"இது ஒரு டைரி குறிப்பு" - தமிழ்நெஞ்சம் ஹிப்ஸ் [ hifs@live.com ] Tel: +65 91897619


வ்வொரு நாளும் நம்முடன் விடாமல் கூடவே வரும் தொல்லையாக 'டென்ஷன்' நீங்காமல் இருக்கின்றது.

அலுவலகத்திலும் டென்ஷன்... வீட்டிலும் டென்ஷன்... காலையில் தொடங்கி மாலை வரை ஒரு போர் செய்து முடித்தது போல் நமக்கு இருக்கிறது!

அந்தப் போர் முடிந்ததுமே சோர்வடைந்து விரக்தியடைகிறோம்.

மறுநாளும் அதே டென்ஷன்... அதே விரக்தி.... இப்படியே தொடர்கின்றது நமது அன்றாட வாழ்க்கை!

என்றைக்காவது இந்தத் தொல்லையிலிருந்து தப்பிக்க முடியாதா என்று ஆசைப்படாதவர்கள் ரொம்ப குறைவு.

அமெரிக்காவில் ஒரு சைக்காலஜி அசோசியேஷன் நடத்திய ஆய்வில், அதிகமாக மன அழுத்தத்தை அனுபவிக்கின்றவர்கள், 'மேலதிகாரிகள்' என்று தெரியவந்துள்ளது.

* மன அழுத்தம், விரக்தி பலநேரங்களில் உடலை பாதிக்கின்றது.


* அதிகமான மன அழுத்தம் ஹார்மோன் வித்தியாசத்துக்கு காரணமாகின்றது.


* உயர் ரத்த அழுத்தம் இதய சம்பந்தமான நோய்களுக்கு காரணமாகின்றது.


* உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவது மட்டுமல்லாமல், எலும்புகளில் அதிக அழுத்தம் ஏற்படுகின்றது.


* மறதி, அதிக கோபம், சோம்பேறித்தனம், நாடி சம்பந்தமான நோய்கள் வரை வருவதற்கான காரணமாகின்றது, இந்த மன அழுத்தம்!

ஒவ்வொரு நபரும் அனுபவிக்கிற 'டென்ஷன்', ஒவ்வொரு விதமாக இருக்கும்.

அலுவலகத்தில்...

நமக்கு பிரச்னைகள் ஏற்படுவதற்கான காரணத்தை புரிந்துகொள்ள முடிந்தால், ஒரு அளவிற்கு நம்மால் டென்ஷனை குறைக்க முடியும். அவ்வாறு காரணத்தை அறிவதால், அதைப் போக்குவதற்கான மன உறுதியைப் பெற முடியும். அதற்காக முயற்சிக்க வேண்டும். வேலை செய்யும்போது டென்ஷன் ஆகாமல் இருக்க, உங்களை மனரீதியாக தயார்படுத்துங்கள்.

சிரிக்கலாமே...

சிரித்து பேசுவது உங்களுக்கும், உங்களை சுற்றி இருப்பவர்களுக்கும் நல்லது. சிரிப்பு என்றால் வாய்வலிக்க சிரிக்க வேண்டும் என்று சொல்லவில்லை. அது, சில நேரங்களில் உங்களுடைய வேலைக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடும். அப்படி நடந்து கொள்ளாமல் இருப்பது உங்களுக்கு நல்லது. சிரிப்பு நம்முடைய மன அழுத்தத்தை குறைக்கின்றது. அலுவலக இடைவெளியில் நண்பர்களுடன் சிரித்து பேசுவதற்கு நேரத்தை ஒதுக்க வேண்டும் வேண்டும். அதற்காக டைம் டேபிள் போட்டு சிரிக்க வேண்டும் என்று சொல்லவில்லை. உணவு இடைவெளிக்கு பிறகு நண்பர்களுடன் சற்று நேரம் அரட்டை அடிப்பது நல்லதே.

