"இது ஒரு டைரி குறிப்பு" - தமிழ்நெஞ்சம் ஹிப்ஸ் [ hifs@live.com ] Tel: +65 91897619முல்லா நசுருதீன் ஒரு முறை மங்கலான விளக்கின் வெளிச்சத்தின் கீழ் எதையோ தேடிக் கொண்டு இருந்தாராம். அந்தப் பக்கம் ஒரு வழிப்போக்கன் கேட்டானாம்... என்ன தேடுகிறீர்கள் என்று. முல்லா சொன்னாராம். எனக்கு அற்புதமான விளக்கு ஒன்று கிடைத்தது. அந்த விளக்கு இருந்தால் போதும், அதை ஏற்றியதும் இந்தப் பகுதி முழுவதும் இருட்டு என்பதே இருக்காது. ஆனால்; அதைத் தொலைத்து விட்டேன் அதை தேடுகிறேன் என்றாராம். அதற்கு அந்த வழிப் போக்கன் எங்கே தொலைத்தீர் எனக் கேக்க. முல்லா ஒரு இருட்டான பகுதியைக் காண்பித்து அங்கு என்று சொன்னாராம். அங்கே தொலைத்து விட்டு இங்கே எதற்கு தேடுகிறீர்கள் என்று கேட்டால் இங்கு தானே வெளிச்சமாக இருக்கிறது அதான் இங்கே தேடுகிறேன் என்றாராம்...!