- சிகரெட் சாம்பல் போடும் தட்டுகள், பான், ஜர்தா போன்றவற்றை கண்ணிற்கும், மனதிற்கும் மறைவாக வைக்க வேண்டும்.
- சிகரெட், பான், ஜர்தா போன்றவற்றை சுலபமாக கிடைக்காத, எட்டாத இடத்தில் வைக்கவும். உ.ம். வீட்டின் பிற அறைகளிலோ, அடிக்கடி செல்லாத இடங்களிலோ அல்லது அலமாரிகளில் வைத்து பூட்டியோ வைக்க வேண்டும்.
- புகை, பான், ஜர்தா போன்றவற்றை பயன்படுத்த தூண்டும் காரியங்கள், புகைப்பிடிப்போர் கூட்டம் போன்றவற்றை கண்டறிந்து, சிறிது காலத்திற்கு அவற்றிலுருந்து விலகியிருக்க முயற்சிக்க வேண்டும்.
- சுவிங்கம், இனிப்புகள், பெப்பர்மென்ட் மிட்டாய்கள், சர்க்கரை மிட்டாய் போன்றவற்றை வாயில் போட்டுக் கொள்ளுதல்
- எப்பொழுதெல்லாம் புகையிலை, பான் போன்றவை நினைவுக்கு வருகிறதோ, அப்பொழுதெல்லாம் உட்கார்ந்த அல்லது படுத்த நிலையில், மூச்சினை நன்கு இழுத்து விட முயற்சிக்கவும். ஒரு டம்ளர் தண்ணீர் அருந்துவது மற்றும் உடற்பயிற்சி செய்வது புகைப்பழக்க எண்ணத்தை குறைக்க உதவுகிறது.
- புகையிலை எடுக்க நீங்கள் நினைக்கும்போது, உங்கள் குழந்தைகள் பற்றி சிந்தியுங்கள். மேலும், புகையிலையினால் நோய் ஏற்படின், அது உங்கள் பிள்ளையின் எதிர்காலத்தை எப்படி பாதிக்கும் என்பதனை சிந்தனை செய்து பாருங்கள்.
- புகையிலை பழக்கததினை நிறுத்த ஒரு தேதியை குறியுங்கள்.
- உங்களுக்கு உதவும் நபரை கண்டறியுங்கள்.
- புகையிலை, பான், ஜர்தா போன்றவை இல்லாத முதல் நாளுக்காய் திட்டமிடுங்கள்.
- புகையிலை, பான், ஜர்தா போன்றவற்றின் மேல் விருப்பம் ஏற்படும் போது கீழ்க்காணும் 4 வழிகளைப் பின்பற்றுங்கள்
- ஏதேனும் ஒரு வேலையை செய்யுங்கள்
- அடுத்த சிகரெட்டினை புகைக்க / பயன்படுத்த தாமதியுங்கள்
- மூச்சை நன்கு உள்ளிழுத்து விடுங்கள்
- தண்ணீர் அருந்துங்கள்
- புகையிலை பழக்கததினை விடுவதற்கு உங்களால் முடியும் என உறுதியாக நம்புங்கள்
- உங்களுக்கு நீங்களே பரிசளித்துக் கொள்ளுங்கள்
- மனதைத் தளர்ததும் உக்திகளை (யோகா, நடைபயிற்சி, தியானம், நடனம், இசை போன்றவை) ஒவ்வொரு நாளும் செய்யுங்கள்.
- காஃபின் (காபியில் இருக்கும் ஒரு வகை வேதியல் பொருள்) மற்றும் ஆல்கஹால் (மது) உட்கொள்வதை குறைத்துகொள்ளுங்கள்
- மேலும சுறுசுறுப்பாக இருந்து, ஆரோக்கியமாக உணவினை உட்கொள்ளுங்கள்.
|
|