ஒய்வு நேரங்களில் ஜோக்ஸ் சொல்வதற்க்கும், கார்ட்டூன் பார்ப்பதற்கும், புத்தகம் படிப்பதற்கும் முயற்சிக்கவும். இது ஓரளவிற்கு நம்முடைய மன அழுத்தத்தை குறைகின்றது.

தூங்குங்கள்...

நன்றாக தூங்குவது ஓரளவிற்கு டென்ஷன் குறைக்கின்றது. தூங்குவதற்கு மாத்திரை எடுத்துக்கொள்வதற்கு பதிலாக, சூடான பால் பருகலாம். நன்றாக தூங்க முடியும். காப்பி, டீ போன்றவற்றை அருந்துவதை தவிர்க்கவும்.

உறவுகள்...

வேலைக்கு போகின்ற ஆண், பெண் இருவருமே கவனிக்க வேண்டிய விஷயம்தான் இது. வேலைதான் முக்கியமென்று நினைக்கின்றவர்களுக்கு ஓர் எச்சரிக்கை. இது, உங்களுடைய உறவுகளில் பிரிவு ஏற்பட காரணமாக இருக்கின்றது. அப்படி ஒரு நிலைமை வராமல் பார்த்துகொள்ளும் கடமை உங்களுக்கு இருக்கின்றது. வாழ்க்கை வெற்றிகரமாக இருப்பதற்கு, ஆரோக்கியமும் உடலுறுதியும் மட்டுமல்ல; நல்ல ஒரு திட்டமும் தேவைதான்.

கணவன், மனைவி எந்த ஒரு விஷயத்தையும் ஒன்றாக தீருமானிப்பது உங்களுடைய பிரச்னைகளை ஓரளவிற்கு குறைத்து கொள்ள உதவும். அது மட்டுமில்லாமல் உங்களுடைய துணை சொல்கின்ற நல்ல உபதேசங்கள் பல நேரங்களில் டென்ஷனை குறைக்க மட்டுமல்லாமல், அடுத்த நாள் வேலை நல்ல மனதோடு தொடங்குவதற்கும் வழிவகுக்கும்.

நேரம் கிடைக்கும்போதெல்லாம் குடும்பத்தினரோடும், நண்பர்களோடும் செலவழிப்பதால் மனதிற்கு ஆறுதலாகவும், நிம்மதியாகவும் இருக்கும்.

உடற்பயிற்சி...

உடற்பயிற்சி ஓரளவிற்கு டென்ஷனை குறைக்கின்றது. இது உடலுக்கும், மனதிற்கும் புத்துணர்வு தருகின்றது. இந்த புத்துணர்வு மனதினை சரிவர செயல்பட துணைபுரியும். காலையிலோ, மாலையிலோ மனைவி உடனோ, நண்பர்களுடனோ அல்லது தனியாகவோ ஒரு மணி நேரம் நடப்பதால், உடலிலுள்ள பாரம் குறைப்பது மட்டுமல்லாமல், மனதிலுள்ள பாரமும் குறையும்...

ஆன்லைன் ஜோக்ஸ்...

இன்டர்நெட்டில் வருகின்ற ஜோக்ஸும், விளையாட்டுகளும், ஆரோக்கியமான சாட்டிங்கும் ஓரளவிற்கு நம்முடைய டென்ஷனை குறைக்கின்றது. இப்போது, ஜோக்குகளை ரசிப்பதற்கான நிறைய இணையதங்கள் இருப்பதை நீங்கள் அறிவீர்கள். அதில் அவ்வப்போது வலம் வாருங்கள். நல்ல ஜோக்குகளை நண்பர்களுக்கு மின்னஞ்சலில் பகிர்ந்து மகிழுங்கள்!

சுற்றுலா...

