ற பெருமையை எப்போதும் தக்கவைத்துக்கொண்டிருக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனமும் தனது புதிய விண்டோஸ் பதிப்புகளில் லதா என்ற தமிழ் எழுத்துருவை இணைத்து உலகமெல்லாம் பரப்பி பெருந்தொண்டாற்றியுள்ளது. உங்களின் கணினியிலும் இது சாத்தியம். அதற்கு முன் உங்கள் விண்டோஸில் ControlPanel> Regional Settings என்ற அமைப்பைத் திறந்து Languages என்ற பக்கத்தில் Supplemental Language Support என்ற பகுதியில் Install files for complex script and right-to-left languages (Including Thai) என்பது தேர்வாகியிருக்க வேண்டும். அதைத் தேர்வு செய்தால் அதற்கான கோப்புகளை Windows CD யிலிருந்து பெற்றுக்கொள்ளும் (உங்களிடம் Windows CD ஐ அது கேட்கும்). பின் கணினியை மீண்டும் செயல்படுத்த வேண்டும் (Restart). இப்பொழுது நீங்கள் உங்கள் விண்டோஸ் கணிப்பொறியில் ஏதேனும் ஒரு எடிட்டரை ( MS Word, Wordpad…) திறந்து Fonts பகுதியில் பார்க்கலாம் அல்லது Start > Accessories > System Tools > Character Map என்ற மென்பொருட்கருவியைத் திறந்தும் பார்க்கலாம். ஆனால் இந்த லதா என்ற எழுத்துருவினைப் பயன்படுத்தி எவ்வாறு வரிகளைக் கோர்ப்பது என்பது பலருக்கும் புரியாத புதிராகவே இருக்கலாம். இதற்காக பல மென்பொருட்கள் இணையத்தில் இலவசமாகவே கிடைக்கின்றன. அவற்றில் மிகவும் எளிமையானதாகக் கருதப்படுவது இ-கலப்பை எனப்படும் மென்பொருள் ஆகும். இதனை தமிழா.காம்
( www.thamizha.com ) எனும் இணையதளத்தில் நாம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த மென்பொருள் பதிவிறக்கம் செய்யப்பட்டு கணிணியில் பதியும்போது Windows துவங்கும்போதே துவங்கும்படி தன்னை அமைத்துக்கொள்ளும். பதியப்பட்டவுடன் வலது கீழ்மூலையில் ஒரு K என்ற எழுத்தினைக் கொண்ட சிறிய விசைப்படம் (Button) தோன்றும். பிறகு நீங்கள் ஏதேனும் ஒரு எடிட்டரைத் திறந்து Alt மற்றும் 2 என்ற விசைகளை (Keys) ஒருசேர அழுத்தி தட்டச்சு செய்யத்துவங்கினால் தமிழில் எழுத்துக்கள் தோன்றும். ஆங்கில வார்த்தையாகவே தட்டச்சு செய்யலாம். உதாரணமாக தமிழ் என்ற வார்த்தையை தட்டச்சு செய்ய thamiz என்ற ஆங்கில எழுத்துக்களை விசைப்பலகையில் அழுத்த வேண்டும். தானம் என்று தட்டச்சு செய்ய thaanam என்ற விசைகளை அழுத்த வேண்டும். (குறிலுக்கு ஒரு a நெடிலுக்கு இரண்டு a). ஆங்கில மொழிக்கு மாற Alt மற்றும் 1 என்ற விசைகளை ஒருசேர அழுத்த வேண்டும். பிறகு மீண்டும் தமிழுக்கு மாற Alt மற்றும் 2 என்ற விசைகளை ஒருசேர அழுத்தலாம். வேறு முறையிலும் மொழியை மாற்றலாம் அதாவது கணிணித்திரையின் வலது கீழ்மூலையில் ஒரு K என்ற எழுத்தினைக் கொண்ட சிறிய விசைப்படம் (Button) இருக்கும். அதனை உங்கள் சுட்டியால் (Mouse) தொட்டு (Click) வருகிற வாய்ப்புகளில் UNICODETAMIL என்ற வாய்ப்பைத் தேர்ந்தெடுக்கலாம். மீண்டும் அவ்வாறே No Keyman Keyboard என்ற வாய்ப்பைத் தேர்வு செய்து ஆங்கில மொழிக்கு மாறலாம். இவற்றிலெல்லாம் என்ன சிறப்பென்றால் தட்டச்சு செய்ய மட்டுமே இந்த மென்பொருள் வேண்டும். படிக்க அது தேவையில்லை. அதாவது இவ்விதம் நீங்கள் தமிழில் தட்டச்சு செய்த கோப்புக்களை (Files) வேறு எந்தக் கணிப்பொறியிலும் இந்த மென்பொருளின் துணையின்றிக்காணலாம்! தமிழில் E-Mail அனுப்பலாம். தமிழில் Chat செய்யலாம். ஏன் ஒரு கோப்புக்கு அல்லது கோப்பரைக்கு பெயரே (File Name or Folder Name) தமிழில் வைக்கலாம். என்ன ஆச்சரியமாக இருக்கிறதா!… எல்லாம் யுனிக்கோட் செய்யும் மாயம். முயற்சி செய்து பாருங்கள் உங்களின் கணிணி Windows 2000, XP or Vista இவற்றில் ஏதாவதொன்றாய் இருந்தால்….! லினக்ஸ் இயக்கமும் இதற்கு உதவும்.
- பொன்னு. கணேஷ் குமார்
http://technicalganesh.wordpress.com/தமிழில்-எழுத/

தலைப்பு : inbox, உங்களுக்கு தெரியுமா?, மொழி