குரங்கில் இருந்து வந்தவன் மனிதன் என்றுதான் பொதுவாகச் சொல்கிறார்கள். ஆனால், அதற்கும் முன்பாக, எலி மனிதனின் மூதாதையராக இருந்திருக்கலாம் என்று இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மயிர்க்காடாக உள்ள சின்னஞ்சிறு சுண்டெலி எங்கே? ஆறடி உயரத்திற்குப் பிரம்மாண்டமான மனிதன் எங்கே? மொட்டைத் தலைக்கும் முழுங்காலுக்கும் முடிச்சுப் போடுகிறேன் என்று நினைக்கிறீர்களா?
உடம்பெல்லாம் ரோமக்காடாக உள்ள அலமாரிகளுக்குள் துருதுருவெனத் திரிகிற, துணிகளையும் தாள்களையும் கரும்பிப் போடுகிற சுண்டெரி, மனிதர்களின் முன்னோடிகள் என்கிறனர் ஐரோப்பிய விஞ்ஞானிகள். நம்முடைய மரபணுக்களில் 99 விழுக்காடு எலிகளிடமும் உள்ளதாம். எலிகளின் ஜீன் எனப்படும் மரபணுக்கள் மட்டுமல்ல, அவற்றில் இரு உருவெடும்பதும் நோய்கள் உண்டாகும் முறையும், எலிகளின் பழக்கவழக்கங்களும் மனிதர்களுடையதைப் போல் இருக்கின்றன என்கிறார்கள். இது எப்படி?
சுமார் 7 கோடி ஆண்டுகளுக்கு முன்பு எலிகளுக்கும் மனிதர்களுக்கும் ஒரே மூதாதையர்தான் இருந்திருக்கிறார்கள். அதன் பிறகு தான், வெவ்வேறு பரிணாம திசையில் வளர்ச்சி பெறத் தொடங்கி விட்டோம். இப்படிப்பட்ட நிலையில் மனிதகுலத்தின் மரபணு ரகசியங்களைப் புரிந்து கொள்வதற்கான ஆராய்ச்சி வாகனமாக எலிகள் ஆக்கப்படுகின்றன. இத்தகைய ஆராய்ச்சிக்காக, பல லட்சக்கணக்கான மரபணு திருத்தப்பட்ட எலிகளை உருவாக்கிட, 18 கோடி அமெரி்கக டாலர் செலவில் ஐரோப்பிய யூனியன் திட்டம் ஒன்று அண்மையில் வெனிஸ் வெனிஸ் நகரில் தொடங்கப்பட்டது. இந்த ஆராய்ச்சியில், மனிதர்களுக்குப் பொதுவாக ஏற்படக்கூடிய சர்க்கரை நோய், இதயநோய், புற்றுநோய், மனநோய் போன்ற நோய்கள் அனைத்தும் எலிகளிடம் உருவாக்கப்படும். இவ்வாறு செய்து, இந்த நோய் நிலைமைகளின் மரபணு மற்றும் சுற்றுச் சூழல் வேர்கள் கண்டறியப்பட்டு, மருந்துத் தயாரிப்பிலும், நோய் சிகிச்சையிலும் புதிய பாதை போடப்படும். எலிகளின் மரபணுக்கு உள்ள ஆற்றலை ஐரோப்பிய யூனியன் புரிந்து கொண்டு வட்டது என்று எலி ஆராய்ச்சித் திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் வுலஃப்கேங் வுர்ஸ்ட் கூறுகிறார்.
மூன்றாண்டுகளுக்கு முன்பு முடிவடைந்த மனித மரபணுக்களை வரிசைப்படுத்தும் திட்டத்தின் தொடர்ச்சியாக, இந்த யூரோ மவுஸ் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மனித உடம்பை உருவாக்குகிற 20000 ஜீன்கள் ஒவ்வொன்றும் எவ்வாறு உருவெடுத்தன என்பது டி என் ஏ வரிசைப்படுத்தும் திட்டத்தின் மூலம் கண்டறியப்பட்டது. ஆனால் அவற்றில் பாதி ஜீன்களின் புரத உள்ளடக்கம் என்ன என்பது விஞ்ஞானிகளுக்குத் தெரிய வில்லை. இப்போது அந்த ரகசியத்தைக் கண்டறிவதற்கு, மனிதர்களைப் போல மரபணு அமைப்பு உள்ள எலிகள் உதவப் போகின்றன.
http://tamil.cri.cn/1/2005/11/15/22@26695.htm

தலைப்பு : அறிவியல், உங்களுக்கு தெரியுமா?, மரபணு