நேரம் கிடைக்கும் பொது குடும்பத்தினருடனோ, நண்பர்களுடனோ குறைந்த தூரத்திலுள்ள சுற்றுலா தலங்களுக்கு பயணம் செய்ய திட்டமிட்டு செயல்படலாம். இப்பயணத்தில் ஒவ்வொரு நிமிடத்தையும் சந்தோஷமாக்கிக்கொள்ள முயற்சிக்கவும். இப்படிப்பட்ட பயணங்கள் ஓரளவிற்கு நம்முடைய மனதை ரீசார்ச் செய்ய நமக்கு உதவுகின்றது.

http://www.nigazhvugal.com/ந்தியர்களை சமீப காலமாக `டென்ஷன்' பேய் ரொம்பவே பிடித்து ஆட்ட ஆரம்பித்திருக்கிறது.

40 வயதுக்கு மேலானவர் களில் 73சதவீதம் பேருக்கு தினமும் `டென்ஷன்' இருக்கிறது என்பதே ஒரு டென்ஷனான தகவல் தான்!

இவர்களில் 48சதம் பேர் அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை பார்ப்பவர்கள். இவர்களுக்கு அன்றாடம் ஏற்படும் பதட்டமும், பட, படப்பும் உடல், மனம் , உணர்வு ஆகியவற்றில் அவர்களை அறியாமலேயே மிகப் பெரிய மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.

கெடு, பிடி நிறைந்த வேலைகள், சுற்றுப்புற சூழ்நிலை, பொருளாதார பற்றாக்குறை, அதிகப்படியான எதிர்பார்ப்புகள், கடமையைச் சரியாக செய்ய எண்ணுதல், காலந்தவறாமல் பணியாற்றுதல், அதிகப் பொறுப்புகள் உண்மையோடிருத்தல் உள்பட பல்வேறு காரணங்களாலும் குடும்பச் சுமைகளாலும் டென்ஷன்கள் ஏற்படுகின்றன. இத்தகைய டென்ஷன் மனப்பான்மை உள்ளவர்கள் மிகவும் வேகமாகப் பேசுகிறார்கள்.

அவசரப் படுகிறார்கள். கோப, தாபங்களை உடனடியாக வெளிப்படுத்துகிறார்கள். இது எல்லாவற்றையும் விட மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகிறார்கள். இவர்களுக்கு ஆத்திரம், பொறாமை, தர்ம சங்கடங்கள் அதிகம் ஏற்படுகின்றன.

ஆமாம், டென்ஷன் வசப்படுபவர்களுக்கு தலைவலி, இதயத் துடிப்பு அதிகரித்தல், அடிக்கடி சிறு நீர் கழித்தல், படிப்பதில் ஆர்வமின்மை, ஞாபக மறதி, கவனமின்மை, கெட்ட கனவுகள் ஏற்படுதல், மனச்சோர்வு, விரக்தி ஆகியவை ஏற்படுகின்றன. இது மட்டுமல்ல! இவர்கள் நிறைய தோல்விகளையும் சந்திக்கிறார்கள்.

இந்தியக் குடிகாரர்களில் 27சதவீதம் பேர் தங்களுக்கு அதிக டென்ஷன் ஏற்படுவதாலேயே தொடர்ந்து குடிகாரர்களாக இருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிய வந்துள்ளன.

`டென்ஷன்' என்பது முழுக்க, முழுக்க ஒருவரது மனம் சார்ந்த விஷயமாகவே இருக்கிறது. ஒருவருக்கு வேலைப்பளு அதிகம் ஏற்படும் போது ``இதைச் செய்து விட முடியும்'' என்றும் எடுத்துக் கொள்ளலாம். ``அய்யோ இதை எப்படிச் செய்து முடிக்கப் போகிறோமோ'' என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

எதையும் கவலையுடனும், மன வருத்தத்துடனும் எடுத்துக் கொண்டால் `டென்ஷன்' தானாகவேதோன்றி விடும். மாறாக அதனைச் சமாளிக்கும் மன பக்குவத்தை கொண்டிருந்தால் `டென்ஷன்' தவிர்க்கப்படுகிறது.

டென்ஷன் என்பது நிச்சயமாக ஒருவரது உடல் நிலையை பாதிக்க கூடியது. மன அழுத்தம் பெண்களையும் அதிக அளவில் பாதிக்கிறது. வேலைக்கு போகும் பெண்கள் மட்டுமின்றி வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் குடும்பத் தலைவிகளையும் மன அழுத்தம் ரொம்பவே பாதிப்புக்குள்ளாக்குகிறது.

வேலைக்குப் போகும் இந்தியப் பெண்களில் 67சதம் பேருக்கு சக ஆண் ஊழியர்களாலேயே மன உளைச்சல் ஏற்டுகிறதாம்.

வீட்டிலிருக்கும் குடும்பத் தலைவிகள் 48சதம் பேர் தங்கள் வேலை நேரம் போக ஓய்வு கிடைக்கும் நேரங்களில் தேவையற்ற எண்ணங்களை வளர்த்துக் கொள்வதால் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

`டென்ஷன்' எந்த வகையில் உடல் ரீதியான மாற்றங்களை ஏற்படுத்துகிறது. எதிர்மறையான எண்ணங்கள் ஏற்படும் போது மூளையில் உள்ள பிட்டரி சுரப்பி அதிகமாக தூண்டப்பட்டு கார்டி காஸ்டீப்ட் என்ற வேதிப் பொருள் நரம்பு மூலமாக சிறுநீரகங்களுக்கு மேலே இருக்கும் அட்ரினல் சுரப்பி வரை அதிகமாக செல்கிறது. இதனால் தான் ஒருவித படபடப்பு ஏற்படுகிறது.

மன அழுத்தத்தால் ஏற்கெனவே சொல்லப்பட்ட குறைபாடுகள் தவிர ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் அழிந்து, நோய் எதிர்ப்பு சக்தி குறையும் வாய்ப்பு அதிகமாகும்.

எல்லோருமே டென்ஷன் இல்லாமல் அமைதியாக, மகிழ்ச்சியாக வாழ விரும்புகிறார்கள். ஆனால், நடைமுறை வாழ்க்கை அப்படி அமைந்து விடுவதில்லை.

மன அழுத்தத்தை போக்க பல வழிமுறைகள் இருக்கின்றன.

ஏற்கனவே நமது சாதனைகளையும், கடந்த கால வெற்றிகளையும் நினைத்து அடிக்கடி பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டும்.

எதனையும் கவலையான கண்ணோட்டத்தோடு பார்க்க கூடாது. நம்மிலும் மோசமானவர்களை எடை போட்டு பார்த்துக் கொள்ள வேண்டும்.

நம்மிடம் உள்ள சில குறைபாடுகளை நினைத்து சோர்வு மனப்பான்மை கொள்ளக் கூடாது.

சக நண்பர்களிடம் மனம் விட்டு பேசலாம். தியானம், இறை வழிபாடு, ஆன்மீக புத்தகம் படிப்பது ஆகியவையும் மன அழுத்த நோயை தீர்க்க வல்லது.

எதையும் நகைச்சுவை உணர்வுடன் எடுத்துக் கொண்டு திட்டமிட்டு காரியங்களை செயலாக்க வேண்டும்.

உடற்பயிற்சி மூலமும் மன அழுத்தத்தை போக்க முடியும். சத்தான உணவு முறைகளும் அவசியமாகும்.

மனதில் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொண்டு எதிர்த்து போராடி வெற்றி பெற முயற்சிக்க வேண்டும்.

தனிமையில் வாய்விட்டு பாடல்கள் பாடுவதன் மூலமும் மன அழுத்தத்தை விரட்ட முடியும்!

`இரண்டு மனம் வேண்டும். இறைவனிடம் கேட்பேன். மறந்து வாழ ஒன்று. சிரித்து வாழ ஒன்று.!

-நன்றி:மாலைமலர்